ஞாயிறு, 15 டிசம்பர், 2013

கோத்­தா­ப­யவின் அடுத்த இலக்கு

போர் முடி­வுக்கு வந்தபின்­னரும், வடக்கில் இரா­ணுவத் தலை­யீட்டை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­னாலும், வடக்கு மாகாண சபை­யி­னாலும் தொடர்ச்­சி­யாக முன்­வைக்­கப்­பட்டு வந்­துள்­ளது.



ஆனாலும், வடக்கில் இரா­ணுவத் தலை­யீடு என்­ப­தற்கும் அப்பால், இரா­ணு­வத்தை நிரந்­த­ர­மாக நிலை­கொள்ள வைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களே தீவி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

பொது­மக்­களின் இயல்பு வாழ்வில் படை­யி­னரின் தலை­யீடு என்­பது வேறு.

நிரந்­த­ர­மா­கவே, இரா­ணு­வத்தை நிலை கொள்ள வைப்­பது என்­பது வேறு.

போர் நடந்த காலங்­களில் இருந்­ததை விடவும், தற்­போது, இயல்பு வாழ்வில் இரா­ணுவத் தலை­யீ­டுகள் ஒப்­பீட்­ட­ளவில் குறை­வ­டைந்­துள்­ளன என்­பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஆனால், அது முற்­றி­லு­மாக நீங்கி விட்­ட­தாகக் கருத முடி­யாது.

அதே­வேளை, இரா­ணுவ மயப்­படுத்­தப்­பட்ட சூழ­லுக்குள் வடக்கைத் தொடர்ந்தும் வைத்­தி­ருப்­ப­தற்­கான செயற்­றிட்­டங்கள், தீவி­ர­மாக மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

தன்­னி­ட­முள்ள மிகப் பெரிய படை­வ­ளத்தைக் காரணம் காட்­டியும் - அதை நிலை நிறுத்­து­வ­தற்கு இடம் தேவைப்­ப­டு­கி­றது என்­பதைக் காரணம் காட்­டியும், அர­சாங்கம் வடக்கில் தாரா­ள­மா­கவே இரா­ணுவ வல­யங்­களை உரு­வாக்கி வரு­கி­றது.

வடக்­கி­லுள்ள படை­யி­னரை அகற்றக் கோரு­வது போன்று எல்லா மாகா­ணங்­களும் படை­யி­னரை அகற்­றும்­படி கோரினால், அவர்­களை எங்கே கொண்டு போய் நிறுத்த முடியும்? என்று சில மாதங்­க­ளுக்கு முன்னர் கேள்வி எழுப்­பி­யி­ருந்தார் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ.

இந்தக் கேள்­விக்குப் பதி­ல­ளிக்கும் வகையில், வடக்கு மாகாண முதல்வர் விக்­னேஸ்­வரன், அண்­மைக்­கா­லங்­களில் சில யோச­னை­களை முன்­வைத்­தி­ருந்தார்.

ஐ.நா. அமை­திப்­ப­டையில் படை­யி­னரை அதி­க­ளவில் இணைத்துக் கொள்­வது என்­பது அதில் ஒன்று.

படிப்­ப­டி­யாகப் படை­யி­னரின் எண்­ணிக்­கையை குறைத்து, அவர்­களை சிவில் வாழ்­வுக்கு கொண்டு வருதல் என்­பது இரண்­டா­வது.

ஐ.நா. அமைதிப் படையில் அதி­க­ளவு படை­யி­னரை இணைத்துக் கொள்­வதில் இலங்கை அர­சாங்கம் ஆர்வம் கொண்­டி­ருந்­தாலும், அதற்கு ஒரே காரணம், வரு­மா­னத்தைத் தேடிக் கொள்­வதே தவிர, படைத் தலை­யீ­டுகள் தொடர்­பான பிரச்­சி­னையைத் தீர்ப்­ப­தற்­காக அல்ல.

அடுத்து படைக்­கு­றைப்பு என்­பதை அர­சாங்கம், படை­யி­ன­ருக்கு செய்யும் ஒரு பெரிய துரோகம் போலவே பிர­சாரம் செய்­கி­றது.

போரில் வெற்றி பெற்றுத் தந்த படை­யி­ன­ருக்கு செய்­யப்­படும் துரோ­க­மாகக் காட்டி தனது செயலை நியா­யப்­ப­டுத்த முனை­கி­றது அர­சாங்கம்.

போருக்குப் பிந்­திய அமைதிச் சூழலில் படைக்­கு­றைப்பு என்­பது எல்லா நாடு­க­ளிலும் உள்ள வழக்­கம்தான்.

ஆனால், இலங்கை மட்டும் அதற்கு விதி­வி­லக்­காக இருந்து கொள்ள முனை­கி­றது.

காரணம் என்­ன­வென்றால், வடக்கு, கிழக்கை இரா­ணுவச் சூழலில் வைத்­தி­ருப்­பதன் மூலமே, நெடுங்­கா­லத்­துக்கு இறுக்­க­மான கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருக்க முடியும் என்ற கணிப்­புத்தான்.

இதற்­காக அண்­மைக்­கா­ல­மாக, வடக்கில் இரா­ணுவ 'கன்­டோன்மென்ட்'கள் உரு­வாக்­கப்­ப­டு­வதும், புதிய சிங்­களக் குடி­யேற்றக் கிரா­மங்கள் உரு­வாக்­கப்­ப­டு­வதும் அதி­க­ரித்­துள்­ளன.

இரா­ணுவக் குடி­யி­ருப்­பு­களின் மூலம், நிலங்­களை அப­க­ரிக்கும், தந்­தி­ரோ­பா­யத்தை வெற்­றி­க­ர­மாக அறி­மு­கப்­ப­டுத்­திய நாடு இஸ்ரேல்.

பாலஸ்­தீன நிலப்­ப­கு­தி­க­ளிலும், அதை அண்­டிய பகு­தி­க­ளிலும், இஸ்ரேல் அமைத்த இரா­ணுவக் குடி­யி­ருப்­புகள், இன்­றைக்கும் சர்ச்­சைக்­கு­ரிய விட­ய­மா­கவே இருந்து வரு­கி­றது.

இதே பாணி­யி­லான - இஸ்­ரேலின் ஆலோ­ச­னையின் பேரி­லான இரா­ணுவக் குடி­யி­ருப்­புகள், வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களை நிரந்­த­ர­மாகப் பிரிப்­பதற்­காக இலங்கை அர­சாங்­கத்­தி­னாலும் உரு­வாக்­கப்­பட்­டன.

படை­யினர் மற்றும் ஊர்­கா­வற்­படை­யி­னரின் குடும்­பங்­களை முல்­லைத்­தீவு, திரு­கோ­ண­மலை மாவட்ட எல்­லை­களில் குடி­ய­மர்த்­தி­யதன் மூலம், ஜே.ஆர்.ஜய­வர்­தன வெலி­ஓயாவில் இந்தத் திட்­டத்தை ஆரம்­பித்து வைத்தார்.

ஆனால், அதை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு, விடு­தலைப் புலி­களின் நீண்­ட­காலப் போர் இட­மளித்­தி­ருக்­க­வில்லை.

இல்­லா­விட்டால், இன்று வெலி­ஓயா மட்­டு­மன்றி, முல்­லைத்­தீவின் தெற்குப் பகுதி, வவு­னி­யாவின் கிழக்குப் பகுதி என்­பன முழு­வதும் சிங்­களக் குடி­யேற்­றங்­களால் விழுங்­கப்­பட்­டி­ருக்கும்.

போர் முடி­வுக்கு வந்த பின்னர், வெலி­ஓ­யா­விலும், மன்­னா­ரிலும் புதிய சிங்­களக் குடி­யேற்­றங்­களை உரு­வாக்கும் முயற்­சிகள் தீவி­ர­ம­டைந்­துள்­ளன.

இவை தானாக இடம்­பெறும் குடி­யேற்­றங்­க­ளல்ல. இவற்றை இரா­ணு­வமே ஊக்­கு­விக்­கி­றது; ஒழுங்­க­மைக்­கி­றது.

குறிப்­பாக வன்னிப் படைத் தலை­மை­யகம் இதில் முக்­கிய கவனம் செலுத்தி வரு­கி­றது.

இதற்­காக வெலி­ஓ­யாவில் புதி­தாக நாமல்­கம உள்­ளிட்ட பல புதிய கிரா­மங்கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன.

சிங்­களக் குடி­யேற்­றங்­களை ஒழுங்­க­மைத்து, அவற்­றுக்­கான வச­தி­களை ஏற்­ப­டுத்திக் கொடுப்­ப­தற்­காக வெலி­ஓயாவில் ஒரு தனி­யான இரா­ணுவ டிவி­ஷ­னையே இரா­ணுவம் நிலை நிறுத்­தி­யுள்­ளது.

தற்­போது அங்கு 62ஆவது டிவிஷன் நிலை கொண்­டுள்­ளது.

நாலாம்­கட்ட ஈழப்போர் காலத்தில் கூட வெலி­ஓ­யாவில் ஒரு 'பிரிகேட்' தான் நிரந்­த­ர­மாக நிலை கொண்­டி­ருந்­தது.

ஆனால், இன்று அங்கு டிவிஷன் படை­யினர் நிறுத்­தப்­பட்டு அதை ஒரு இரா­ணுவக் குடி­யேற்ற வல­ய­மாக உரு­வாக்கி வரு­கி­றது அர­சாங்கம்.

அங்கு சிங்­கள மக்கள் மட்டும் குடி­யேற்­றப்­ப­ட­வில்லை.

இரா­ணு­வத்­தி­ன­ருக்கு காணிகள் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்டு, வீடுகள் அமைத்துக் கொடுக்­கப்­பட்டு அவர்­களின் குடும்­பங்கள் குடி­ய­மர்த்­தப்­ப­டு­கின்­றன.

இன்னும் சிறிது காலத்தில் வெலி­ஓயா மிகப் பெரி­ய­தொரு இரா­ணுவக் குடி­யேற்ற வல­ய­மாக மாறி­விடும்.

இது­போன்று மன்­னா­ரிலும், பல இடங்­களில் குடி­யேற்­றங்கள் நிகழ்­கின்­றன.

வடக்கில் உயர் பாது­காப்பு வல­யங்கள் என்ற பெயரில் படைத்­த­ளங்­க­ளாக வைக்­கப்­பட்­டுள்ள பகு­தி­க­ளிலும் கூட படிப்­ப­டி­யா­கவும், கொஞ்சம் கொஞ்­ச­மா­கவும், இத்­த­கைய குடி­யேற்­றங்கள் உரு­வாகும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.

இந்­த­ நி­லையில், 2020ஆம் ஆண்டில் வடக்கில் இரா­ணுவம் எவ்­வாறு செயற்­பட வேண்டும் என்ற கருத்­த­ரங்கு கடந்த­வாரம் 62வது டிவிஷன் அதி­கா­ரி­க­ளுக்­காக நடத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.

அதில், 2020ஆம் ஆண்டில் இலங்­கையின் அர­சியல், இரா­ஜ­தந்­திரம், பொரு­ளா­தாரம் குறித்தும், வடக்கின் அர­சியல் வளர்ச்­சியின் அடிப்­ப­டையில் இரா­ணுவப் படை­களின் வடி­வ­மைப்­பது குறித்து விரி­வாக ஆலோ­ச­னைகள் வழங்­கப்­பட்­டுள்­ளன.

வெலி­ஓ­யாவில் நிலை­கொண்­டுள்ள 62ஆவது டிவிஷன் படை அதி­கா­ரி­க­ளுக்கு நடத்­தப்­பட்ட கருத்­த­ரங்கு, எத்­த­கைய நோக்­கத்தைக் கொண்­டி­ருக்கும் என்­பதை, ஊகிக்க அதிக நேரம் தேவைப்­ப­டாது.

இதற்­கி­டையே, தற்­போது பலா­லியை ஒரு 'கன்­டோண்மென்ட்' என்று அர­சாங்கம் அழைக்கத் தொடங்­கி­யுள்­ளது.

பொது­வாக 'கன்­டோண்மென்ட்' என்­பது இரா­ணுவக் குடி­யி­ருப்பு வளாகப் பகு­தியை தான்.

இத்­த­கைய படை விரி­வாக்­கங்­களும், குடி­யேற்­றங்­களும் வடக்கில் படை­செறிவை நிலை­யாகப் பேணிக் கொள்­வ­தற்கும், இனப்­ப­ரம்­பலை மாற்­றி­ய­மைப்­ப­தற்கும் வெகு­வாகக் கைகொ­டுக்கும்.

இத்­த­கைய பேரா­பத்தை உணர்ந்தே, படைத் தலை­யீ­டு­களை நிறுத்தி, படை­களை விலக்க வேண்டும் என்ற கோரிக்கை வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கி­றது.

ஆனால், அர­சாங்கம் அதற்­கெல்லாம் செவி சாய்க்­கின்ற நிலையில் இல்லை.

குறிப்­பாக பாது­காப்புச் செயலர் கோத்­தா­பய ராஜபக் ஷ இந்த விட­யத்தில் மிகவும் உறு­தி­யான, கடும்­போக்கை கடைப்­பி­டிப்­ப­வ­ராக இருந்து வரு­கிறார்.

இதனால் தான், அண்­மையில் யாழ்ப்­பா­ணத்­திற்கு வந்­தி­ருந்த ஐ.நாவின் சிறப்பு பிர­தி­நிதி சலோக்கா பெயா­னி­யிடம் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன், இன்னும் 100 ஆண்­டுகள் சென்­றாலும் படையினர் வடக்கில் இருந்து விலகிச் செல்லமாட்டார்கள் போலுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

இதே சூழல் தொடருமானால், 100 ஆண்டுகளல்ல, அதற்கு அப்பாலும், வடக்கில் இராணுவப் பிரசன்னமும், இராணுவக் குடியேற்றங்களும் பல்கிப் பெருகுமே தவிர குறைந்து போகாது.

ஏனென்றால், இது ஒன்றும் தமிழர்கள் மீளவும் ஆயுதமேந்தி விடுவார்கள் என்ற பயத்தினால் ஏற்படுத்தப்படும் முன்னேற்பாடான பாதுகாப்புக் கவச மல்ல.

வடக்கின் இனப்பரம்பலையே மாற்றியமைப்பதற்கான மூலோபாயம்.

வடக்கு உள்ளிட்ட எந்த மாகாணத் தையும், எந்த இனமும் சொந்தம் கொண்டாடக் கூடாது என்பதே பாது காப்புச் செயலர் கோத்தாபய ராஜபக் ஷவின் சித்தாந்தம்.

இப்போதுள்ளது போன்ற இராணுவத் தலையீடுகளும், இராணுவக் குடியேற்றங்களும் தொடர்ந்து மேற் கொள்ளப்படுமேயானால், அந்த இலக்கை அவரால் மிக விரைவாகவே அடைந்துவிட முடியும்.


- சுபத்ரா
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல