மெனு பட்டியலை விலக்கிவிட: வேர்டில் ஒரு மெனுவினைக் கிளிக் செய்து திறந்துவிட்டீர்கள். பின்னர் அது வேண்டாம் என்று எண்ணி அதனைக் கேன்சல் செய்து மீண்டும் டாகுமெண்ட்டில் கர்சர் இருந்த இடத்திற்கு வர எண்ணுகிறீர்கள். என்ன செய்யலாம்? இதற்கு மூன்று வழிகள் உள்ளன.
1. எஸ்கேப் கீயை இரண்டு முறை தட்டவும். முதல் முறையில் மெனு மறையும். ஆனால் கர்சர், மெனு மீதாக இருக்கும். இரண்டாவது முறை தட்டுகையில் கர்சர் டாகுமெண்ட்டில் விட்ட இடத்தில் நிற்கும்.
2. மெனுமீது மீண்டும் ஒரு முறை கிளிக் செய்தால் மெனு மறையும்.
3. மெனுவிற்கு வெளியே டாகுமெண்ட்டில் எங்கு கிளிக் செய்தாலும் மெனு உடனே மறைந்துவிடும்.
நார்மல் டெம்ப்ளேட்: வேர்ட் தொகுப்பைத் தொடங்கும்போது புதிய டாகுமெண்ட் ஒன்று திறக்கப்பட்டு நம் பயன்பாட்டிற்கு தயாராக இருக்கிறது அல்லவா? இந்த செட் அப் தான் நார்மல் டெம்ப்ளேட் அன அழைக்கப்படுகிறது.
இதுதான் அனைத்து டாகுமெண்ட்களின் அடிப்படை ஸ்லேட்டாக இருக்கும். இதனை மாற்றினால் அடுத்து தயாராகும் புதிய டாகுமெண்ட்கள் அனைத்தும் மாற்றங்களுடன் கூடிய டெம்ப்ளேட்டையே புதிய நார்மல் டெம்ப்ளேட்டாக வைத்துக் கொள்ளும்.
இந்த நார்மல் டெம்ப்ளேட் பைல், நீங்கள் வேர்ட் தொகுப்பை இன்ஸ்டால் செய்த டைரக்டரியில் இருக்கும். இதனை நீங்கள் தெரியாமல் அழித்துவிட்டால் வேர்ட் தொகுப்பு புதிய நார்மல் டெம்ப்ளேட் பைல் ஒன்றை உருவாக்கிக் கொள்ளும்.
குறிப்பிட்ட டெக்ஸ்ட்டை மறைக்க: வேர்டில் உருவாக்கப்பட்ட டாகுமெண்ட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் மறைத்துக் காட்ட விரும்பினால் அதற்கான வழிகளை வேர்ட் தருகிறது. மறைத்த பகுதியை மீண்டும் காட்டும் வகையில் அமைக்கலாம்.
இதற்கான வழி: மறைக்கப்பட வேண்டிய டெக்ஸ்ட்டை முதலில் செலக்ட் செய்து கொள்ள வேண்டும். பின் மெனு பாரில் Format தேர்ந்தெடுத்து அதில் Fonts பிரிவைக் கிளிக் செய்திடுக.
புதிய விண்டோ ஒன்று கிடைக்கும்.
அதில் Effects என்ற பகுதியில் இறுதியாகக் காட்டப்படும் Hidden என்னும் பாக்ஸின் முன் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.
பின் மீண்டும் இந்த டெக்ஸ்ட் காட்டப்பட வேண்டும் என்றால் Ctrl+D கொடுத்து மீண்டும் அதே முறையில் பாண்ட் விண்டோவிற்குச் சென்று டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.
இப்போது மறைக்கப்பட்ட டெக்ஸ்ட் மீண்டும் காட்டப்படும்.
சென்டிமீட்டரில் வேர்ட்: வேர்டில் எல்லாமே அங்குலம், பவுண்ட், காலன் என்று பழைய அளவில்தான் இருக்கும். ஏனென்றால் அமெரிக்காவில் இன்னும் அதுதான் பின்பற்றப்பட்டு வருகின்றது. இன்றைக்கு இந்தியாவில் 35 வயதிற்கும் குறைவாக உள்ளவர்களுக்கு இது முற்றிலும் தெரியாது. எனவே வேர்டில் கிடைக்கும் அளவுகளை மெட்ரிக் அளவுகளாக (அங்குலத்திற்குப் பதிலாக சென்டிமீட்டர்) மாற்ற விரும்பினால் கீழ்க்காணும் செட்டிங்ஸ் மாற்றவும்.
1. Tools கிளிக் செய்து Options தேர்ந்தெடுக்கவும்.
2. பல டேப்கள் கொண்ட டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் General என்ற டேப்பினைக் கிளிக் செய்திடவும்.
3. இதில் "Measurement Units” என்று இருப்பதன் அருகே உள்ள மெனுவை விரித்து நீங்கள் விரும்பும் அளவைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Inches, Centimeters, Millimeters, Points, or Picas என்ற அளவுகளைக் காணலாம்.
4. பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக