திங்கள், 19 ஆகஸ்ட், 2013

பொலி­வான சரு­மத்தை எளிதில் பெறு­வ­தற்­கான சில சூப்பர் டிப்ஸ்...

பொலி­வி­ழந்த சருமம்: சரும வறட்சி மற்றும் சரும சுருக்­கத்தால் அவஸ்­தைப்­ப­டு­கி­றீர்­களா? முகப்­பரு முகத்தின் அழகைக் கெடுக்­கி­றதா? இதனால் இதனைப் போக்­கு­வ­தற்கு பல முயற்­சி­களை மேற்­கொண்­டுள்­ளீர்­களா? அதிலும் இயற்கை பொருட்­களைக் கொண்டு முயற்­சிக்­கா­மல், கடை­களில் விற்­கப்­படும் கெமிக்கல் கலந்த அழகுப் பொருட்­களைப் பயன்­ப­டுத்­து­கி­றீர்­களா? இப்­படி கெமிக்கல் பொருட்­களை முயற்­சித்து சரும பிரச்சி­னைகள் நீங்­க­வில்லை என்று கவ.ைலப்­பட்டால் எப்­படி? ஆம், எவ்­வ­ளவு தான் கெமிக்கல் கலந்து அழகுப் பொருட்கள் சரும பிரச்சி­னை­களை உடனே போக்­கி­னா­லும், அவை தற்­கா­லி­க­மாகத் தான் இருக்கும். எப்­ப­டி­யெனில், சரும பிரச்சி­னை­களைப் போக்­கு­வ­தற்கு தினமும் பயன்­ப­டுத்தும் அழகு பொருட்­களை ஒருநாள் பயன் ­ப­டுத்தத் தவ­றி­னாலும் சரும பிரச்­சி­னைகள் மீண்டும் தொடங்கும்.

எனவே இத்­த­கைய பிரச்சி­னை­களைப் போக்­கு­வ­தற்கு இயற்கைப் பொருட்­களைப் பயன்­ப­டுத்தி நீக்­கு­வ­தற்கு போரா­டினால், நிச்­சயம் சரும பிரச்­சி­னைகள் நீங்­கு­வ­தோடு, சரு­மத்தின் அழகும் அதி­க­ரித்து, சருமம் பொலி­வோடு பளிச்­சென்று காணப்­படும். அதற்கு எந்த பொருட்­களை, எப்­படி பயன்­ப­டுத்த வேண்­டு­மென்று தெரி­யாமல் முழிக்­கி­றீர்­களா? அத்­த­கை­ய­வர்கள் இதைப் படித்து முயற்­சித்து அழ­காக மின்­னுங்கள்...

புதினா: புதி­னாவை சரு­மத்­திற்கு பயன்­ப­டுத்­தினால், சரு­மத்தில் உள்ள அழுக்­குகள் அனைத்தும் நீங்கி, சருமம் பொலி­வாக இருக்கும். அதற்கு புதினா சாற்றை சரு­மத்தில் தேய்த்து,சிறிது நேரம் மசாஜ் செய்து கழுவ வேண்டும். இதனால் சரு­மத்தில் அழற்சி இருந்­தாலும் அவை அனைத்தும் குண­மா­கி­விடும்.

தண்ணீர் :சரு­மத்தில் வறட்சி ஏற்­ப­டாமல் இருக்க வேண்­டு­மெனில்,முதலில் தண்­ணீர் அதிகம் குடிக்க வேண்டும். ஏனெனில் உடலில் போதிய அளவு நீர்ச்­சத்து இல்­லா­விட்­டாலும் சரும வறட்சி ஏற்­படும்.

பப்­பாளி :விற்றமின் சி அதிகம் நிறைந்த பப்­பா­ளியை அரைத்து சரு­மத்தில் தட­வி­னாலோ அல்­லது அதனை சாப்­பிட்­டாலும், சருமம் மின்னும். ஏனெனில் அதில் உள்ள பாப்பைன் என்னும் நொதி­யா­னது, சரு­மத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் பழு­த­டைந்த செல்­களை புதுப்­பிக்கும்.

மஞ்சள் தூள் : பெண்­களின் பாரம்­ப­ரிய அழகுப் பொரு­ளான மஞ்சள் தூளை பாலுடன் சேர்த்து கலந்து முகத்­திற்கு மாஸ்க் போட்டால்,சரு­மத்தில் உள்ள கரு­மைகள் நீங்கி சருமம் வெள்­ளை­யாகும்.

வால்நட்ஸ்: மூக்கு மற்றும் தாடையைச் சுற்­றி­யி­ருக்கும் இறந்த செல்­களை போக்­கு­வ­தற்கு, வால்­நட்ஸை அரைத்து பேஸ்ட் செய்து, சரு­மத்தில் தடவி ஸ்கரப் செய்தால், சரு­மத்தில் உள்ள அழுக்­குகள் அனைத்தும் நீங்கி, சருமம் அழுக்­கின்றி சுத்­த­மாக இருக்கும்.

அரிசி மா : சரும சுருக்­கங்­களைப் போக்­கு­வ­தற்கு, அரிசி மாவில் வெது­வெ­துப்­பான பாலை ஊற்றி, முகத்­திற்கு மாஸ்க் போட்டு, உலர விட்டு, குளிர்ச்­சி­யான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்­திற்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

வேப்­பிலை: பிம்பிள் மற்றும் முகப்­ப­ருக்கள் உள்­ள­வர்கள், அதனைப் போக்­கு­வ­தற்கு, வேப்­பி­லையில் தயிர் ஊற்றி நன்கு அரைத்து, சரு­மத்­திற்கு தடவ வேண்டும். இதனை வாரத்­திற்கு இரண்டு முறை செய்து வரு­வது மிகவும் நல்­லது.

தேங்காய்த் தண்ணீர்: தேங்காய் நீரைக் கொண்டு முகத்தைக் கழு­வினால்,சரு­மத்தில் உள்ள தழும்­புகள் மறைய ஆரம்­பிக்கும். அதிலும் அம்­மையால் ஏற்­படும் தழும்­புகள் அல்­லது பிம்பிள் தழும்­புகள் போன்ற எவை­யா­னாலும்,தேங்காய் தண்ணீர் கொண்டு கழு­வினால் நல்ல பலன் கிடைக்கும்.

வெள்­ள­ரிக்காய்: தினமும் ஒரு வெள்­ள­ரிக்­காயை சாப்­பிட்டு வந்தால், சரும வறட்சி நீங்­கு­வ­தோடு, பிம்பிள் வரு­வதைத் தவிர்க்­கலாம். இல்­லா­விட்டால், வெள்­ள­ரிக்­காயை அரைத்து பேஸ்ட் செய்து, மாஸ்க் போடலாம்.

எலு­மிச்சை :சரு­மத்தில் உள்ள அழுக்­கு­களைப் போக்­கு­வ­தற்கு ஒரு சிறந்த வழி­யென்றால், அது எலு­மிச்­சையை பயன்­ப­டுத்­து­வது தான். மேலும் எலு­மிச்சை சரு­மத்தின் கரு­மையைப் போக்­க­வல்­லது. எனவே இரவில் படுக்கும் முன், எலு­மிச்சை சாற்றை சரு­மத்­திற்கு தடவி மசாஜ் செய்து கழு­வி, பின் ஏதேனும் ஒரு எண்­ணெயால் சரு­மத்தை மசாஜ் செய்து கொள்ள வேண்டும்.

வெந்­தயம்: வெந்­தயம் கூந்தல் பிரச்சி­னை­களை மட்­டு­மின்றி, சரும பிரச்சி­னை­க­ளையும் போக்க வல்­லது. அதிலும் வெந்­த­யத்தை ஊற வைத்து அரைத்து, பால் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மாஸ்க் போட்டால், கரும்­புள்­ளிகள் நீங்­கி­விடும்.

ஷாம்­பெயின் : ஷாம்­பெயின் பானத்தைக் கொண்டும்,சரு­மத்தை பொலி­வாக வைத்துக் கொள்­ளலாம். அதிலும் சீக்கிரம் அழ­கான சரு­மத்தைப் பெற வேண்­டு­மெனில், இந்த முறையைப் பயன்­ப­டுத்­தலாம். அதற்கு ஷாம்­பெயின் பானத்தை சரு­மத்­திற்கு தடவி மசாஜ் செய்து கழுவ வேண்டும்.

கடலை மா: எப்­படி அரிசி மாவு சரு­மத்தை சுத்­த­மாக வைத்துக் கொள்ள உத­வி­யாக உள்­ளதோ, அதை விட மிகவும் சிறந்த அழகு பரா­ம­ரிப்பு பொருள் தான் கடலை மா அதற்கு கடலை மாவை,ரோஸ் வோட்­டரில் கலந்து வாரத்­திற்கு இரண்டு முறை கழுத்து மற்றும் முகத்­திற்கு தடவி மாஸ்க் போட்டு வந்தால், சரு­மத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் கரும்­புள்­ளிகள் போன்­றவை எளிதில் நீங்­கி­விடும்.

பாதாம்: பாதாமை அரைத்து பொடி செய்து,அதில் சிறிது பாதாம் எண்ணெய் ஊற்றி, சரு­மத்­திற்கு தடவி 15 நிமிடம் ஊற வைத்து சாதா­ர­ண­மாக குளிர்ந்த நீரில் மட்டும் கழுவி, பின் ெகாட்டன் கொண்டு முகத்தை துடைத்தால், முகம் பொலி­வோடு காணப்­படும்.

பூண்டு: பூண்டில் அன்­டி-­பக்­டீ­ரியல் பொருள் அதிகம் இருப்­பதால், அதனை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து முகத்­திற்கு தடவி மசாஜ் செய்து கழு­வினால், சரு­மத்தில் ஏற்­படும் பிரச்சி­னைகள் அனைத்தும் நீங்­கி­விடும்.

தேன்: சரு­மத்தில் உள்ள பிம்­பிளை எளிதில் போக்க வேண்­டு­மெனில், தேனைக் கொண்டு சரு­மத்தை மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

கற்­றாழை: கற்­றா­ழையின் ஜெல்லை சரு­மத்­தி­ற்கு தடவி மசாஜ் செய்து கழுவி வந்தால், சருமம் மென்­மை­யா­வ­தோடு, சரு­மத்தில் உள்ள தழும்­புகள் நீங்கி, சருமம் அழ­காக இருக்கும்.

தக்­காளிச் சாறு: காய்­க­றி­களில் ஒன்­றான தக்­கா­ளியும் சரும பிரச்சி­னை­களைப் போக்­கக்­ கூடி­யது. அதற்கு முதலில் செய்ய வேண்­டி­ய­தெல்லாம், தக்­கா­ளி சாற்­றினை முகத்தில் தடவி மசாஜ் செய்து கழுவ வேண்டும்.

தயிர்: சரும வறட்­சியை நீக்க ஒரு சிறந்த முறை­யென்றால், தயிரை சருமத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை ஒரு மாதத்திற்கு தொடர்ந்து செய்து வந்தால், அதன் பலன் நன்கு புலப்படும்.

அஸ்பிரின் :அஸ்பிரின் மாத்திரையும் சரும பிரச்சினைகளைப் போக்க வல்லது. அதிலும் அந்த மாத்திரையை பொடி செய்து, தண்ணீர் சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி ஸ்கரப் செய்தால், வெள்ளைப் புள்ளிகள் மற்றும் இறந்த செல்கள் எளிதில் நீங்கிவிடும்.



சருமப்பொலிவுக்கு கை கொடுக்கும் ரெட் வைன்…

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் பானங்களில் ரெட் வைனும் ஒன்று என்று தெரியும். மேலும் ஆய்வு ஒன்றிலும் ரெட் ைவயின் சாப்பிட்டால், இதய நோய் வருவதைத் தவிர்க்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் ரெட் ைவயினை அளவாக சாப்பிட்டு வந்தால், உடலை ஆரோக்கியமாகவும், அதுவே அளவுக்கு மீறினால், மோசமான விளைவையும் சந்திக்கக்கூடும். அதுமட்டுமல்லாமல், அக்காலத்தில் எல்லாம் ரெட் ைவன் ஒரு மருத்துவப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதனால் தான் இன்றும் ப்ரெஞ்ச் மக்கள், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு, தினமும் அளவான அளவில் ரெட் ைவனை சாப்பிட்டு வருகின்றனர். இத்தகைய ரெட் ைவன் உடலுக்கு மட்டும் நன்மைகளைத் தருவதில்லை. சருமம் மற்றும் கூந்தலுக்கும் பல நன்மைகளைத் தருகிறது. அதனால் தான் அதனைப் பருகுபவர்களின் சருமம் மென்மையாகவும், பொலிவோடும் இருக்கிறது. அதற்காக இதனை பருகினால் தான் அழகைப் பெற முடியும் என்று சொல்லவில்லை. அழகாக வெளிப்படுவதற்கு ரெட் வைன் கொண்டு சருமத்தைப் பராமரிக்கலாம். மேலும் தற்போது ரெட் ைவன் ஃபேஷியல் என்ற ஒன்றும் பிரபலமாக உள்ளது. பல பெண்களும் அந்த ைவன் ஃபேஷியலை மேற்கொள்ள விரும்புகிறார்கள். இத்தகைய ஃபேஷியலை பணம் இருப்போர் மேற்கொள்ளலாம். ஆனால் பணம் இல்லாதவர்கள் நிலைமை என்ன? எனவே தான் ரெட் ைவனைக் கொண்டு வீட்டிலேயே எப்படி சருமத்தையும், கூந்தலையும் அழகாக பராமரிக்கலாம் என்று இங்கு விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து, ரெட் ைவனை வாங்கி, எளிதாக அழகை மேம்படுத்துங்கள்.

முகப்பரு: முகப்பருவால் அவஸ்தைப்படுபவர்கள், ரெட் வைனை சருமத்தில் தடவி மசாஜ் செய்து ஊற வைத்து கழுவினால்,சருமத்தில் உள்ள முகப்பருக்கள் விரைவில் நீங்கிவிடும்.

முதுமைத் தோற்றம்: ரெட் ைவனில் அன்டி-அக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாலிஃபீனால்கள் அதிகம் இருப்பதால்வ இதனை சருமத்திற்கு பயன்படுத்துவதால் முதுமைத் தோற்றத்தில் இருந்து விடுபடலாம்.

பொலிவிழந்த சருமம்: பொலிவிழந்த சருமம் நன்கு அழகாகக் காணப்பட வேண்டுமெனில், தினமும் ரெட் வைனைக் கொண்டு சருமத்தை 10 நிமிடம் மசாஜ் செய்து வர வேண்டும்.

வறட்சியான சருமம்: சிலருக்கு சரும வறட்சியானது அதிகம் இருக்கும். அத்தகைய வறட்சியைப் போக்க வேண்டுமெனில், ரெட் ைவன் கொண்டு மசாஜ் செய்தால், வறட்சி நீங்குவதோடு, சருமமானது இறுக்கமடைந்து காணப்படும்.

கருமையான சருமம்: சிலரது சருமத்தில் இறந்த செல்களானது அதிகம் இருப்பதால், சருமமானது கருமையாகக் காணப்படும். அத்தகையவர்கள், ரெட் ைவனைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து கழுவி வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்களானது முற்றிலும் வெளியேறி, கருமை நீங்கும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல