புதன், 29 ஜனவரி, 2014

காந்தி நேர்மை தவறியிருப்பின் பாகிஸ்தான் உதயமாகியிருக்காது !!

மகாத்மா காந்தி 1948 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 30 ஆம் திகதி பிரார்த்­த­னைக்குச் செல்லும் வழியில் இந்து மத வெறியன் ஒரு­வனால் கண்முன் நேரே சுடப்­பட்டு “ஹே ராம்” என்று முணங்­கிய வண்ணம் இறை­யடி சேர்ந்து 66 வரு­டங்­க­ளா­கி­விட்­டன.



மகாத்மா காந்தி 1869 ஆம் ஆண்டு ஒக்­டோபர் இரண்டாம் திகதி இந்­தி­யாவின் குஜ ராத் மாநி­லத்தில் “போர்­பந்தர்” என்ற நகரில் கரம்சாந்த் காந்தி, புத்­தி­லிபாய் தம்­ப­தி­யி­ன­ருக்கு மக­னாகப் பிறந்தார்.

காந்தி தனது ஏழு வயதில் பள்­ளிப்­ப­டிப் பில் ஒரு சுமா­ரான மாண­வ­னா­கவே காணப்­பட்டார். காந்தி தனது 13ஆம் வயதில் தம் வயதை ஒத்த கஸ்­தூ­ரி­பாயை மணந்தார். பிற் ­கா­லத்தில் அவர்கள் நான்கு ஆண் மகன்­ களைப் பெற்­றெ­டுத்­தனர். ஹரிலால் (1888), மணிலால் (1892), ராம்தாஸ் (1897), தேவ் தாஸ் (1900). தனது 16ஆவது வயதில் காந்தி தன் தந்­தையை இழந்தார். தனது 18ஆம் வயதில் பள்­ளிப்­ப­டிப்பு முடிந்த பிறகு பரிஸ்டர் (Barrister) எனப்­படும் வழக்­க­றிஞர் படிப்­பிற்­காக காந்தி இங்­கி­லாந்து சென்றார். தன் படிப்பை வெற்­றி­க­ர­மாக முடித்து தாயகம் திரும்­பிய காந்தி பம்­பாயில் சிறிது காலம் வழக்­க­றி­ஞ­ராக பணி­யாற்­றினார். இது வெற்­றி­க­ர­மாக அமை­யா­ததால் தன் அண்ணன் இருப்­பி­ட­மான ராஜ்­கோட்­டிற்கு சென்ற காந்தி, அங்­கே­யுள்ள நீதி­மன்­றத்தில் வழக்­காட வரு­ப­வர்­களின் படி­வங்­களை நிரப்பும் எளிய பணியில் ஈடு­பட்டார். ஆனால் அங்­கி­ருந்த ஆங்­கி­லேய அதி­கா­ரி­யிடம் ஏற்­பட்ட சிறிய தக­ராறால் இவ்­வே­லையும் பறி­போ­னது. இச்­ச­ம­யத்தில் தென்­னா­பி­ரிக்­காவில் தன் தகு­திக்­கேற்ற வேலை ஒன்று வெற்­றிடம் இருப்­ப­தாக அறிந்த காந்தி, 1893 ஏப்ரல் மாதம் அப்­துல்லாஹ் அன் கோ எனும் இந்­திய நிறு­வனம் ஒன்றின் உத­வி­யுடன் உடனே அங்கு பய­ண­மானார்.

அச்­ச­மயம் தென்­னா­பி­ரிக்­காவில் ஆங்­கி­ லேயர் ஆட்­சியில் நிற­வெ­றியும் இனப்­பா­கு­பாடும் மிகுந்து இருந்­தது. அது­வரை அர­சியல் ஈடு­பா­டில்­லாது தன்­னையும் தன் குடும்­பத்­தையும் மட்­டுமே கவ­னித்து வந்த இளை­ஞ­ரா­யி­ருந்தார் காந்தி. தென்­னா­பி­ரிக்­காவில் அவ­ருக்­கேற்­பட்ட அனு­ப­வங்கள், எதிர்­கா­லத்தில் அவரை ஒரு மாபெரும் அர­சியல் சக்­தி­யாக உரு­வாக்க உத­வி­யது.

அங்­குள்ள நேடல் மாகா­ணத்தின் டர்பன் நகரில் உள்ள நீதி­மன்­றத்தில் ஒருநாள் இந்­திய வழக்­கப்­படி தலைப்­பாகை அணிந்து வழக்­கா­டச்­சென்ற காந்­தி­யிடம் அத்­த­லைப்­பா­கையை விலக்­கு­மாறு நீதி­மன்­றத்தின் நீதி­பதி உத்­த­ர­விட்டார். காந்­தியோ இவ்­வுத்­த­ரவை எதிர்க்கும் பொருட்டு நீதி ­மன்­றத்தை விட்டு உடனே வெளி­யே­றினார்.

பிறகு ஒரு நாள் பிரிட்­டோ­ரியா செல்­வ­தற்­காக தகுந்த பய­ணச்­சீட்­டுடன் புகை­யி­ரத முதல் வகுப்புப் பெட்­டியில் பயணம் செய்த காந்தி, அவர் ஒரு வெள்­ளையர் இல்லை என்ற கார­ணத்­திற்­காக, ஆங்­கி­லேய அதி­காரி ஒரு­வரால் புகை­யி­ரத நிலை­ யத்தில் பெட்­டி­யி­லி­ருந்து தூக்கி எறி­யப்­பட்டார். வெள்­ளையர் அல்­லாத ஒரே கார­ணத்தால் இது போன்று பல இன்­னல்­களை காந்தி அனு­ப­வித்தார். இதன் மூலம் தென்­னா­பி­ரிக்­காவின் கறுப்­பின மக்­களும் அங்கே குடி­யே­றிய இந்­தி­யர்­களும் படும் இன்­னல்­களை காந்தி நன்­கு­ணர்ந்தார்.

தனது ஒப்­பந்­தக்­காலம் முடி­வ­டைந்து இந்­தியா திரும்ப காந்தி தயா­ரா­ன­போது, அங்­குள்ள இந்­தி­யரின் வாக்­கு­ரி­மையைப் பறிக்கும் தீர்­மா­னத்தை நேடல் சட்­டப்­பே­ரவை இயற்ற இருப்­ப­தாக செய்­தித்­தாளில் படித்­த­றிந்தார். இதை எதிர்க்­கு­மாறு காந்தி அவ­ரது இந்­திய நண்­பர்­க­ளிடம் அறி­வு­றுத்­தினார். அவர்­களோ, தங்­க­ளிடம் இதற்குத் தேவை­யான சட்ட அறிவு இல்­லை­யெனக் கூறி, காந்­தியின் உத­வியை நாடினர்.

காந்­தியும் அவர்கள் வேண்­டு­கோ­ளுக்கு இணங்கி, தன் தாயகம் திரும்பும் முடிவை மாற்­றிக்­கொண்டு இத்­தீர்­மா­னத்தை எதிர்க் கும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டார். இதில் அவர் வெற்றி பெறா­விட்­டாலும் அங்­குள்ள இந்­தி­யர்­க­ளிடம் ஒரு விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தினார். பிறகு 1894ஆம் ஆண்டு நேடல் இந்­திய காங்­கிரஸ் என்ற பெயரில் கட்சி தொடங்கி அதற்கு அவரே பொறுப்­பா­ள­ரானார். இதன் மூலம் நேடல் மாகா­ணத்­தி­லி­ருந்த இந்­தியர் அனை­வ­ரையும் ஒன்று திரட்டி, அவர்­களை தங்கள் உரி­மைக்­காக குர­லெ­ழுப்ப ஊக்­கப்­ப­டுத்­தினார்.

1906 ஆம் ஆண்டு ஜோகார்­னஸ்பேக் நகரில் நடந்த ஒரு போராட்­டத்தில் முதன்­மு­றையாக சத்­தி­யாக்­ கி­ரகம் எனப்­படும் அற­வ­ழிப்­போ­ராட்­டத்தை பயன்­ப­டுத்­தினார். அஹிம்சை, ஒத்­து­ழை­யாமை, கொடுக்­கப்­படும் தண்­ட­னையை ஏற்றல் ஆகிய கொள்­கைகள் இவ்­வ­ற­வழிப் போராட்­டத்தின் பண்­பு­க­ளாகும். இந்த கால­கட்­டத்தில் காந்­தியும் அவ­ருடன் சேர்ந்து போரா­டி­யோரும் பல­முறை சிறை சென்­றனர். தொடக்­கத்தில் ஆங்­கில அர­சாங்கம் இவர்­களை எளி­தாக அடக்­கி­யது போல் தோன்­றி­யது. பின்னர் பொது­மக்­களும் ஆங்­கில அர­சாங்­கமும் இவர்­களின் உண்­மை­யான மற்றும் நேர்­மை­யான வாதங்­களை புரிந்­து­கொண்டு இவர்­க­ளு­டைய கோரிக்­கை­களை ஏற்கும் நிலை ஏற்­பட்­டது. இவ்­வாறு தனது அற­வழிப் போராட்­டத்தின் மூலம் தென்­னா­பி­ரிக்க வாழ் இந்­தி­யரின் சமூக நிலையை மேம்­ப­டுத்தும் முயற்­சியில் வெற்றி கண்ட காந்தி தாயகம் திரும்­பினார்.

தென்­னா­பி­ரிக்­காவில் காந்தி தலை­மை­யேற்று நடத்­திய போராட்­டங்­களைப் பற்றி இந்­திய மக்கள் அறிந்­தி­ருந்­தனர். காந்­திக்கு, கோபால கிருஷ்ண கோகலே, ரவீந்­தி­ரநாத் தாகூர் போன்­றோ­ருடன் நட்பு ஏற்­பட்­டது. காந்தி இந்­திய தேசிய காங்­கிரஸ் இயக்­கத் தில் சேர்ந்து ஆங்­கி­லே­யர்க்கு எதி­ரான விடு­தலைப் போராட்­டத்தில் முழு வீச்சில் ஈடு­பட்டார்.

1921 ஆம் ஆண்டு இந்­திய தேசிய காங்­கி ரஸ் இயக்­கத்தின் தலை­வ­ராக காந்தி தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டார். தலை­மை­யேற்­ற­வுடன் காங்­கி­ரஸில் பல மாற்­றங்­களை அறி­மு­கப்­ப­டுத்தி இயக்­கத்­திற்கு புத்­துயிர் ஊட்­டினார். அறப்­போ­ராட்ட வழி­மு­றை­க­ளையும் சுதேசி போன்ற கொள்­கை­க­ளையும் வலி­யு­றுத்தி காங்­கிரஸ் இயக்­கத்தை இந்­தி­யாவின் மாபெரும் விடு­தலை இயக்­க­மாக்­கினார்.

1930 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதத்தில் ஆங்­கி­லேய அரசு, இந்­தி­யாவில் இந்­தி­யர்­களால் தயா­ரிக்­கப்­படும் உப்­புக்கு வரி விதித்­தது. மேலும், இந்­தி­யாவில் இந்­தி­யரால் தயா­ரிக்­கப்­படும் உப்பை பிரிட்டிஷ் அர­சாங்­கத்தை தவிர வேறு யாரும் விற்கக் கூடாது என்ற சட்­டத்­தையும் இயற்­றி­யது. இதை விலக்கிக் கொள்­ளு­மாறு காந்தி பிரிட்­டி­ஷா­ரிடம் விடுத்த கோரிக்கை நிரா­க­ரிக்­கப்­பட்­டது. சத்­தி­யா­க் கி­ரக முறையில் இதை எதிர்க்க முடி­வெ­டுத்த காந்தி 1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் திகதி அன்று 78 சத்­தி­யாக்­ கி­ர­கி­க­ளுடன் அஹ­ம­தா­பாத்­தி­லி­ருந்து குஜராத் கட­லோ­ரத்தில் இருந்த தண்டி நோக்கி 240 மைல் நடைப் பய­ணத்தை துவக்­கினார்.

23 நாட்கள் நடைப் பய­ணத்­திற்குப் பிறகு, தன் சகாக்­க­ளுடன் தண்டி கடற்­கரை வந்து சேர்ந்த காந்தி, அங்­கி­ருந்த கடல் நீரை காய்ச்சி உப்பு தயா­ரித்து பிரிட்டிஷ் சட்­டத்­திற்கு எதி­ராக பகி­ரங்­க­மாக பொது­மக்­க­ளுக்கு விநி­யோ­கித்தார். மேலும், இந்­தி­யாவில் கட­லோ­ரத்தில் இருந்த அனைத்து இந்­தி­யர்­க­ளையும் இது போல் உப்பு தயா­ரித்து பயன்­ப­டுத்தச் சொன்னார். இந்­தி­யாவின் பல இடங்­களில் இது போல் நடந்­தது காந்தி உட்­பட பல்­லா­யிரக் கணக்­கான இந்­தி­யர்கள் சிறை­யி­ல­டைக்­கப்­பட்­டனர்.

வேறு வழி­யில்­லாமல் பிரிட்டிஷ் அர­சாங்கம் காந்­தி­யுடன் பேச்சு வார்த்தை நடத்தி இறு­தியில் வரியை நீக்கிக் கொண்­டது. உப்பு சத்­தி­யா­க் கி­ரகம் என்று அழைக்­கப்­படும் இந்­நி­கழ்வு இந்­திய விடு­தலைப் போராட்ட சரித்­தி­ரத்தில் ஒரு திருப்­பு­மு­னை­யாக கரு­தப்­ப­டு­கி­றது. 1942ஆம் ஆண்டு நடை­பெற்ற “வெள்­ளை­யனே வெளி­யேறு “போராட்­டத்­திலும் காந்தி பெரும் பங்கு வகித்தார். வெள்­ளை­யனே வெளி­யேறு போராட்­டத்­தின்­போது காந்தி சொன்ன வாக்­கியம் “செய் அல்­லது செத்து மடி” ஆகும்.

பாகிஸ்தான் பிரி­வி­னையின் போது இந்­துக்­களும் முஸ்­லிம்­களும் மோதிக் கொண்­டது அவ­ருக்கு மிகுந்த மன வருத்­தத்தை அளித்­தது. இந்த இரு­பெரும் சமூ­கத்­தி­னரின் நல்­லி­ணக்­கத்­திற்­காக தன் வாழ்­நாளில் பெரும் ­பா­லான நாட்­களைச் செல­வ­ழித்தார்.

1945ஆம் ஆண்டில், பாரத நாட்டை இரு துண்­டு­க­ளாக, இந்­தியா மற்றும் பாகிஸ்தான் என்ற இரு­நா­டு­க­ளாக பிரிப்­பது என்ற யோச­னையை பிரிட்­டிஷார் முன்­வைத்­தனர். அது­தொ­டர்­பான பேச்­சு­வார்த்­தை­க­ளிலும் சமா­தான முயற்­சி­க­ளிலும் அவர்கள் ஈடு­பட்­டனர்.

மதத்தின் அடிப்­ப­டையில் இந்­தி­யாவை துண்­டாட முனைந்த பிரிட்டிஷ் ஆட்­சி­யா­ளர்கள், அதற்­காக மவுன்ட்­பேட்டன் திட்டம் என்ற ஒரு திட்­டத்தை 1945ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொண்டு வந்­தனர்.

இதற்கு காந்­திஜி எதிர்ப்பு தெரி­வித்தார். இந்­நி­லையில், இந்த இரண்டு மதத்­­தி­னரும் நாட்டின் பல நக­ரங்­களில் மோதிக் கொண்­டதில் ஏரா­ள­மானோர் இறந்­தனர். இது, காந்­தி­ஜிக்கு மிகுந்த வருத்­தத்தைக் கொடுத்­தது. கல்­கத்தா மற்றும் டில்­லியில் நடந்த மதக்­க­ல­வ­ரங்­களைக் கண்­டித்தும், மக்கள் அமைதி வழிக்குத் திரும்ப வேண்டும் என வலி­யு­றுத்­தியும் கால­வ­ரை­யற்ற உண்­ணா­வி­ர­தத்தைத் தொடங்­கினார்.

பாரத நாடு இந்­தியா -– பாகிஸ்தான் என்று இரு­வேறு நாடு­க­ளாக கூறு­போ­டப்­பட்­ட­போது உரு­வான மதக் கல­வ­ரத்தை இரா­ணு­வத்­தாலோ, காவல்­து­றை­யி­ன­ராலோ அடக்க முடி­ய­வில்லை. ஆனால் மகாத்­மாவின் உண் ணா நோன்பு வாயி­லாக விடுத்த அமைதி செய்தி இரத்த வெறியில் திளைத்த மக்­களின் உணர்­வு­களை சமா­தா­னத்தை நோக்கி தட்டி எழுப்­பி­யது. கிழக்கே நவ்­கா­ளியில் நடந்த மத படு­கொ­லை­க­ளையும், மேற்கே பஞ்சாப் பகு­தியில் நடந்த மத வெறி­யாட்­டத்­தையும் முடி­வுக்கு கொண்­டு­வந்­தது.

தனது சாத்­வீக போராட்­டத்தை விடு­த­லைக்­கான ஆயு­த­மாக மட்­டுமே காந்தி பயன்­ப­டுத்தி நிறுத்திக் கொள்­ள­வில்லை. பிரி­வி­னைக்குப் பிறகு பாகிஸ்­தா­னுக்கு வழங்க வேண்­டிய 55 கோடி ரூபாவை பிர­தமர் ஜவ­ஹர்லால் நேரு தலை­மை­யி­லான அமைச்­ச­ரவை கொடுக்க மறுத்த போது, மீண்டும் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் இறங்கி அவர்­களை ஒப்­புக்­கொள்ளச் செய்தார். பிரி­வி­னையை மகாத்மா காந்தி ஒப்­புக்­கொள்­ள­வில்லை. ஆனால் பிரி­வி­னையை ஏற்றுக் கொண்­ட­வர்­களை அதற்­கு­ரிய நியா­ய­மான நடை­மு­றை­களை தனது சாத்­வீக போராட்­டத்தின் மூலம் ஏற்­றுக்­கொள்ளச் செய்தார் மகாத்மா.

விடு­தலைப் போராட்­டத்தின் இறுதிக் கட்­டத்தில், விடு­தலைப் போராட்­டத்தின் ஆரம்ப பேச்­சு­வார்த்­தையின்படி பாகிஸ் தான் தனி நாடாக வேண்டும் என்­பதில் கராச்­சியை சேர்ந்த முகம்­மது அலி ஜின்னா மிகவும் பிடி­வா­த­மாக இருந்தார்.

ஹைத­ரா­பாத்தை சேர்ந்த ஜவ­ஹர்லால் நேருவின் மிக நெருங்­கிய நண்­ப­ரான ஜாகிர் ஹூசைன் பாகிஸ்தான் பிரி­ப­டாத பார­த­மாக விளங்க வேண்­டு­மென்­பதில் பிடி­வா­த­மாக இருந்தார்.

பாகிஸ்­தானின் முகம்­மது அலி ஜின்­னாவும் இந்­தி­யாவின் ஜாகிர் ஹூசைனும் கருத்து மோதல்­களில் கடும் சொற்­போரில் ஈடு­பட்­டனர். பாகிஸ்தான் தனி நாடாக பிரி­வதை காந்தி, ஜவ­ஹர்லால் நேரு, ஜாகிர் ஹூசைன் போன்றோர் விரும்­ப­வில்லை. பாகிஸ்தான் பிரி­வி­னையை கொண்டு வந்த பிரிட்­டி­ஷா­ருக்கு பாகிஸ்­தானை பிரிப்­பதா இல்­லையா என்ற ஒரு பிரச்­சினை ஏற்­பட்­டது.

பிரிட்­டி­ஷா­ருக்கும் காந்தி, ஜவ­ஹர்லால் நேரு, முகம்­மது அலி ஜின்னா, ஜாகிர் ஹூசைன் உட்­பட்ட முக்­கி­யஸ்­தர்­க­ளுக்கும் முக்­கிய பேச்­சு­வார்த்தை நடை­பெற்­றது. பிரிட்­டி­ஷா­ரிடம் ஒவ்­வொ­ரு­வரும் தங்­க­ளது கருத்­துக்­களை கூறி­யி­ருந்த போதிலும் மகாத்மா காந்­தியின் கருத்­தையே ஏற்­றனர். பாகிஸ்தான் பிரி­ப­டு­வதை விரும்­பாத மகாத்மா காந்தி நேர்­மை­யுடன் பாகிஸ்­தானை தனி நாடாக ஆக்­கு­வ­தற்கு பிரிட்­டி­ஷா­ரிடம் ஆலோ­சனை கூறினார். மகாத்மா காந்தி ஒரு­கணம் நேர்மை தவறின் பாகிஸ்தான் எனும் நாடு உத­ய­மாகி இருக்­காது. இந்­தி­யாவின் ஒரு மிகப் பெரிய மாநி­ல­மாக இருந்­தி­ருக்கும்.

இது போன்ற பல போராட்­டங்­களின் முடி வில் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்­தியா சுதந்­திர நாடாக மலர்ந்­தது. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் நாள் பாகிஸ்தான் சுதந்­திர நாடாக மலர்ந்­தது. இந்­தி­யா­வுக்கு வெளியே முதன்­மு­தலில் 1961 ஆம் ஆண்டு ஜன­வரி 26 ஆம் திகதி காந்தி தபால்­த­லையை வெளி­யிட்ட நாடு தன் வாழ்­நாளில் மிதிக்­காத நாடான அமெ­ரிக்கா ஆகும். அவரின் 28,835 நாட்­களில் 2,338 நாட்கள் சிறையில் கழித்தார். வெளியில் இருந்த நாட்களிலும் உணவருந்திய நாட்கள் வெகு குறைவு. 28 முறை உண்ணாவிரதம் இருந்துள்ளார். குறைந்தபட்சம் ஒருநாள் தொடக்கம் 12 நாட்கள் வரை அவர் உணவு அருந்தாமல் தன்னைத்தானே வருத்தியுள் ளார்.

நெல்சன் மண்டேலா, தலாய் லாமா, மார்டின் லூதர்கிங், ஆங் சான் சூகி, அடால்ஃபோ பெரேஸ் எஸ்க்யூவெல் ஆகிய ஐந்து உலகத் தலைவர்கள் நோபல் பரிசு பெற்றதற்கு முக்கியக் காரணம், காந் திய வழியைப் பின்பற்றியதுதான் என்று ஒப்புதல் அளித்திருக்கிறார்கள். ஆனால், காந்திக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை!. காந்தியின் ஒவ்வொரு நடவடிக்கையும் இந் துக்களுக்கும், இந்தியாவிற்கும் எதிரானதாக வும், முஸ்லிம்களுக்கு ஆதரவானதாகவும் இருப்பதாகவே கருதிய இந்துமத தீவிரவாதி கள் காந்தியை சுட்டுக்கொன்றனர்.

இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்திய தன் காரணமாக மகாத்மா காந்தி "சுதந்திர இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படு கிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் வேறு சில நாட்டு விடுதலை இயக்கங்களுக் கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.

அல்ஹாஜ் எம்.எப்.எம் இக்பால்,
 யாழ்ப்பாணம்.

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல