வடமாகாணசபை தேர்தலுக்கு முன்னரும் தேர்தல் முடிந்த பின்னரும் தமிழீழ கோரிக்கையை கைவிட்டு மாகாணசபையை ஏற்றுக்கொண்டது தவறு என புலம்பெயர் தமிழர்கள் சிலரும் தமிழகத்தில் உள்ள சிலரும் கண்டனக்கணைகளை தொடுத்து வருகின்றனர்.
மாகாணசபை தேர்தலை தமிழ் தேசிய கூட்டமைப்பு பகிஷ்கரிக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேர்தலுக்கு முன்னர் கோரி வந்தனர்.
தமிழீழ கோரிக்கையை கைவிட்டு விட்டோம் என்று சொல்ல இந்த அயோக்கியர்கள் யார் என கவிஞர் காசி ஆனந்தன் ஆவேசமாக பேசிய காணொளி ஒன்றும் இணையத்தளங்களில் பார்க்க முடிந்தது.
தனிநாட்டு தமிழீழ கோரிக்கையை கைவிடுவதற்கு எவருக்கும் உரிமை இல்லை என்று புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களும் தமிழ்நாட்டில் உள்ள சிலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த மாகாணசபையில் எதுவுமே இல்லை, மாகாணசபையை விடுதலைப்புலிகள் நிராகரித்திருந்தனர் என்றும் சிலர் எழுதி வருகின்றனர்.
காசி ஆனந்தனும் சரி புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களும் சரி தமிழ்நாட்டில் உள்ள ஈழவிடுதலை ஆதரவாளர்கள் என கூறுபவர்களும் சரி விடுதலைப்புலிகளையும் அதன் தலைவர் பிரபாகரனையும் திட்டி தீர்ப்பது போலவே எனக்கு படுகிறது.
பாவம் இத்தனை தியாகங்களை புரிந்த அவர்களை ஏன் இவர்கள் இப்படி திட்டி தீர்க்கிறார்கள் என எண்ணிக்கொள்வதுண்டு
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமை மாகாணசபையை ஏற்றுக்கொண்டிருந்தது, தனிநாட்டு கோரிக்கையை கைவிட்டு சுயாட்சி அடிப்படையிலான தீர்வு பற்றி திம்பு தொடக்கம் ஜெனிவா வரை பேசி வந்தது என்று நான் சொன்னால் உடனடியாக இவன் துரோகி என சொல்வதற்கும் புலம்பெயர் நாடுகளில் உள்ள சில புலன்பெயர்ந்தவர்கள் இருப்பார்கள் என்பது எனக்கு தெரியும்.
ஆனால் வரலாற்றை மூடி மறைக்க முடியாதல்லவா
1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்னர் அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வதாகவும், இந்த ஒப்பந்தத்தை நம்பி ஆயுதங்களை தாம் கையளிப்பதாகவும், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சுதுமலை கூட்டத்தில் பேசியிருந்தார். அந்த நேரத்தில் ஒரு பத்திரிகையாளனாக நான் அக் கூட்டத்திற்கு சென்றிருந்தேன்.
அதன் பின்னர் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட 13ஆவது திருத்த சட்டத்தின் கீழ் மாகாணசபைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாகாணசபைக்கு தேர்தலை நடத்தி உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு முதல் இடைக்கால சபை ஒன்றை உருவாக்குவது என்ற ஆலோசனையையும் விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொண்டனர்.
இடைக்கால சபைக்கான தலைவரை தெரிவு செய்வதற்காக மூன்று பெயர்களை விடுதலைப்புலிகள் சிபார்சு செய்வதென்றும் அந்த மூன்று பேரில் ஒருவரை ஜனாதிபதி தெரிவு செய்வார் என்றும் முடிவாகியிருந்தது.
வடகிழக்கு மாகாணசபைக்கான இடைக்கால சபை உறுப்பினர்கள் பங்கீடும் அறிவிக்கப்பட்டு விடுதலைப்புலிகள் தங்கள் தரப்பு உறுப்பினர்களின் பெயர்களையும் அறிவித்திருந்தனர்.
அந்த நாட்களில் விடுதலைப்புலிகள் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்புக்களில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். அப்போது எல்லாம் வடகிழக்கு மாகாண இடைக்கால சபையை ஏற்றுக்கொண்டு அதனை உருவாக்கி நடத்துவதற்கு தயாராக இருப்பதாக கூறிவந்தனர்.
வடகிழக்கு மாகாண இடைக்கால சபை தலைவர் பதவிக்காக மூன்று பேரின் பெயர்களை விடுதலைப்புலிகள் சிபார்சு செய்திருந்தனர்.
1. செல்லையா பத்மநாதன், மட்டக்களப்பு அமிர்தகழியை சேர்ந்த இவர் இலங்கை நிர்வாக சேவையை சேர்ந்தவர். மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் மேலதிக அரசாங்க அதிபராகவும் இருந்தவர். போராளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 4 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டிருந்தவர். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் அரசியல் கைதிகளுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டவர்.
2. எஸ்.சிவபாதசுந்தரம், வடமராட்சி பிரஜைகள் குழுக்களின் தலைவராக இருந்த இவர் எழுதுவினைஞர் சங்க தலைவராக இருந்தவர். தந்தை செல்வாவின் பிரத்தியேக செயலாளராக இருந்தவர்.
3. சி.வி.கே.சிவஞானம், இவர் அப்போது யாழ். மாநகரசபையின் ஆணையாளராக இருந்தவர்.
இந்த மூன்று பேரின் பெயர்களை தான் விடுதலைப்புலிகள் வடகிழக்கு மாகாணசபையின் இடைக்கால சபையின் தலைவர் பதவிக்கு சிபார்சு செய்தார்கள். இவர்களில் அப்போது ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர்.ஜயவர்த்தனா சி.வி.கே. சிவஞானத்தை வடகிழக்கு மாகாணசபையின் இடைக்கால சபை தலைவராக அறிவித்தார்.
ஆனால் இதனை நிராகரித்த விடுதலைப்புலிகள் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த செல்லையா பத்மநாதனைத்தான் தெரிவு செய்ய வேண்டும் என்றும் இல்லையேல் இடைக்கால சபையிலிருந்து விலகப்போவதாகவும் அறிவித்தனர்.
விடுதலைப்புலிகள் விலக வேண்டும் என்ற வஞ்சக நோக்கத்துடனேயே ஜே.ஆர்.ஜனவர்த்தனா சி.வி.கே. சிவஞானத்தை தெரிவு செய்தார் என்பதுதான் உண்மை
பத்மநாதனைதான் வடகிழக்கு மாகாணசபையின் இடைக்கால சபையின் தலைவராக நியமிக்க வேண்டும் என்பதில் விடுதலைப்புலிகள் உறுதியாக இருந்திருந்தால் அவரின் பெயரை மட்டும் சிபார்சு செய்து அனுப்பியிருக்க வேண்டும். மூவரின் பெயரை சிபார்சு செய்து அனுப்பியிருக்க கூடாது. அதேவேளை விடுதலைப்புலிகள் வடகிழக்கு மாகாண இடைக்கால சபையிலிருந்து விலகி செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்த ஜே.ஆர்.ஜயவர்த்னாவுக்கு இது பெரும் வாய்ப்பாக அமைந்திருந்தது.
இந்த வேளையில் ஒன்றையும் நான் குறிப்பிட வேண்டும். செல்லையா பத்மநாதனை வடக்கு கிழக்கு மாகாண இடைக்கால சபையின் தலைவராக நியமிக்க வேண்டும் இல்லையேல் அதிலிருந்து விலகி விடுவதாகவும் விடுதலைப்புலிகள் அறிவித்து ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அவரை நியமிக்க மறுத்ததை அடுத்து வடகிழக்கு மாகாண இடைக்கால சபையிலிருந்து விடுதலைப்புலிகள் விலகினர்.
ஆனால் அதன் பின்னர் வடகிழக்கு மாகாணசபைக்கு இந்திய அரசாங்கம் தனக்கு சார்பான வரதராசபெருமாள் தலைமையில் பொம்மை மாகாண அரசை அமைத்த போது வரதராசபெருமாள் அமைச்சரவையின் செயலாளராக பத்மநாதன் நியமிக்கப்பட்டார்.
தன்னை நியமிக்கவில்லை என்பதற்காகவே வடகிழக்கு மாகாண இடைக்கால சபையை விடுதலைப்புலிகள் நிராகரித்து இந்திய இராணுவத்துடன் போருக்கு சென்றனர் என்பது தெரிந்தும் இந்தியாவினால் உருவாக்கப்பட்ட வரதராசபெருமாள் தலைமையிலான மாகாண அரசில் செயலாளர் பதவியை பத்மநாதன் பெற்றுக்கொண்டார்.
இந்த வேளையில் இன்னொன்றையும் கூற வேண்டும், வடகிழக்கு மாகாண இடைக்கால சபைக்கு விடுதலைப்புலிகள் சிபார்சு செய்த சிவபாதசுந்தரத்தை இந்திய இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் சண்டை நடந்த காலத்தில் வல்லைவெளியில் வைத்து இந்திய இராணுவத்தினருடன் சேர்ந்திருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தினர் சுட்டுக்கொன்றனர்.
சிவபாதசுந்தரம் என்னுடைய ஊரான வடமராட்சியை சேர்ந்தவர். அந்த வகையில் அவருடனான பழக்கம் எனக்கு இருந்தது.
நான் முரசொலியில் உதவி ஆசிரியராக பணியாற்றிய போது அரியாலையில் நடந்த கூட்டத்தில் சிவபாதசுந்தரம் பேசினார். அந்த கூட்டத்திற்கு நானும் சென்றிருந்தேன். இந்திய இராணுவ கெடுபிடியிலும் அவர் உறுதியுடன் பேசினார். விடுதலைப்புலிகள் தான் எங்கள் பிரதிநிதிகள், இதனை இந்திய இராணுவம் உணர்ந்து கொள்ள வேண்டும், யுத்தத்தை நிறுத்தி அவர்களுடன் பேசி தீர்வு காண வேண்டும் என பேசியிருந்தார்.
அவரின் பேச்சை அடுத்த நாள் பத்திரிகைக்கு தலைப்பு செய்தியாக போடலாம் என பிரதம ஆசிரியரிடம் கூறிவிட்டு மதிய உணவிற்காக சென்றிருந்தேன்.
நான் திரும்பி அலுவலகம் வந்த போது வல்லைவெளியில் சிவபாதசுந்தரத்தை சுட்டு விட்டார்கள் என பிரதம ஆசிரியர் சொன்ன போது அதிர்ச்சியடைந்தேன். மறுநாள் அவர் இறந்த செய்தி தலைப்பு செய்தியானது. அவர் அரியாலையில் பேசிய பேச்சு சிவபாதசுந்தரத்தின் இறுதி உரை என்ற தலைப்போடு பின்பக்க தலைப்பு செய்தியாக வெளிவந்திருந்தது.
லிபறேசன் ஒப்பிறேசன் காலத்தில் பருத்தித்துறை பகுதியில் யுத்தத்தால் அவலப்பட்ட மக்களுக்கு பெரும் துணையாக நின்று உதவி புரிந்தவர் சிவபாதசுந்தரம், அப்படி பட்ட நல்ல மனிதரை இந்திய இராணுவத்தினருடன் சேர்ந்திருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தினர் சுட்டு விட்டனரே என்ற கோபம் இன்றும் எனக்கு ஆறவில்லை.
இதேவேளை வடகிழக்கு மாகாணசபைக்கு 1988ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினர் எப்படி அந்த தேர்தலை நடத்தினர் என்பது பற்றியும் முக்கியமாக வடமாகாணத்தில் அது எப்படி நடந்தது எப்படி உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள் என்பது பற்றியும் இன்னொரு தடவை எழுத இருக்கிறேன். அதில் இந்திய இராணுவமும் அதனுடன் சேர்ந்த ஒட்டுக்குழுக்களும் செய்த அயோக்கிய தனங்கள் அதிகம்.
வடகிழக்கு மாகாண இடைக்கால சபையிலிருந்து விலகி இழுபறியில் இருந்த வேளையில் தான் திலீபன் உண்ணாவிரதம் இருந்து உயர்நீத்ததும் அதன் பின்னர் குமரப்பா புலேந்திரன் உட்பட 16 போராளிகளை சிறிலங்கா கடற்படை கைது செய்து அவர்கள் சயனட் அருந்திய சம்பங்களும் இடம்பெற்று விடுதலைப்புலிகள் இந்திய இராணுவத்தினருடனான யுத்தத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
எனவே விடுதலைப்புலிகள் மாகாணசபையை ஏற்றுக்கொள்ளவில்லை என்று ஒரு போதும் சொல்ல முடியாது. அவர்கள் மாகாணசபையை ஏற்றுக்கொண்டுதான் வடக்கு கிழக்கு மாகாணத்தின் இடைக்கால சபைக்கு உறுப்பினர்களையும் அதற்கான தலைவரையும் தெரிவு செய்வதில் ஈடுபட்டனர். மாகாணசபையை முற்றாக நிராகரித்திருந்தால் அவர்கள் மாகாணசபை தேர்தலுக்கு முன்னரான இடைக்கால சபை பற்றி கவனத்தை செலுத்தி இருக்க தேவை இல்லை.
தமிழீழத்தை தவிர வேறு எது பற்றியும் பேசுவதற்கு உரிமை இல்லை என கூறுபவர்கள் மறு புறத்தில் விடுதலைப்புலிகளை திட்டி தீர்ப்பதாகவே எனக்கு படுகிறது.
திம்பு முதல் ஜெனிவா வரை நடந்த பேச்சுவார்த்தைகளில் தமிழீழ கோரிக்கை முன்வைக்கப்படவில்லை. அதிகார பரவாக்கல் உள்ள சுயாட்சி அதிகாரம் பற்றியே விடுதலைப்புலிகளும் சிறிலங்கா தரப்பும் பேசி வந்தாhர்கள். முக்கியமாக ஒஸ்லோ உடன்படிக்கை என்பது தமிழீழத்தை முற்றாக கைவிட்ட ஒப்பந்தமாகும்.
ஓஸ்லோ உடன்படிக்கையில் தமிழீழம் என்ற வார்த்தையே இல்லை, இலங்கையில் ஒற்றையாட்சியின் கீழ் தீர்வு என்பதே ஒஸ்லோ உடன்படிக்கையாகும். இதனை ஒஸ்லோ பிரகடனம் என்றும் அழைப்பர்.
அது தவிர ஜெனிவாவில் நடந்த பேச்சு வார்த்தைகளில் தனிநாடு பற்றி எந்த கட்டத்திலும் விடுதலைப் புலிகள் பேசவில்லை, முழுக்க முழுக்க மாநில சுயாட்சி பற்றியே பேசினர். சுவிஸ் போன்ற நாடுகளில் உள்ளது போன்று அதிகாரப்பரவலாக்கல் செய்யப்பட்ட மாநில சுயாட்சி பற்றியே பேச்சுக்கள் நடந்தன.
2002ஆம் ஆண்டு சமாதான உடன்படிக்கையின் கீழ் விடுதலைப்புலிகள் இடைக்கால தன்னாட்சி அதிகார சபை ஒன்றிற்கு இணக்கம் கண்டிருந்தனர் என்பதையும் அது பின்னர் சிறிலங்கா உயர்நீதிமன்றத்தால் தடை செய்ததையும் நாம் மறந்து விட முடியாது.
எனவே தமிழ் தலைமைகள் என்று சொல்பவர்கள் தமிழீழ கோரிக்கையை காலத்திற்கு காலம் எல்லோருமே கைவிட்டிருந்தார்கள் என்பதுதான் உண்மை.
வட்டுக்கோட்டை பிரகடனத்தின் பிரகாரம் சர்வஜன வாக்கெடுப்பாக அறிவித்து 1977 ஏப்ரலில் பொதுத்தேர்தலில் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு மக்கள் தமிழீழத்திற்கான ஆணையை வழங்கினார்கள்.
ஆனால் அவர்கள் 1988க்கு பின்னர் நடந்த தேர்தல்களில் இலங்கை அரசியலமைப்பின் 6ஆவது திருத்த சட்டத்தினை ஏற்று நாட்டு பிரிவினைக்கு ஆதரவாக செயற்பட மாட்டோம் என சத்திய பிரமாணம் செய்தே தேர்தல்களில் போட்டியிட்டு வருகின்றனர்.
இப்போது இலங்கையில் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தனிநாட்டு கோரிக்கைக்கு ஆதரவாக செயற்பட மாட்டோம் என சத்திய கடதாசியில் கையொப்பம் இட்டே வேட்பு மனுக்களை தாக்கல் செய்கின்றனர்.
தேர்தல் திணைக்களத்தில் ஒரு கட்சி பதிவு செய்வதாக இருந்தால் நாட்டை பிளவு படுத்துவதற்கோ அல்லது தனிநாட்டு கோரிக்கைக்கு ஆதரவாகவே செயற்பட மாட்டோம் என்று கையொப்பம் இட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கும் பட்சத்திலேயே தேர்தல் ஆணையாளரால் அந்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
தமிழீழ விடுதலைப்புலிகள் கூட தங்களை சிறிலங்கா தேர்தல் திணைக்களத்தில் ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்த போது இந்த நிபந்தனைகளை ஏற்றே தமது கட்சியை பதிவு செய்தனர்.
ஒரு நாடு இரு தேசம் என்ற கொள்கையுடைய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி கூட தேர்தலில் போட்டியிடுகின்ற போது அல்லது பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்தில் சத்திய பிரமாணம் செய்கின்ற போது 6ஆவது திருத்த சட்டத்தை ஏற்றுக்கொள்கிறோம் என கூறியே சத்திய பிரமாணம் செய்து கொள்கின்றனர்.
இதை நான் தவறு என கூறவரவில்லை, இதுதான் யதார்த்தம்.
இந்த யதார்த்தத்தை தான் சம்பந்தன் கூறுகிறார்.
அவர் அப்படி கூறுகின்ற போது நான் உட்பட எங்களில் பெரும்பாலானவர்கள் அவர் மீது கோபம் கொள்கிறோம்.
ஒன்றுபட்ட இலங்கைக்குள் பூரண அதிகாரம் கொண்ட சுயாட்சி அதிகாரத்தை உடைய நிரந்தர தீர்வு என்றுதான் சம்பந்தன் கூறுகிறார்.
இதுபற்றிதான் விடுதலைப்புலிகளும் திம்பு முதல் ஜெனிவா வரை பேசி வந்தனர்.
தமிழீழ கோரிக்கையை கைவிட்ட சம்பந்தனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் துரோகிகள் என்றால் காலத்திற்கு காலம் சிறிலங்கா அரசுடன் பேச்சுக்களை நடத்திய போது சுயாட்சி கோரிக்கையை முன்வைத்த விடுதலைப்புலிகள் யார்?
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் மாகாணசபையை ஏற்றுக்கொண்டு இடைக்கால சபைக்கு உறுப்பினர்களை சிபார்சு செய்த விடுதலைப்புலிகள் யார்?
ஓன்றை ஆட்சியின் கீழ் இடைக்கால தன்னாட்சி அதிகாரசபையை ஏற்றுக்கொண்ட விடுதலைப்புலிகள் யார்?
அண்ணன் காசி ஆனந்தன் பாஷையில் கூறுவதானால் தமிழீழ கோரிக்கையை கைவிட்ட விடுதலைப்புலிகள் அயோக்கியர்களா?
யார் துரோகி? யார் தியாகி?
எனக்கு இது புரியவில்லை,
-இரா.துரைரத்தினம்
( இக்கட்டுரை கொழும்பிலிருந்து வெளிவரும் மகாராசா நிறுவனத்தின் தமிழ்தந்தி (29.09.2013) ஞாயிறு பத்திரிகையில் வெளியானதாகும்)
- See more at: http://www.thinakkathir.com/?p=52750#sthash.7aXzHqav.dpuf

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக