உடல் மெலிவதற்காக பலரும் உணவைக் கட்டுப்பாடாக உண்பதைக் காணலாம். வேலைக்குச் செல்லும் அநேகமானோர், காலையில் ஏற்படும் நேர நெருக்கடி காரணமாகவும் உடல் இளைக்க வேண்டும் என்பதைக் காரணங்காட்டியும் காலையுணவை முற்றாகத் தவிர்த்துவிடுகின்றனர். எனினும் இவர்கள், மதியம் மற்றும் இரவு வேளைகளில் எவ்வித கட்டுப்பாடுமின்றி அதிக உணவை உண்கின்றனர். அத்துடன், வழமையாக உள்ளெடுக்கும் உணவுகளில் கட்டுப்பாட்டுடன் இருந்தாலும், தொலைக்காட்சியைப் பார்த்தவாறு நொறுக்குத் தீனிகள் உண்பதைத் தவிர்ப்பதில்லை.
இவ்வாறான அணுகுமுறைகளால் உடல் மெலிவதற்கு மாறாக பருமன் அடைவதற்கே வாய்ப்புக்கள் அதிகமாகின்றன. காலையுணவை முற்றாகத் தவிர்ப்பதும் உடல் நலத்திற்கு கேடுதரும் விடயமாக மாறிவிடும் சாத்தியங்கள் காணப்படுகின்றன. அதாவது, முன்னைய நாள் இரவு உணவிற்குப் பின்னர், மற்றைய நாள் மதிய உணவு வரை வயிறு வெறுமையாக இருப்பது வயிற்றுப் புண் (Stomach ulcer) ஏற்பட வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது. இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் (Tel Aviv) பல்கலைக்கழக அறிவியலாளர்களின் ஆய்வின் பிரகாரம், காலை உணவை நிறைவாக உண்டு, இரவு உணவைக் கட்டுப்பாடாக உண்பது, உடல் மெலிவதற்கு வழிவகுக்கும் என தெரிவிக்கப்படுகிறது. உடல் இளைக்கவேண்டும் என்ற நோக்குடன் உள்ளவர்களின் உணவு, காலையில் அரசன் போலும், மதியம் இளவரசனினது அளவினதாகவும், இரவு ஏழையினது போன்றதாகவும் அமையவேண்டும் எனக் கூறப்படுவதை இந்த ஆய்வு முடிவு நினைவுபடுத்துகிறது.
டெல் அவிவ் பல்கலைக்கழக, Sackler மருத்துவப் பீடப் பேராசிரியை Daniela Jakubowicz அவர்களால், உடற்பருமனான மனிதர் இளைப்பதற்கு அவர்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் எவ்விதம் அமையவேண்டும் என்பது குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உடற்பருமனான 93 பேரினை தெரிந்தெடுத்து, அவர்களை எழுமாற்றாக இரு குழுவினராக வகுத்து யதார்த்தபூர்வமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள், அண்மையில் வெளியான journal Obesity என்ற அறிவியற் சஞ்சிகையில் வெளியாகியுள்ளன.
கடந்த வருடம் ஜுன் மாதத்திலிருந்து செப்ெடம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் 93 குண்டான பெண்கள் தெரிந்தெடுக்கப்பட்டு, அவர்கள் இரு குழுக்களாக வகுக்கப்பட்டனர். இவ்விரு குழுக்களுக்கும் சமனான போசனை உடைய உணவுகள் உண்பதற்கு வழங்கப்பட்டன. நாளொன்றுக்கு மொத்தமாக 1400 கலோரி போசனையுடைய உணவுகள் இவ்விரு குழுவிலும் உள்வாங்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டபோதிலும், காலை, மதியம் மற்றும் இரவு உணவுகளுக்கான போசனை மட்டங்கள் இரு குழுக்களுக்கும் வெவ்வேறு அளவினதாக அமைந்தன.
முதலாவது குழுவிற்கு, நாளொன்றிற்கான மொத்த போசனையின் 50 சதவீதம் (700 கலோரி) காலையுணவாகவும், 36 சதவீதம் (500 கலோரி) மதிய உணவின்போதும், இரவு உணவில் மிகுதி 14 சதவீதம் (200 கலோரி) உள்ளடங்கும் வகையில் உணவுகள் வழங்கப்பட்டன. காலையுணவில் 200 கலோரி போசனையும் (14வீதம் ) மதியம் 500 கலோரி (36வீதம் ) போசனையும் இரவு உணவில் 700 கலோரி (50வீதம்) போசனையும் உள்ளடங்கத்தக்க தாக மற்றைய குழுவிற்கான உணவுகள் அமைந்தன. மேற்குறிப்பிட்ட வாறு உணவுகளை வழங்கியவாறு, இருகிழமைகளுக்கு ஒருதடவை ஒவ் வொரு குழுவினரின் உடல் அளவீடுகள் (அக மற்றும் புற) மேற்கொள்ளப்பட்டு பதிவு செய்யப்பட்டன.
பதிவு செய்யப்பட்ட புற அளவீடுகளாக, உடல் நிறையும் மணிக்கட்டின் சுற்றளவும் அமைந்திருந்தன. குருதியிலான வெல்லம் மற்றும் இன்சுலின் ஆகியவற்றின் அளவுகள், triglyceride அளவு (குருதிக் குழாய்களின் ஆரோக்கிய மட்டத்தினை அளப்பதற்கான அளவுகோல்), உணவு உண்பதற்கான ஆர்வத்தினை மிகுதிப்படுத்தும் ghrelin என்ற ஓமோனின் அளவு போன்ற பல அளவீடுகள் அக அளவீடுகளாக அளவிடப்பட்டன. இந்த அளவீடுகளின் அடிப்படையில் இரு குழுவினரின் உடல் இளைப்பின் பரிமாணங்கள் மற்றும் ஆரோக்கிய மட்டங்கள் பரிசீலனை செய்யப்பட்டன.
காலையுணவில் அதிக போசனையினை அதிகமாக உள்ளெடுத்து, இரவில் குறைவான போசனை உடைய உணவை உண்ட முதலாவது குழுவினரின் உடல்நிறை சுமார் 19.1 பவுண்ட்கள் இனால் வீழ்ச்சியடைந்திருந்திருந்தது. மற்றைய குழுவினரின் உடல் நிறை வீழ்ச்சி 7.9 பவுண்ட்களாக மாத்திரம் காணப்பட்டது. மணிக்கட்டின் சுற்றளவு முதலாவது குழுவினரில் சராசரியாக 3.3 அங்குலத்தினால் குறைந்திருந்த அதேவேளை, மற்றைய குழுவில் இந்த அளவின் குறைவு 1.5 அங்குலமாகக் காணப்பட்டது. அளவிடப்பட்ட அக அளவீடுகளின் ஒப்பீடும், காலையுணவினை அதிகமாக உண்டு இரவு உணவினைக் குறைப்போருக்கு ஆரோக்கிய ரீதியில் சாதகமாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குருதிச் சுற்றோட்டத்தொகுதியின் ஆரோக்கியத் தன்மையைக் குறிப்பிடும் triglyceride இன் சராசரி அளவு முதற்குழுவில் 34 சதவீதத்தினால் குறைந்திருந்த அதேவேளை மற்றைய குழுவில் இது 15 சதவீதத்தால் அதிகரித்திருந்தது. இந்த முடிவுகளில் இருந்து, காலை உணவினை நிறைவாக அருந்தி இரவு உணவினை குறைவாக உண்போரின், உடற்பருமன் உடல் ஆரோக்கியத்திற்கு கேடுவிளைவிக்காத வகையில் குறைவடையும் என அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
றொ.அ.ஹரின் சுலக்ஸ்ஸி,
யாழ். நகர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக