வியாழன், 6 மார்ச், 2014

இப்போது புரிகிறதா? தமிழ்நாட்டு ஈழ ஆதரவு வேஷதாரிகளின் சூட்சுமங்கள்?

ஈழத்தமிழர்களின் பெயரில் இந்தியாவில் நடக்கும் வியாபாரம் எல்லைகடந்து செல்கிறது. ஈழதமிழருக்காக குரல்கொடுக்கின்றோம் ஆதரவு தருகின்றோம் அனைத்தையுமே இழக்கின்றோம் என்று தமிழக அரசியல்வாதிகள் கொடுத்துவரும் குரல்களில் உள்ள போலிகளை அம்பலப்படுத்துவதில் இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் யாருமே அக்கறை கொள்வதில்லை. அவர்கள் எப்படி பேசினாலும் அது எமக்கு சாதகமானதே என்கின்ற ஒரு பொத்தாம் பொது சிந்தனை எமது மக்களின் மனதிலும் ஆழமாகவே வேரூன்றிவிட்டது. கேட்டால் தமிழ் நாட்டு தமிழர்கள் எமது தொப்புகொடி உறவுகள் எமக்கு எதுமேன்றால் அவர்கள் எமக்கு கரம்கொடுப்பார்கள் என்று சப்பைகட்டுகட்டி வரும் இலங்கை எழுத்தாளர்களுக்கு மட்டும் குறைவில்லை.அப்படிஎன்றால் அது என்ன தொப்புள் கொடி உறவு? அப்படிபார்த்தால் இலங்கைத்தமிழர்கள் இந்தியாவில் இருந்து இங்குவந்து குடியேறியவர்கள் என்றும் அவர்கள் இங்கு பூர்வீகம் கொண்டாடுவது பொய்யானது என்றும் சிங்கள இனவாதிகள் சொல்லிவருவதுதான் உண்மையோ எனக்கு எதுமே விளங்கவில்லை.



இந்த பூர்வீக ஆய்வுகள் ஒருபுறமிருக்க இந்த தொப்புள் கொடி உறவுக்காக வேண்டுமானால் தமிழ் நாட்டில் வாழும் அப்பாவி தமிழ் மக்கள் ஈழத்தமிழர் மீது ஆழ்ந்த அனுதாபம் கொண்டிருக்கலாம். ஆனால் இந்த அனுதாப அலையை தமக்கு சாதகமாக பயன்படுத்தி அரசியல் மற்றும் பொருளியல் இலாபங்களை பெறுவதில் ஜெ.ஜெயலலிதா தொடக்கி ப.நெடுமாறன் வரைக்கும் யாரும் சளைத்துவிடவில்லை. தனிநாட்டுக்கான பொதுஜன வாக்கெடுப்பு ஒன்றிக்கு ஐ.நா தலையிட வேண்டுமென கோரி ஜெயலலிதா தீர்மானம் கொண்டு வர போகிறாவாம் .ஈழத்தில் வாழும் எந்த தமிழன் இன்று ஈழம் கேட்பான்? சுமார் 30 ஆண்டுகால யுத்தத்தில் தப்பி பிழைத்து நடைபிணங்களாக வாழும் எமது மக்களை வைத்து இவர்கள் பண்ணும் வியாபாரத்துக்கு அளவு கணக்கே இல்லையா? எமது மக்களில் வாழ்வில் இருக்கின்ற அமைதியையும் மீண்டும் குழப்புகின்ற இந்த முயற்சிகளை ஈழத்து புத்திஜீவிகள் கடுமையாக கண்டிக்க முன்வர வேண்டும்.அடுத்து ஜெயலலிதாவின் கடந்த ஆட்சிகாலத்தில் புலிகளின் பயங்கரவாத செயல்களை தடுத்துநிறுத்த தடா, பொடா என்று கண்ட கண்ட சட்டங்களை எல்லாம் அமுல்படுத்தியவர் அவர். இந்த சட்டங்களினால் எல்லாம் புலிகள் கட்டுபடுத்தப்பட்டார்களோ என்னமோ தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்திருக்கும் ஈழ அகதிகள் மிகப்பெரும் உபாதைகளுக்குள்ளானர்கள். அப்போது புலிகளைகட்டுப்படுத்தும் வேகத்தில் பொதுமக்கள் பட்ட துன்பங்களை எல்லாம் கண்டுகொள்ள மறுத்தவர் இந்த ஜெயலலிதா. ஆனால் இன்று இந்திய பிரதமரையே கொன்றொளித்த மரணதண்டனை கைதிகளை விடுவிக்க தீர்மானம் கொண்டுவந்துள்ளார்.

இந்த முடிவிற்கு சுமார் பத்து தினங்களுக்கு முன்பு குற்றவாளி நளினி தன்னை ஒரு மாதம் கண்காணிப்புடன் விடுவிக்குமாறு நீதிமன்றத்தில் கோரியபோது தமிழக அரசின் சார்பில் அதை எதிர்த்தார்கள். ‘இது முடியாது. இவரை வெளியே விட்டால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை எழும். சிலர் இவரை தங்கள் அரசியல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்த முனைவார்கள். இவருடைய உயிருக்கே கூட ஆபத்து நேரிடலாம்’ என்று வாதிடப்பட்டது.

இந்திய மக்களவை தேர்தல் நெருங்க நெருங்க இலங்கைத்தமிழர் மீதான இந்திய அரசியல் வாதிகளின் பாசம் பொத்துக்கொண்டு வருகின்றது என்பதன் அடையாளமே இதுவாகும். ஜெயலிதாவின் அரசியலை ஆகோ ஓகோ என்று புழுகி எழுதி வரும் துக்ளக் சோ கூட இந்த ராஜீவ் காந்தி கொலைகுற்றவாளிகள் எழுபேரையும் விடுவிக்கும் தமிழக முதலமைச்சரின் முடிவை அரசியல் இலாப நட்ட கணக்கினை அடிப்படையாக கொண்டது என குற்றம் சாட்டியிள்ளார்."ஏழு பேரில் ஒருவரை ஒரு மாதம் வெளியே விடக் கூட சம்மதிக்காத தமிழக அரசு – பத்தே நாட்களில் ஏழு பேருக்குமே விடுதலையையே தந்துவிட முன்வந்தது ஏன்? அரசியல்தான். அரசியல் என்று ஆன பிறகு அதில் நியாய அநியாயம் பார்க்க முடியாது. லாப நஷ்டம்தான் பார்க்க வேண்டும். இதில் லாபமும் இருப்பதாக நாம் நினைக்கவில்லை. ராஜீவ் கொலையாளிகளை தமிழகம் மன்னித்து விட்டதாகக் கருத இடமில்லை. நடந்திருப்பது நல்லதற்கல்ல".என அவர் எழுதியுள்ளார்.

மேலும் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் உள்ள அபு தாஹிரை விடுதலை செய்ய வேண்டும். 17 வயதில் சிறை சென்ற அவர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்துவருகிறார். இதுபோன்ற பல ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை விடுதலை செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜவாஹிருல்லா. அப்படி செய்தால் அது ஜெயலலிதாவின் காருண்யத்தின் அடையாளமாக இருக்கும் அதை செய்ய முடியாது. .

இதேபோன்று இந்த ராஜீவ் காந்தி கொலைகுற்றவாளிகள் எழுபேரையும் விடுநிக்கும் படி கோரி பல்வேறு போராட்டங்களை பல ஆண்டுகளாக நடாத்திவரும் நெடுமாறன் போன்றவர்களின் செயல்பாடுகள் எல்லாமே சர்வதேச புலிகளின் நிதி வலைப்பின்னல்களினால் வழிநடத்தப்படுபவை என்கின்ற செய்திகள் இன்று அம்பலமாக தொடங்கியுள்ளன.அது சீமானாக இருக்கலாம் அல்லது திருமாவளவனாக இருக்கலாம் ஏன் கோபால்சமியாக கூட இருக்கலாம். நெடுமாறன் ஐயாவா என்று என்னோருக்கும் ஒரு சந்தேகம் எழலாம்.ஆம் சாட்சாத் நெடுமாறன் ஐயாவேதான்.

பிருத்தானியாவின் லண்டன் நகரில் அமைந்துள்ள ரூற்றிங் முத்துமாரி அம்மன் ஆலயம் என அறியப்பட்ட சிவயோகம் அறக்கட்டளையும் அதன் ஸ்தாபகர் நாகரட்ணம் சீவரட்ணமும் கோயில் உண்டியல் பணத்தில் 500 பவுண்கள் தமிழகத்தில் உள்ள தமிழ் தலைவர் பழ நெடுமாறனுக்கு மாதந்தம் அனுப்பி வந்துள்ளனர். என்னும் இரகசியங்கள் அண்மையில் வெளியாகியுள்ளன. அப்படியென்றால் இந்த கோயிலுக்கு புகலிடத்தமிழர்கள் வழங்கிவரும் உண்டியல் பணத்தில் மற்றைய தலைவர்களுக்கு எவ்வளவு மாதாந்தம் சென்றடைந்தது என்கின்ற கேள்விகள் உண்டு.அதுமட்டுமல்ல ஐரோப்பாவில் இருக்கின்ற ஏனைய நாடுகளில் கனடாவில் அவுஸ்ரேலியாவில் என்று புகலிடத்தமிழர்களின் சுமார் நூற்றுக்கும் அதிகமான கோவில்கள் உண்டல்லவா? அங்கிருந்தெல்லாம் எத்தனை ஆயிரம் டொலர்களும் ஈரோக்களும் இந்த தமிழ் நாட்டு ஈழ ஆதரவாளர்களுக்கு மாதாந்தாம் சென்றிருக்கும்? போரிலிருந்து தப்பி பிழைத்த தமிழன் அந்த பனியிலும் குளிரிலும் அடிபட்டு உழைக்கின்ற பணம் ஏன் இந்த பித்தலாட்டகாரர்களை சென்றடைய வேண்டும்? இங்கு கஞ்சிக்கும் கூளுக்கும் வழியின்றி போரில் நிர்க்கதியான ஆயிரக்கணக்கான மக்களுக்கு சென்றடைய வேண்டிய இந்த நிதிகள் ஏன் இப்படி தமிழ் நாட்டு அரசியல் வியாபாரிகளின் வங்கி கணக்குகளை நிரப்பவேண்டும்? என்று இனிமேலாவது நாம் குரலெழுப்ப வேண்டாமா? இலங்கை தமிழர்களே?

இப்போது புரிகிறதா? தமிழ்நாட்டு ஈழ ஆதரவு வேஷதாரிகளின் சூட்சுமங்கள்?

இப்போது புரிகிறதா? ஈழ ஆதரவு வேஷதாரிகளின் சூட்சுமங்கள்?


- மட்டுநகரிலிருந்து எழுகதிரோன்

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல