செவ்வாய், 8 ஏப்ரல், 2014

மாமடு குளத்தில் மாயமான மூன்று இளம் உயிர்கள் - விளையாட்டு விபரீதமானது

வவு­னிய, மாமடுக் குளத்தில் மூழ்கி யுவ­திகள் இரு­வரும் இளைஞர் ஒரு­வரும் உயி­ரி­ழந்த சம்­பவம் வவு­னி­யா­வையே சோகத்தில் ஆழ்த்­தி­யுள்­ளது. இன்­றைய தலை­மு­றை­யினர் சந்­தோ­ஷ­மாகப் பொழுதைக் களிப்­ப­தற்­காக விப­ரீ­த­மான பொழு­து­போக்கில் ஈடு­ப­டு­கின்­றனர். இதனால் உயி­ரி­ழப்­பு­களும் அதிகம் சம்­ப­வித்­துள்­ளன. அந்­த­ வ­கையில் மூன்று இள­வ­ய­தினர் ஒன்­றாக உயி­ரி­ழந்த இந்தச் சம்­பவம் அனை­வ­ரையும் அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­யுள்­ளது.



வவு­னி­யாவைப் பொறுத்­த­மட்டில் குளங்கள் அதி­க­முள்ள பிர­தே­ச­மாகும். இதனை உள்ளூர்வாசிகள் மட்­டு­மன்றி பலரும் சென்று ரசிப்­பதும், தோணியில் பய­ணிப்­பதும் வழ­மை­யான ஒன்று. அந்த வகையில், நான்கு யுவ­தி­களும் இரு இளை­ஞர்­க­ளு­மாக அறுவர் மாமடு குளத்­தினை பார்ப்­ப­தற்­காக சென்­றுள்­ளனர். குளத்தைப் பார்­வை­யிட்ட இவர்கள், மீன்­பி­டிக்­காக பயன்­ப­டுத்தும் சிறிய வள்­ளத்தில் ஏறி குளத்­துக்குள் செல்ல முற்­பட்­ட­போது, வள்ளம் பாரம் தாங்­காது மிதவை முறிந்து குளத்தில் கவிழ்ந்­ததில் நீரிழ் மூழ்­கி­யுள்­ளனர். இவர்­களில் இரு யுவ­தி­களும் ஒரு இளை­ஞனும் தெய்­வா­தீ­ன­மாக கரை சேர்ந்த நிலையில், மேலும் இரு யுவ­தி­களும் ஓர் இளை­ஞனும் உயி­ரி­ழந்­துள்­ளனர். விநா­ய­க­பு­ரத்தை சேர்ந்த என். சங்­கீதா (26 வயது), செட்­டி­க்கு­ளத்தைச் சேர்ந்த ஜோசப் ஜென்சி (வயது 26), திரு­நா­வற்­கு­ளத்தை சேர்ந்த எஸ். உசாந் (வயது 20) ஆகி­யோரே நீரில் மூழ்கிப் பலி­யா­கி­யுள்­ளனர்.

விபத்தில் உயிர் தப்­பிய யுவதி ஒரு வர் சம்பவம் பற்றி விப­ரிக்­கையில், "நானும் எனது நண்­பர்கள் மூவரும் பயிற்சி வகுப்­பொன்றை நிறைவு செய்த பின்னர், சின்­ன­பு­துக்­கு­ளத்தில் உள்ள நண்­பி­யொ­ரு­வரை சந்­திப்­ப­தற்­காக சென்­றி­ருந்தோம். அவ்­வே­ளையில் குளத்­தினை பார்­வை­யி­டு­வ­தற்கு ஆர்­வ­மாக இருந்­த­மை­யினால் சின்­ன­பு­துக்­கு­ளத்தில் உள்ள நண்­பியின் தம்­பி­யையும் அழைத்­துக்­கொண்டு மாமடு குளத்­திற்கு சென்றோம். குளக்­க­ரை­யி­லி­ருந்த வள்­ளத்தில் ஏறி புகைப்­படம் எடுத்­து­விட்டு சிறிது தூரம் வள்­ளத்தில் நகர முற்­பட்­ட­வேளை அது கவிழ்ந்து விட்­டது" என்று கண்­ணீ­ருடன் தெரி­வித்தார்.

காலை வேளையில் அழகுக் கலை வகுப்­பொன்­றிற்குச் சென்­றி­ருந்த இவர் கள், அன்­றைய தினம் நண்பி ஒரு­வரின் பிறந்த நாள் என்­பதால் அவரைச் சந்­தித்து வாழ்த்துத் தெரி­விப்­ப­தற்­காக அவ­ரது வீட்­டிற்குச் சென்­றுள்­ளனர். அங்­கி­ருந்து அந்த நண்­பியின் சகோ­த­ர­னையும் அழைத்­துக்­கொண்டு மாமடுக் குளத்தைப் பார்­வை­யி­டு­வ­தற்­காக சென்­றுள்­ளனர். குளத்தைப் பார்­வை­யிட்ட இவர்கள், ஆர்வ மிகு­தியால் குளத்­தினுள் பிர­வே­சிக்க எண்­ணி­யுள்­ளனர். அதற்­க­மைய அங்கு வைக்­கப்­பட்­டி­ருந்த சிறிய படகில் ஏறி செல்­வதாய் முடிவு செய்­துள்­ளனர். இரண்டு பேர் மாத்­திரம் செல்லக் கூடிய படகில் ஆறுபேர் பய­ணித்­துள்­ளனர். குளத்தின் நடுப்­ப­கு­திக்குச் சென்று புகைப்­படம் பிடிப்­ப­தற்கு இவர்கள் திட்­ட­மிட்­டுள்­ளனர். கரை­யி­லி­ருந்து சிறுது தூரம் சென்­றதும் படகின் மிதவை உடைந்­துள்­ளது. மிதவை உடைந்த அடுத்த கணமே படகு கவிழ்ந்­துள்­ளது. இதனால் பட கில் சென்ற ஆறு­பேரும் நீரில் மூழ்­கி­யுள்­ளனர். மூவர் நீந்­து­வ­தற்கு முயற்சி செய்தும் வேறு­சில உத்­தி­களைப் பயன்­ப­டுத்­தியும் ஒரு­வா­றாக கரை சேர்ந்­துள்­ளனர். கரை சேர்ந்­த­வர்கள் கூக்­கு­ர­லிட்டு அயலில் இருந்­த­வர்­களை அழைத்­துள்­ள னர். அந்த நேரத்தில் குளத்­திற்கு பக்­ கத்தில் யாரும் இருக்­க­வில்லை. மீன்­பி­டியில் ஈடு­ப­டுவோர் முத­லான யாரும் இல்­லாத நேர­மான, காலை 10.00 மணி­ ய­ள­வி­லேயே இந்த சம்­பவம் நடந்­துள்­ளது. இந்தக் குளத்தின் கரைப் பகு­தி­யி­லேயே 16 அடி ஆழ­மான நீர் இருப்­ப­தா­கவும் சுழி நிறைந்த குளம் எனவும் மாமடுப் பிர­தேச மக்கள் தெரி­விக்­கின்­ற னர்.

இதே­நேரம் அவர்­களின் நண்­பியும் மாம­டுவைச் சேர்ந்­த­வ­ரு­மான யுவதி ஒருவர் தான் குளத்­துக்குள் வர­வில்லை என்றும். கரையில் இருப்­ப­தா­கவும் தெரி­வித்து குளக்­க­ரையில் இருந்­துள்ளார். அவ­ருக்கு நன்கு நீச்சல் தெரியும். இதனால் இவர் படகு குளத்தில் மூழ்­கி­யதும். உட­ன­டி­யாக குளத்­துக்குள் குதித்து இரண்டு யுவ­தி­க­ளையும் காப்­பாற்­றி­யுள்ளார். ஏனைய மூவ­ரையும் தேடிப் பார்த்த போதும் அவர்கள் கிடைக்­க­வில்லை என்று அவர் தெரி­வித்தார். உயிர் பிழைத்த மூவரும் குளத்­திற்கு அரு­கி­லி­ருந்த வீடு­க­ளுக்குச் சென்று தமது நண்­பர்கள் குளத்தில் மூழ்கி விட்­ட­தாக தெரி­வித்­த­தை­ய­டுத்து, மாமடுப் பிர­தேச மக்கள் திரண்­டு­வந்து குளத்தில் காணாமற் போன மூவ­ரையும் தேட ஆரம்­பித்­துள்­ளனர். சிறிது நேரத்தில் ஜான்­சியின் உடல் மீட்­கப்­பட்­டுள்­ளது. அவரின் உடல் சேறில் சிக்­குண்டு காணப்­பட்­ட­தாக உடலை மீட்­ட­வர்கள் தெரி­வித்­தனர். அத்­துடன் அவர் நீருக்கு வெளியே வரு­வ­தற்கு கடு­மை­யாக முயற்­சித்­துள்ளார் என்றும், அதற்­கான தட­யங்கள் அவ­ரது உடலில் இருந்­த­தா­கவும் அவர்கள் தெரி­வித்­தனர். சேற்றுப் பகு­தி­யையும், நீர் தாவ­ரங்­க­ளையும் அவர் கைகளால் பற்றிப் பிடித்­த­வாறு இருந்­த­தாக ஜான்­சியின் உடலை மீட்­ட­வர்கள் தெரி­வித்­தனர். அரை மணித்­தி­யா­லத்தின் பின்னர் உசாந் என்ற இளை­ஞனின் உடலும், சங்­கீதா என்ற யுவ­தியின் உடலும் மீட்­கப்­பட்­டுள்­ளன.

“இப்­படி நடக்கும் என்று தெரிந்­தி­ருந்தால் நாங்கள் குளத்­துக்குச் சென்­றி­ருக்க மாட்டோம். எங்­க­ளுக்கு இப்­ப­டி­யெல்லாம் நடக்கும் என்று அந்த நேரத்தில் தெரி­ய­வில்லை. நான் மாமடுப் பிர­தே­சத்தில் வசித்து வந்­தாலும் இவ்­வ­ளவு பெரிய ஆபத்து எமக்கு இந்தக் குளத்தால் ஏற்­படும் என்று சிறிதும் எண்ணிப் பார்க்­க­வில்லை. என் கண்முன் எனது நண்­பர்கள் குளத்தில் மூழ்­கி­யதைப் பார்த்­த­போது நான் மிகவும் அதிர்ச்­சிக்கு உள்­ளானேன். எனக்கு நீச்சல் தெரிந்­தி­ருந்­ததால் இர ண்டு நண்­பி­களைப் போராடிக் காப்­பாற்­றினேன். மற்­ற­வர்­களை என்னால் காப்­பாற்ற முடி­ய­வில்லை. அவர்­களின் குடும்­பத்­தி­ன­ரிடம் மிகவும் மனம் வருந்தி மன்­னிப்புக் கேட்­கின்றேன். எத்­தனை காலங்கள் கடந்­தாலும் இந்த சம்­பவம் ஏற்­ப­டுத்­திய அதிர்ச்­சி­யி­லி­ருந்து என்னால் மீள முடி­ய­வில்லை" என்று மாமடுப் பிர­தே­சத்தைச் சேர்ந்த யுவதி தெரி­வித்தார்.

செட்டிக்குளத்தைச் சேர்ந்த ஜான்சி படிப்­புக்­கா­கவும், ஏனைய தேவை­களின் பொருட்டும் வவு­னி­யாவில் குடும்­பத்­துடன் வசித்து வந்­துள்ளார். படிப்­பிலும் ஏனைய துறை­க­ளிலும் சிறந்து விளங்­கிய ஜான்சி மிகவும் துடி­து­டிப்­பா­னவர். ஊட­க­வியல் கற்கை நெறியைப் பூர்த்தி செய்து ஊட­க­வி­ய­லா­ள­ரா­கவும் பணி­யாற்­றி­யுள்ளார். இதனால் அவ­ருக்கு மிகப்­பெ­ரிய நண்பர் பட்­டா­ளமே உண்டு. நான்கு மாதங்­க­ளுக்கு முன்னர் திரு­மண பந்­தத்தில் இணைந்து கொண்டார். கண­வ­ருடன் தனி­யாக வசித்து வந்­துள்ளார். 'ஸ்ரூடியோ' ஒன்றை நடத்திவந்த கண­வரின் தொழி­ லுக்கு மேலும் வலுச் சேர்க்கும் விதத் தில் அழ­கு­ப­டுத்தும் கலை தொடர்­பான கற்கை நெறியை இவர் பயின்று வந்­துள்ளார். சம்­பவ தினத்­தன்று குறித்த அழகுக் கலை தொடர்­பான வகுப்பில் பங்­கு­பற்­று­வ­தாக கண­வ­ரிடம் கூறி­விட் டுச் சென்­றுள்ளார்.

“வகுப்­பிற்குச் சென்ற ஜான்சி என்­னுடன் மதிய உணவு உண்ண வந்­து­வி­டுவாள் என்று நான் காத்­தி­ருந்தேன். ஆனால் அவள் இறந்து விட்டாள் என்ற செய்­திதான் எனக்கு கிடைத்­தது. அவள் குளத்­திற்கு செல்­வ­தாக என்­னிடம் கூறி­யி­ருந்தால் நான் அவளை அனுப்பி வைத்­தி­ருக்க மாட்டேன். அவ­ளுக்கு பிடி­வாதம் அதிகம். நினைத்­ததைச் செய்து முடிப்பாள். ஆனால் எல்­லோ­ரி­டமும் அன்­பாக இருப்பாள். எப்­பொ­ழுதும் குழந்தைத் தனமும் கல­க­லப்­பா­கவும் இருக்கும் அவ­ளுடன் என்னால் நீண்­ட­காலம் வாழ முடி­ய­வில்லை. ஜான்­சியை மறந்து நான் எப்­படி இருப்பேன். என்னை ஏமாற்­றி­விட்டுச் சென்­று­விட்­டாளே" என்று ஜான்­சியின் கணவர் பிரகாஷ் கண்­ணீ­ருடன் தெரி­வித்தார்.

“எனக்கு இரண்டு பெண் குழந்­தை ­களும் ஒரு மகனும். ஜான்­சிதான் மூத்­த வள் ஆனால் அவள் எங்கள் வீட்டில் கடைசிப் பிள்ளை போன்­று தான் இருப்பாள். எது­வா­யி­ருந்­தாலும் தன க்குத் தான் முன்­னு­ரிமை கொடுக்க வேண்டும் என்று நினைப்பாள். அதற்­காக பிடி­வாதம் பிடிப்பாள். அவளின் தம்பி, தங்­கையும் அவ­ளுக்­காக எல்­லா­வற்­றையும் விட்டுக் கொடுப்­பார்கள். ஆனால் அவள் மிகவும் நல்­லவள். எல்­லோ­ரி­டமும் அன்­பாக இருப்பாள். அதி­க­மாகப் பேசி­னாலும் மனதில் எதையும் வைத்­தி­ருக்க மாட்டாள். சண்டை போட்­டாலும் அடுத்த நிமி­டமே தானாக வந்து பேசுவாள். ஆசைப்­பட்­டதை எப்­ப­டியும் அடைந்து விடுவாள். கல்­யாண விட­யத்­திலும் அவள் அப்­ப­டித்தான் நடந்து கொண்டாள். நான் அவள் இப்­படி இருக்­கின்­றாளே என்று பல­முறை யோசித்­தி­ருக்­கின்றேன். ஏன் இப்­படி நடந்து கொள்­கின்றாள்? என்று எண்­ணி­யி­ருக்­கின்றேன். எங்­களை விட்டுப் போவ­தற்­குத்தான் அவள் இப்­ப­டி­யெல்லாம் நடந்து கொண்­டி­ருக்­கின்றாள் என்று எனக்கு இப்­போ­து தான் தெரி­கின்­றது. என்ர மகளை நான் பறி­கொ­டுத்து விட்­டேனே. இப்­ப­டி­யெல்லாம் நடக்கும் என்று தெரிந்­தி­ருந்தால் நான் அவளை கட்­டுப்­ப­டுத்தி வைத்­தி­ருப்பேன். கடவுள் என்ர பிள்­ளையை மொத்­த­மாக பறித்து விட்­டாரே" என்று கூறி ஜான்­சியின் தாயார் கத­றி­ய­ழுதார்.

குளத்தில் மூழ்கி உயி­ரி­ழந்த மற்­றைய யுவ­தி­யான சங்­கீதா திரு­மண பந்­தத்தில் இணைந்து 10 மாதங்­களே ஆகின்­றன. இவ­ரது கணவர் லண்­டனில் வாழ்­கின்றார். கண­வ­ரிடம் செல்­வ­தற்­கான விசா அனு­ம­திக்­காக சங்­கீதா காத்­தி­ருந்­துள்ளார். வெறு­மை­யாக பொழுதைக் கழிக்க விரும்­பாத இவர் அழகுக் கலை வகுப்­பிற்கு கடந்த மூன்று மாதங்­க­ளாக சென்­றுள்ளார். அவ்­வாறு கடந்த 30 ஆம் திகதி வகுப்­பிற்குச் சென்­ற­போதே அவர் இந்த விபத்தில் சிக்கி உயி­ரி­ழந்தார். கண­வ­ரிடம் செல்­வ­தற்­காக கன­வு­க­ளுடன் காத்­தி­ருந்த சங்­கீ­தா­வுக்கு இப்­படி ஒரு நிலை ஏற்­படும் என்று நாங்கள் கன­விலும் நினைக்­க­வில்லை என்று சங்­கீ­தாவின் நண்பி ஒருவர் கவ­லை­யுடன் தெரி­வித்தார். தனது மனை­வியின் வரு­கைக்­காக காத்­தி­ருந்த கண­வ­ருக்கு சங்­கீதா இறந்­த­தாகச் செய்தி அனுப்­பப்­பட்­ட­தா­கவும் அவர் மன­மு­டைந்­து­போ­யுள்­ள­தா­கவும் உற­வினர் ஒருவர் தெரி­வித்தார்.

உயர்­தரம் வரை படித்து விட்டு தனது எதிர்­கால திட்­டங்­களை வகுத்­து­வந்த உசாந், தனது அக்­காவின் நண்­பி­க­ளுடன் குளத்தைப் பார்­வை­யி­டு­வ­தற்­காகச் சென்­றுள்ளார். தனது தம்­பிக்கு நேர்ந்த நிலைமை தொடர்பில் எதுவும் கூறு­வ­தற்கே உடலில் வலு­வில்­லாமல் அவ­ரது சகோ­தரி அழுது களைத்துப் போய் இருந்தார். உசாந் மிகவும் சுறு­ சு­றுப்­பா­னவர். விளை­யாட்­டுக்­க­ளிலும் திற­மை­யா­னவன். அவ­னுக்கு நீச்சலும் ஓரளவுக்குத் தெரியும். அவ்வாறிருந்தும் அவன் குளத்தில் மூழ்கி இறந்து விட்டான். அவனின் இழப்பை யாரா லும் ஈடுசெய்ய முடியாது என்று உசாந்தின் உறவினர் ஒருவர் தெரிவித் தார்.

ஜான்சி, சங்­கீதா, உசாந் ஆகி­யோரின் மரணம் வவு­னி­யா­வையே அதிர்ச்சிக் குள்­ளாக்­கி­யுள்­ளது. இரு­பது வரு­டங்­க­ளிற்கு மேலாக அன்­போடு வளர்த்­து­வந்த தங்கள் பிள்­ளை­களை இடையில் பறி­கொ­டுத்­து­விட்டு அவர்­க­ளது குடும்­பத்­தினர் புலம்பி அழு­கின்­றார்கள். இன்­றைய தலை­மு­றை­யினர் தமக்கு நேர­வுள்ள ஆபத்தை கவ­னத்தில் கொள்­ளாமல் செய்யும் செயல்­களால் அவர்­க­ளது குடும்­பத்­தினர் பரி­த­வித்து நிற்­கின்­றனர். ஆபத்து நேரிடும் என்று தெரிந்தும் தாமாக விபத்­துக்­களில் சிக்கிக் கொள்­கின்­றார்கள். இதற்கு வவு­னி­யாவில் நடந்த இந்தச் சம்­பவம் சிறந்­த­தொரு எடுத்துக் காட்­டாகும். எனவே, இவ்­வா ­றான சம்பவங்கள் எதிர்காலத்தில் ஏற்ப டாமல் இருக்கும் வகையில் இளைஞர், யுவதிகள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.

 எஸ். ரகுதீஸ்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல