ஞாயிறு, 24 நவம்பர், 2013

மாலை­தீவில் ஆட்­சி­ மாற்றம்; மக்கள் எதிர்­பார்த்த ஜன­நா­ய­கத்தின் பெறு­பேறா? உலக வல்­ல­ர­சு­க­ளுக்கு கிடைத்த வெற்­றியா?

தெற்­கா­சிய நாடுகள் வித்­தி­யா­ச­மா­னவை. இங்கு ஜன­நா­யகம் இருப்­பது போல் தோன்றும். ஆனால் இருக்­காது.

இந்த நாடுகள் சுயா­தீ­ன­மாக இயங்­கு­வது போலவும் தோன்றும். உன்­னிப்­பாக ஆராய்ந்தால், அவற்றின் இறை­யாண்­மையை வல்­ல­ர­சுகள் குத்­த­கைக்கு எடுத்­தி­ருப்­பது விளங்கும்.

இந்த நாடு­களின் அர­சியல் தலை­வி­தியைத் தீர்­மா­னிப்­பவை வல்­ல­ர­சு­களின் பிராந்­திய அர­சியல் பூகோள­வியல் நலன்கள் தான்.

இந்தக் கருத்தை விப­ரிப்­ப­தற்கு மாலை­தீவை விடவும் மிகச்­சி­றந்த உதா­ரணம் இருக்க முடி­யாது.

கடந்த சனிக்­கி­ழமை மாலை­தீவில் நடைபெற்ற ஜனா­தி­பதித் தேர்தலில் அப்­துல்லா யாமீன் வெற்றி பெற்­றி­ருக்­கிறார். முன்னாள் ஜனா­தி­பதி மொஹம்மட் நஷீத் தோல்வி கண்­டி­ருக்­கிறார்.

மாலை­தீவு மக்கள் எதை எதிர்­பார்த்­தார்­களோ அது கிடைத்­தி­ருக்­கி­றது என்று யாமீன் கூறி­யி­ருக்­கிறார். மக்­களின் தீர்ப்பை மதித்து தோல்­வியை ஏற்றுக் கொள்­வ­தாக நஷீத் அறி­வித்­தி­ருக்­கிறார்.

இதைப் பார்த்தால் எல்லாம் நல்­ல­தாக நடந்­தி­ருக்­கி­றது என்று எண்ணத் தோன்­றலாம். மாலை­தீவின் சமீ­பத்­திய வர­லாற்றை ஆராய்ந்தால், அது அப்­ப­டி­யல்ல என்­பது புலப்­படும்.

மாலை­தீ­விற்கு ஜன­நா­யகம் புதி­யது. 2008ஆம் ஆண்டு தான் புதிய அர­சியல் யாப்பும், பல கட்­சிகள் போட்­டி­யிடக் கூடிய தேர்தல் முறையும் அறி­முகம் செய்­யப்­பட்­டன.

அந்­நாட்டை 30 வரு­ட­கா­லங்கள் இரும்புக் கரத்தால் நிர்­வ­கித்த மைமூன் அப்துல் கையூமின் ஆட்­சிக்கு முற்­றுப்­புள்ளி வைக்­கப்­பட்­டதால் அது சாத்­தி­யப்­பட்­டது.

புதிய அர­சியல் யாப்பு ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு இட­ம­ளிக்­கி­றது. தேர்­தலில் பலரும் போட்­டி­யி­டலாம். 50 சத­வீ­தத்­திற்கு மேலான வாக்­கு­களைப் பெற்ற வேட்­பாளர் வெற்றி பெற்­ற­வ­ராக அறி­விக்­கப்­ப­டுவார்.

எந்­த­வொரு வேட்­பா­ளரும் 50 சத­வீ­தத்­திற்கு மேலான வாக்­கு­களைப் பெறாத பட்­சத்தில் இரண்­டா­வது சுற்று வாக்­கெ­டுப்பு நடத்­தப்­படும். முதற்­சுற்றில் ஆகக்­கூ­டு­த­லான வாக்­கு­களைப் பெற்­ற­வரும், இரண்­டா­வது இடத்தில் இருப்­ப­வரும் போட்­டி­யி­டு­வார்கள்.

2008 ஆம் ஆண்டு நடத்­தப்­பட்ட தேர்­தலில் வெற்றி பெற்று மாலை­தீவின் ஜனா­தி­ப­தி­யாக தெரி­வா­னவர், மொஹம்மட் நஷீத். அவர் கடந்­தாண்டு முற்­ப­கு­தியில் நிகழ்ந்த சர்ச்­சைக்­கு­ரிய சம்­ப­வங்­களை அடுத்து பதவி வில­கி­யி­ருந்தார்.

ஜனா­தி­பதி நஷீத்­திற்கும், நீதி­மன்­றத்­திற்கும் இடை­யி­லான முறுகல் நிலை காரணமாக அவர் பதவி விலக வேண்­டிய நிர்ப்­பந்­தத்தை ஏற்­ப­டுத்­தி­யது.

மாலை­தீவு அர­சாங்­கத்தை கடு­மை­யாக விமர்­சித்த மதப்­பி­ர­முகர் ஒருவர் சிறையில் அடைக்­கப்­பட்­டி­ருந்தார். அவரை விடு­தலை செய்­யு­மாறு உத்­த­ர­விட்ட பிர­தம நீதி­ய­ர­சரைக் கைது செய்­யு­மாறு நஷீத் உத்­த­ர­விட்­டதால், மாலை­தீவின் இரா­ணுவம் அவரை தடுப்புக் காவலில் அடைத்து வைத்­தது.

குறித்த மதப்­பி­ர­முகர் கையூமின் விசு­வாசி என்­பது வேறு விடயம். மாலை­தீவின் அரச படை­களில் கையூமின் கொள்­கை­களை ஆரா­திப்­ப­வர்கள் அதிகம் என்­ப­தையும் மறந்து விட முடி­யாது.

தமக்கு எதி­ராக கட்­ட­விழ்த்து விடப்­பட்ட சதிப்­பு­ரட்சி, தாம் பதவி வில­கக்­கூ­டிய நிர்ப்­பந்­தத்தை ஏற்­ப­டுத்­தி­ய­தென நஷீத் குறிப்­பிட்­டி­ருந்தார்.

நஷீத்தைத் தொடர்ந்து ஆட்சி நிர்­வா­கத்தைப் பொறுப்­பேற்று மாலை­தீவை ஆட்சி செய்­தவர் துணை ஜனா­தி­பதி மொஹம்மட் வாஹித்.

தேர்­தலை நடத்தி அடுத்த ஜனா­தி­ப­தியைத் தெரிவு செய்­யு­மாறு மாலை­தீவு மக்கள் அவ­ருக்கு அழுத்தம் கொடுத்­தார்கள். சர்­வ­தேச சமூ­கமும் தான்.

தேர்­தலை ஒழுங்­காக நடத்­தியி­ருந்தால் கடந்த செப்டெம்பர் மாதம் ஜனா­தி­பதி தெரிவு செய்­யப்­பட்­டி­ருப்பார்.

ஆனால், நீதி­மன்­றத்­திற்கும் நஷீத்­திற்கும் இடை­யி­லான பழைய பகையின் கார­ண­மாக மூன்று தட­வை­கள் வாக்­க­ளிக்க வேண்­டிய நிர்ப்­பந்தம் மாலை­தீவு மக்­க­ளுக்கு ஏற்­பட்­டது.

முதலில் செப்டெம்பர் ஏழாம் திகதி வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்­டது. நஷீத் 45.5 சத­வீத வாக்­கு­க­ளுடன் முத­லிடம் பெற்றார். யாமின் இரண்­டா­வது இடத்­திற்கு தெரி­வானார். எவரும் 50 சத­வீத வாக்­கு­களைப் பெறா­ததால் இரண்­டா­வது சுற்று வாக்­கெ­டுப்­பிற்கு மக்கள் தயா­ரா­னார்கள்.

ஆனால், நீதி­மன்றம் தேர்தல் மோச­டி­களைக் காரணம் காட்டி பெறு­பே­று­களை இரத்துச் செய்­தது. இதன் கார­ண­மாக, செப்டெம்பர் 28ஆம் திகதி இரண்­டா­வது சுற்று வாக்­கெ­டுப்­பையும் நடத்த முடி­யாமல் போனது.

மீண்டும் ஒக்­டோபர் 19ஆம் திகதி தேர்­தலை நடத்த சகல ஏற்­பா­டு­களும் பூர்த்தியாகி இருந்­தன. இதிலும் நஷீத்­திற்கு வெற்றி வாய்ப்­புக்கள் அதி­க­மாக இருந்த நிலையில், பொலிஸார் தேர்தல் செய­ல­கத்தை முற்­று­கை­யிட்­டார்கள். தேர்தல் விதி­மு­றை­களில் குள­று­படி இருப்­ப­தாகக் கூறி வாக்­கெ­டுப்பை முடக்­கி­னார்கள்.

மறு­ப­டியும் கடந்த ஒன்­பதாம் திகதி மறு வாக்­கெ­டுப்பு நடந்­தது. அதில் நஷீத் மீண்டும் வெற்றி வெற்றார். நஷீத்­திற்கு 47 சத­வீத வாக்­கு­களும், யாமீனிற்கு 29 சத­வீத வாக்­கு­களும் கிடைத்­தன. மூன்­றா­வது வேட்­பாளர் காசிம் இப்­ராஹிம் 23 சத­வீத வாக்­கு­களைப் பெற்றார்.

முதற்­சுற்று வாக்­கெ­டுப்பில் முத­லிடம் பெற்ற நஷீத்­திற்கு இரண்­டா­வது சுற்று வாக்­கெ­டுப்பில் 48 சத­வீத வாக்­குகள் மாத்­தி­ரமே கிடைத்­தன. யாமீன் 51 சத­வீத வாக்­கு­களை எடுத்தார்.

முன்­னைய தேர்­தல்­களில் நஷீத்தை கிட்­டவும் நெருங்க முடி­யாத யாமீன், இரண்­டா­வது சுற்றில் கூடுதல் வாக்­கு­க­ளுடன் வெற்றி பெற்ற சம­யத்தில் நீதி­மன்றம் பெறு­பே­று­களை இரத்துச் செய்­ய­வில்லை. மறு­வாக்­கெ­டுப்பை நடத்­து­மாறு உத்­த­ர­வி­டவும் இல்லை.

இரண்­டா­வது சுற்றில் காசிம் இப்­ரா­ஹிமின் ஆத­ரவு கிடைத்­ததால் வெற்றி சாத்­தி­யப்­பட்­ட­தாக அவர் கூறி­னாலும், இந்த முடிவு பல­ரது புரு­வங்­களை உயர்த்­தி­யதில் வியப்­பில்லை.

மாலை­தீவின் உள்­நாட்டு அர­சியல் ஒரு­புறம் இருக்­கட்டும். நஷீத்தை ஓரங்­கட்டும் முயற்­சி­களின் முன்­னி­லையில் அமெ­ரிக்­காவும், பிராந்­திய வல்­ல­ர­சு­க­ளான இந்­தியா, சீனா ஆகிய நாடு­களும் கடைப்­பி­டித்த மௌனம் தான் ஆச்­சரி­யத்தைத் தரு­கி­றது.

அன்று நஷீத் ஆட்சி கவிழ்க்­கப்­பட்டு வாஹித் இடைக்­கால ஜனாதிபதியாக நிய­மிக்­கப்­பட்ட சம­யத்தில், அதனை சதிப்­பு­ரட்­சி­யென அமெ­ரிக்­காவோ, இந்­தி­யாவோ கண்­டிக்­க­வில்லை. மாறாக, அமெ­ரிக்­காவைத் தொடர்ந்து, அது ஜன­நா­யக நிலை­மாற்றம் என்றே இந்­தி­யாவும் வர்­ணித்­தது. இன்று யாமீன் ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளதைப் பாராட்டி இந்­திய பிர­தமர் வாழ்த்துச் செய்தி அனுப்பி வைத்­தி­ருக்­கிறார்.

இங்கு தான் பிராந்­திய நலன்கள் என்ற விடயம் முக்­கி­யத்­துவம் பெறு­கி­றது.

கடந்த நூற்­றாண்டில் யாரும் கவ­னிக்­கப்­ப­டாத தேச­மாக இருந்த மாலை­தீவு, இன்று உலக அர­சி­யலில் செல்­வாக்கு செலுத்­தக்­கூ­டிய மூன்று நாடு­களின் பலப்­பரீட்சை மேடை­யாக இருக்­கி­ற­தென்றால் அதற்கு இரண்டு கார­ணங்கள் இருக்­கின்­றன.

இன்று சீனாவும், இந்­தி­யாவும் அமெ­ரிக்­காவின் பொரு­ளா­தார வல்­ல­மைக்கு சவால் விடுக்­கக்­கூ­டி­ய­வை­யாக வளர்ந்து வரு­வது முதற்­கா­ரணம். 2001 செப்டெம்பர் 11 தாக்­கு­த­லுக்குப் பின்னர் அமெ­ரிக்கா முன்­னெ­டுத்த பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரான போர் இரண்டாம் காரணம்.

முதற்­கா­ர­ணத்தை ஆராய்வோம். சம­கால பொரு­ளா­தார உலகில் கோலோச்ச விரும்பும் எந்­த­வொரு நாடும், எரி­பொருள் மற்றும் கப்பல் போக்­கு­வ­ரத்து வணி­கத்தை தமது கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­தி­ருப்­பது அவ­சி­ய­மா­கி­றது. இன்று உலக நாடு­க­ளுக்குத் தேவை­யான எரி­பொ­ருளை ஏற்றிச் செல்லும் கப்­பல்­களை ஆராய்ந்தால், 80 சத­வீ­த­மான கப்பல் போக்­கு­வ­ரத்து இந்து மா சமுத்­தி­ரத்தின் ஊடா­கவே நிகழ்­கி­றது. அது மாலை­தீவை அண்­டிய கடற்­ப­ரப்­பாகும்.

இந்த கடற்­ப­ரப்பை தமது கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்துக் கொண்டால் மாத்­தி­ரமே எதிர்­கா­லத்தில் பொரு­ளா­தார நன்­மைகள் கிடைக்கும் என்­பதை அமெ­ரிக்கா, சீனா, இந்­தியா ஆகிய நாடுகள் அறிந்து வைத்­தி­ருக்­கின்­றன.

இந்த மூன்று நாடு­களும் பல்­வேறு அர­சியல் கார­ணங்­களின் அடிப்­ப­டையில் நேரடி மோத­லுக்குள் இறங்­கா­விட்­டாலும் மாலை­தீ­வையும், இலங்­கையையும் தமக்­கு­ரிய வல்­லா­திக்கப் போட்­டியின் கள­மாக பயன்­ப­டுத்தி வரு­வது வெளிப்­ப­டை­யான விடயம்.

இன்று மாலை­தீவின் உட்­கட்­ட­மைப்பு வச­தி­களை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு சீனா உதவி செய்­கையில், மாலை­தீவின் எல்­லைப்­பா­து­காப்பு முயற்­சி­களில் உதவும் நோக்­கத்­துடன் குடி­வ­ரவைக் கையாளும் திட்­ட­மொன்றை வழங்­கி­யி­ருக்­கி­றது.

இங்கு அமெ­ரிக்­கா­விற்கும் சீனா­விற்கும் இடை­யி­லான போட்­டியில், இந்­தியா அமெ­ரிக்­காவின் பக்கம் சாய்­வ­தற்கு காரணம் இருக்­கி­றது. பிராந்­திய நலன்கள் என்று வரும்­போது சீனா தோற்­க­டிக்­கப்­ப­டு­வ­தையே இந்­தியா விரும்பும்.

இன்று சுவா­ரஷ்­ய­மா­ன­தொரு விட­யத்தைக் கூறி­யாக வேண்டும்.

மேலோட்­ட­மாக நோக்­கினால், அமெ­ரிக்­காவின் தெரிவு மொஹம்மட் நஷீத் என்­ப­தாகத் தோன்றும். ஏனெனில், அவர் மதச்­சார்­பின்­மையை நாடு­ப­வ­ரா­கவும், மேற்­கு­லகின் நண்­ப­ரா­கவும் திகழ்­கிறார். மாறாக, அப்துல் கையூமின் சகோ­தரார் மாலை­தீவு சமூகம் இஸ்­லா­மிய மய­மா­வதை விரும்­பு­கிறார்.

ஆழ­மாக ஆராய்ந்தால், அப்துல் கையூமின் குடும்­பத்தைச் சேர்ந்­தவர் ஒருவர் மாலை­தீவை ஆட்சி செய்­வ­தையே அமெ­ரிக்கா விரும்­பு­கி­றது என்­பது தெரி­ய­வரும். ஏனெனில், அப்துல் கையூம் இஸ்­லாத்­திற்கு முக்­கி­யத்­துவம் அளிப்­ப­வ­ராக இருந்­தாலும், அவர் அமெ­ரிக்கா தொடுத்த பயங்­க­ர­வாத­த்திற்கு எதி­ரான யுத்­தத்­திற்கு ஆதரவு அளித்திருந்தார்.

இங்கு இன்னொரு விடயமும் முக்கியத்துவம் பெறுகிறது.

அது நஷீத்தைத் தொடர்ந்து மாலைதீவை ஆட்சி செய்த மொஹம்மட் வாஹித்திற்கும் அமெரிக்காவிற்கும் உள்ள தொடர்பு. உண்மையில், சான் பிரான்ஸிஸ்கோவில் கல்வி கற்று அமெரிக்காவின் கிரீன் கார்ட் வைத்திருக்கும் வாஹித்தின் ஆட்சி காலத்தில் தான், மாலைதீவில் அமெரிக்கா வலுவாக கால்பதித்து. மாலைதீவிற்கு PISCES என்ற குடிவரவு கண்காணிப்புத் திட்டத்தைப் பெற்றுக் கொடுத்ததும், பயங்கரவாத தடுப்பு நிபுணர்களை அனுப்பி வைத்ததும், பிளக்ஸ்ரோன் என்ற விமானக் கம்பனி மாலைதீவில் கால்பதித்ததும் அவரது ஆட்சிகாலத்தில் தான்.

செப்டெம்பர் ஏழாம் திகதி நடத்தப்பட்ட தேர்தலில் அமெரிக்காவின் பூரண ஆசியுடன் களமிறங்கிய வாஹித், ஐந்து சதவீத வாக்குகளைப் பெற்று போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். அவர் சற்று அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்கும் பட்சத்தில், மாலைதீவின் தேர்தல் நடைமுறையிலும் செல்வாக்கு செலுத்தி அவரை அடுத்த ஜனாதிபதியாக மாற்றும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டிருக்கக்கூடும்.

செப்டெம்பர் ஏழாம் திகதி நடத்தப்பட்ட தேர்தலில் அமெரிக்காவின் பூரண ஆசியுடன் களமிறங்கிய வாஹித், ஐந்து சதவீத வாக்குகளைப் பெற்று போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். அவர் சற்று அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்கும் பட்சத்தில், மாலைதீவின் தேர்தல் நடைமுறையிலும் செல்வாக்கு செலுத்தி அவரை அடுத்த ஜனாதிபதியாக மாற்றும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டிருக்கக்கூடும்.


சதீஷ் கிருஷ்ணபிள்ளை
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல