ஞாயிறு, 15 டிசம்பர், 2013

மனித உரிமை என்­பது தோளில் சுமக்­கப்­படும் துய­ரல்ல!

உலகில் பிறப்­பு­ரிமை, எழுத்­து­ரிமை, கருத்­து­ரிமை போன்ற அடிப்­படை உரி­மை­களை வலி­யு­றுத்தி ஐக்­கிய நாடுகள் சபை­யினால் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­ட­துதான் இந்த சர்­வ­தேச மனித உரி­மைகள் தினம் (டிசம்பர்- 10).



மனித உரிமை என்­பது, எல்லா மனி­தர்­க­ளுக்கும் உரித்­தான அடிப்­படை உரி­மை­களும், சுதந்­தி­ரங்­களும் ஆகும். இந்த உரி­மைகள் “மனி­தர்கள், மனி­தர்­க­ளாகப் பிறந்த கார­ணத்­தினால் அவர்­க­ளுக்குக் கிடைத்த அடிப்­ப­டை­யான, விட்டுக் கொடுக்க இய­லாத, மறுக்க முடி­யாத சில உரி­மை­க­ளாக” கரு­தப்­ப­டு­கின்­றன. இனம், சாதி, நிறம், சமயம், பால், தேசியம், வயது, உடல் உள வலு ஆகி­ய­வற்றுக் அப்பால் ஒவ்­வொரு தனி மனி­த­ருக்கும் இருக்கும் இந்த அடிப்­படை உரி­மைகள், மனிதர் சுதந்­தி­ர­மாக, சுமு­க­மாக, நல­மாக வாழ அவ­சி­ய­மான உரி­மை­க­ளாகக் கரு­தப்­ப­டு­கின்­றன. மனித உரி­மைகள் என்­ப­தனுள் அடங்­கு­வ­தாகக் கரு­தப்­படும் குடிசார் மற்றும் அர­சியல் உரி­மை­களுள், வாழும் உரிமை சுதந்­திரம், கருத்து வெளிப்­பாட்டுச் சுதந்­திரம், சட்­டத்தின் முன் சம­நிலை, நகர்வுச் சுதந்­திரம், பண்­பாட்டு உரிமை, உண­வுக்­கான உரிமை, கல்வி உரிமை என்­பன முக்­கி­ய­மா­னவை.

மனித உரிமை என்­பது இவைதான் என்ற வரை­ய­றையோ அல்­லது இந்தக் கட்­ட­மைப்­புக்­குள்தான் தொகுத்து நிறுத்­தப்­பட வேண்­டு­மென்ற விதி­மு­றையோ இல்­லை­யெ­னலாம்.

ஒவ்­வொ­ரு­வரின் பார்வை, சிந்­தனை, அடிப்­படைத் தேவைக்கு ஏற்ப வேறு­பட்­ட­தாக அமைந்­தாலும் மனித உரி­மையின் அதி­முக்­கிய கோர்­வை­யாக நாடு, இனம், மதம், வாழ்­வா­தாரம், இருப்பு, போர்க்­கால சூழல், அக­திகள், அக­திகள் இடம்­பெ­யர்வு, தடுத்து வைத்தல் போன்­றவை முக்­கிய உரிமைக் குரல்­க­ளாக ஓங்கி ஒலிக்­கின்­றன.

மேலும், மனித உரி­மை­யா­னது, பிறப்பு, மொழி என தொடங்கி இறப்பின் மண்­வரை நிர்­ண­யிக்­கப்­ப­டு­கி­றது. மனிதன் நிர்­ண­யிக்கும் உரி­மையை அவனே இழக்­கும்­போது அல்­லது பறிக்­கப்­ப­டும்­போது மனித உரிமை மீறல் ஏற்­ப­டு­கி­றது.

இன்று மனி­த­னா­னவன் தனது சொந்த நாட்டில் வாழும் உரிமை, தனது வசிப்­பிடம், மத வழி­பாட்­டு­ரிமை, காணி, நிலம், சொத்து, உழைப்பு, பொரு­ளா­தார உரிமை, கல்வி உரிமை, பண்­பாட்டு, கலா­சா­ரத்தை நிலை நிறுத்தும் உரிமை போன்ற அடிப்­படை உரி­மை­க­ளுடன் போராட வேண்­டி­யுள்­ள­துடன் அன்­றாட வாழ்வின் யதார்த்­த­மான பல சவால்­க­ளுக்கு முகங்­கொ­டுக்க வேண்­டி­ய­வ­னா­கவும் இருக்­கின்றான். பேச்­சு­ரிமை, கருத்­து­ரிமை கூட தணிக்கை செய்­யப்­படும் ஓர் இக்­கட்­டான சூழ­லுக்குத் தள்­ளப்­பட்டு பல அழுத்­தங்­க­ளுக்கு மத்­தியில் வாழ்க்­கையைக் கொண்டு செல்­லவும் சிர­மப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்றான் என்­ப­துதான் உண்மை.

எந்­த­வொரு நாட்­டி­லா­வது, இனம், மதம், நிறம் வர்க்கம், மொழி என சம அந்­தஸ்து பெற்று சுதந்­திர தன்­மை­யுடன் சகல இனங்­களும் ஒரு­மித்த கருத்­து­டனும் புரிந்­து­ணர்­வு­டனும் நல்­லெண்ணம் கொண்டு வாழ்­கின்­றனவோ அங்கே மனித உரிமை மீறல் என்ற பேச்­சுக்கே இட­மில்லை என்­ப­துடன் ஒரு சுரண்­ட­லற்ற ஜன­நா­ய­கத்­தையும் அங்கு காணலாம்.

என்­றாலும் சொந்த நாட்டில் அச்­சத்­துடன் வாழும் துர்ப்­பாக்­கிய நிலைதான் பெரும்­பா­லான நாடு­களில் ஏற­பட்­டுள்­ளது. வன்­மு­றையும் ஆயுதக் கலா­சா­ரமும் தலை­வி­ரித்­தா­டு­கின்­றன. ஆட்­க­டத்தல், கொலை, பாலியல் துஷ்­பி­ர­யோகம், சித்­தி­ர­வதை என சீர­ழிந்த மோச­மான சூழ்­நி­லைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளது. பல­வீ­ன­மா­ன­வர்­களைப் பலம் பொருந்­தி­ய­வர்கள் அடித்து, துன்­பு­றுத்தி ஆக்­கி­ர­மிப்புச் செய்­வது இன்று சர்வ சாதா­ர­ண­மாகி விட்­டது.

அடிமைக் கண்­கொண்டு ஒரு சமூ­கத்தை இன்­னொரு சமூகம் நோக்கும் போது அக­திகள் பெருக்கம் நாளுக்கு நாள் பெருக்­கெ­டுத்த வண்­ணம்தான் இருக்கும். இதுதான் வர­லாற்று ஏடு­களின் சான்­றுகள்.

ஓரினம் இன்­னொரு இனத்­தையும் ஒரு நாடு இன்­னொரு நாட்­டி­னையும் அடக்­கி­யாள நினைக்கக் கூடாது. பெரும்­பான்மை இனம் சிறு­பான்மை இனத்தின் உரி­மை­களைப் பிடுங்கி நசுக்க நினைப்­பதும் ஆதிக்க வெறி கொண்ட பலம்­வாய்ந்த நாடுகள் ஏனைய அண்­டைய நாடு­களில் தலை­யீடு செய்து வளங்­களைச் சூறை­யாட நினைப்­பதும் இனங்­களின் –

நாடு­களின் இறை­மையைப் பாதிப்­ப­டையச் செய்து விடும்.

ஒரு நாட்­டி­னது, மனி­த­னி­னது உரி­மைகள் பறிக்­கப்­பட்டு அடக்கி ஒடுக்கி கொடு­மைக்­குள்­ளாக்­கப்­படும் போதுதான் புரட்­சியும் கிளர்ச்­சியும் வெடிக்­கின்­றன.

அதே­வேளை, அழி­வு­களும் அக­தி­களின் எண்­ணிக்­கையும் அதி­க­ரிக்­கின்­றன.

இனம், மதம், தேச­வழி, அர­சியல் மற்றும் சமு­தாயக் குழுக்­களால் விரட்­டப்­பட்­ட­வர்கள் சில­வேளை உள்­நாட்­டி­லேயே இடம்­பெ­யர்ந்து வாழவும் உரிமை மறுக்­கப்­ப­டு­கி­றது. மனித உயிர் என்றால் என்ன? என்று கேட்கும் அள­வுக்கு உலகம் சென்று கொண்­டி­ருக்­கி­றது.

பல்­வேறு இனத்­த­வர்கள் கூடி வாழும் ஒரு நாட்டில் ஏதோ ஒரு குழு­வுக்கு ஆதிக்க வெறி ஏற்­பட்டு விட்­டாலும் விளை­வுகள் பயங்­க­ர­மா­ன­தாக இருப்­ப­தோடு மனித நேயம், மனித உரிமை என்ற பேச்­சுக்கே இட­மில்­லாமல் போகி­றது. சில நாடுகள் சில இனங்­களை அழித்து அவற்றின் வர­லாற்­றையும் ஏடு­க­ளி­லி­ருந்து அகற்ற முயற்­சிக்­கின்­றன என்­பதும் கண்­கூடு.

ஒரு சமூ­கத்­த­வரின் சமயம், கலா­சாரம் மற்றும் அடிப்­படை விட­யங்­களைச் சீண்டும் போதும் அடக்­கு­மு­றை­களைக் கொண்டும் நிர்ப்­பந்­திக்கும் போது அந்த சமூகத் ­த­வரின் அனைத்து வித­மான மொத்த உரி­மை­களும் கேள்­விக்­கு­றி­யாக்­கப்­ப­டு­கின்­றன. அந்தச் சமூ­கத்­துக்­கு­ரிய பாது­காப்பு, சட்டம், நீதி என்று அனைத்து அடிப்­படை உரி­மை­க­ளிலும் சிராய்வு, தளம்­பல்கள் ஏற்­ப­டு­கின்­றன.

மனித உரிமை என்­பது வாயால் மெல்­லப்­படும் விட­ய­மல்ல..ஆனால் துப்­பப்­படும் விட­யமும் இது­வா­கவே உள்­ளது.

ஆகையால் ஒரு நாட்டில் எல்லா இன மக்­களும் சுதந்­தி­ரத்­து­டனும் நம்­பிக்­கை­யு­டனும் நிம்­ம­தி­யா­கவும் அனைத்து உரி­மை­களும் பெற்று வாழ அந்­நாட்டு அர­சுதான் ஒரு பக்­கச்­சார்­பற்ற அர­சாக வழி­காட்­டி­யாக இருக்க வேண்டும். ஓர் இனத்­துக்­கான அர­சாகச் செயற்­பட்டால் அல்­லது ஒரு சமூ­கத்தைச் சூறை­யாட நினைத்தால் அந்­நாட்டின் நிலை­யான அபி­வி­ருத்­தி­யையும் சரி­யான வழி­காட்­ட­லையும் எதிர்­பார்க்க முடி­யாது.

வன்­மு­றையைப் பின்­பற்றி போதித்து தூப­மிடும் நாட்டில் நெருப்பும் புகை­யும்தான் கைகோர்த்து நிற்கும். ஆகவே, எந்­த­வொரு அரசும் தீவி­ர­வாதப் போக்­கு­க­ளுக்கு இட­ம­ளிப்­ப­தென்­பது பாரிய மனித உரிமை மீற­லாகும். அதே­நேரம், ஒரு நாடு இன்­னொரு நாட்­டினைச் சுரண்ட நினைத்து உள்­நாட்டுக் குழப்பம், புரட்­சி­யென ஏற்­ப­டுத்தி மனித உரிமை மீறல்­க­ளுக்கு வழி­ய­மைத்து விட்டு மனித உரிமை பற்றி நீலிக்கண்ணீர் வடித்து குளிர்காயவும் நினைக்கக் கூடாது.

ஒரு நாட்டிலுள்ள சமூகமோ குழுவோ புரட்சி, கிளர்ச்சி என்ற தோற்றம் பெறும் அதேவேளை, மக்கள் உயிர், அழிவுகள் என்பது அதனை விட மிகப் பயங்கரமானது என்பதனை மறந்து விடக்கூடாது.

மனித உரிமை என்பது தோளில் சுமக்கப்படும் துயரல்ல.. சுவாசிக்கும் சுதநதிரக் காற்றாக இருக்க வேண்டும். ஆகையால் மனித உரிமைகள் என்ற இத்தினத்தின் நோக்கமானது, ஒரு நாட்டில் வாழும் எந்த ஒரு சமூகம் என்றாலும் அதன் உரிமையை எந்த ஒரு சந்தர்ப்பத்திலேனும் இழக்காமல் முழுமையான சுதந்திரத்துடன் மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்பதாகும். அதனையே இத்தினத்தின் கருப்பொருளாகக் கொள்வோம்.

 பாத்­திமா நளீரா
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல