ரியல் டைம் (Real Time) என்பது அப்போது என்ன நடக்கிறதோ அதுதான். ஒரு நிகழ்ச்சி நடைபெறும் போது என்ன நேரமோ அதுதான் ரியல் டைம். ஒரு வீடியோ காட்சி உங்களுக்கு லைவ் ஸ்ட்ரீமிங் முறையில் கிடைத்து நீங்கள் பார்த்தால், அது ரியல் டைம். அதே போல வெப் கேமரா மூலமாக நீங்கள் பார்க்கும் காட்சி ரியல் டைம் காட்சி. ஒரு விளையாட்டு நடந்து கொண்டிருக்கும் போது அதனை லைவ் ரிலே என்று சொல்கிறார்கள் இல்லையா! எனவே அது ரியல் டைம். அப்போது உங்கள் அபிமான வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்றால், உங்களுக்கு ரத்த அழுத்தம் எகிறும். இதையே மறு நாள் ஹைலைட்ஸ் எனக் காட்டினால் அது ரியல் டைம் இல்லை. (என்ன நடக்கப் போகிறது என்று உங்களுக்கு தெரியும் என்பதால், உங்கள் ரத்த அழுத்தமும் மாறாது)
கம்ப்யூட்டர் வழியே தகவல் பெற்று, உடனே அதற்கு நீங்கள் பதில் அளிக்கும் வகையில் செயல்களை மேற்கொண்டால், அது ரியல் டைம். இதைத்தான் Real time operating systems என்று கூறுவார்கள். சுருக்கமாக (RTOS).. கூகுள் இப்போது ரியல் டைம் சர்ச் மேற்கொள்வதாகக் கூறுகிறது. அதாவது கூகுள் தேடலை மேற்கொள்கையில் அது உலகில் அப்போது நடக்கும் விஷயங்களைத் தருகிறது. ஒரு தேடலை மேற்கொள்கையில் அது குறித்து அப்போது இன்டர்நெட்டில் வந்திருக்கும் செய்தி உங்களுக்கு ரியல் டைம் சர்ச்சில் கிடைக்கும்.
இந்த ரியல் டைம் விஷயத்தில் இன்னொரு தகவலையும் தரட்டுமா! இதில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று ஹார்ட் ரியல் டைம் (hard real time). நீங்கள் கார் ஓட்டிக் கொண்டு போகும்போது, காருக்கு முன்னால் நடந்து போகும் ஒருவர் திடீரென நிற்கிறார். உடனே நீங்கள் பிரேக்கை சட் என்று அழுத்த வேண்டும். இது ஹார்ட் ரியல் டைம். இதில் சில விநாடிகள் கூட லேட் ஆகக் கூடாது. நீங்கள் பயணம் மேற்கொள்ள இருக்கிறீர்கள். பயண நேரம் என்னவென்று அவ்வப்போது ரியல் டைமாக தருகிறார்கள். இது சாப்ட் ரியல் டைம் (soft real time) இதில் சில நிமிடங்கள் முன்னே பின்னே ஆனாலும் சிக்கல் இல்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக