வியாழன், 26 டிசம்பர், 2013

கூகுள் ட்ரைவ் டிப்ஸ்

கூகுள் தரும் பல வசதிகளில், நமக்கு மிகச் சிறப்பாக உதவுவது அதன் தேடுதல், மெயில் ஆகியவற்றை அடுத்து பைல்களைச் சேமிக்க உதவும் கூகுள் ட்ரைவ் (Google Drive) ஆகும். இதன் மூலம், கூகுள் தரும் பல வசதிகளை ஒன்றிணைக்கலாம். சரியான டூல்களை செம்மைப் படுத்தி, செட்டிங்குகளை அமைத்தால், கூகுள் ட்ரைவ் வசதியை நமக்கு சில வேலைகளை மேற்கொண்டு செய்து தரும் வசதியாக மாற்றி விடலாம். அதற்கான டிப்ஸ்களை இங்கு பார்ப்போம்.

1. இணைய இணைப்பு இல்லாமல்: கூகுள் ட்ரைவ் என்பதே க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் இயங்குவதாகும். ஆனாலும், ஒரு இரண்டு நிமிடங்கள் செலவு செய்து, செட்டிங்ஸ் மேற்கொண்டால், இணைய இணைப்பு இல்லாமலேயே, உங்கள் டாகுமெண்ட்களைப் பார்க்கலாம் மற்றும் திருத்தலாம். இதற்கான ஒரே தேவை, நீங்கள் கூகுள் தரும் குரோம் பிரவுசரைப் பயன்படுத்த வேண்டும்.
குரோம் பிரவுசரில் முதலில் கூகுள் ட்ரைவ் அப்ளிகேஷனை (https://chrome.google.com/webstore/detail/google-drive/apdfllckaahabafndbhieahigkjlhalf) இன்ஸ்டால் செய்திடவும். அடுத்து drive.google.com என்ற இணைய தளம் செல்லவும். இதில் இடது பக்கம் கிடைக்கும் மெனுவில், "More” என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும். அடுத்து "Offline” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இந்த பட்டனில் கிளிக் செய்தால், உங்கள் கம்ப்யூட்டர், இணைய இணைப்பு இல்லாமலேயே, கூகுள் ட்ரைவ் பைல்களை இயக்க செட் செய்யப்பட்டுவிடும். நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும், இதனை செட் செய்தால் தான், கூகுள் ட்ரைவ் இணைய இணைப்பின்றி கிடைக்கும். ஆனால், கூகுள் குரோம் புக் பயன்படுத்தினால், மாறா நிலையில் கூகுள் ட்ரைவ் பயன்படுத்தும் வகையில் அது செட் செய்யப்பட்டே கிடைக்கிறது.

2. உங்கள் ஹார்ட் ட்ரைவுடன் கூகுள் ட்ரைவ்: இணைய இணைப்பு இல்லாமல், கூகுள் ட்ரைவ் பயன்படுத்தும் வசதியுடன், உங்கள் ஹார்ட் ட்ரைவுடன், கூகுள் ட்ரைவ் இணைக்கும் வசதியும் கிடைக்கிறது. கூகுள் ட்ரைவ் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர் இணைப்பினை எளிதாக அமைக்கலாம். இதன் மூலம், நீங்கள் கூகுள் ட்ரைவில் சேமித்து வைத்துள்ள எந்த பைலையும், உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் பயன்படுத்தலாம். மேலும், கூகுள் ட்ரைவ் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர் இடையே, எந்த பைலையும் இழுத்து வந்து இடம் மாற்றலாம். இந்த வசதியினைப் பெற, https://tools.google.com/dlpage/drive என்ற தளத்தில் கிடைக்கும் புரோகிராமினை, உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து வைக்க வேண்டும். இதனை இன்ஸ்டால் செய்த பின்னர், கம்ப்யூட்டரில் உள்ள போல்டர் ஒன்றை, கம்ப்யூட்டர் + கூகுள் ட்ரைவ் இருவழிப் போக்குவரத்திற்கென தனியே அமைக்க வேண்டியதிருக்கும். இதனை மேக் சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டரிலும் அமைக்கலாம்.

3. கூகுள் ட்ரைவ் டாகுமெண்ட் ஒருங்கிணைப்பு: மேலே சொல்லப்பட்ட ட்ரைவ் + கம்ப்யூட்டர் இணைப்பு, ட்ரைவில் உள்ள பைல்களை உங்கள் ஹார்ட் ட்ரைவில் வைக்கிறது. ஆனால், கூகுள் டாக்ஸ் (Google Docs) பயன்படுத்தி உருவாக்கப்படும் டாகுமெண்ட் மற்றும் ஸ்ப்ரெட் ஷீட்களை அவ்வாறு காண்பது எளிதல்ல. அந்த பைல்கள் கூகுள் டாக்ஸ் பார்மட்டில் தான் சேவ் செய்யப்படும். அந்நிலையில், அவற்றை நம்முடைய லோக்கல் வேர்ட் ப்ராசசர் அல்லது எடிட்டரில் திறந்து மாற்றங்கள் செய்திட முடியாது. இதற்கான வழி ஒன்று http://www.syncdocs.com என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் உள்ளது. இங்கு, நம்முடைய கூகுள் ட்ரைவ் அக்கவுண்ட்டிற்கும், பெர்சனல் கம்ப்யூட்டருக்கும் ஓர் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. இதன் மூலம் நம் வேர்ட் டாகுமெண்ட் கூகுள் டாக்ஸ் பார்மட்டிலும், அவை நம் வேர்ட் பார்மட்டிலும் மாற்றிக் காணலாம்.

4. பைல்களை இழுத்துப் போட: கூகுள் ட்ரைவிற்கு பைல் ஒன்றை வேகமாக மாற்ற வேண்டுமா? அப்லோட் கட்டளை என்றெல்லாம் குழப்பிக் கொள்ள வேண்டாம். உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து, கூகுள் ட்ரைவ் இணையதளத்திற்கு இழுத்து வந்து விட்டுவிடவும். ட்ரைவ் தானாக, அப்லோட் செயல்பாட்டினை மேற்கொண்டு, உங்கள் ஸ்டோரேஜ் பகுதியில், பைலை பதிந்து நிறுத்திவிடும். வேறு எந்த கூடுதல் வேலையும் மேற்கொள்ள வேண்டாம்.

5. படங்களை எளிதில் செருக: கூகுள் டாக்ஸ் டாகுமெண்ட்டினை திருத்துகையில், திரையின் மேலாக உள்ள, அதன் கமாண்ட் பாரினைப் பயன்படுத்தி, எந்த ஒரு இமேஜையும் இடைச் செருகலாம். அதனைக் காட்டிலும் எளிதான வழி தேவை எனில், இமேஜை உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து அப்படியே இழுத்து வந்து, கூகுள் டாக்ஸ் பயன்படுத்தி உருவான டாகுமெண்ட்டில் விட்டுவிடலாம். உடனே, அங்கு இமேஜ் அளவினை மாற்றி அமைக்க டூல் ஒன்று காட்டப்படும். அதனைப் பயன்படுத்தி, இமேஜை உங்கள் விருப்பப்படி சரி செய்திடலாம்.

6. லிங்க் அமைத்தல்: கூகுள் டாக்ஸ் பயன்படுத்தி உருவாக்கப்படும் டாகுமெண்ட்டில், Ctrl+K அழுத்தி அல்லது திரையின் மேலாக உள்ள பாரை அழுத்தி, லிங்க் ஒன்றை சேர்க்கிறீர்கள். இங்கு கிடைக்கும் பாக்ஸில், லிங்க்கிற்கான டெக்ஸ்ட்டை வழக்கம் போல அமைத்தால் போதும். நீங்கள் டைப் செய்திடுகையிலேயே, கூகுள் தானாக, இணையத்தில் தேடி, நீங்கள் அமைக்கும் சொற்களில் அமைந்த இணைய முகவரிகள் சிலவற்றைக் கட்டம் கட்டிக் காட்டும். அதில் நீங்கள் இலக்கு வைத்திடும், இணைய முகவரிக்கான லிங்க்கில் கிளிக் செய்து அமைக்கலாம்.

7. மாற்றங்களைப் பின் தொடர: எம்.எஸ். ஆபீஸ் வேர்டில் உள்ள Track Changes வசதிகள், கூகுள் டாக்ஸ் அமைப்பில் தரப்படவில்லை. ஆனால், ஏற்கனவே டாகுமெண்ட்டில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களைப் பார்க்க விரும்பினால், சில மாற்றங்களுக்கு முன் இருந்த டாகுமெண்ட்டினைப் பெற விருப்பப்பட்டால், Docs' Revision History என்ற வசதியினைக் கிளிக் செய்து, இந்த செயல்பாட்டினை மேற்கொள்ளவும். இதனை File மெனுவில் பெறலாம். அல்லது Ctrl+Alt+Shift+G கீகளை அழுத்திப் பெறலாம்.

8. ஷார்ட் கட் கீ பயன்படுத்தல்: கீ போர்ட் ஷார்ட் கட் பயன்படுத்துதல், நம் வேலையில் அதிக நேரத்தினை மிச்சப்படுத்தும். அந்த வகையில், கூகுள் ட்ரைவ் செயல்பாட்டில், அதிகமான எண்ணிக்கையில், ஷார்ட் கட் கீ தொகுப்புகள் கிடைக்கின்றன. ட்ரைவ் இணைய தளத்தில், கண்ட்ரோல் மற்றும் முன் சாய்வுக் கோட்டிற்கான கீகளை (Ctrl + forwards lash key) அழுத்தி, இவை அனைத்தையும் பெறலாம்.

9. முழுத்திரை பயன்பாடு: டாகுமெண்ட் திருத்துகையில் அல்லது உருவாக்குகையில், முழுத்திரையும் டாகுமெண்ட் பயன்பாட்டிற்கே வேண்டும் என விரும்பினால், டாக்ஸ் வியூ மெனுவில் "Full screen” என்னும் கட்டளையைத் தேடிப் பெறவும். இதனை அழுத்தினால், உங்கள் டாகுமெண்ட் தவிர, வேறு எதுவும் திரையில் இருக்காது. மீண்டும் பழையபடி திரை வேண்டும் என்றால், எஸ்கேப் கீயைத் தட்டினால் போதும்.

10. வண்ணங்களில் போல்டர்கள்: கூகுள் ட்ரைவில் போல்டர்கள், மற்றும் ஒன்றுக் கொன்று இணைந்த வகையிலான போல்டர்களை அமைக்க முடியும் என்று நீங்கள் அறிவீர்கள். இவற்றை நாம் வண்ணம் கொடுத்து, பிரித்தறியும் வகையில் அமைக்கலாம். உங்கள் ட்ரைவில் உள்ள போல்டரில், ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் "Change color" என்ற கட்டளையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், வண்ணம் கொடுத்து அமைக்கவும்.

11. பைல்களைப் பகிர்தல்: கூகுள் ட்ரைவில் உள்ள பைல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள சில வழிகளை, ட்ரைவ் தருகிறது. மற்ற பயனாளர்களை, உங்கள் டாகுமெண்ட்டினைக் கூட்டாகத் திருத்த அனுமதிக் கலாம். இதன் மூலம், அவர்கள் உங்கள் டாகுமெண்ட்டினைச் செம்மைப் படுத்தலாம்; குறிப்புகளை எழுதி வைக்கலாம். நீங்கள் எந்த அளவிற்கு அவர்களுக்கு அனுமதி அளிக்கிறீர்களோ, அதற்கேற்ப அவர்கள், டாகுமெண்ட்களைக் கையாளலாம். கூகுள் டாக்ஸ் பிரிவிலிருந்தே, உங்கள் டாகுமெண்ட்டினை, நீங்கள் நேரடியாக அவர்களுக்கு மின் அஞ்சல் வழியாக அனுப்பலாம். இந்த வசதிகளை, கூகுள் ட்ரைவில் உள்ள பைல் ஒன்றில் ரைட் கிளிக் செய்வதன் மூலம் கிடைக்கும் மெனுவிலிருந்து பெறலாம். அல்லது டாகுமெண்ட் ஒன்றை எடிட் செய்கையில், அதன் பைல் மெனுவில் இருந்தும் இந்த வசதிகளைப் பெற்று இயக்கலாம்.

12. புதிய விருப்பமான வியூவில் ட்ரைவ்: கூகுள் ட்ரைவ் தோற்றத்தினை நீங்கள் விரும்பும் வகையில் அமைக்க வசதி உள்ளது. இதன் மூலம் நீங்கள் வேகமாக உங்கள் பணியினை மேற்கொள்ளலாம். கூகுள் ட்ரைவின் முதன்மை திரையில், மேல் வலது மூலையில் உள்ள நான்கு சிறிய சதுரங்களைக் காணவும். இதில் வழக்கமான கட்டமைப்பிற்கான பட்டன் இருக்கும். இதனை அடுத்த பட்டனைக் காணவும். இதில் படுக்கையாகப் பல வரிகள் இருக்கும். இதில் கிளிக் செய்தால், ட்ரைவின் தோற்றத்தினை மாற்றி அமைக்கலாம். இந்த பட்டன்களுக்கு இடது புறம், பைல்கள் எந்த வகையில் பிரித்து வைக்கப்பட வேண்டும் என்ற செயல்பாட்டினை மேற்கொள்ளலாம். வலது புறம் உள்ள கியர் ஐகானைக் கிளிக் செய்தால், டிஸ்பிளே காட்சியின் ஆழத்தினைக் குறைக்கலாம். இதன் மூலம் தோற்றத்தினை "comfortable,” "cozy,” அல்லது "compact” என மூன்று வகைகளில் அமைக்கலாம்.

13. பைல் மாற்றும் வசதி: டெக்ஸ்ட் அல்லது இமேஜ் மிக அதிகமாக உள்ள பி.டி.எப். பைல் ஒன்றை அப்லோட் செய்திட விரும்பினால், கூகுள் ட்ரைவ், இவற்றை மாற்றித் தருவதற்கு உதவிடும். மாற்றி, அதனை திருத்தும் வகையிலான பார்மட்டில் வைத்திடும். இதற்கான தேர்வினை, மேல் வலது பக்கம் உள்ள கியர் ஐகானைக் கிளிக் செய்து "Upload settings” என்ற பிரிவில் பெறலாம்.

14. மொழி பெயர்க்க வேண்டுமா? உங்கள் டாகுமெண்ட்களை வேறொரு மொழியில் மாற்றி, ட்ரைவில் அமைக்க வேண்டுமா? கூகுள் டாக்ஸ் இதற்கான வசதியைத் தருகிறது. திரையின் மேலாக உள்ள டூல்ஸ் (Tools) மெனுவில் கிளிக் செய்து, கிடைக்கும் பட்டியலில், "Translate document” என்பதனைத் தேர்வு செய்திடவும். இதில், மாற்றக் கூடிய மொழிகளின் பட்டியல் கிடைக்கும். இதில் மொழியைத் தேர்வு செய்தால், டாகுமெண்ட் அந்த மொழியில் மொழி பெயர்த்துத் தனி டாகுமெண்ட்டாகக் கிடைக்கும். (ஆனால், மொழி பெயர்ப்பு சரியாக உள்ளதா என நீங்கள் தான் கவனித்துக் கொள்ள வேண்டும்)
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல