நாட்டில் யுத்தம் முடிவடைந்த தன் பின்னர் என்றும் இல்லாத வகையில் இனக் குரோதச் செயற்பாடுகள் ஒரு சிறு குழுவினால் நாட் டின் எல்லாப் பாகங்களிலும் பரப்பப்பட் டுக் கொண்டு வருகின்றன. இனங்களுக்கு இடையே பகைமைகளும், அநியாயங்க ளும் யுத்தத்தின் பின்னர் குறைந்து விடுமென்று நாட்டு மக்களால் மட்டுமன்றி, சர்வதேச நாடுகளினாலும் எதிர்பார்க்கப்பட் டன. ஆனால், யுத்தத்தின் பின்னர் இனத்துவேஷமும், வெறுப்பும் பகையும், காழ்ப்புணர்ச்சியும் அதிகரித்துக் காணப்படுவது வேதனைக்குரியதாகும். இந்த நாட்டை உண்மையாக நேசிக்கின்ற உள்ளங்களுக்கு துன்பமானதாகும்.
யுத்த முடிவுக்குப் பின்னர் நாட்டுப்பற்று என்பது பெரும்பான்மையினருக்கு அடிமை ப்பட்டு, அவர்களின் திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடப்பது என்றதொரு புதிய சித்தாந்தத்தை புத்தரின் தத்துவங்களை போதனையாகக் கொண்ட ஒரு சில தேரர்களின் தலைமையிலான சிங்களவர்கள் மக்களுக்கு கற்பித்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் இப்புதிய சித்தாந்தத்திற்கு அரசாங்க த்தில் உள்ள பௌத்த கடும்போக்காளர்க ளும் துணையாக நின்று கொண்டிருப்பது அவர்களுக்கு ஊக்குவிப்பு அளிப்பதாக இரு க்கின்றது.
தமிழர்களை யுத்தத்தின் மூலமாக அடக்கி விட்டோம். அடுத்ததாக முஸ்லிம்களை அட க்க வேண்டுமென்ற சிந்தனையைக் கொண்டதாகவே பௌத்த கடும் போக்காளர்களின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. இன்று முஸ்லிம்களின் மதவிழுமியங்களின் மீதும், பள்ளிவாசல்களின் மீதும் அடிமேல் அடி விழுந்து கொண்டிருக்கின்றன. முஸ்லிம்க ளும் தொடர்ச்சியாக குனிந்து கொண்டே நிற்கின்றார்கள். குட்டக் குட்ட குனிபவ னும் மடையன், குனியக் குனிய குட்டுபவனும் மடையன் என்று நம் முன்னோர் சொல்லியுள்ள தத்துவார்த்தத்தினை அவதானிக்கின்ற போது, முஸ்லிம்களின் மீது இனவிரோதம் காட்டுகின்றவர்களும், அதனை கோழைகளாக அவதானித்துக் கொண்டிருக்கின்ற முஸ்லிம்களின் தலைமைகளும் எந்த நிலையில் இருந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதனை நீங்களே புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகின்றோம்.
கொழும்பு – கிராண்ட்பாஸ் சுவர்ணசைத்திய வீதியில் அமைந்துள்ள தீனுல் இஸ் லாம் பள்ளிவாசலில் தொழுகையை மேற்கொள்ளக் கூடாதென்று பௌத்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒரு குழுவினரால் குறிப்பிட்ட பள்ளிவாசல் கடந்த 10.08.2013 சனிக்கிழமை தாக்கப்பட்டு சேதமாக்கப்பட்டது.
தீனுல் இஸ்லாம் பள்ளிவாசல் கடந்த 40 வருடங்களுக்கு முன்னர் ஏற்படுத்தப்பட்டதொன்றாகும். இப்பள்ளிவாசல் இங்குள்ள சுமார் 400 குடும்பங்களுக்கு போதாமையாக இருந்ததனால் இதனைப் பெரிதாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால், பள்ளிவாசலை பெரிதாக்க வேண்டுமாக இருந் தால் பள்ளிவாசலுக்குள் கிளை விட்டிருக் கும் அரச மரத்தை வெட்ட வேண்டும். இதன் நிமித்தம் அரச மரத்தை வெட்டுவதற்கான அனுமதியை பள்ளிவாசலின் நிர்வா கிகள் நகர அபிவிருத்தி அதிகார சபையி டம் பெற்றுக் கொண்டனர். ஆயினும், அரச மரத்தை வெட்டுவதற்கு பௌத்தர்கள் எதி ர்ப்புக் காட்டினார்கள்.
இதனைத் தொடர்ந்து புதிய இடத்தில் தீனுல் இஸ்லாம் பள்ளிவாசலை கட்டு வதென்றும், பழைய பள்ளிவாசலில் தொழுகை நடத்துவதில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டு, புதிய பள்ளிவாசல் மிகுந்த செலவில் கட்டப்பட்டது. இப்புதிய பள்ளிவாசல் கடந்த 04.07.2013 வியாழக்கிழமை திறக்கப்பட்டது. ஆயினும், இப்பள்ளிவாசலில் தொழுகை நடத்தப்படுவதனை பௌத்த தேரர்களின் தலைமையிலான ஒரு குழுவினர் எதிர்த்தனர். பள்ளிவாசலை தாக்க முற்பட்டனர். இதனை அடுத்து புதிய பள்ளிவாசல் மூடப்பட்டு, பழைய பள்ளிவாசலில் தொழுகைகள் நடைபெற்றன.
குறிப்பிட்ட புதிய பள்ளிவாசல் கடந்த வாரம் அரசாங்க உயர் மட்டத்தினரின் அனுமதியுடன் திறக்கப்பட்டது. ஆயினும், கடந்த 10.08.2013 மஹ்ரிப் தொழுகை நேரத் தில் பௌத்த, சிங்களவர்களினால் தாக்கப்பட்டது.
இத்தாக்குதல் சம்பவத்துடன் இது வரைக் கும் சுமார் 24 பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளன. ஆனால், பள்ளிவாசல்களை தாக்கி னார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இது வரைக்கும் எவரும் கைது செய்யப்படவில்லை. இதனை விடவும் மோசமானது இது வரைக்கும் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டமை பற்றியதொரு முறைப்பாட்டையேனும் பொலிஸில் முஸ்லிம்களினால் பதிவு செய்யப்படவில்லை. அதற்கான எந்தவொரு ஏற்பாட்டையும் முஸ்லிம் அரசியல் தலைமைகளும், பொறுப்பு மிக்க உலமாக்க ளும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்கப்பட்ட தனை கேள்வியுற்ற அனைத்து முஸ்லிம் அரசியல் தலைமைகளும் ஸ்தலத்திற்கு விரைந்தார்கள். கலந்துரையாடலில் ஈடுபட்டார்கள்.
பள்ளிவாசலுக்கு அருகில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நடைபெற்ற கலந்துரையாடலில் முஸ்லிம் அமைச்சர்கள் சிலரும் கலந்து கொண்டார்கள். புதிய பள்ளிவாசலி ல்தான் தொழுகை நடைபெற வேண்டும். இதனை விட்டுக் கொடுக்க முடியாதென்று தீர்மானித்தார்கள். இதேபோன்றதொரு முடி வினை அமைச்சர் பௌஸியின் வீட்டில் முஸ்லிம் அமைச்சர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடலிலும் எடுக்கப்பட்டன.
ஆனால், இந்த முடிவில் முஸ்லிம் அமைச்சர்களினால் உறுதியாக இருக்க துணிவு இருக்கவில்லை. பௌத்த சாசன அமைச்சில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முஸ்லிம் அமைச்சர்களும், முக்கிய உலமாக்களும், பௌத்த தேரர்கள் பெரும்பான்மை இனத்து அமைச்சர்களும் கலந்து கொண்டார்கள். இதன்போது முஸ்லிம்கள் சார்பில் புதிய பள்ளிவாசலில்தான் முஸ்லிம்கள் தொழுகையை நடத்த வேண்டும். முறையான அனுமதியுடன் கட்டப்பட்ட பள்ளிவாசல் என்று எடுத்துக் கூறிய போதிலும், அமைச்சர் சம்பிக்க ரணவக்க அதற்கு கடுமையான எதிர்ப்பினைக் காட்டினார். இவரின் எதிர்ப்பை சமாளிக்க முடியாத நிலையில் புதிய பள்ளிவாசலில் தொழுகையை நிறுத்துவதென்றும், பழைய பள்ளிவாசலை விஸ்தரிப்பதற்கு அருகில் உள்ள அரச மரத்தை அகற்றுவதென்றும், பள்ளிவாசலின் விஸ்தரிப்புக்கு தற்போதைய காணி போதாததாக இருப்பதனால், பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள காணியை பெற்றுக் கொள்வதென்றும் முடிவுகள் செய்யப்பட்டன.
முஸ்லிம்களின் உரிமைகளை விட்டுக் கொடுப்பதில் தாராளத் தன்மையைக் கடை ப் பிடித்துக் கொண்டு வருகின்ற முஸ்லிம் அரசியல், சமூக மற்றும் மதத் தலைமைகள் தீனுல் இஸ்லாம் பள்ளிவாசல் விடயத்தி லும் விட்டுக் கொடுப்பை மேற்கொண்டார்கள். அவர்களின் பெரிய மனதைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
தேவையற்ற இனமோதல்கள் ஏற்படுவதனை தவிர்ப்பதற்கும், அமைதியை ஏற்படுத்துவதற்கும் பிரச்சினைகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் விட்டுக் கொடுப்பினை செய்வது இன்றியமையாததாகும். ஆனால், நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த இனவாத அமைப்புக்களினாலும், கடும் போக்காளர்களினாலும், மாறிமாறி ஆட்சி அமைத்துக் கொண்ட அரசாங்கங்களினாலும் திட்டமிட்டு நடைபெற்ற சம்பவங்கள் யாவற்றிலும் முஸ்லி ம்களே விட்டுக் கொடுப்புக்களைச் செய்து ள்ளார்கள். இந்த விட்டுக் கொடுப்புக்களை முஸ்லிம்களின் பொறுப்பு வாய்ந்த அனைத்துத் தலைவர்களும் பெருமையாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.
முஸ்லிம்களின் மீது பௌத்த இனவாதிக ளும், கடும் போக்காளர்களும் வேண்டுமென்று மேற்கொண்டு வருகின்ற அடக்கு முறைகள் அனைத்துக்கும் முஸ்லிம்கள் விட்டுக் கொடுப்புக்களை செய்து கொண்டு வருவதானது அடி மைத்தனத்திற்கு ஒப்பானதாகும். விட்டுக் கொடுப்பு என்று வரும் போது இரண்டு தரப்பினரும் விட்டுக் கொடுப்புடன் செயற்பட வேண்டும். ஒரு தரப்பினர் மாத்திரம் விட்டுக் கொடுப்பை தொடர்ச்சியாக செய்து கொண்டிருப்பார்களாயின் இறுதியில் கோவணத்தையும் விட்டுக் கொடுக்குமாறு கேட்பார்கள்.
இதுவரைக்கும் 24 பள்ளிவாசல்கள் தாக்க ப்பட்டுள்ளன என்று நாம் எழுதிக் கொண்டி ருக்கும் வேளையில், கிராண்ட்பாஸ் பள்ளி வாசலின் விவகாரம் முற்றுப் பெறாத நிலையில் இருக்கின்ற குழப்பமான சூழ்
நிலையில் அநுராதபுர மாநகர சபையின் உத்தரவிற்கு அமைவாக மல்வத்து ஓயா லேன் பள்ளிவாசல் வியாழக்கிழமை (15.08.2013) முற்றாக அகற்றப்பட்டுள்ளது. இச்சம்பவத்தினை அடுத்து 25 பள்ளிவாசல்கள் பௌத்த இனவாதிகளினதும், கடும் போக்காளர்களினதும் தாக்குதல்களுக்கு உட்பட்டுள்ளன.
இவ்வாறு யுத்தத்தின் பின்னர் முஸ்லிம்களின் மீது பௌத்த இனவாதிகளும், கடும் போக்காளர்களும் அடாத்துக் கொண்டிரு ப்பதற்கான பிரதான காரணம் முஸ்லிம்களை தகுதியற்ற தலைமைகள் வழிநடத்திக் கொண்டிருப்பதுதான். முஸ்லிம்களின் அரசியல், சமூக, பொருளாதார, மதத் தலைவ ர்களை எடுத்துக் கொண்டால் ஆட்சியாளர்களை திருப்திப்படுத்துவதில் இன்பம் கண்டு கொண்டிருக்கின்றார்கள். பௌத்த இனவாதிகளின் செயற்பாடுகளை வெற்றி கொள்வதற்கு ஒற்றுமையுடன் செயற்படுவதற்கு பதிலாக அரசியல் கட்சிகள் என்றும், மத அமைப்புக்கள் என்றும் தங்களுக்குள் போட்டியிட்டுக் கொண்டு பிரிவினையை வளர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டபோது, பள்ளிவாசல்களுக்குள் பன்றி அறுக்கப்பட்ட போது, முஸ்லிம் பெண்களின் புர்கா விடயத்தில் தலையீடுகள் ஏற்பட்ட போது, முஸ்லிம்கள் உணவை மற்றவர்களுக்கு வழங்கும் போது துப்பிவிட்டுத்தான் வழங்குகின்றார் கள் என்று சொல்லிய போது முஸ்லிம்களின் எந்தத் தலைவரும் அதற்கு எதிராக காத்திரமான குரல் கொடுக்கவில்லை. தமது எதிர்ப்புக்களை காட்டவில்லை. அநியாயத்திற்கு அஞ்சி, ஒடுங்கி முஸ்லிம்களைப் பார்த்துப் பொறுமையாக இருக்கும் படி அறிக்கைகளை விடுத்துக் கொண்டு முஸ்லிம்களின் உரிமைகளை தாரை வார்த்துக் கொடுத்ததனை எதிர்கால முஸ்லிம் சமூகம் ஒரு போதும் மன்னிக்காது. கோழைகளுக்கு அல்லாஹ்வின் உதவியும் கிடைக்காது.
முஸ்லிம்கள் தமக்கு எதிராக பௌத்த இனவாதிகளினாலும், கடும்போக்காளர்களினாலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் போதும் தமது எதிர்ப்பைக் காட்ட வேண்டுமென்று நாம் கூறும் போதும், முஸ்லிம் சமூகத்தை வீதிக்கு இறக்கி ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள வேண்டுமென்று எவரும் புரிந்து கொள்ளக் கூடாது. தலைவர்கள் தங்களின் கண்டனங்களை துணிச்சலுடன் காட் டுதல், அதற்கு சரியான தீர்வு கிடைக்காத போது, அரசியல் ரீதியான அழுத்தங்களை மேற்கொள்ளுதல், பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்துதல் போன்ற காரியங்களில் தலைவர்கள் ஈடுபடுகின்ற போது அதனால், சாதகமான பலன் நிச்சயமாகக் கிடைக்கும். இத்தகைய எதிர்ப்புக்களையே காட்டுதல் வேண்டும்.
எங்கு தலைவர்கள் தங்களது சமூகப் பொறுப்புக்களை மறந்து பொருள் தேடுவ தற்கும், மற்றவர்களிடம் இருந்து வெறுமனே கண்ணியத்தையும் எதிர்பார்த்துக் கொண்டு செயற்படுவார்களோ அந்த தலைவர்களினால் சமூகத்தின் சீரழிவை தடுத்து நிறுத்த முடியாது. ஆதலால், முஸ்லிம்களின் தலைமைகள் தங்களின் பொறுப்புக்களை உணர்ந்து செயற்பட வேண்டும். தவறும் பட் சத்தில் முஸ்லிம்கள் தங்களுக்கு பொருத்தமான தலைவர்களை தேடிக் கொள்ளுதல் வேண்டும். இலங்கை முஸ்லிம்களின் தலைவர்கள்தான் தூங்கிக் கொண்டிருக்கின்றா ர்கள் என்றால் சமூகமும் தூங்கிக் கொண்டிருப்பதுதான் முஸ்லிம்களுக்கு இருக்கின்ற மிகப் பெரிய ஆபத்தாகும்.இதேவேளை, கிராண்ட்பாஸ் பள்ளி வாசல் விடயத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள உறுதி மொழிகள் நிறைவேற்றப்படுமா என்ற சந்தேகம் சாதாரண முஸ் லிம்களிடம் ஏற்பட்டுள்ளன. பள்ளிவாசலு க்கு அருகில் உள்ள அரச மரத்தை வெட்டுவ தற்கு பூரண விருப்பம் தெரிவிக்கப்பட்டா லும், இப்பத்தி எழுதும் வரைக்கும் அரச மரத்தின் கிளைகள் வெட்டப்பட்டுள்ள போதிலும், அரச மரம் இன்னமும் முழுமையாக அகற்றப்படவில்லை. குறிப்பிட்ட அரச மரத்தை முழுமையாக அகற்றுவதனை அங்குள்ள சில பௌத்தர்கள் விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
சஹாப்தீன் -

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக