புதன், 29 ஜனவரி, 2014

ஊரை மறந்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

இந்த சம்­பவம் அனை­வரும் அறிந்­தி­ருக்க கூடி­யது தான். இருந்­தாலும் ஒரு சிறிய பதிவு.

உலக புகழ் பெற்ற விஞ்­ஞானி அல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒரு சமயம் ரயிலில் பயணம் செய்­து­கொண்டிருந்தார்.

அப்­பொ­ழுது அவர், மன­திற்குள் ஒரு கஷ்­ட­மான கணக்­கிற்கு விடை தேடிக்­கொண்­டி­ருந்தார். அப்­போது டிக்கெட் பரி­சோ­தகர் வந்தார். வந்­தவர் ஒவ்­வொ­ரு­வ­ரி­டமும் டிக்கெட் வாங்கி சோதித்து கையெ­ழுத்து போட்டார். பிறகு அல்பர்ட் ஐன்ஸ்­டீ­னிடம் டிக்கெட் கேட்டார். அவர் தான் அணிந்­தி­ருந்த கோட்டு பைக்குள் கையை விட்டு டிக்­கெட்டைத் தேடினார். அது எவ்­வ­ளவு தேடியும் கிடைக்­க­வில்லை. டிக்கெட் பரி­சோ­தகர் அவரை உற்று பார்த்தார். அவர் அறி­வியல் மேதை ஐன்ஸ்டீன் என்­பதை அறிந்து கொண்டார்.



“பர­வா­யில்­லை…­ ஐயா, டிக்­கெட்டைத் தேட வேண்டாம்” என்று சொல்லிக் கொண்டே அடுத்த நப­ரிடம் டிக்­கெட்டை வாங்கி பரி­சோ­தித்­துக்­கொண்­டி­ருந்தார்.

தனது சூட்­கேசைத் திறந்து ஐன்ஸ்டீன் கவ­ன­மாக டிக்­கெட்டைத் தேடிக்­கொண்­டுதான் இருந்தார். அதன் உள்ளே இருந்த புத்­த­கங்­களை எல்லாம் எடுத்து வெளியே போட்டுத் தேடினார். துணி­க­ளிலும் டிக்கெட் இருக்­கி­றதா என்று ஒவ்­வொன்­றாக உதறி பார்த்தார். அப்­பொ­ழுதும் கிடைக்­க­வில்லை. அப்­போது மீண்டும் டிக்கெட் பரி­சோ­தகர் அந்த வழி­யாக வந்தார்.

“ஐயா, தாங்­களோ உலக புகழ் பெற்ற பெரும் விஞ்­ஞானி. தங்­க­ளிடம் டிக்கெட் இல்­லா­விட்டால் தான் என்ன? ஏன் வீணாக தேடிக்­கொண்டு கஷ்­ட­ப்ப­டு­கி­றீர்கள்? உங்­களால் இந்த நாட்­டிற்கே பெருமை. டிக்கெட் இல்­லா­விட்­டாலும் பர­வாயில்லை.” என்று மீண்டும் சமா­தா­ன­ப்ப­டுத்­தினார்

“உங்­க­ளுக்கு பர­வா­யில்­லை­யாக இருக்­க லாம். நான் எந்த ஊருக்கு போக வேண்டும் என்ற விவரம் டிக்­கெட்டில் அல்­லவா இருக்­கி­றது? நான் என்ன செய்­வது? எனக்கு இப்­போது டிக்கெட் வேண்­டுமே..!” என்றார்.

உடன் இருந்த அனை­வரும் இந்த பதிலைக் கேட்டு அதிர்ந்­தனர். அப்­பு­ற­மென்ன டிக்கெட் கிடைக்­கவே இல்லை.

ரயில் அடுத்த ஸ்டேஷ­னுக்கு வந்­ததும், பரி­சோ­தகர் ஐன்ஸ்­டீனை உடன் அழைத்துச் சென்று தொலை­பே­சியின் முலம் அவர் மனை­வி­யிடம் தொடர்புகொள்­ளச் ­செய் தார்.

ஐன்ஸ்டீன் தன் மனை­வி­யிடம், “டியர் நான் வீட்­டை­விட்டுப் போகும்­போது எந்த ஊருக்கு போவ­தாக உன்­னிடம் சொல்­லி­விட்டு வந்தேன்?” என்று விசா­ரித்தார்.

மனைவி ஊரின் பெயரைச் சொன்னார். அவர் ஊரின் பெயரைச் சொன்னவுடன் அதை டைரியில் குறித்துக்கொண்டு ரயிலில் ஏறிப்பயணம் செய்து அந்த ஊர் போய்ச் சேர்ந்தார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல