இருமும்போதும், தும்மும்போதும், சிரிக்கும்போதும் சிறுநீர் கட்டுப்பாடின்றி வெளியேறுவதற்குக் காரணம் சிறுநீர்ப் பையைத் தாங்கும் இழையங்களின் பலவீனத்தால் சிறுநீர்ப்பையின் கழுத்துக்கு கீழே இறங்கியுள்ளமையே ஆகும். இதற்கு சிலவகை உடற்பயிற்சிகள் அதாவது சிறுநீர்க்கழிக்கும் போது இடையிடையே நிறுத்துவது போல் அடிவயிற்று தசைகளை இறுக்குவதன் மூலம் சிறிது காலத்தில் இப்பிரச்சினைக்கு ஓரளவு முன்னேற்றம் சிலரில் ஏற்படும். இவ்வாறான முயற்சி வெற்றியளிக்காவிட்டால் சிறிய சத்திர சிகிச்சை மூலம் சிறுநீர்ப்பையின் கழுத்தை சிறிய மெல்லிய நாடா மூலம் உயர்த்தி விட்டால் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கின்றது.
இது TVT ( Tension Free Vaginal Tape) எனப்படுகின்றது. இவ்வகை சத்திர சிகிச்சைக்கு வயிற்றில் பெரியளவில் வெட்ட வேண்டியதில்லை. அத்துடன் முழு மயக்கமும் தேவையில்லை. உடலின் கீழ்ப்பகுதியை மாத்திரம் விறைக்கப்பண்ணி இவ்வகை சத்திர சிகிச்சையை செய்யலாம். வைத்தியசாலையிலிருந்து ஒரே நாளில் வீடு செல்ல முடியும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக