ஏவிஜி ஆண்ட்டி வைரஸ் பயன்படுத்தி வருகையில் அடிக்கடி, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் மெமரியில் அதிக இடத்தைப் பிடிப்பதாகவும், அதனை ரீஸ்டார்ட் செய்திடும்படியும் செய்தி தருகிறது. இப்படி செய்தி வரும்பட்சத்தில் என்ன செய்யலாம்?
ரீஸ்டார்ட் செய்வது என்பது மிக எளிது. மேலாக வலது மூலையில் உள்ள எக்ஸ் அடையாளத்தின் மீது கிளிக் செய்திடவும்.
பிரவுசர் அப்ளிகேஷன் மூடப்படும். பின்னர், மீண்டும் இதனை வழக்கம் போல இயக்கவும். மூட மறுத்தால், கண்ட்ரோல் + ஆல்ட் + டெலீட் கிளிக் செய்து, கிடைக்கும் விண்டோவில், இண்டர்நெட் எக்ஸ்புளோரர் இயங்குவதற்கான வரியில் End Task என்பதில் கிளிக் செய்திடவும்.
ஆனால், இந்த கேள்வி இன்னொரு பிரச்னையைக் கிளப்பியுள்ளது. இந்த சிக்கல் ஏன் ஏற்படுகிறது? எப்படி அதனைத் தீர்க்கலாம் என்று பார்க்கலாம்.
இவ்வாறு மெமரியின் இடத்தை அதிகம் எடுத்துக் கொள்வதற்கான காரணம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் கொள்ளும் ஆட் ஆன் புரோகிராம்களாக இருக்கலாம்.
இண்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பின் மேல் வலது பக்கத்தில் உள்ள, கியர் ஐகானில் கிளிக் செய்திடவும்.
தொடர்ந்து Manage addons என்பதில் கிளிக் செய்திடவும்.
அடுத்து, உங்கள் பிரவுசர் பயன்படுத்தும் அனைத்து ஆட் ஆன் தொகுப்புகளும் உள்ள விண்டோ திறக்கப்படும்.
இந்தப் பட்டியலில், ஒவ்வொரு ஆட் ஆன் தொகுப்பிற்கு முன்னரும், பப்ளிஷர், ஸ்டேட்டஸ் (Publisher, Status) ஆகியவையும், அந்த ஆட் ஆன் தொகுப்பு லோட் ஆக எவ்வளவு நேரம் எடுக்கிறது என்ற தகவலும் காட்டப்படும்.
இதற்கு இன்னும் வசதியாகக் காண, Toolbars என்பதனைத் தேர்ந்தெடுத்துக் காணலாம். டூல்பார்கள் மற்றும் எக்ஸ்டன்ஷன் எனப்படும் ஆட் ஆன் தொகுப்புகள், நிறைய மெமரி இடத்தை எடுத்துக் கொள்ளலாம்.
சில ஆட் ஆன் தொகுப்புகள், உங்களுடைய அனுமதியின்றியே அல்லது விருப்பம் இன்றியே லோட் ஆகலாம். ஏனென்றால், நீங்கள் டவுண்லோட் செய்தவற்றுடன் இணைந்து இவை வந்திருக்கும்.
ஏதேனும் டூல் பார் பிரச்னைக்குரியதாக இருந்தால், அதனைக் கண்டறிந்து நீக்கவும்.
சில வேளைகளில், ஏவிஜி ஆண்ட்டி வைரஸ் தொகுப்பில் இதற்கான தீர்வு தரப்பட்டிருக்கலாம். அதனையும் முழுமையாகப் பார்த்துப் பின்னர் செயல்படவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக