நாட்டின் மிக பெரிய முன்னணி கோடீஸ்வர வர்த்தகர்களில் ஒருவரும், ராஜபக்ஸ குடும்பத்துக்கு மிக நெருங்கிய தமிழ் பெண்ணுமான ரேணுகா சண்முகநாதன் பொலிஸ் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட உள்ளார் என்று பொலிஸ் தலைமையகத்தை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகி உள்ளன.
ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சியில் துறைமுக மற்றும் விமான போக்குவரத்து அமைச்சராக மங்கள சமரவீர இருந்தபோது 200 மில்லியன் ரூபாவை இவரிடம் இருந்து இலஞ்சம் பெற்றார் என்று பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்து உள்ளது.
ருவன் சஞ்சய சுகததாச என்பவர் இம்முறைப்பாட்டை மேற்கொண்டு இருக்கின்றார். கொழும்பு துறைமுகத்துக்கு வெளியில் கொள்கலன் இறங்குதுறை ஒன்றை அமைக்கின்றமைக்கு அனுமதி வழங்குகின்றமைக்காகவே மங்கள இலஞ்சம் பெற்றார் என்றும் நாட்டின் பாரிய நிதி மோசடிப் பேர்வழி என்று கூறப்படுகின்ற கமல் குதூப்டீனுடன் சென்று ரொக்கப் பணத்தை ரேணுகா இலஞ்சமாக கொடுத்தார் என்றும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ராஜபக்ஸ குடும்பத்துக்கு மிக நெருக்கமான உறவினர் ரேணுகா சண்முகநாதன். இவர் திரு நடேசனின் இளைய சகோதரி ஆவார். அமைச்சர் நிருபமா ராஜபக்ஸவின் கணவர்தான் திருநடேசன்.
லேக் ஹவுஸ் நிறுவனத்தின் நிதி பணிப்பாளராக அண்மைக் காலம் வரை ரேணுகாவின் கணவர் சண்முகநாதன் பதவி வகித்து இருந்து உள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக