தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவி வழங்கியதாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சுவிஸ் குடியுரிமை பெற்ற நடராஜா கருணாகரன் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சுவிஸ் தாய் வீடு பணமாற்று நிறுவனத்தின் உரிமையாளருமான நடராஜா கருணாகரன் புலிகளுக்கு நிதி உதவி வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அரசதரப்பு சாட்சியங்களையும் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தையும் நிராகரித்த மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஜயசுரிய அவரை விடுதலை செய்தார்.
நடராஜா கருணாகரன் இலங்கை வங்கியுடன் பணமாற்று வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட இலங்கை வங்கியின் வேண்டுகோளையடுத்து, கொழும்புக்கு சென்ற வேளையில் இன்டர் கொண்டினன்ட் ஹோட்டலில் வைத்து 2010ம் ஆண்டு நவம்பர் மாதம் 19ம் திகதி பயங்கரவாதத் தடைப்பிரிவுப் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
நடராஜா கருணாகரனின் கைதும் தடுப்புக் காவலும் சட்டரீதியற்றதென உயர்நீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை சட்டத்தரணி தவராசா தாக்கல் செய்தார். குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சரியாக பெறப்படவில்லை என சட்டத்தரணியால் சுட்டிக்காட்டப்பட்டதை ஏற்றுக்கொண்ட நீதிபதி இவரை விடுதலை செய்துள்ளார்.
Thinakkathir

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக