பைட் (‘byte’) என்னும் சொல் ‘by eight’ என்பதன் சுருக்கமாகும்.
‘picture cell’ or ‘picture element என்பதன் சுருக்கமாகும்.
வை-பி (Wi - Fi) என்னும் தொழில் நுட்பம் ரேடியோ அலைவரிசைகளைப் பயன்படுத்துகிறது. இதனால் டேட்டாவை அனுப்புவர் மற்றும் பெறுபவர் இடையே எந்த வயர் இணைப்பும் தேவையில்லை. பொதுவாக வை-பி (Wi - Fi) இத்தகைய இணைப்பினை 50 மீட்டர் சுற்றளவிற்குத் தருகிறது. அதிக வை-பி (Wi - Fi) இணைப்பு கொண்டிருக்கும் நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தையும் அடுத்ததாக பிரிட்டன், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகியவையும் இடம் பெறுகின்றன.
ஏதேனும் ஒரு பைல், போல்டர் என ஒன்றை செலக்ட் செய்து பின் Alt + Enter அழுத்தினால் அது குறித்த தகவல்கள் தரப்படும் Properties விண்டோ கிடைக்கும். அந்த பைல், போல்டர் அல்லது ட்ரைவ் குறித்து அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.
Hard Disk: (ஹார்ட் டிஸ்க்) பைல்களைப் பதிந்து வைத்து இயக்கப் பயன்படும் ஓர் அடிப்படை சாதனம். இதில் அனைத்து வகை பைல்களையும் பதியலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் (விண்டோஸ்), அப்ளிகேஷன் சாப்ட்வேர் (எம்.எஸ்.ஆபீஸ், பேஜ்மேக்கர் போன்றவை) மற்றும் இவற்றால் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தையும் இதில் பதியலாம். இதனை முறையாகவும் கவனமாகவும் கையாள வேண்டும். இது கெட்டுப் போவதைத்தான் ஹார்ட் டிஸ்க் கரப்ட் ஆகிவிட்டதாகக் கூறுவார்கள். ஒரு முறை கெட்டுப் போனால் அதனை மீண்டும் சரி செய்வது சிரமமான காரியம். எனவே இதில் பதியப்படும் பைல்களுக்கு நகல் எடுத்து தனியே இதைப் போன்ற வேறு சாதனங்களில் பதிந்து வைப்பது நல்லது.
Share |

ஈதர்நெட் (Ethernet) என்பது ஸெராக்ஸ் நிறுவனத்தின் ட்ரேட் மார்க். அதே போல யூனிக்ஸ் என்பது AT&T நிறுவனத்தின் ட்ரேட் மார்க்.
Taskbar: (டாஸ்க் பார்) விண்டோஸ் இயக்கத்தில் மானிட்டர் திரையில் கீழாக இயங்கும் நீள் கட்டம். இதில் ஸ்டார்ட் மெனு, விரைவாக அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்க ஐகான்கள் அடங்கிய தொகுப்பு, இயங்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களின் பைல்களுக்கான கட்டங்கள் மற்றும் கடிகாரம், பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம்களின் ஐகான்கள் ஆகியவை இருக்கும். இவற்றைத் தேவைப்படும்போது கிளிக் செய்து பெறலாம்.
சில பைல் வகைகள்
dat டேட்டா அடங்கிய தகவல் பைல். டேட்டாவினைக் கையாளும் எந்த ஒரு அப்ளிகேஷனிலும் இதனைத் திறக்கலாம்.
.doc டாகுமெண்ட் பைல். வேர்ட் தொகுப்பில் திறந்து பயன்படுத்தலாம்.
.exe எக்ஸிகியூட்டபிள் பைல். புரோகிராம் ஒன்றின் முதன்மையான பைல். இதில் டபுள் கிளிக் செய்தால் அந்த புரோகிராம் இயங்கும்.
.gif பட பைல். பெயின்ட் மற்றும் அடோப் போட்டோ ஷாப் போன்ற படங்களைக் கையாளும் அப்ளிகேஷன்களில் திறந்து பயன்படுத்தலாம்.
.html /.htm இணைய தளத்தில் வைக்கப்படும் டாகுமெண்ட். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் உட்பட எந்த பிரவுசரிலும் இதனைத் திறந்து பயன்படுத்தலாம்.
ஏதேனும் ஒரு பைல், போல்டர் என ஒன்றை செலக்ட் செய்து பின் Alt + Enter அழுத்தினால் அது குறித்த தகவல்கள் தரப்படும் Properties விண்டோ கிடைக்கும். அந்த பைல், போல்டர் அல்லது ட்ரைவ் குறித்து அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.
--------------
தொழில்நுட்பம்
Download: கம்ப்யூட்டர் ஒன்றிலிருந்து நேரடியாக இன்னொரு கம்ப்யூட்டருக்குப் பைலை மாற்றுவதனை டவுண்லோட் எனக் குறிப்பிடுகிறோம். இருப்பினும் இன்டர்நெட் நெட்வொர்க்கில் இணைந்துள்ள கம்ப்யூட்டரிலிருந்து ஒரு பைல் இறக்கிப் பதியப்படுவதனையே இது பெரும்பாலும் குறிக்கிறது.
Firewall: நெட்வொர்க் (இன்டர்நெட் உட்பட)கில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு கம்ப்யூட்டரில் உள்ளே அனுமதியின்றி வரும் அடுத்தவரின் முயற்சியைத் தடுக்கும் ஒரு சாப்ட்வேர் அல்லது சிறிய ஹார்ட்வேர் சாதனம்.
Internet Telephony: வழக்கமான டெலிபோன் இணைப்பில்லாமல் இன்டர்நெட் மூலம் தொலைபேசி தொடர்பு கொண்டு பேசும் முறைக்கு இந்த பெயர்.
ட்ரைவர் (Driver): விண்டோஸ் மற்றும் பிற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் டிஜிட்டல் சாதனங்கள் (பிரிண்டர், மவுஸ், பிளாஷ் ட்ரைவ் போன்றவை) தொடர்பு கொள்ள தேவையான சாப்ட்வேர் புரோகிராம் தான் ட்ரைவர் புரோகிராம் ஆகும். விண்டோஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பலவகையான சாதனங்களுக்கான ட்ரைவர் பைல்கள் ஏற்கனவே பதியப்பட்டே கிடைக்கும். அப்படி இல்லாத நிலையில் இந்த சாதனங்களுடன் சிடியில் அவற்றிற்கான ட்ரைவர்கள் தரப்படும். எனவே ட்ரைவர் புரோகிராம் அடிப்படையில், அது எந்த சாதனத்திற்காகப் பயன்படுகிறதோ, அதனைச் சேர்ந்ததாகும்.
பிங் (Ping) : பிங் என்பது, கம்ப்யூட்டர் நெட்வொர்க் இணைப்பில் ஒரு பொதுவான டூல். இணைய இணைப்பு வழிமுறையில் (Internet Protocol IP), நம்மால் நாம் இலக்கு வைக்கும் ஹோஸ்ட் கம்ப்யூட்டரை அணுக முடிகிறதா இல்லையா என்ற சோதனை மேற்கொள்ள இந்த டூல் பயன்படுகிறது. இணைப்பு வேண்டும் சர்வரில் இருந்து பதில் கிடைக்கிறதா என்பதையும் நாம் இந்த டூல் மூலம் அறிய முடியும். இந்த டூல், இலக்கு வைத்திடும் சர்வருக்கு அனுப்பும் செய்தியை எதிரொலி வேண்டுகோள் (Echo Request) என அழைப்பார்கள். அந்த சர்வருக்கு வேண்டுகோள் சென்று, என்ன பதில் கிடைக்கிறது என்பதை இந்த டூல் காத்திருந்து பெறும். அவ்வாறு பெறுவதற்கான நேரம் எவ்வளவு ஆகிறது என்பதையும் கணக்கிடும்.
பயர்வால் (Firewall): வைரஸுக்கு எதிரான புரோகிராம் என சொல்ல முடியாது. அது ஒரு வடிகட்டி. இணைய இணைப்பின் வழியே வரும் டேட்டா பாக்கெட்களை வடிகட்டி, குறிப்பிட்ட டேட்டா பாக்கெட்களை நிறுத்தும். சிலவற்றை நிறுத்தி, இந்த எண் முகவரி உள்ள இணைய தளத்திலிருந்து தகவல்கள் வருகின்றன. அனுமதிக்கவா? என்று உங்களைக் கேட்கும்.
Share |

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக