தனது காதலியை கவர்வதற்காக பாலியல் ஊக்க மாத்திரையான வயாகராவை அளவுக்கதிகமாக உட்கொண்ட நபரொருவர் இறுதியில் தனது பிறப்புறுப்பை வெட்டி அகற்ற நேர்ந்த விபரீத சம்பவம் கொலம்பியாவில் இடம்பெற்றுள்ளது.
ஜிஹன்ட் நகரைச் சேர்ந்த முன்னாள் அரசியல்வாதியான மேற்படி 66 வயது நபரின் பெயர் சட்டக்காரணங்களுக்காக வெளியிடப்படவில்லை.
அந்நபர் தனது புதிய காதலியை கவரும் முகமாக பாலியல் ஊக்க மாத்திரையான வயாகராவை அளவுக்கதிமாக உட்கொண்டதால் ஏற்பட்ட அதீத பாலியல் ஊக்க விளைவால் அவரது பிறப்புறுப்பில் வீக்கமும் அந்த உறுப்பிலான குருதிக் குழாய்களிலும் அடைப்பும் ஏற்பட்டு பிறப்புறுப்பு அழுக ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரது பிறப்புறுப்பை வெட்டி அகற்றாவிட்டால் அந்த பாதிப்பு உடலின் ஏனைய பகுதிகளுக்கும் பரவி அவரது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என எச்சரித்துள்ளனர். தொடர்ந்து அந்நபரது பிறப்புறுப்பு அறுவைச்சிகிச்சை மூலம் வெட்டி அகற்றப்பட்டதையடுத்து அவர் தற்போது தேறிவருகிறார்.
அதேசமயம் யேமனியை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர், திருமண நாளில் ஒரே சமயத்தில் 5 வயகரா மாத்திரைகளை உள்ளெடுத்ததால் திருமணம் நடைபெற்று சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அத்துடன் வயாகரா மத்திரைகளை உபயோகித்த பல ஆண்கள் மாரடைப்புக்கு ள்ளாகியுள்ளதாக மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன.
வயாகரா உள்ளடங்கலான பாலியல் ஊக்க மாத்திரைகளை மருத்துவர்களின் ஆலோசனையின்றி உபயோகிக்க வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக