ஞாயிறு, 24 நவம்பர், 2013

கம­ரூனின் கருத்­துக்கள் ஏற்­ப­டுத்­தி­யுள்ள தாக்கம்

பொது­ந­ல­வாய நாடு­களின் தலை­வர்­களின் உச்சி மாநாடு கார­ண­மாக கடந்த வாரம் கொழும்பு களை கட்­டி­யி­ருந்­தது. மாநாட்­டுக்கு எத்­தனை தலை­வர்கள் வரு­வார்கள்? அவர்­களை எப்­படி வர­வேற்­பது? என்­றெல்லாம் உச்சி மாநாட்டு வர­வேற்­பா­ளர்கள் தலையைப் பிய்த்துக் கொண்­டார்கள். இந்தத் தலை­வர்­களின் வருகை கார­ண­மாக அடிக்­கடி வீதிகள் மூடப்­பட்­டமை வேறு, போக்­கு­வ­ரத்தில் ஈடு­பட்­டோரைப் பெரும் பாடாய்ப் படுத்­தி­விட்­டது.

இருந்­த­போ­திலும், இந்­தியப் பிர­தமர் மன்­மோகன் சிங்­கி­னதும் பிரிட்டிஷ் பிர­தமர் டேவிட் கம­ரூனின் வரு­கையும் பெரி­தாக எதிர்­பார்க்­கப்­பட்ட ஒன்று என்று கூறலாம். இறு­தியில் ஒரு­வாறு இந்­தியப் பிர­தமர் மன்­மோகன் சிங் மாநாட்­டுக்கு வருகை தராமல் தன்னைத் தவிர்த்துக் கொண்டார். இதற்கு ஒரு வார காலத்­துக்கு முன்­ன­ரா­கவே பிர­மதர் வரு­வாரா? மாட்­டாரா? என்று பெரும் பந்­த­யத்தில் இரு நாட்­டி­னதும் அர­சியல் வல்­லு­நர்கள், இரா­ஜ­தந்­தி­ரிகள், புத்­தி­ஜீ­விகள் எனப் பலரும் ஈடு­பட்­டனர். பிராந்­திய நல­னுக்­காக இந்­தியப் பிர­தமர் இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டும் என்று ஒரு சாராரும், இல்லை தமிழ் மக்­களின் உணர்­வு­க­ளுக்கு மதிப்­ப­ளித்து இலங்­கைக்கு விஜயம் செய்யக் கூடாது என்று மறு­சா­ராரும் வரிந்து கட்டிக் கொண்டு வாதிட்­டனர். இறு­தியில் காரணம் எது­வுமே கூறாமல் பிர­தமர் மன்­மோகன் சிங் தவிர்த்துக் கொண்டார்.

இவ­ரது இலங்கை விஜயம் தொடர்பில் பாத­க­மான கருத்­துக்­களை முன்­வைத்த இந்­திய ஊட­கங்கள் சில பிர­தமர் தனது விஜ­யத்தைக் கைவிட்டு விட்டார் என்று அறிந்­ததும் ஒரே அடி­யாக ‘பல்டி’ அடித்­தது மாத்­தி­ர­மன்றி, பிர­தமர் போயி­ருக்­கலாம், யாழ்ப்­பா­ணத்­துக்கும் சென்று பார்த்­தி­ருக்­கலாம் என்­றெல்லாம் தங்கள் கருத்­துக்­களை வெளி­யிடத் தொடங்­கி­விட்­டன. எதுவோ, இந்­தியப் பிர­தமர் இலங்கை வராது போனது தொடர்ந்தும் பேசப்­படும் விவ­கா­ர­மா­கி­விட்­டது என்­பதை மறுப்­பதற்­கில்லை. இந்­நி­லையில் பொது­ந­ல­வாய மாநாட்­டுக்கு இந்­தியப் பிர­தமர் கட்­டாயம் வந்­தி­ருக்க வேண்டும். ஆனால் இந்­தியப் பிர­தமர் கலந்­து­கொள்­ளாமை தொடர்பில் எம்­மை­விட இந்­தி­யாவே கவ­லை­ய­டைய வேண்டும். இலங்கை கவ­லை­ய­டைய வேண்­டி­ய­தில்லை என பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் பஷில் ராஜ­பக் ஷ தெரி­வித்­தி­ருந்தார்.

மாநாட்­டுக்கு இந்­தியப் பிர­த­மரின் வருகை தராமல் போனது மிகுந்த கவ­லை­ய­ளிக்கும் விட­ய­மா­கவே இலங்கை தரப்பால் நோக்­கப்­பட்ட போதிலும், இந்­திய வெளி­யு­றவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், மாநாட்­டுக்கு சாத­க­மான கருத்­துக்­களை முன்­வைத்­தமை இலங்கை அதி­கா­ரிகள் மட்­டத்தில் ஆறுதல் அளிக்கும் ஒன்­றாக அமைந்­தி­ருந்­தது. மாநாட்டில் இந்­தியா பங்­கேற்­பது என்ற முடிவு சரி­யா­னது என்று கூறிய அவர், தனது நிலைப்­பாட்­டையும் நியா­யப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

இவ்­வா­றான போக்­கு­க­ளுக்கு மத்­தியில், பொது­ந­ல­வாய தலை­வர்­களின் மாநாட்டில் பங்குகொள்ளும் வகையில் உற­வுக்­காரர் வந்­தி­ருக்­கலாம். உள்­நாட்டு அர­சியல் நெருக்­க­டிகள் கார­ண­மாக அவர் வருகை தர­வில்லை என்­பதை புரியக் கூடி­ய­தாக உள்­ளது. இத்­த­கைய நிலையில் தானாக இருப்­பினும் அத்­த­கைய முடி­வொன்­றைத்தான் எடுத்­தி­ருப்பேன் என்று தனது ஆதங்­கத்தை ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ வெளி­யிட்­டுள்ளார்.

எது­வாக இருப்­பினும், இந்­தியப் பிர­தமர் யாழ்ப்­பா­ணத்­துக்கு சென்று நிலை­மை­களைக் கண்­ட­றியும் நிகழ்ச்சி நிர­லுடன் இலங்­கைக்கு வருகை தந்­தி­ருக்­கலாம் என்று இன்றும் வாதி­டுவோர் இருக்­கவே செய்­கின்­றனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியாவை பின்தள்ளி விட்டு கமரூன் கதாநாயகன் ஆகிவிட்டார். அவரது இலங்கை விஜயம் கூட நன்மைக்குத்தான் என்று பேசப்படும் வகையில் நிலைமை அமைந்து விட்டது.

மறுபுறம் பிரிட்டிஷ் பிர­தமர் கம­ரூனின் வரு­கை­யா­னது இறுதியில் “பிச்சை வேண்டாம் நாயைப் பிடி” என்ற நிலை­மையை ஏற்­ப­டுத்­தி­விட்­டது என்­றுதான் கூற வேண்டும். அதா­வது பிரிட்டிஷ் பிர­தமர் இலங்கை வரு­வ­தற்கு முன்­னரே புலம் பெயர் தமிழ் மக்­களின் பிர­தி­நி­தி­களை சந்­தித்­த­துடன் தனது இலங்கை விஜ­யத்தின் போது போர்க்­குற்­றங்கள் தொடர்பில் குரல் எழுப்­புவேன் என கூறி­யி­ருந்­த­தாகச் செய்­திகள் வெளி­வந்­தி­ருந்­தன. இந்­நி­லையில் பிரிட்டிஷ் பிர­மதர் டேவிட் கமரூன் இலங்­கையில் தெரி­வித்த கருத்­துக்கள் பெரும் சர்ச்­சை­யையும் கடும் விமர்­ச­னங்­க­ளையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன.

முன்­ன­தாக, பிரிட்டிஷ் பிர­தமர் இராஜ தந்­திர நெறி­மு­றை­களை மீறி­விட்டார் என அரச தரப்பில் குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. அதா­வது விமா­னத்தில் இலங்­கைக்கு வந்­தி­றங்­கிய அவர், விமான நிலை­யத்தில் உள்ள தேசிய வருகைப் பதி­வேட்டில் கையொப்­ப­மிட மறுத்­து­விட்டார்.

அதே­போன்று, அவ­ருக்­காக ஒழுங்கு செய்­யப்­பட்­டி­ருந்த வர­வேற்பு நட­னத்­தையும் அவர் ஏற்றுக் கொள்­ள­வில்லை. அங்­கி­ருந்து புறப்­பட அவ­ருக்­கென வழங்­கிய சொகுசு வாக­னத்தில் பய­ணத்தை மேற்­கொள்­ளாது பிறி­தொரு வாக­னத்­தி­லேயே பயணம் செய்­த­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அது­மாத்­தி­ர­மன்றி, கொழும்பில் பொது­ந­ல­வாய மாநாடு தொடர்பில் நடை­பெ­ற­வி­ருந்த முக்­கிய கூட்­டத்தில் பங்­கு­பற்­று­வதைத் தவிர்த்து யாழ்ப்­பா­ணத்­துக்கு விஜயம் செய்­த­தா­கவும் குற்­றச்­சாட்­டுக்கள் தெரி­விக்­கப்­படு­கின்­றன.

மேலும் இடம்­பெ­யர்ந்தோர் தங்­கி­யி­ருந்த முகா­முக்குச் சென்ற சமயம் முகாம்­களைக் காட்­டு­வ­தற்­காக ஒழுங்­கு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த பிர­தான உள்ளூர் அதி­கா­ரியை அவர் ஓரம் கட்­டி­விட்­ட­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

மேலும் இரா­ஜ­தந்­திர நெறி­மு­றை­களை பிரிட்டன் மிகவும் உறு­தி­யாக கடைப்­பி­டிக்கும் என எதிர்­பார்க்­கப்­பட்ட போதிலும் பிரிட்டிஷ் பிர­த­மரின் இந்த நட­வ­டிக்கை மிகுந்த விச­னத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தாக அரச தரப்பு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

இந்­நி­லையில், யாழ்ப்­பா­ணத்­துக்கு விஜயம் செய்த பிரிட்டிஷ் பிர­தமர் அங்கு முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ர­னுடன் பேச்சு நடத்­தி­ய­துடன், வலி­காமம் வடக்­கி­லுள்ள அகதி முகாம் ஒன்­றுக்கு விஜயம் செய்து அங்­குள்ள மக்­க­ளுடன் நேர­டி­யாக உரை­யாடி அவர்கள் எதிர்­நோக்கும் நெருக்­க­டி­க­ளையும் கேட்­ட­றிந்து கொண்டார். இத­னை­ய­டுத்து கொழும்பு திரும்­பிய டேவிட் கமரூன் செய்­தி­யாளர் மாநாடு ஒன்­றையும் நடத்­தி­யி­ருந்தார்.

இந்த செய்­தி­யாளர் மாநாட்டில் இலங்­கையின் இறுதிக் கட்ட யுத்­தத்தில் இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் யுத்தக் குற்­றச்­சாட்­டுக்கள் குறித்த சுயா­தீன விசா­ர­ணையை அடுத்த வருடம் மார்ச் மாதத்­துக்குள் நிறைவு செய்­யா­விட்டால், ஐ.நா.மனித உரிமை பேர­வை­யுடன் இணைந்து சர்­வ­தேச சுயா­தீன விசா­ர­ணையைக் கோருவோம் என்று தெரி­வித்தார்.

அத்­துடன் யுத்தக் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் வெளிப்­ப­டை­யான சுயா­தீ­ன­மான மற்றும் நம்­ப­க­ர­மான விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும் என தாம் ஜனா­தி­ப­தி­யிடம் வலி­யு­றுத்­தி­ய­தா­கவும் அவர் தெரி­வித்­தி­ருந்தார்.

பிரிட்டிஷ் பிர­த­மரின் இந்த உரை மிகுந்த சர்ச்­சையைக் கிளப்பும் வகையில் அமைந்­தி­ருந்­தது. இதற்குப் பதி­ல­ளிக்கும் வகையில் உட­ன­டி­யாகக் கூட்­டப்­பட்ட செய்­தி­யாளர் மாநாட்டில் உரை­யாற்­றிய அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா, யுத்தக் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பான சர்­வ­தேச விசா­ர­ணையை இலங்கை ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ளப் போவ­தில்லை எனக் கூறியிருந்தார். அன்­றைய தினம் மாலை கொழும்பு பண்­டா­ர­நா­யக்க மாநாட்டு மண்­ட­பத்தில் நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் உரை­யாற்­றிய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ கண்­ணாடி வீட்­டுக்குள் இருந்து எவரும் கற்­களை எறியக் கூடாது. இலங்கை ஏற்­கெ­னவே சுயா­தீ­ன­மான குழுவைக் கொண்டே நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவை நிய­மித்­தது. எமது நாட்­டிலும் சுயா­தீ­ன­மான நிபு­ணர்கள் உள்­ளனர் என்று தெரி­வித்­தி­ருந்தார்.

இதே­வேளை கண்­ணாடி வீட்­டுக்குள் இருந்து கற்­களை எறியக் கூடாது என பிரிட்டிஷ் பிர­த­ம­ருக்கா கூறி­னீர்கள் என செய்­தி­யாளர் ஒருவர் எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளித்த ஜனா­தி­பதி, நான் எந்த நாட்­டையும் எவ­ரையும் எத­னையும் பெயர் கூறி குறிப்­பி­ட­வில்லை எனக் கூறி­விட்டார். இவ்­வா­றா­னதோர் சூழலில் டேவிட் கம­ரூனின் உரை ஊட­கங்­களில் முக்­கிய இடத்தைப் பிடித்­ததைப் போன்று ஜனா­தி­ப­தியின் உரையும் முக்­கிய இடத்தைப் பிடிக்கத் தவ­ற­வில்லை.

இதன் தொடர்ச்­சி­யாக மனித உரி­மைகள் தொடர்­பான குற்­றச்­சாட்­டுக்கள் குறித்த இலங்கை அர­சாங்­கத்­தினால் நடத்­தப்­பட்ட விசா­ர­ணை­களில் அதி­க­மா­னவை இரா­ணு­வத்தின் தலை­மை­யி­லேயே இடம்­பெற்­றுள்­ளதால் அவை முற்­று­மு­ழு­தாக சுயா­தீன தன்மை கொண்­ட­தாக அமை­ய­வில்லை எனப் பிரிட்டிஷ் பிர­தமர் மீண்டும் தெரி­வித்­துள்ளார்.

கடந்த ஞாயி­றன்று தாயகம் திரும்­பிய நிலையில் இலங்­கைக்­கான தனது விஜயம் குறித்து திங்­க­ளன்று பிரித்­தா­னிய நாடா­ளு­மன்­றத்தில் ஆற்­றிய விசேட உரையின் போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

இதே­வேளை பொது­ந­ல­வாய அரச தலை­வர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு அனைத்து வரப்­பி­ர­சா­தங்­க­ளையும் அனு­ப­வித்து மாநாட்டின் நிறை­வேற்றுக் கூட்டத் தொடர் நிறை­வ­டை­வ­தற்கு முன்பே பிரித்­தா­னியப் பிர­தமர் வடக்­குக்குப் பய­ணித்­த­மை­யா­னது “உண்ட வீட்­டுக்கு இரண்­டகம் செய்­த­மைக்கு ஒப்­பான செய­லாகும்” என தேசிய சுதந்­திர முன்­னணி கடு­மை­யாக குற்றம் சாட்­டி­யுள்­ளது.

இது ஒரு­பு­ற­மி­ருக்க, பொது­ந­ல­வாய மாநாடு தொடர்பில் கருத்து வெளி­யிட்­டி­ருக்கும் ஐ.தே.கட்சி, பொது­ந­ல­வாய மாநாட்டின் மூலம் நாட்­டையும் இரா­ணு­வத்­தை­யும் காட்டிக் கொடுக்கும் செயலை அர­சாங்­கமே செய்­துள்­ளது. பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தமி­ழர்கள் இன்றும் முகாம்­களில் வாழ்­கின்­றனர். அவர்­களைப் பாது­காக்­காது மாநாட்டை நடத்­து­வதா நல்­லாட்சி? என்றும் கேள்வி எழுப்­பி­யுள்­ளது.

ஒரு வகையில் வெறும் அரசியல் நோக்குடனான கருத்தாகவே இதனையும் நோக்க வேண்டியுள்ளது. இவை அனைத்துக்கும் மேலாக பொதுநலவாய மாநாடு நாட்டுக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துவிட்ட போதிலும் மறுபுறம் நெருக்கடியானதோர் சூழலை உருவாக்கியுள்ளதாகவே அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூனின் கருத்துக்கள் எதிர்காலத்தில் எந்த வகையான தாக்கத்தைக் கொடுக்கப் போகின்றன என்பது சிந்திக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

டேவிட் கமரூனின் கருத்துக்களை குறைத்து மதிப்பிடக் கூடாது எனத் தெரிவித்துள்ள கலாநிதி தயான் ஜயதிலக, அரசாங்கம் இப்போதிருந்தே இதற்கு முகம்கொடுப்பதற்கு இராஜதந்திர ரீதியாக தயாராக வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஒருவகையில் பொதுநலவாய மாநாட்டுக்கு கனேடிய மற்றும் இந்தியப் பிரதமர்கள் வருகை தராமை இலங்கை அரசுக்கு விசனத்தை ஏற்படுத்தியதை விடவும் கமரூனின் வருகை மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்திவிட்டதாகவே அரச தரப்பினரை எண்ணச் செய்துவிட்டது என்று கூறலாம். எதுவாக இருப்பினும் மேலை நாட்டுத் தலைவர்களின் கூற்றுக்கள் கேட்பதற்கு ஆறுதலாக இருக்குமே தவிர அதனால் ஆகப்போவது எதுவுமில்லை என்பதே யதார்த்தம்.



Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல