யாழ் நகரில் பொலிஸாரின் முற்றுகையில் மாட்டிய யாழ்பாடி மஸாச் கிளப் நடத்துனர் யாழ் மாநகரநபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் நடராஐh ராஐதேவன் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும், யாழ்பாடி மாசாஸ் கிளப்பில் தொழிலுக்கு அமர்த்தப்பட்ட சிலர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை தனது விடுதியில் தொழிலுக்கு அமர்த்தி யாழ் மக்களின் காலாச்சார சீரழிவுக்கு துணை போன நடராஐ ராஐதேவன் கைதுசெய்யப்படவில்லை என்ற கேள்வி யாழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தமிழ் தேசியம் என்ற புனிதமான கோசத்தை வைத்து வார்த்தை ஐhலங்களை அள்ளி வீசி வரும் நடராஐ ராஐதேவன் என்ற இந்த ஆசாமி யாழ் மாநகர சபையின் உறுப்பினராக இருந்து கொண்டே மாநகர சபையின் அனுமதி இன்றி யாழ்பாடி விடுதியை நடத்தி வந்திருக்கிறார். இவர் தனது விடுதிக்கு யாழ் மாநகரசபையின் அனுமதியை பெறாமல் இருந்து வந்ததன் காரணம் தனது சட்ட விரோத லீலைகளை அரங்கேற்றவே என்பது இப்போது தெரிய வந்துள்ளது.
யார் இந்த ராஐதேவன்?.......
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய புள்ளியான இவர் யாழ் வீரமாகாளி அம்மன் கோயிலுக்கு அருகாமையில் வசித்து வருபவர். யாழ் அம்மன் வீதியில் இவரது வீடு உள்ளது. இவரது வீட்டுக்கு அருகிலேயே இவரது யாழ்பாடி விடுதியும் உள்ளது. கொழும்பில் உள்ள வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான யாழ்பாடி விடுதியை இவரே பொறுப்பெடுத்து அதன் பங்குதாரராக நடத்தி வருகின்றார். தனது பங்கு தாரரான கொழும்பு வர்த்தகரின் துணையுடன் தென்லிலங்கையில் இருந்து இளம் யுவதிகளை வேலை வாய்பு தருவதாக மாய வித்தை காட்டி யாழ் நோக்கி அழைத்து வந்து தனது சிற்றின்ப சிலுமிச ஆசைகளை நிறைவேற்றி வருபவர். அதுவும் போதாது என்று யாழ்பாடி என்று அழைக்கப்படும் தனது விடுதியில் வைத்து தமிழ் மக்களுக்கு காலாச்சார சீரழிவுகளை உருவாக்கும் விதமா காமலீலை வியாபாரத்தை அரங்கேற்றி வருபவர்.
2009 இல் நடந்த யாழ் மாநகரசபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்டு 1118 தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று யாழ் மாநகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவர். தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று, தமிழ் மக்களுக்காகவே உழைப்பதாக கூறி பதவிக்கு வந்த இவர் தமிழ் தேசியத்தின் பெயரால் தமிழ் மக்களின் கலாச்சாரத்தையே சீரழிக்கும் செயலில் ஈடு பட்டு வந்திருக்கிறார்.
யாழ் மத்திய கல்லூரியில் கல்வி பயின்ற இவர் அக்கல்லூரியின் பழைய மாணவர் சங்க பிரதிநிதியாகவும் தன்னை அடையாளப்படுத்தி வருகின்றார். இது தவிர, யாழ்பாடி விடுதியின் உரிமையாளர் தானே என்றும் இவர் மார்தட்டி பகிரங்கமாகவே கூறி வந்திருக்கிறார். முன்னாள் யாழ் மாநகரசபை ஆணையாளரும், தற்போதைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினருமான சி.வி.கே சிவஞானம் அவர்களின் அரசியல் கலந்துரையாடல்கள் இதே யாழ்பாடி மஸாச் கிளப்பிலேயே நடந்து வருவதும் பலரும் அறிந்த உண்மை.
யாழில் கலாச்சார சீரழிவை உருவாக்கும் விடுதிகள் முற்றுகை என்று பரபரப்பு செய்திகளை வெளியிட்ட தமிழ் ஊடகங்கள் யாவும் அந்த விடுதிகளில் ஒன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு ராஐதேவனுக்கு சொந்தமானது என்ற தகவலை மட்டும் வெளியிட மறுத்ததன் மர்மம் என்ன?....
யாழ்நாதம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக