வீட்டிலிருந்து நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு திடீரெனக் காணாமல் போனதாகக் கூறப்படும் இளம் பெண்ணொருவர் புத்தூர் கிழக்கிலுள்ள தோட்டக் கிணற்றிலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் சடலமாக மீட்கப்பட்டார்.
குமாரசாமி வீதி புத்தூர் கிழக்கைச் சேர்ந்த 27 வயதான அமிர்தலிங்கம் மைதிலி என்ற இளம் பெண்ணே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் வீட்டிலிருந்த இப்பெண்ணிற்கு தொலைபேசி அழைப்பொன்று வந்ததாகவும் அதனையடுத்து சிறிது நேரத்தில் தீடிரென்று வீட்டிலிருந்து இப்பெண் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவரைப் பல இடங்களில் தேடியபோதும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் நேற்றுக் காலை அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக முறைப்பாடொன்று குறித்த பெண்ணின் தந்தையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவரைப் பொலிஸார் தேடி வந்த நிலையில் தோட்டக் கிணறொன்றில் இருந்து இவரது சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மதியம் சுமார் 12.30 மணியளவில் மாட்டிற்கு நீர் எடுப்பதற்காகச் சென்ற ஒருவரே கிணற்றில் சடலம் ஒன்று இருப்பது தொடர்பாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து யாழ்.நீதிமன்ற பதில் நீதிவான் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதோடு சடலத்தை பிரேதப் பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
கடந்தவாரம் நாச்சிமார் கோயில் தேர்முட்டியில் இருந்து பலத்த காயங்களுடன் அழுகி உருக்குலைந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் மற்றொரு இளம்பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Thinakkural

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக