தெருவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடொன்றின் போது பாய்ந்து வந்த துப்பாக்கி ரவை பிருஷ்ட பகுதியை துளைத்துச் சென்றதால் குருதி பெருக்கெடுத்தோட வந்த தமது 10 வயது மகளை, பூப்பெய்தி விட்டதாக நினைத்துப் பல நேரமாக சிகிச்சை எதற்கும் உட்படுத்தாது பெற்றோர் இருந்த சம்பவம் அமெரிக்க கலிபோர்னியா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
அந்த சிறுமி ஹேவார்ட் நகரிலுள்ள தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த வேளை தெருவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது திசை மாறி வந்த துப்பாக்கி ரவை சிறுமியின் பிருஷ்ட பகுதியை ஊடுருவியுள்ளது.
துப்பாக்கி ரவை தனது உடலில் பாய்ந்துள்ளதை அறியாத சிறுமி குருதியால் நனைந்த ஆடையுடன் பெற்றோரிடம் வந்துள்ளார்.
இந்நிலையில் தமது மகள் பூப்பெய்தி விட்டதாக கருதிய சிறுமியின் பெற்றோர், 5 மணித்தியாலமாக அவரை சிகிச்சை எதற்கும் உட்படுத்தாமல் இருந்துள்ளனர்.
இதனையடுத்து சிறுமி கடுமையான வலியால் துன்புறுவதை அவதானித்து சந்தேகம் கொண்ட தாய், மகளின் உடலை பரிசோசித்த போதே உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக