அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், இந்த வைரஸை, யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த வைரஸ் மூலம், பிட் காய்ன் வழி பணம் கொள்ளை அடிப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அகப்படுவர்களின் தன்மைக்கு ஏற்ப, 100 டாலர் முதல் பல ஆயிரம் டாலர் வரை பணம் கேட்டு மிரட்டல் வருவதாக அறியப்பட்டுள்ளது.
'Malware Must Die' என்ற வைரஸுக்கு எதிரான கம்ப்யூட்டர் பாதுகாப்பு குழுதான், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கிறிப்டூலாக்கர் வைரஸ் இலக்கு வைத்திடும், பல டொமைன்களை, இந்த அமைப்பு செயல் இழக்கச் செய்தது. இருப்பினும், கிறிப்டூ லாக்கரின் செயல்பாடு நின்றபாடில்லை.
பாதிப்புக்குள்ளான கம்ப்யூட்டர்களை ஆய்வு செய்த இந்த அமைப்பு, எப்படியும், இதனை முழுமையாக மடக்கிவிடலாம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதற்கிடையே, வீடுகளிலும், நிறுவனங்களிலும் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவோர், இந்த வைரஸிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, 'Malware Must Die' பரிந்துரைத்துள்ளது.
1. உங்கள் டேட்டா பைல்களை உடனுடக்குடன் பேக் அப் எடுத்து வைக்கவும். அப்போதுதான், உங்கள் பைல் திருடப்பட்டு, சுருக்கப்பட்டுள்ளது. விரித்துக் காண்பதற்கான கீயைப் பெற பணம் செலுத்து என இந்த வைரஸை ஏவிவிடுபவர்கள் கூற முடியாது.
2. மின் அஞ்சல்களைத் திறந்து பார்க்கையில் கவனமாக இருக்கவும். பெரும்பாலான கிறிப்டோலாக்கரின் செயல்பாடு, இமெயிலுடன் வந்த இணைப்பு பைல் வழியாகவே பரவி வந்துள்ளது.
இந்த வைரஸ் தானாக, எந்த பைலையும் உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்வதில்லை. நீங்கள் உங்களை அறியாமல் மாட்டிக் கொண்டு, இன்ஸ்டால் செய்திடும் பைல்கள் வழியேதான் இது வருகிறது.
எனவே நாம் முன்னெச்சரிக்கையுடனும், கவனத்துடனும் இருந்தால், கிறிப்டூ லாக்கரின் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம்.
மேலும் தகவல்களுக்கு கீழே தரப்பட்டுள்ள தளத்தினைக் காணவும்.
http://www.theregister.co.uk/2013/12/06/cryptolocker_takedown_fizzles/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக