8,000 கலோரி சக்திப் பெறுமானமுடைய 5.6 இறாத்தல் நிறைவுடைய சான்ட்விச் உணவை 36 நிமிடத்தில் உண்டு பிரித்தானிய இளைஞர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
எஸெக்ஸிலுள்ள ஹட்லெயிஹ் எனும் இடத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் பிரெட்டல் (26 வயது) என்ற மேற்படி இளைஞர், இந்த இராட்சத சான்ட்விச் உணவை முழுமையாக உண்ட முதலாவது நபர் என்ற பெயரையும் பெறுகிறார்.
8 துண்டு பாண்களுக்கு இடையில் நிரப்பப்பட்ட இறைச்சி, பொரியல்கள், வெண்ணெய், முட்டை, தக்காளி, மரக்கறி கலவை உள்ளடங்கலான உணவுப் பொருட்களை நிரப்பி தயாரிக்கப்பட்ட மேற்படி இராட்சத உணவை உண்ணும் 'மனிதனுக்கு எதிராக சான்ட்விச்' என்ற தலைப்பிலான இந்தப் போட்டியில் 116 பேர் பங்கேற்று தோல்வியைத் தழுவியுள்ளனர்.
45 நிமிட நேர வரையறையைக் கொண்ட இந்தப் போட்டியில் பங்கேற்ற எவருமே அந்த சான்ட்விச் உணவை முழுமையாக உண்ணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
17.95 ஸ்ரேலிங் பவுண் செலவில் தயாரிக்கப்பட்ட மேற்படி இராட்சத சான்ட்விச் உணவொன்று சிறிய குழந்தையின் அளவானதாகும்.
ஆணொருவருக்கு நாளொன்றுக்கு தேவைப்படும் 2,500 சக்திப் பெறுமானத்துடன் ஒப்பிடுகையில், இந்த உணவு 3 மடங்கிலும் அதிகமான சக்திப் பெறுமானம் உடையதாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக