திங்கள், 19 ஆகஸ்ட், 2013

பால் மா விவகாரம் நடந்தது என்ன…?

தாய்ப்பாலுக்கு பதிலாக இறக்குமதியாகும் பால் மாவைக் குழந்தைகளுக்கு புகட்டும் தாய்மார் இப்போது ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளைப் பார்த்து கலவரமடைந்துள்ளனர்.

நியூஸிலாந்திலிருந்து இறக்குமதியாகும் பால்மா வகைகளில் டி.சி.டி. என்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் விஷமடங்கிய இரசாயனப் பொருள் அடங்கியுள்ளதாக கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம் (ITI) விஞ்ஞானபூர்வமாக சுட்டிக்காட்டி அறிக்கையொன்றை வெளியிட்டதையடுத்து பால்மா தொடர்பான சர்ச்சை தீவிரமடைந்துள்ளது,

நியூஸிலாந்திலிருந்து வருடாந்தம் இந் நாட்டிற்கு 83000 மெட்ரிக் தொன் பால்மா இறக்குமதி செய்யப்படுகிறது. இது இலங்கைக்கு தேவையான பால் மாவில் 80 சதவீதமாகும். எனவே, இப்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை பாரியதொரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

பால்மா தொடர்பான சர்ச்சை ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி முதலே ஆரம்பமானது. அன்றிலிருந்து சுகாதார அமைச்சு நியூஸிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால் உற்பத்திகளை துறைமுகத்திலிருந்து விடுவிப்பதை உடனடியாக இடை நிறுத்தியது. நியூஸிலாந்தின் பொன்டெரா நிறுவனத்தின் உற்பத்தி வழிமுறைகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சுகாதாரமற்ற தன்மையை அடிப்படையாகக் கொண்டு சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் பால் உற்பத்திகளை கொள்வனவு செய்வதும் இடைநிறுத்தப்பட்டது.

வே புரோட்டின் (Whey Protien ) அதிக புரோட்டின் அடங்கிய பால் உற்பத்திகளை குளோஸ்டிரிடியம் பொட்டலினம் (Clostridium Botullinum ) பக்டீரியா தொடர்பான சர்ச்சை பிரதான சர்ச்சையாக அதன் பின்னரேயே உருவெடுத்தது.

இந்த பால்மாவில் அடங்கியுள்ளதாகக் கூறப்படும் பொட்டலினம் என்ற பக்டீறியா உடம்பை செயலிழக்கச் செய்து களைப்பை ஏற்படுத்தும் என வெளிநாட்டு ஊடகங்கள் அதன் பயங்கரத் தன்மையை சுட்டிக்காட்டியுள்ளன.

இந்த பக்டீறியா மூலம் பொத்துலினியா என இனங்காணப்பட்ட நோய் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி சந்தைகளில் விற்பனை செய்யப்படும் வே புரோட்டின் அடங்கிய பால்மா வகைகளை வாபஸ் பெற இந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். குழந்தை பால்மா மாதிரிகளை ஆய்வுக்குட்படுத்தவும் சுகாதார அமைச்சின் உணவு ஆலோசனைக் குழு முற் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.

இந்தக் கட்டுரை எழுதப்படும் போதும் இந் நாட்டில் விற்பனை செய்யப்படும் சகல பால்மா தொடர்பான விளம்பரங்களையும் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை தடை செய்ய சுகாதார அமைச்சின் உணவு ஆலோசனைக் குழு நடவடிக்கை எடுத்தது.

டி.சி.டி விஷ இரசாயனம் அடங்கிய 7 பால்மா வகைகளின் விற்பனையை தடைசெய்ய சுகாதார அமைச்சின் பிரதான உணவுக் கட்டுப்பாட்டாளர் நடவடிக்கை மேற்கொண்டார்.

டி.சி.டி. எனப்படும் விஷ இரசாயனம் எவ்வகையிலும் உணவுப் பொருட்களில் கலந்திருக்கக் கூடாது என்பதுடன் இந்த இரசாயனம் பசளை உற்பத்திக்கும், இறப்பர் உற்பத்தி நடவடிக்கைகளுக்கும் அது தொடர்பான உற்பத்திகளுக்குமே பயன்படுத்தப்படுகிறது. பாரியளவிலான தொழிற்சாலைகளில் தடைப்படும் குழாய்களில் கழிவுப் பொருட்களை வெளியேற்றவும் இந்த டி.சி.டி மூலப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

பால்மா வகை மூலம் எமது குழந்தைகளின் உடலுக்குள் டி.சி.டி. இரசாயனம் அடங்கியுள்ளதா?, இல்லையா? என மதிப்பீடு செய்வதற்கு எவராலும் முடியாது. இருந்தும் இந்த சகல விடயங்களிலும் எமது எதிர்கால பரம்பரையின் சுகாதாரத்திற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் கிராமிய கலாசாரத்தின்படி குடும்பத்தில் இரு குழந்தைகள் பிறந்தால் குடும்பத்தின் பொருளாதார சக்தியின்படி பசு மாடொன்றை கொள்வனவு செய்யும் வழக்கம் இருந்தது. குழந்தை தாய்ப்பாலை மறக்கும் நிலை வந்ததுடன் பசு மாட்டிலிருந்து பாலைக் கறந்து, அதனைச் சூடாக்கி குழந்தையின் உடலுக்கு தேவையான விற்றமின் வகைகள், கல்சியம் உட்பட சகலதும் பசும் பாலில் இருந்து கிடைத்ததுடன், குழந்தை ஆரோக்கியமாகவும் இருந்தது.

குழந்தை சுமக்கும் தாய்க்கும் வயிற்றிலுள்ள குழந்தைக்கும் தேவையான போஷாக்கைப் பெற்றுக் கொள்வதற்காக அதிக விலைக்கு விற்பனையாகும் பால்மாவை அருந்தி பணத்தை கரைக்கும் கலாசாரம் அன்று இருக்கவில்லை.

பத்து பதினைந்து குழந்தைகளைப் பெற்ற தாய்மார் கூட தமது உடல் சக்தியை பராமரித்துக் கொண்டு குழந்தைக்குத் தாய்ப்பாலை ஊட்டி வளர்த்த பாரம்பரிய வழக்கம் ஆதிகாலத்தில் இருந்தது. நாட்டு மக்களின் வாழ் நாளைக் குறைக்கும்; வகையில் இறக்குமதியாகும் பால்மாவில் அடங்கியுள்ள விஷத் தன்மை குறித்து பேசத் தேவையில்லை என சிலர் நினைக்கலாம். இருந்தும் பன்னிரண்டு இலட்சம் பசுக்கள் உள்ள இந்த நாட்டில் தேவைக்குப் போதுமான பாலைப் பெற்றுக் கொள்வதற்கு வெளிநாடுகளிருந்து பால்மா வகைகளை இறக்குமதி செய்வது தொடர்பாக இலங்கையரின் கண்களைத் திறக்கக் கூடிய வகையில் பல விடயங்களை முன் வைக்க வேண்டியுள்ளது.

திறந்த பொருளாதார கொள்கையுடன் வெளிநாடுகளிருந்து எந்தவொரு குப்பை கூளங்களையும் இந் நாட்டிற்கு இறக்குமதி செய்யும் வகையில் கதவுகள் திறக்கப்பட்டதும் பால் மா இந்நாட்டின் முக்கிய இறக்குமதிப் பொருளாக மாற்றம் பெற்றது.

பிறந்த குழந்தை முதல் இறப்பை நெருங்கிக் கொண்டிருக்கும் வயதானவர்கள் வரையிலும் இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவை தேவைக்கு அப்பாற்பட்ட விதத்தில் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது.

இறக்குமதி செய்யப்படும் வகைகளில் டி.சி.டி. உள்ளடக்கப்பட்டதாகவும் பொட்டலினம் பக்டீறியா அடங்கியிருப்பதாகவும் ஆய்வு நிலையப் பரிசோதனை புள்ளி விபரங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு முடிவுக்கு வந்துள்ள போதும் பால்மா தொடர்பான பல மோசடிகள் பல வருடங்களுக்கு முன்னரேயே உலகுக்கு தெரிய வந்துள்ளது.

சுகாதாரமான மேய்ச்சல் நிலங்களில் சுகாதாரமாகவுள்ள பசுக்களிலிருந்து பெறப்படும் பாலை மாவாக்கி பாவனையாளர்களான உங்கள் கைகளுக்கு வழங்குகின்றோம் என மில்லியன் கணக்கான ரூபாய்களை செலவிட்டு பொது மக்களுக்கு அறிவித்த போதும் அதன் உண்மை நிலை துன்பகரமானது.

கூரையிலுள்ள சிறு துவாரத்தின் வழியாக கூட சூரிய ஒளி உள்ளே புக முடியாத வகையில் அமைக்கப்பட்டுள்ள மாட்டுக் கொட்டில்களில் உடம்பு அளவிற்கு இரும்புக் குழாய்களால் அமைக்கப்பட்ட தடுப்புக்களில் இந்த பசு மாடுகள் அடைக்கப்பட்டுள்ளன.

பால் அதிகமாகச் சுரப்பதற்கும் பசு மாட்டின் எடை அதிகரிப்பதற்கும் செயற்கை ஹோமோன்கள் சேர்க்கப்பட்ட புல் வகைகளை வயிறு முட்ட உண்டு நோய்கள் அணுகாதபடி மருந்து வகைகள் அடங்கிய நீரைக் குடித்து கட்டளைக்கு அடிபணிந்து நேராக நிமிர்ந்து நிற்கும் பாடசாலை பிள்ளைகளைப் போல் அணிவகுத்து நிற்கும் பசு மாடுகளிலிருந்து மின்சார இயந்திரம் மூலம் பலாத்காரமாக பாலைக் கறந்து தயாரிக்கப்படுவதே இந்த பால்மா வகைகளாகும்.

பால்மா வகைகளை விரும்பி பாவிக்கும் நாம் அனைவரும் இந்தக் கசப்பான உண்மைகளை புரிந்து கொள்வது நல்லது. கல்சியம் பற்றாக்குறையால் ஒஸ்டிரியோ பொரொஸிஸ் நோய் ஏற்படும் என்ற தேவையில்லாத அச்சத்தை மக்களுக்கு ஏற்படுத்தி பால்மா விற்பனையை அதிகரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது பாரிய மோசடியாகும்.

புகழ் பெற்ற வீரர்கள் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகைகள் மற்றும் தொழில்சார் பிரசித்தம் பெற்றவர்களைப் பயன்படுத்தி பொது மக்களை ஏமாற்றும் வகையில் பால்மா விளம்பரங்கள் இலாப நோக்கத்தைக் கொண்டு பாரியளவில் மேற்கொள்ளப்படுகின்றன.

தொழில்நுட்ப ஆய்வு மற்றும் அணுசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க இறக்குமதி செய்யப்பட்ட பால்மா வகைகளில் பிரச்சினைகள் இருக்கும் போது அதனை மறைக்க முயன்றவர்கள் மோசடியானவர்கள் என தெரிவித்துள்ளார். அவர் தேசிய பால் மா நிறுவனங்கள் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனத்தில் (ITI) வழங்கப்பட்ட அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டதும் சில நிறுவனங்கள் எமது உற்பத்திகளில் எந்தவித இரசாயனப் பொருட்களும் உள்ளடக்கப்படவில்லையென ஊடகங்களில் பணம் கொடுத்து விளம்பரங்களை வெளியிட்டதுடன் சிலர் வேண்டுமென்றே மக்கள் மத்தியில் தேவையில்லாத அச்சத்தை ஏற்படுத்துகின்றனர் எனவும் செய்திகளை வெளியிட்டன. இறக்குமதி செய்யப்பட்ட பால்மா வகைகளான அங்கர் முழு ஆடைப் பால்மா, டயமண்ட். அங்கர் வன் பிளஸ், மெலிபன் நொன் பெட், மற்றும் தேசிய உற்பத்தியான ஹைலண்ட், பெலவத்த பால்மா ஆகியவற்றின் மாதிரிகள் கைத்தொழில்நுட்ப ஆய்வு நிலையத்தில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இறக்குமதி செய்யப்பட்ட பால்மா வகைகள் அனைத்திலும் டி.சி.டி. விஷ இரசாயனப் பொருள் அளவுக்கு அதிகமாக உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தலைப்பு தொடர்பாக நாம் பேசும் போது தேசிய தொழில்களை ஊக்குவிக்க நாம் முற்படுவதாக சிலர் குற்றம் சாட்டினர். கைத்தொழில்நுட்ப ஆய்வு நிலையத்தில் வெளியிடப்பட்ட விஞ்ஞானபூர்வமான ஆய்வு அறிக்கையை வைத்துக் கொண்டே நாம் இந்தக் கருத்துக்களை மக்களுக்காக வெளியிடுகின்றோம். நாட்டின் எதிர்கால பரம்பரையினரின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் விஷ இரசாயனம் கலந்துள்ளது எனத் தெரிவிப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பின் நிற்பது கவலைக்குரிய விடயமாகும். அது எதிர்கால பரம்பரையினரின் மனித உரிமைகளை மீறுவதாகவும் அமைந்துள்ளது.

இதற்கு சில வருடங்களுக்கு முன்னர் வெளிநாடொன்றிலுள்ள மிருகக் காட்சி சாலைக்கு இந் நாட்டிலிருந்து யானையொன்றை அனுப்பி வைத்தமை தொடர்பாக இந்நாட்டு ஊடகங்கள் 148 பக்கங்களில் செய்திகளை வெளியிட்டிருந்தது. இருந்தும் இந்நாட்டு குழந்தைகளின் சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் விஷ இரசாயனங்கள் பால்மா வகைகளில் அடங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்த போதும் இதற்கு எதிராக பத்திரிகைகளில் கருத்துக்களை வெளியிடவும் இலத்திரனியல் ஊடகங்களில் இதற்கான நேரத்தை ஒதுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படாதது துரதிர்ஷ்டவசமானது என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கை வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் வைத்திய நிபுணர் அணுருந்த பாதெனிய இது குறித்து கருத்து தெரிவிக்கையில், நாட்டில் பால்மா தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினை மிகவும் பாரதூரமானது. வேறொரு நாடொன்றில் விஷ இரசாயனம் அடங்கிய பால்மா வகைகளை குழந்தைகளுக்கு வழங்கியதாக நிரூபிக்கப்பட்டால் அந்நாட்டு சுகாதார அமைச்சர் குழந்தைகளுக்கு நஷ்டஈடு வழங்கும் நிலைக்கு தள்ளப்படலாம். இருந்தும் எமது நாட்டின் நிலை தலைகீழாகவுள்ளது. டி.சி.டி. விஷ இரசாயனம் தொடர்பான பிரச்சினை குறித்து ஊடகங்களின் மூலம் தகவல்கள் வெளிவரத் தொடங்கிய உடனேயே இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகளில் விஷ இரசாயனம் உள்ளடக்கப்படவில்லையென தாய்லாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்தது.

இலங்கை மக்களினது சுகாதாரத்தை மேம்படுத்தும் பொறுப்பிலுள்ள சுகாதார அமைச்சு இந் நாட்டிற்கு பொறுப்புக் கூறும் நிறுவனம் ஒன்றின் அறிக்கையை ஏற்காமல் வெளிநாடொன்றின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஒரு முடிவுக்கு வருவது பிரச்சினையான விடயமாகும்.

சுகாதார அமைச்சின் மற்றும் ஒரு பேச்சாளர் இப்பிரச்சினையை திசைதிருப்புவதற்கு டி.சி.டி. என்பது விஷ இரசாயனம் அல்ல என்றும் இந்த இரசாயனத்தை விட உப்பு விஷமுடையது என்றும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதுடன் ஆசனிக், டி.சி.டி., கெடிமியம் போன்றவை சிறிதளவு உணவு வகைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது பிரச்சினைக்குரியதாகாது எனவும் தெரிவித்துள்ளார்.

ஒரு சிறு பிரிவினரின் இலாபத்திற்காக இந்த நாட்டு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இது போன்ற சம்பவங்களை பொறுப்பு வாய்ந்தவர்கள் மறைக்க முயற்சிப்பது நாட்டு மக்களுக்கு செய்யும் துரோகமாகும். இந்தப் பிரச்சினையை மறைக்க முயற்சிக்காமல் அமைச்சரவை குழுவொன்றை அமைத்துத் திரவப் பாலை இந்நாட்டில் பிரபலமாக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டியது அவசியம் என வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தமிழில்: எஸ்.கணேசன்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல