புதன், 29 ஜனவரி, 2014

வினைப்பயன் எப்படி எம்மை பற்றுகின்றது ?

ஜாத­கங்­க­ளிலே அமை­கின்ற வினைப்­ப­யன்­க­ளுக்கு நாம் எப்­படி ஆளா­கின்றோம். ஜோதிட ஆரம்ப ஸ்லோகம் ஒன்று உண்டு. அதிலே ஒரு வரி­யா­னது 'பத­வீ­பூர்வ புண்­ணி­யானம் லிக்­யதே ஜன்ம பத்­தி­ரிகா' எமது முன்னோர் செய்த வினைகள் எம்மைச் சூழும். நாம் செய்யும் வினை எமது சந்­த­தியைச் சூழும். இதை நாம் முதலில் தெளி­வாகப் புரிந்­து­கொள்ள வேண்டும்.



ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் வள­மிகு பயிர்­களை நாட்டி சீராக வளர்த்துப் பாருங்கள். எல்லாப் பயிர்­களும் நிறை­வா­ன­தாக வளர்ந்து வரும் நிலையைப் பெறாது. ஒரு பகுதி நன்­றாக வரும், ஒரு பகுதி பட்­டுப்­போகும். அதை விடவும் நீங்கள் கண்ணும் கருத்­துமாய், அபூர்­வமாய் வளர்க்க பாடு­பட்­டாலும், விலங்­குகள், பூச்­சிகள், பற­வைகள் என ஏதோ ஒரு விதத்தில் சில பயிர்­க­ளுக்கு வளர முடி­யாத நிலை அமைந்­து­விடும்.

இதற்கு நாம் என்ன சொல்ல முடியும். யாரை குறை கூற முடியும். பயி­ரிட்ட மண் வளத்­தையா அல்­லது பரா­ம­ரிப்பில் ஏற்­படும் கவ­லை­யீ­னத்­தையா? எல்லா பயிர்­களும் கெட்­டுப்­போனால் மண் வளத்தை குறை கூறலாம். எல்லாப் பயிர்களும் அழிந்து போனால் பராமரிப்பை குறை கூறலாம். இரண்டும் சரியாக இருந்தும் சில பயிர்கள் அழிந்துபோக, பட்டுப்போக, பயனற்றுப்போக, யார் காரணம். இதுதான் நாம் எம்­மோடு கொண்­டு­வரும் வினை.

ஒரே நாளில் ஒரே நேரத்தில் ஒரே ஜாதகம் கொண்டு எத்­த­னையோ ஆயிரம் பேர் பிறக்­கின்­றார்கள்.

அத்­தனை பேருக்கும் ஒரே பலா­பலன் அமைந்து விடு­வ­தில்லை. ஒருவர் கோடீஸ்­வ­ர­ராக வாழ்வார். ஒருவர் நாட்டை ஆள்வார். ஒருவர் பரம ஏழை­யாக இருப்பர். ஒரு­ சிலர் பிறந்த உட­னேயே இவ்­வு­ல­கை­விட்டு உயிர்­ நீத்து இருப்பார். இப்­ப­டி­யாக பல­த­ரப்­பட்ட சூட்சுமங்கள் எங்­களின் வாழ்­விலே உண்டு. எல்­லா­வற்­றுக்கும் ஒரு காரணம் உண்டு. அவற்றை உணர்ந்து அறி­யக்­கூ­டிய பரி­பக்­குவம் நாம் பெறு­கின்ற நிலை வரு­வ­தற்குள் எமது ஆயுட்­காலம் முடிந்­து­விடும். ஏனெனில், மனி­த­னுக்கே உரிய பல­வீ­னங்­க­ளினால் நாம் சூழப் பெறு­கின்றோம்.

பிறக்­கின்ற ஒவ்­வொரு மனி­த­னுக்கும் ஒரு பல­வீனம் இருக்கும். இதை பல­வீனம் என்று சொல்­வ­தை­விட, ஆசை என்று சொல்­லலாம். மண், பொன், பெண், மது, பதவி, புகழ் என்­கின்ற வரை­ய­றைக்குள் மனிதன் அகப்­பட்­டுக்­கொள்­வதன் மூலம் இந்த விட­யங்­களில் பற்று அதி­க­மாகி, மிரு­கக்­குணம் கொண்­டோராய் மாறி விடு­கின்­றனர்.

எதில் அதிக பற்று வைக்­கின்­றோமோ அதுவே எமக்கு அதிக அசுர குணத்தை தந்து விடுகின்­றது.

ஜாதக ரீதி­யாக ஒரு­வரின் பூர்­வ­ புண்­ணிய கர்ம வினை அறிய பஞ்­ச­மஸ்­தானம் எனப்­படும் 5ஆம் பாவமும் விரய அய­னஸ்­தானம் எனப்­ப­டு­கின்ற 12ஆம் பாவம், சுகஸ்­தானம் எனும் 4ஆம் பாவம், பாக்­கி­யஸ்­தானம் எனும் 9ஆம் பாவம் என்­பன எங்­களின் வினை­களை அறியும் நிலை­களை தீர்­மா­னிக்கும் ஸ்தானங்­க­ளாக அமை­கின்­றன.

மேற்­படி பாவங்­களின் ஆதி­பத்­திய கிர­க­நி­லைகள், பாவக் கிர­கங்­க­ளா­கவும், மறைவு ஸ்தான நிலை­களில் நீசம்­பெற்று அமை­வ­ன­வா­கவும் இருக்கும் நிலையில் அல்­லது மேற்­படி பாவங்­களில் பாவக்­கி­ர­கங்­களின் சேர்க்கை அமை­யும்­போது, நமது வினை ஆரம்­ப­மாகும்.

சுகஸ்­தானம் தாயின் நிலை. பாக்­கி­யஸ்­தானம் தந்­தையின் நிலை. இவை இரண்டும் சிறப்­பாக அமைய வேண்­டி­யது மிகவும் முக்­கி­ய­மா­னது.

ஒரு­வரின் ஜாதகப் பல­னுக்கு ஏற்ப அவரின் வாழ்­வியல் வழி­காட்டல் மிகவும் முக்­கி­ய­மா­ன­தாக கரு­தப்­ப­டு­கின்­றது.

பாவங்­களும், வினை­களும், சூழ்ந்த நிலை­யிலே பிறந்­தாலும் நல்ல வழி­காட்டல் அமை­கின்­ற­போது, அதனூடா­கவே ஓர­ளவு அனு­கூ­லங்­களை பெறக்­கூ­டி­யதாய் இருக்கும்.

நல்ல சூழலில் எமது வாழ்­வியல் அமையும் போது அந்த நல்ல விட­யங்­களை எமது வினைப்­பயன் கார­ண­மாக எமது மனம் ஏற்க மறுத்து நின்­றாலும், பார்ப்­பதும், கேட்­பதும், நல்­ல­வை­யாக இருக்­கும்­போது பூவோடு சேர்ந்த நாரும் கமழும் எனும் நிலை அங்கே மலரும்.

எனவே நாம் செய்யும் பாவங்கள் எம் சந்­த­தியைச் சூழும். எமது பிள்­ளை­க­ளுக்கு சொத்­துகள், சுகங்கள் சேர்த்­து­வைக்க வேண்டும் என்­கின்ற பிர­யத்­தனம், பிர­யாசம், எல்­லோ­ருக்கும் உண்டு. அதை நல்ல வழி­யிலே சேக­ரித்து உங்கள் பிள்­ளை­க­ளுக்கு புண்ணியம், தர்மம் இவற்றைச் சேர்த்து வையுங்கள்.

வாழ்வில் நமக்கு நல்ல சிந்­தனை, நல்ல புத்தி வந்து சேர்­வ­தற்கு ஜோதிட ரீதி­யாக சில உபா­யங்கள் உண்டு. பொது­வாக சில லக்­கினம், ராசி உடை­ய­வர்கள் அதி­க­மான பிரச்­சினைகளை சந்­திக்­கின்ற சூழலில் தவ­றுகள் பலவும் செய்ய வேண்­டிய நிர்ப்­பந்­தங்­க­ளுக்கு ஆளாகி விடுகின்­றனர்.

இதற்கு அவர்­க­ளுக்கு அமை­கின்ற கிரக நிலையே கார­ண­மா­கின்­றது. அவற்றை நிவர்த்தி செய்ய முதலில் செய்யும் தவ­றுக்கு ஈடாக நன்­மைகள் செய்து விடுங்கள்.

நல்­ல­வர்கள் இருக்கும் இடத்­திலே நன்­மைகள் நிறைந்து பொழிந்து விளங்கும். அவரை சார்ந்­த­வர்­களும் நல்ல எண்ணம் பெறு­வார்கள். இதையே தர்மம் என்­கின்றோம். இந்த தர்மம் நிலைக்க வேண்டும் என்­கின்ற ஒரே கார­ணத்­திற்­காக மகா­பா­ர­தத்­திலே கிருஷ்­ண­ப­ர­மாத்மா எத்­தனை வித­மான இராஜ தந்­தி­ரங்­களை கையாண்டார்.

ஜோதிட ரீதி­யாக வாக்­குஸ்­தானம் எனப்­படும் இரண்டாம் இடம், மனம், வாக்கு, குடும்பம் போன்ற நிலை­க­ளுக்கு கார­ணி­யா­கின்­றது.

எனவே, இந்த நிலை­யிலே எமது வினைப்­பயன் எம்­மோடு ஒட்­டிக்­கொள்ளும் நிலை உண்டு. ஆகவே ஜோதிட ரீதி­யாக 2ஆம், 4ஆம், 5ஆம், 9ஆம், 12ஆம் பாவ நிலை­களும், அது சார்ந்த கிரக சாரங்­களும் ஆதி­பத்­திய கிர­கங்­களும் மிகவும் முக்­கி­ய­மாக கவ­னிக்­கப்­பட வேண்­டி­யவை.

இவற்­றி­னிலே அமை­கின்ற கிர­கங்­களின் தன்­மை­யா­னது எம்மை பாவச் செயல்­க­ளுக்கு ஊக்­கு­விக்­கின்ற தன்­மை­களைக் கொடுக்கும்.

மேற்­படி பாவங்­களில், சனீஸ்­வரன், ராகு, கேது, சுக்­கிரன் போன்ற கிர­கங்­களின் தன்மை நமது வினைப்­ப­யன்­களை விருத்தி பெற வைக்­கின்­றன.

எப்­போதும் எமது தேவைக்கு ஏற்ப நாம் வாழ பழ­கிக்­கொள்ள வேண்டும். அள­விற்கு மிகு­தி­யானால் அமிர்­தமும் நஞ்­சாகும் என்­பது எமது முன்னோர் அனு­ப­வித்துக் கூறிய முது­மொ­ழி­யாகும். எதற்கும் நாம் ஒரு 'வரை­யறை' வைத்து வாழப் பழ­கிக்­கொள்ள வேண்டும்.

இந்தக் கட்­டுப்­பாடு நமக்கு எல்லா நிலை­க­ளிலும் நம்மை பாது­காத்துக் கொள்­கின்­றது. ஒரு கிரகம் சுபக்­கி­ர­க­மாக இருந்­தாலும் அந்தக் கிர­கத்­தோடு சேரும் பாவக் கிர­கங்கள் இந்த சுபக்­கி­ர­கத்தின் நற்­ப­லன்­க­ளையும் தடை செய்யும்.

சூரியன் 6, 8, 12 எனும் மறை­வுஸ்­தானம் அமைந்தால் வினைப்­பயன் அதிகம் சேரும். சந்­திரன் இடபம், மிதுனம், கடகம், விருட்­சிகம், மகரம் ராசியில் அமை­வ­தனால் வினைப்­பயன் தொடரும். செவ்வாய் 6, 8, 12 எனும் நிலை­யிலும் சூரி­ய­னோடு சேர்க்­கையும், நீச நிலை பெற்­றாலும் வினைப்­பயன் சேரும். புதன் பகை, நீசம் பெறும் ஸ்தானம் மத்­திமம்.

வினைப்­ப­ல­னுக்கு வித்­திடும் குரு­ப­கவான் ஜாதக நிலை­யிலே பகை, நீசம், அஸ்­தங்­கதம் பெற்று அமைந்தால் தொடரும் வினைப்­பயன். சுக்­கிரன் கிரக நிலை­யிலே தனித்து பகை, நீசம் பெற்று அமைந்தால் மேற்­படி வினைப்­பயன் சேரும் நிலை அமையும். அடுத்து சனீஸ்­வரன் இவர் ஜாதக நிலையில் பகை, நீச்சம் பெற்­றாலும் சந்­தி­ர­னுக்கு 1ஆம், 2ஆம், 4ஆம், 7ஆம், 8ஆம், 12ஆம் இடங்­களில் அமைந்தால் வினைப்­பயன் பற்­றிடும்.

அடுத்து சர்ப்­ப­கி­ர­கங்­க­ளான ராகு, கேது ஜாதகத்தில் ராகுவுடன் சூரியன், குரு சேர்க்கையும் 1ஆம், 4ஆம், 7ஆம், 10ஆம் இடம் வினைப்பயனை வேண்டித்தரும்.

அடுத்து கேது இவர் ஜாதக அமைப்பில் விரயஸ்தானம் அமைந்தால் அதுவே அந்த ஜாதகர் கடைசிப்பிறவி மறுபிறப்பின்றி மோட்சம் பெறுவார் என்பது கேது நல்ல அமைப்பாக அமைந்தால் இதுவே பாவக்கிரக சேர்க்கை பெற்றால் வினைப்பயன் பற்றி விடும்.

எனவே முடிந்தளவிற்கு நாம் நல்வினை செய்தால் எம் சந்ததிக்கு நன்மை அமைவதுடன் எமது பாவ வினைகளும் குன்றிவிடும். நன்றே செய்க இன்றே செய்க!

துன்னையூர் கலாநிதி
ராம். தேவலோகேஸ்வரக்
குருக்கள்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல