வியாழன், 31 அக்டோபர், 2013

லோகராணி பெண்களுக்கு எதிரான வன்முறையில் பாதிக்கப்பட்ட இறுதிப் பெண்ணாக இருப்பாரா?


குடியியல் இயக்க நிகழ்வுகள் சுருங்கி வருவதும் மற்றும் அத்தகைய நிகழ்வுகளை நடத்த எந்த வகையான நிறுவனங்களாலோ மற்றும் அரசியல் கட்சிகளாலோ ஏற்படத்தப்பட்ட அமைப்புகள் எதுவும் இல்லாத இடத்தில் அக்கறையுள்ள பிரஜைகளால் ஆரம்பிக்கப்படும் எதிர்ப்புகளை இங்குள்ள குடிமக்கள் அலட்சியப் படுத்துகிறார்கள் அல்லது அதை ஏற்றுக்கொள்ள தவறிவிடுகிறார்கள்.

ஒக்டோபர் 17 ந்திகதி கிட்டத்தட்ட மாலை 5 மணியளவில் யாழ்ப்பாண மாநகரசபை எல்லைக்குள், எங்களது நண்பர்களில் ஒருவர் (யாழ்ப்பாணவாசியான ஒரு இளைஞன்) எங்கள் வீட்டுக்கு வந்தார், (அங்கு எங்கள் நண்பர்கள் சிலர் கூடியிருந்தோம்) அவர் மிகவும் கலவரமடைந்தவரைப்போல காணப்பட்டார். அன்று மதியம்வரை எங்களுடன் கூடியிருந்துவிட்டு சற்றுமுன்னர்தான் சென்ற அவரை திரும்பவும் கண்டபோது, எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. தன்னை ஒரு நாற்காலியில் அமர்த்திக்கொண்ட பிறகு “ ஆடைகள் எதுவுமற்ற ஒரு பெண்ணின் இறந்த உடல் ஒன்று நாச்சிமார் அம்மன் கோவிலுக்கு அருகில் கண்டெடுக்கப் பட்டுள்ளது, நான் அதைக் கண்டேன் .....

......அந்தக் காட்சி என்னை அசௌகரியத்துக்கு உள்ளாக்கியது. மற்றும் சிலபேரும் அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்….. சீச்சீ… (அவர் வெட்கப்பட்டார்)’’ என்று அவர் சொல்லி முடித்தார். அதைக் கிரகித்துக்கொள்ளவும் மற்றும் அதைப்பற்றி யாராவது முதலில் பேச்செடுக்கவும் எங்கள் அனைவருக்கும் ஒரு நிமிட நேரம்வரை பிடித்தது.

செய்தி கொண்டுவந்த நண்பரை நாங்கள் கேள்விக் கணைகளால் துளைத்தோம். காவல்துறையினர் அங்கு வந்தார்களா? அவள் முற்றிலும் நிர்வாணமாக இருந்தாளா? அது பாலியல் வன்புணர்வின் பின் மேற்கொண்ட கொலையாக இருக்குமா? அவளுடைய முகத்தை உங்களால் அடையாளம் காணக்கூடியதாக இருந்ததா? இப்படிப் பல கேள்விகள் ஆனால் அவற்றுக்கு அவரால் தெளிவான பதிலைக் கூறமுடியவில்லை. ‘’காவல்துறையினர் அங்கு வந்ததாக நான் நினைக்கவில்லை யாரோ காவல்துறையினருக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தார்கள்’’ என அவர் திரும்பத்திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். மற்றொரு ஆண் நண்பர் ‘’ காவல்துறையினர் அங்கு வந்துவிட்டார்களா என நாம் அங்கு சென்று உறுதிப்படுத்திக் கொள்வோமா’’ என அவரிடம் வினாவினார். எங்களில் ஐந்துபேர் (இரண்டு பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள்) சம்பவம் நடைபெற்ற இடத்துக்குச் சென்றோம். அந்த உடல் உருக்குலைய ஆரம்பித்திருந்தது, உடம்பிலிருந்து வெளியேறிய துர்மணம் காரணமாகவே அந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக ஒரு மணி நேரத்திற்குள்ளேயே இது கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது, அங்கு கிட்டத்தட்ட 100 பேர் வரை குழுமியிருந்தார்கள், பெரும்பாலும் ஆண்களும் மற்றும் சிறுவர்களுமே அந்தப் பெண்ணின் உடலைப் பார்ப்பதற்கு முண்டியடித்துக் கொண்டிருந்தார்கள். அது மிருகத்தனமான மீறப்பட்ட ஒரு செயலாக இருந்தாலும் அந்த ஆடையற்ற பெண்ணின் உடம்பைக் காண்பதற்கே அனைவரும் அவாக்கொண்டிருந்தார்கள்.

நான் முதலில் அந்த இறந்த உடலின் கீழ்ப்பகுதியையே கண்டேன். அவளது கால்கள் அகல விரிந்திருந்தது. வலது கால் வளைந்தும் மோசமாக காயம் பட்டிருப்பதாகவும் காணப்பட்டது. அது உடைக்கப்பட்டதற்கான முக்கிய அறிகுறிகள் தென்பட்டன. அவளது பாவாடை வழக்கமாக மறைக்கப்படவேண்டிய பாகங்களை மறைக்காமல் விடப்பட்டிருந்தது. அது அவளது வயிற்றுப்பாகம்வரை சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. அவளது உடலில் பெண்கள் அணியும் உள்ளாடை இருக்கவில்லை. அவளது பிறப்புறுப்பின் வெளிப்பாகங்கள் சிதைக்கப் பட்டிருந்தன. அவை கொடூரமான மீறலுக்கு உள்ளாகியிருந்தன. அவளது முகத்தின் மூலம் அவளை அடையாளம் கண்டுவிடக் கூடாது என்கிற நோக்கத்தில் அவளது தலை பலமாகச் சிதைக்கப்பட்டிருந்தது. கூட்டத்திலிருந்த சிலர் ‘’அவளது முகத்தை சிதைப்பதற்கு அமிலத் திராவகம் பயன்படுத்தப் பட்டிருக்கலாம்’’ என்று சொன்னார்கள். பார்வைக்கு அவள் 3 – 4 நாட்களுக்கு முன்பே கொல்லப்பட்டிருக்கலாம் என்று தோன்றியது.

இறந்த உடல் கண்டெடுக்கப்பட்ட ஸ்தலம் பல கேள்விகளை எழுப்பியது. எடுத்துக்காட்டாக மிகவும் பரவலாக பொதுமக்கள் புழங்கும் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள மிகவும் பிரபலமான இந்துக் கோவில்களில் ஒன்று ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது, ஏனெனில் குற்றவாளி அல்லது வன்புணர்வு செய்தவன் அல்லது கொலையாளி தாங்கள் என்ன செய்தாலும் பிரச்சினை இல்லை, தங்களைக் கண்டுபிடித்து தண்டிக்க முடியாது, என்பதைக் காட்டுவதற்காகவா, அல்லது அந்த உடலை அந்த மாவட்டத்தில் மற்றும் நாட்டில் உள்ள ஒரு பிரதான மத நம்பிக்கை கொண்டவர்களின் புனித பிரதேசம் ஒன்றில் வீசி எறிந்ததின் மூலம் நாட்டிலுள்ள சட்டத்தின் ஆட்சிக்கு (ஒருவேளை அது இல்லாதபடியால்) சவால் விடுத்துள்ளானா? அதேவேளை இத்தகைய சிக்கல்களையும் மற்றும் விமர்சன ரீதியாக இத்தகைய கேள்விகள் உதயமாகவேண்டிய அவசியத்தையும் நான் அங்கீகரிக்கிறேன், தவிரவும் இந்தக் கட்டுரையின் பிரதிபலிப்புகளை மட்டுப்படுத்தி கவனத்தை மட்டும் ஈர்க்க விரும்புகிறேன்.

பலருக்கு அந்தச் சம்பவம் வெறும் காட்சியாக மட்டுமே இருந்தது, எனக்கு கவலையளிப்பதாக இருந்தது. அநேகமாக மீறலுக்கு உள்ளான மற்றொரு பெண்ணைப் பற்றிய சுவராஸ்யமான பார்வையாகவே அது இருந்தது. சிலர் அந்தக் காட்சியை காணொளியாக பதிவுசெய்தார்கள். அவர்களில் அநேகமானவர்கள் அந்தக் காட்சியை விட்டுச் செல்ல விரும்பவில்லை. அது எதற்காக என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது? அவர்கள் அனைவரும் ஊடகத்துறையை சேர்ந்தவர்கள் இல்லை. ஒரு வேளை பல்வேறு வடிவங்களிலான சமூக ஊடகங்களினூடாக அவர்கள் அதை மற்றும் பலருக்கு அறிவிக்க விரும்பியிருக்கலாம். இத்தகைய கொடூரங்களைப் பற்றிய விழிப்புணர்வுகளைத் தூண்டுவதற்கும் மற்றும் எதிர்காலத்தில் இத்தகைய விரும்பத்தகாத அனுபவங்கள் ஏற்படாமல் நிறுத்துவதற்கும் அவர்களுக்கு இத்தகைய காட்சிகள் அவசியமாகிறது என்று மட்டுமே ஒருவரால் இதைப்பற்றி நம்பமுடியும்.

எனினும் மிகவும் கவலையளிக்கும் விதமாக சிலர் பொதுவாக பெண்களைப்பற்றி விமர்சிக்க ஆரம்பித்ததும் அத்தகைய எனது நம்பிக்கை உடனடியாகவே சிதைந்து போனது, தங்களை அத்தகைய மோசமான வன்முறைக்கு ஆளாக்கும்படி தூண்டிவிடும் பெண்கள் உண்மையில் ஒழுங்கான பெண்களாக இருக்கமாட்டார்கள் என்பதுதான் அவர்களது விமர்சனம். நான் ஒழுங்கான பெண்கள் என்கிற பதத்துக்கு விரிவான விளக்கம் அளிக்கப்போவதில்லை. ஆனால் மிகவும் துயரமானது என்னவென்றால் பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகள் யாவும் அவர்கள் தாங்களாகவே வரவழைத்துக் கொண்டவைகள் என்று இன்னமும் நமது சமூகம் பெண்கள்மீதே பழிபோடுகிறது. காலத்துக்கு காலம் பெண்கள் சமூகத்தில் ஏற்படும் எந்த அசம்பாவிதத்துக்கும் காரணக்காரர்களாக பழி சுமத்தப்பட்டு, ஆரோக்கியமற்ற கண்டனங்களுக்கும்; ஆளாகிறார்கள். பெண்ணானவள் தொடர்ந்து மீறலுக்கு உள்ளாகிறாள். இருந்தும் அவளே பழிக்கும் ஆளாகிறாள். நாங்கள் எப்போது மாறப் போகிறோம்?

ஸ்ரீலங்காவின் போருக்கு பிந்திய காலகட்டத்தில் பல விடயங்களுக்கு தீர்வு காணப்பட வேண்டியுள்ளது. உதாரணத்துக்கு, நீதிக்கான வழிகளுக்கு, நல்லிணக்கம் சமாதானத்தை கட்டியெழுப்புதல், பாலியல்தொழில்,பல்வேறுவடிவங்களிலான பாகுபாடுகள், இராணுவமயமாக்கல், ஏழ்மை, வெளிப்படையான பலவீனங்களால் வன்முறைக்கு ஆளாக்கப்படுவது, முன்னாள் போராளிகள் எதிர்நோக்கும் சவால்கள், மற்றும் பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்கள், அரசியல் அறிவு மற்றும் அதன் பிரதிநிதித்துவம்,மற்றும் பாலியல் அடிப்படையிலான வன்முறைகள் என்பனவற்றை சொல்லலாம். இந்தப் பட்டியல் இன்னமும் நீண்டுகொண்டே செல்லலாம். எங்கள் சமூகம், மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நீண்டிருந்த வன்முறை மோதலின் வடுக்கள்,பாகுபாடுகள், மற்றும் உயிர், உடமை, மற்றும் வளங்களுக்கு ஏற்பட்ட அழிவுகள் என்பனவற்றை கையாளவேண்டிய நிலையில் உள்ளது என்பதை நாம் மறந்துவிடலாகாது. உலகின் ஏனைய பாகங்களில் இதேபோன்ற சந்தர்ப்பங்களில் நிகழ்ந்தகைளில் இருந்து கற்றுக்கொண்டவைகள் தெளிவாகச் சித்தரிப்பது இது அத்தனை சுலபமானது அல்ல என்று.

குடியியல் இயக்கும் நடவடிக்கைகள் அல்லது ஒரு திறமையான குடியியல் சமூகத்தின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. குடிமக்கள் என்கிற வகையில் அரசாங்கத்திடம் அதன் குடிமக்கள் அனைவரினதும் நலன்களையும் எந்தவித பாரபட்சமும் இன்றி செயல்படுத்தி அதற்கான கணக்கு மற்றும் பொறுப்பு கூறவேண்டும் என கோரிக்கை விடுக்கும் நாங்கள், அதேவழியில் குடியியல் சமூகம் மற்றும் அனைத்து சமூகங்களினதும் அங்கத்தவர்கள் என்கிற வகையில் ஒரு ஆரோக்கியமான, சமத்துவமான, வன்முறையற்ற சமூகங்களை கட்டியெழுப்புவதில் எங்களுக்கும் சம அளவிலான பொறுப்பு உள்ளது என்பதை மறந்துவிடலாகாது.

ஸ்ரீலங்காவில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒன்றும் புதுமையானதல்ல. எங்கள் சமூகங்களுக்கு அது ஒன்றும் புதிய அச்சுறுத்தல் அல்ல. உண்மையில் முன்னர் அதில் சம்பவிக்காதவை, எவையெனில் வன்முறைகளின் வடிவம், ஒவ்வொரு வன்முறைச் சம்பவத்திலும் வெளிக்காட்டப்படும் அதன் கொடூரத்தின் எல்லை, மற்றும் இந்த வகையான வன்முறைகளின் மொத்த சகிப்புத்தன்மை மற்றும் நியாயப்படுத்துதல் என்பன. என்னுடைய அறிவுக்கும் அனுபவத்துக்கும் எட்டிய வகையில் 1980 களிலிருந்து பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு தீர்வுகோரி சமூக ஆhவலர்கள் பல்வேறு மேடைகளிலும் போராடி வருகிறார்கள்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளைப் பற்றிய விழிப்புணர்வுகளைத் தூண்டுவது முதல் அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டியது வரையிலான வீச்சத்தில் பலவகை பிரச்சாரங்கள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் வருத்தத்துக்கு உரியது என்னவென்றால் பல்வேறு அரச மற்றும் அரச சார்பற்ற செயற்பாட்டாளர்களாலும் இத்தகைய முயற்சிகள் முதலிடப்பட்டபோதிலும், பெண்கள் இன்னமும் வன்முறைக்கு ஆளாகிவருவதுதான். அது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. யாழ்ப்பாண அனுபவம் வெளிக்காட்டுவது என்னவென்றால் பெண்களுக்கு எதிரான வன்முறைகளின் அடிப்படை உணர்ச்சிக் கூர்மைகள் சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் சென்றடையவில்லை என்பதைத்தான்.

யாழ்ப்பாணம் கொழும்புத்துறையிலுள்ள கன்னியர் மடம் ஒன்றில் வசித்துவந்த 42 வயதான திருமணமாகாத லோகராணி மார்க்கண்டு எனும் பெண்ணின் அநீதியான அனுபவத்துக்கு தீர்வு கோரி இன்னொரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது, பாதிக்கப்பட்ட பெண் எங்களில் ஒரு குழவினராலேயே கொல்லப்பட்டிருக்கிறாள் (எங்களில் பலர் அவளது இறந்த உடலுக்கு சாட்சியாக இருந்திருக்கிறோம்), பெண்களும் மற்றும் ஆண்களும்(பெரும்பாலும் இளைஞர்கள்) லோகராணிக்கு மரியாதை செலுத்தவும் மற்றும் எங்கள் சமூகத்தில் நடக்கும் இத்தகைய சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவிக்கவும் தீர்மானித்தோம். ஒரே இரவுக்குள் லோகராணியின் உடல் கண்டெடுக்கப்பட்ட அதே இடத்திலேயே எங்கள் கவலைகளை வெளிப்படுத்த நாங்கள் அணிதிரண்டோம். எங்கள் அக்கறைகளை நாங்கள் வெளிப்பெடுத்த தெரிவு செய்திpருக்கும் ஊடகம் எங்கள் செய்தியை வலுவாக பரப்புவதற்கு ஏற்ற தனித்தன்மையான புதிய அம்சத்தை கொண்டிருக்கிறது என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். மேலும் இயலுமானவளவு சாத்தியம் உள்ள அனைவரினதும் கவனத்தை கவர நாங்கள் விரும்பினோம் மற்றும் எங்கள் முயற்சிகள் எங்களால் மட்டுமன்றி எங்கள் சமூகத்திலுள்ள ஒவ்வொரு பெண்ணும் மற்றும் யுவதியும் பொது மற்றும் தனி இடங்களில் வன்முறை பற்றிய அச்சமின்றி உலாவரும் நிலமையை உருவாக்கும் சமூக இயக்கமாக மாற்றம் பெறும் முனைவரை செல்லும் எனவும் நாங்கள் நம்பினோம்.

18.10.2013 அன்று காலை 8 – 11 மற்றும் மாலை 4 – 6 வரையான Logaraniகாலப்பகுதியில் அதே இடமான, நாச்சிமார் அம்மன் கோவிலில் எங்கள் அக்கறைகளை நாங்கள் வெளிக்காட்டினோம். அந்த எதிர்ப்பு பேரணியில் சுமார் 200 – 250 பேர் வரை பங்கபற்றினார்கள். அதில் பங்கு பற்றியவர்களில் 60 விகிதத்துக்கும் மேலானவர்கள் ஆண்கள் என்பதை நாங்கள் மகிழ்வுடன் கவனித்துக் கொண்டோம். இப்படியான சம்பவங்களில் ஆண்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம், இல்லாவிட்டால் எமது சமூகத்தில் அர்த்தமுள்ள ஒரு மாற்றத்தை உருவாக்க முடியாது என அவர்களில் சிலர் வலியுறுத்தவும் செய்தார்கள். லோகராணியின் மறைவுக்காக தமிழில் ஒரு கவிதையையும் நாங்கள் எழுதினோம். அந்தக் கவிதையில் பொதிந்திருந்த முக்கியமான செய்தி, எங்கள் சமூகத்துக்கு இழைக்கப்படும் இத்தகைய வன்முறைகளை நாங்கள் இனியும் பொறுக்கமாட்டோம் என்பதேயாகும். அதே கவிதை ஒரு மென்னிறமான கிழிந்த பாவாடையில் கறுப்பு மசியினால் எழுதப்பட்டது.

அந்தப்பாவாடையுடன் கிழிந்து மங்கிய சில வெள்ளை நிற உள்பாவாடைகள் மற்றும் உடைகளையும் தொங்கவிட்டோம். எங்கள் எதிர்ப்பு போராட்டம் முடியம்வரை பெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டிப்பதற்கான நிலமையின் தன்மையை உணர்த்தும் வகையில் இந்த ஆடைகளின் அடையாளத்தை ஒருவர் மாறி ஒருவர் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தோம். முடிவில் இந்த ஆடைகள் அடங்கிய பொதியை, வழக்கமாக நாங்கள் கொடியில் துணிகளை உலர்த்துவது பொல ஒரு கயிற்றில் கட்டித் தூக்கினோம். லோகராணிக்கான கவிதையையும் நாங்கள் நான்கு பெரிய குறிப்பு புத்தகங்களில் எழுதினோம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஒன்றில்; அதில் கையொப்பமிட்டார்கள் அல்லது இந்த வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தங்களது கண்டனத் துணுக்குகளை அதில் எமுதினார்கள். எங்களில் சிலர் வைத்தியசாலைக்குச் சென்று பிரேதப் பரிசோதனைக்குப் பின் அவளது உடலை பெற்றுக் கொடுப்பதற்காக அவளது உறவினர்களுக்கு(மாமா,ஒன்றுவிட்ட சகோதரி,மற்றும் இரண்டு சித்திமார்) உதவினோம்.

அவர்கள் அவளது உடலை நேரடியாக சேமக்காலைக்கு கொண்டுசெல்ல விரும்பினார்கள். நாங்களும் அவர்களுடன் சவக்காலை வரை சென்று லோகராணியை புதைப்பதற்கு உதவி செய்தோம். அவளுக்காக எந்த மரணச்சடங்கும் நடைபெறவில்லை. அவளது சவப்பெட்டியை பெரும்பாலும் பெண்களே சுமந்து சென்றனர். இறுதிச் சடங்குகளுக்கு முன்னர் நாங்கள் லோகராணியின் கவிதையையும் வாசித்தோம்.

எங்களுக்கு துணையாக நின்ற ஒருவரின் பெயர்கூட எங்களுக்குத் தெரியாது. யாருக்காவது, விசேடமாக எங்களது கூட்டுறவைப்பற்றி அறிந்துகொள்ள ஆர்வமுள்ள ஊடகங்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால், இதன் அமைப்பாளராகிய நாங்கள், எங்களை யாழ்ப்பாண வாசிகளான பெண்கள் மற்றும் ஆண்கள் என்று சொல்லுவதுடன் இந்த வடிவத்திலான வன்முறைகளை கடுமையாக எதிர்ப்பதுடன் இத்தகைய நடவடிக்கைகளற்ற எதிர்காலத்தை எதிர்பார்க்கிறோம் என்பதைத்தான்.

குட்டைத் தலைமயிர் மற்றும் நகைகள் எதுவும் அணியாமலிருக்கும் என்னைபோன்ற ஒரு பெண் நிச்சயமாக கொழும்பை சேர்ந்தவளாகத்தான் இருக்கவேண்டும் என்று ஊகித்த சிலர் என்னிடம் ‘’ நீங்கள் நேற்றிரவு கொழும்பிலிருந்து வந்தீர்களா?’’ எனக் |கேட்டார்கள். நான் அவர்களை முன்பு சந்தித்ததில்லை, தவிரவும் என்னுடன் பழகுவதற்காக அவர்கள் தங்களை என்னுடன் அறிமுகப்படுத்திக் கொள்ளவுமில்லை. எனினும் யாழ்ப்பாணத்துக்குள்ளிருக்கும் அந்த மனிதர்களின் கற்பனை, அவர்கள் உடுக்கும் உடைகளை மற்றும் வாழும் வாழ்க்கையை தெரிவு செய்வதுடன் தொடர்பற்றவை, இருந்தும் இத்தகைய கொடூரமான சம்பவங்கள் இடம்பெறுவதை எதிர்த்து அவர்கள் தங்கள் குரல்களை உயர்த்துவதை காணமுடிவதில்லை.

குடியியல் இயக்க நிகழ்வுகள் சுருங்கி வருவதும் மற்றும் அத்தகைய நிகழ்வுகளை நடத்த எந்த வகையான நிறுவனங்களாலோ மற்றும் அரசியல் கட்சிகளாலோ ஏற்படத்தப்பட்ட அமைப்புகள் எதுவும் இல்லாத இடத்தில் அக்கறையுள்ள பிரஜைகளால் ஆரம்பிக்கப்படும் எதிர்ப்புகளை இங்குள்ள குடிமக்கள் அலட்சியப் படுத்துகிறார்கள் அல்லது அதை ஏற்றுக்கொள்ள தவறிவிடுகிறார்கள்.

எங்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் எப்படி மக்கள் கலந்து கொள்ளாமல் ஒதுங்கினார்கள் என்பதற்கான காரணத்தை அவதானித்தபோது அது உண்மையில் சுவராசியமானதாக இருந்தது. சிலர் நாங்கள் எங்கள் கைகளில் மெழுகுவர்த்திகளை வைத்திருந்ததால் நாங்கள் ஒரு தேவாலயத்தின் அமைப்பினைச் சேர்ந்தவர்கள் என்று நினைத்தார்கள். மற்றும் சிலர் அங்குள்ள குறிப்பிட்ட சில நிறுவனங்கள் அல்லது அரசியற் கட்சிக்கு சொந்தமானவர்கள் பங்குபற்றும் எல்லா நிகழ்வுகளுக்கும் துணை செய்பவர்கள். நாங்கள் எடுக்கும் நிலைப்பாடு மற்றும் முயற்சிகள் தெளிவாக இருக்குமானால், அத்தகைய தோழமையை இலகுவாக ஏற்படுத்த முடியும். ஒருவேளை வெளியாட்களாக இருப்பதும் மற்றும் எங்களைச் சுற்றி நடப்பவைகள் முக்கியமானதாகவும் இருந்தால் அது இன்னும் சுலபம். தங்களை அடையாளப் படுத்தாமலோ அல்லது ஒரு முத்திரை இல்லாமலோ ஆர்ப்பாட்டம் நடத்துவதும் மற்றும் எதிர்ப்பு காட்டுவதும் மிகவும் கடினமானது.

எனினும் நாங்கள் நிறுத்தப் போவதில்லை. இதை மேலும் முன்னெடுத்துச் செல்லவே நாங்கள் உண்மையாக நம்புகிறோம். நீதி எவ்வளவு தூரம் நிலைநாட்டப்பட்டுள்ளது என்பதை கண்டறிய அவளது விடயத்தை நாங்கள் நிச்சயமாக பின்தொடருவோம். நாளை(24.10.2013) பி.ப 3 மணியளவில் (லோகராணியின் சிதைக்கப்பட்ட உடல் கண்டெடுக்கப்பட்ட ஒரு வாரத்தின் பின்) லோகராணியுடன் சேர்த்து வன்முறைகள் காரணமாக தங்கள் உயிர்களை பறிகொடுத்த கிறிசாந்தி குமாரசாமி உட்பட்ட மேலும் பல பெண்கள் புதைக்கப்பட்ட செம்மணி மயானத்துக்கு அருகில் நாங்கள் எங்கள் கவலைகளை வெளிப்படுத்த உள்ளோம். அவர்களுடையதும் மற்றும் எங்களுடையதும் குரல்கள் ஒருபோதும் மௌனிக்கப் போவதில்லை.

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல