மதங்கள் கடந்த மனித விழுமியத்தோடு உலகின் பல பாகங்களிலிருந்து தமிழ் பேசும் மக்கள் ஒன்றுகூடுவதும். தமிழில் பூசை, திருப்பலி ஒப்புக்கொடுத்தல் என ஐரோப்பிய வரலாற்றில் ஒரு ஆச்சரியமாகக் கடந்த 26 வருடங்கள் தொடர்கிறது ஜேர்மனியின் கேவிலார் நகர்த் தேவாலய உற்சவம். வருடாவருடம் ஆவணி மாதத்தில் இரண்டாவது சனியன்று இடம்பெறும் அன்னை மரியாளின் இத் தேவாலய உற்சவமானது எண்ணிப்பார்க்கவே சிரமமான சிறப்மமைந்த உறவுகளின் சங்கமம், மதத்துக்கப்பாலும் மனிதநேயத்துக்கு ஒரு மேடை.
இந்த வகைப் புனிதம் நிறைந்த சந்தோசமான ஒன்றுகூடலைக் கூடப் புலிப் பினாமிகள் பணம் பண்ணத் தவறவில்லை. ஆரம்பகாலங்களில் வேண்டுதலுக்காக உணவுப் பொட்டலங்கள் கொடுத்தவர்கள், சிறு உணவுக் கடைகள் போட எத்தனித்தவர்கள் என்று எல்லாவற்றையும் பணியக நிர்வாகத்தைக் கொண்டே தடுத்துப் பல்லாயிரம் மக்கள் கூடும் சந்தர்ப்ப தினத்தின் உணவு விற்பனை தங்களுக்கே உரித்தான ஏகபோக உரிமை எனக் கையகப்படுத்திக் கொண்டனர். 25 ஆண்டுகள் போட்டியற்ற சூழலில் பக்தர்களின் பசி தொடர்பாக அவர்களது தர்பார். தாங்களே தீர்மானித்த அனியாயவிலை. அளவும் அவர்களது கை மதிப்பு. கூட்டம் அலைமோதிக் குறைந்த கையிருப்பானால் கொத்துறொட்டிக்குள் முட்டை இறைச்சியைக் கண்டுபிடிக்கக் காந்தம் தேவைப்படும்.
விலை, மற்றும் ஒழுங்கற்ற நடவடிக்கைகள், அறவே சுத்தத்தைப் பேணாமை இவைகளை மறைப்பதற்கு „இதன் லாபம் இலங்கை அதிகளுக்காகவே செல்கிறது“ என்ற வார்த்தைப் போர்வையால் பிரச்சனைகளின் வடிகால்களை மூடிக்கொண்டே வந்தனர். ஆனால் கடந்த 25 ஆண்டுகால வர்த்தகத்திலிருந்து ஒரு சதமேனும் இலங்கைக்கு அனுப்பப்பட்டதுக்கு எந்த சான்றுமே கிடையாது.
ஜேர்மனியில் சொந்தமாக உணவு விடுதிகள் வைத்திருக்கும் மதுரம் போன்ற ஓரிரு புலிப் பினாமிகள் தங்கள் வியாபாரத் தலங்களிலிருந்து கொண்டுவரும் பழசுகளையும் உபகரணங்களையும் பாவிப்பதோடு சேவை என்ற பாசாங்கில் ஏமாறும் சிலihச் சம்பளமற்று வேலை வாங்கியும், தாயக அகதிகளின் சேவை என்று காட்டி ஜேர்மனியின் வரித் திணைக்கள அறவீட்டில் இருந்து சலுகை பெறுவதும் 25 வருடமாக தாயக மக்களின் பேரில் இவர்களின் கொள்ளை பிழைப்பாகி போனது.
இப்படி மக்களையும் அரசுகளையும் எத்திப் பிழைத்து தம் வயிற்றை வளர்க்கும் இந்த சுயநலக் கூட்டம் இறுதியில் ஆன்மீகப் பணியகத்தின் அடிமடியிலும் கைவைத்துவிட்டது.
உற்சவதினமன்று தேவாலயப் பகுதி அதிகம் அசுத்தப்படுவது இந்த உணவு எச்சங்கள், குறைப் பொட்டலங்களால் தான். அதை விட உணவுக் கடைக்கான பகுதி நிலம் உற்சவ முடிவில் முழுமையும் எண்ணெய் மயமாக்கப்பட்டிருக்கும், அதோடு இவர்கள் பாவிக்கும் மின்சாரம், தண்ணீர் என்பன ஏனைய கடைகளைக் காட்டிலும் பல மடங்கு அதிகமானது. நிலப் பரப்பும் அதிகமே.
உற்சவ முடிவில் தேவாலயத்தையும் அதன் சூழலையும் பழைய நிலையில் ஒப்படைப்பதற்கு ஆன்மீகப் பணியகத்தின் தன்னார்வத் தொண்டர்கள் குறிப்பாகக் மேல் மட்டத்தை நம்பும் அடிமட்டத் தொண்டர்கள் படும் சிரமத்தின் எல்லை சொல்லில் புரியவைக்க முடியாதது மட்டுமல்ல வாய்ப்பற்றது.
அப்படியிருந்தும் சாதாரணமாகக் கடைகளுக்கு எனக் குறிப்பிட்ட வாடகைப்பணத்தோடு தான் வருடா வருடம் ஏகபோக உரிமையையும் இவர்கள் எடுத்து வைத்திருக்கிறார்கள். இப்படியென்றால் இதற்கு ஏதோ ஒரு பின் புலம் இல்லாமலிருக்க முடியுமா?.
கேவிலார் தேவாலய தொடர்பிலிருக்கும் ஆன்மீகப் பணியகத்துள்ளும் ஆடுகள் சில கறுப்பாக உள்ளன போலும்.
அந்தத் தைரியத்தில் கடந்த 10.08.2013 அன்று நடந்த கேவிலார் தேவாலய உற்சவம் முடிவு நேரத்தை அண்மித்த போது . . . கடைகளின் வாடகைகளை அறவிடச் சென்ற பணியாளர்களிடம் வாடகை தர மறுத்தது மட்டுமல்லாமல் தொண்டு மனப்பாங்கோடு செயல்படும் பணியாளர்களை அவதூறாகப் பேசி வாக்குவாதங்களை முற்றவைத்து கைகலப்பளவுக்கு கொண்டு சென்ற நாடகத்தைப் பார்த்திருந்த பக்தர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தவர்களாகவும் அவ்விடத்தைவிட்டு அகன்றவர்களாகவும் திசைமாறி ஓடியதில் சற்று நேரம் தேவாலய வளாகத்தின் அமைதி பாதிக்கப்பட்டிருந்தது.
இப்படி நடந்த போதும் பணியாளர்களைச் சிறிதும் சட்டை செய்யாத ஒரு துணிச்சலோடு எமது தலைவர் பேர்லினில் இருக்கிறார் வேண்டுமானால் அவரோடு பேசுங்கள் என்று மிடுக்காகச் சொல்லிவிட்டுத் சாதாரணமாகவே தங்கள் விற்பனையையும் அலுவல்களையும் கவனித்துக்கொண்டிருந்தனர்.
பணியாளர்கள் குறிப்பிட்ட பேர்லின் நபருடன் தொடர்பு கொண்டார்கள். இந்த அளவுக்கு பிற செலவுகளைக் கணக்கில் கொள்ளாமல் சமாளித்து பல சலுகைகளோடும், வேறு யாருக்குமில்லாமல் உங்களுக்கு மட்டுமே உணவு விற்பனையின் ஏகபோக அனுமதி தருவதற்கும் நீங்கள் காட்டும் காரணம் இலங்கை அதிகளுக்காகவே இப்பணியின் லாபத்தை ஈடுபடுத்துவதாக் கூறிவருவது தான் . . . . . . 25 ஆண்டுகள் இதுவரை அங்கு எதையாவது செய்திருக்கிறீர்களா என்று பணியாளர்கள் கேட்டிருக்கிறார்கள். இதற்குப் பதில் தரவேண்டிய அவசியம் எனக்கில்லை எனக் கூறியபடி எதிர் முனையிலிருந்த பேர்லின் புலிப் பினாமியின் அழைப்புத் துண்டிக்கப்பட்டது.
ஜேர்மனியில் ஆன்மீகப் பணியகம் என்ற அமைப்பில் பணியாளர்கள் என்று ஈடுபட்டிருப்பவர்களில் சிலரின் அனுசரணை தான் பொதுமக்களைச் சொல்லி வயிறு வளர்க்கும் இந்த எத்தர் கூட்டத்தின் அடாவடித் தனங்களுக்குக் காரணம் என்பது இந்தச் சம்பவத்தால் வெளிப்படையானது.
ஜேர்மனியின் வடக்கு றையின் மாநிலத்தில் வாழும் அரைச்சுவாமி இதவிடவும் பெரும் தகுதி இவர் பிரபாகரன் காலத்தில் மண்டை இறுகி மீளமுடியாமல் தவிக்கும் ஒரு புலிப்பினாமி. இவர் மேதகு இம்மானுவேல் அடிகளாரின் பாரிய நட்புக்குரியவர். குசேலரும் கர்ணனும் போல என்று பேசப்படுகிறது. இவர் தான் இதற்கெல்லாம் காரணகர்த்தா என்றறிகிறோம்.
சிலுவையில் அறைந்தவனையும் மன்னித்த யேசு பிரானைக் சொல்லிக்கொண்டு துவேச நஞ்சைத் துணிச்சாலாப் பிரச்சாரம் செய்பவர்களை அடிகளார் என்பதே அபத்தம் அதில வேற மேதகு? ஆன்மீகப் பணியகத்தின் தலமைப் பொறுப்பாளராக இருக்கும் இந்த இம்மானுவேலுக்கு மனச்சாட்சி(இருந்தால்) இருக்கிறதா ஆண்டவருக்கே வெளிச்சம்?
சாவிலும் வாழும் உத்தியைக் கற்றுக்கொண்டு வயிறு வளர்க்கும் கூட்டம் தேவாலயங்கள், கோவில்கள், பாடசாலைகள் எதையுமே விட்டதில்லை. இனத்துவேசம் இவர்கள் ஆயுதம் என்பதால் நல்ல வேளை பள்ளிவாசல்களும், பான்சாலைகளும் தப்பிவிட்டன.
சம்பவதினம் நேரில் பார்த்த சிலுவையூரான்
சலசலப்பு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக