செவ்வாய், 8 ஏப்ரல், 2014

முற்­றாகப் புதை­யாது முள்­ளி­வாய்க்கால் மர்மம்

ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் கடந்­த ­மாதம் 27ஆம் திகதி நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தின் மூலம், 2002ஆம் ஆண்­டுக்கும் 2009ஆம் ஆண்­டுக்கும் இடைப்­பட்ட காலங்­களில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து சர்­வ­தேச விசா­ரணை ஒன்று நடத்­தப்­படும் சூழல் உரு­வா­கி­யுள்­ளது.

ஐ.நா மனித உரிமை ஆணை­யாளர் பணி­ய­கத்தின் மூலம் நிய­மிக்­கப்­படும் நிபு­ணர்கள் மூலம் இந்த விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தற்குச் சாத்­தி­யங்கள் உள்­ளன. இந்த விசா­ரணைக் குழுவை நிய­மிக்கும் முயற்­சிகள் ஜெனீ­வாவில் தீவி­ர­ம­டைந்­துள்­ள­தாகத் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.



இதற்­கென ஆகப்­போகும் செலவும் சாதா­ர­ண­மா­ன­தல்ல. கிட்­டத்­தட்ட 1.46 மில்­லியன் டொலர் இதற்குத் தேவைப்­படும் என்று மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அதா­வது, இலங்கை நாணய மதிப்பின் படி 200 மில்­லியன் ரூபா வரை இதற்குச் செல­வாகும் என்று ஐ.நாவின் மதிப்­பீ­டுகள் கூறு­கின்­றன.

இந்தப் பெரும் செல­வு­டைய விசா­ர­ணை­க­ளுக்கு ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் பணி­யகம் தயா­ராகி வரு­கின்ற போதும், இந்த தீர்­மா­னத்­தையோ ஐ.நா. வின் விசா­ர­ணை­க­ளையோ ஏற்றுக் கொள்ள முடி­யாது என்று அர­சாங்கம் நிரா­க­ரித்­துள்­ளது. இதனால், எவ்­வாறு இந்த விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­படும் என்ற கேள்வி எழுந்­தி­ருக்­கி­றது.

எனினும், போரின் இறுதி கால­கட்­டத்தில் நிகழ்ந்த மீறல்கள் குறித்து விசா­ரணை செய்ய சர்­வ­தேச அளவில் முயற்சி எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­னது ஒரு முக்­கி­ய­மான திருப்­ப­மா­கவே இருக்­கப்­போ­கி­றது.

ஏனென்றால், இறு­திக்­கட்டப் போரில் மறைந்து போன மறைக்­கப்­பட்ட ஏரா­ள­மான உண்­மைகள் அப்­ப­டியே புதைக்­கப்­பட்டு விடுமோ என்ற அச்சம் தமி­ழர்­களில் பெரும்­பான்­மை­யா­னோ­ரிடம் இருந்து வந்தது.

ஆனால், முழு­மை­யாக இல்­லா­விட்­டாலும் ஓர­ள­வுக்­கேனும் என்ன நடந்­தது என்ற வெளிச்சம் சர்­வ­தேச விசா­ரணை முயற்சி ஒன்றின் மூலம் வெளிப்­படும் சாத்­தியம் இப்­போது உரு­வா­கி­யுள்­ளது.

அதே­வேளை, இந்த விசா­ரணை நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் விசா­ரணைக் காலப்பரப்­புக்குள் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­னது, இலங்­கையில் போரின் போது நடந்த ஏரா­ள­மான குற்­றங்கள் உலகின் பார்­வைக்கு வர­மு­டி­யாத நிலையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்­ப­தையும் கவ­னத்தில் கொள்ள வேண்­டி­யுள்­ளது.

அமெ­ரிக்கா, பிரித்­தா­னியா, மொன்­ர­னிக்ரோ, மசி­டோ­னியா, மொறி­சியஸ் ஆகிய நாடு­களால் முன்­வைக்­கப்­பட்ட முத­லா­வது வரைவில் இந்தக் கால வரை­யறை ஏதும் செய்­யப்­பட்­டி­ருக்­க­வில்லை.

ஆனால், மூன்­றா­வதும் இறு­தி­யு­மான வரைவில் இந்தக் கால­வ­ரை­யறை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது இந்­தி­யாவைத் திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­கான அல்­லது அதன் ஆத­ரவை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான நகர்வு என்றே நம்­பப்­ப­டு­கி­றது.

13ஆவது திருத்­தச்­சட்­டத்தை நடை­முறைப்­ப­டுத்தல், அதி­கா­ரங்­களைப் பகிர்தல் ஆகி­ய­வற்றை உள்­ள­டக்­கி­யதன் மூலம் இந்த தீர்­மான வரை­வுக்கு சிவப்­புக்­கொடி காட்­ட­மு­டி­யாத நிலைக்குள் இந்­தி­யா வைத் தள்­ளி­விட்­டி­ருந்­தது அமெ­ரிக்கா. ஆனாலும், தீர்­மா­னத்தில் இடம்­பெற்­றி­ருந்த குற்­றச்­சாட்­டுகள் குறித்த விசா­ ரணை பற்­றிய பகுதி இந்­தி­யா­வுக்கு நெரு­டலை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

சர்­வ­தேச சுதந்­திர விசா­ரணை என்ற சொற்­பி­ர­யோ­கத்தை இந்­தியா விரும்­ப­வில்லை என்றும் அதனை மென்­மைப்

­ப­டுத்த அமெ­ரிக்­கா­வுடன் பேச்­சுக்கள் நடத்­ தப்­பட்டு வரு­வ­தா­கவும் புது­டில்­லி­யி­லி­ருந்து முதலில் செய்­திகள் வெளி­யா­கி­யி­ருந்­தன. பின்னர் இறுதி வரைவில் சர்­வதேச விசா­ரணை என்ற பதம் நீக்­கப்­பட்டு, விரி­வாக சுதந்­தி­ர­மான விசா­ரணை என்ற பதம் சேர்க்­கப்­பட்­டது.

எனினும், இந்­தி­யா­வி­னது ஆத­ரவை அமெ­ரிக்­கா­வினால் பெற­மு­டி­யாது போனது துர­திர்ஷ்டம் என்றே கரு­தப்­ப­டு­கி­றது. அதே­வேளை, இலங்கை அர­சாங்கம் இந்த தீர்­மா­னத்தை நிரா­க­ரித்­துள்ள போதிலும் விசா­ர­ணைகள் முழு­மை­யாக மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என்று வலி­யு­றுத்தி வரு­வதைக் காண­மு­டி­கி­றது.

அதா­வது, 2002 தொடக்கம் 2009 வரை­யான காலப்­ப­கு­தி­களில் நடந்த சம்­ப­வங் கள் குறித்தே ஐ.நா. தற்போது விசா­ரிக்­க­ வுள்­ளது.

ஆனால், 1983ஆம் ஆண்டில் இருந்து நடந்த சம்­ப­வங்கள் குறித்து விசா­ரிக்­கப்­பட வேண்டும் என்று அர­சாங்கத் தரப்பில் அமைச்­சர்கள் சுசில் பிறேம் ஜெயந்த, சம்­பிக்க ரண­வக்க போன்­ற­வர்கள் குறிப்­பிட்­டுள்­ளனர்.

ஒரு­பக்­கத்தில் விசா­ர­ணை­களை நிரா­க­ரிக்கும் அர­சாங்­கத்தின் அமைச்­சர்­களே இன்­னொரு பக்­கத்தில் முழு அள­வி­லான விசா­ர­ணை­க­ளுக்கு ஆத­ரவு தெரி­வித்­தி­ருப்­பதும் கவ­னத்தில் கொள்­ளத்­தக்­கது.

அது­மட்­டு­மன்றி, ஜெனீ­வாவில் தீர்­மானம் நிறை­வேற்­றப்­ப­டு­வ­தற்கு முதல் நாள் தேர்தல் பேரணி ஒன்றில் உரை­யாற்­றிய ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ கூட தாம் போரின் முழுப்­ப­கு­தி­யிலும் நடந்த சம்­ப­வங்கள் குறித்து விசா­ரிக்கத் தயார் என்றும் கடைசி 5 நாட்கள் குறித்து விசா­ரிப்­பது நியா­ய­மல்ல என்றும் கூறி­யி­ருந்தார். எந்­த­வொரு கட்­டத்­திலும் போரின் இறுதி 5 நாட்கள் குறித்து விசா­ரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழவோ அதற்­கான முயற்­சிகள் இடம்­பெ­றவோ இல்லை.

அத்­துடன், போரின் இறு­திக்­கட்­டத்தில் எந்த மனி­த­உ­ரிமை மீறல்­களும் நடக்­க­வில்லை என்றும் சர்­வ­தேச சட்­டங்­க­ளுக்கு அமை­வா­கவே நடத்­தப்­பட்­டது என்றும் கூறும் அர­சாங்கம், எதற்­காக அந்த ஐந்து நாட்கள் குறித்தும் விசா­ரிக்க மறுக்­கி­றது என்­ப­துவும் உறுத்­த­லான விட­ய­மா­கவே உள்­ளது.

எவ்­வா­றா­யினும், போரில் முழு அள வில் நடந்த சம்­ப­வங்கள் குறித்து விசா­ரிக்­கப்­பட வேண்டும் என்று அர­சாங்கத் தரப்பில் இருந்து வெளி­யி­டப்­படும் ஆத­ரவு கருத்­துகள் மிகவும் முக்­கி­ய­மா­னது.

ஏனென்றால், இது­வரை இத்­த­கைய விசா­ரணை தேவை­யில்லை என்றும் எத்­த­கைய மீறல்­களும் நடக்­க­வில்லை என்­றுமே அர­ச­த­ரப்பு கூறி­வந்­தது.

அதே­வேளை, புலிகள் மட்டும் தான் மீறல்­களில் ஈடு­பட்டு வந்­த­தா­கவும் அர­சாங்கம் குற்­றம்­சாட்டி வந்­தது.

உண்­மையில், ஜெனீ­வாவில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மானம் இரு­த­ரப்­பு­க­ளி­னதும் மீறல்கள் குறித்து விசா­ரிக்­கவே வழி செய்­கி­றது. எப்­போ­துமே சர்­வ­தேச சமூகம் இரு­த­ரப்பு மீறல்கள் குறித்­துமே பேசி வந்­துள்­ளது.

ஆனால், இலங்கை அர­சாங்கம் சர்­வ­தேச விசா­ரணை முயற்­சி­களை நிரா­க­ரிப்­ப­தற்கு ஒரு­பக்­கத்தில் எந்த மீறல்­க­ளுமே நடக்­க­வில்லை என்று வாதிட்டுக் கொண்டே இன்­னொரு பக்­கத்தில் புலிகள் தான் மீறல்­களைப் புரிந்­த­தா­கவும் கூறி­வந்­தது.

புலிகள் மீதான குற்­றச்­சாட்­டுகள் குறித்து விசா­ரிக்­கப்­பட வேண்டும் என்றால் அதற்கு ஒரு விசா­ரணைக் குழு நிய­மிக்­கப்­பட வேண்டும் என்­பதை அர­சாங்கம் புரிந்து கொள்­ள­வில்லை.அதா­வது, சுருங்கச் சொல்­வ­தானால் புலிகள் மீதான குற்­றச்­சாட்­டு­களை எழுப்பி சர்­வ­தேச விசா­ர­ணைக்கு அர­சாங்­கமே கூட ஊக்­க­ம­ளித்­தது என்­பதை மறுக்க முடி­யாது.

உதை­பந்­தாட்­டத்தில் “சேம் சைட் கோல்” என்று சொல்­வார்­களே அது போலத் தான் இதுவும்.

எனவே, சர்­வ­தேச விசா­ரணை முயற்சி ஒன்றை தடுக்க அர­சாங்கம் முழு­அ­ளவில் முயற்­சித்­த­தாக கூற­மு­டி­யாது.

ஒரு­வ­கையில் அதுவும் கூட துணை­போ­யுள்­ளது என்றே கூறலாம்.

இப்­போது, 2002- 2009 வரை­யான காலப்­ப­கு­தியில் நடந்த மீறல்கள் குறித்து விசா­ரணை நடத்த ஐ.நா. மனி­த­உ­ரி­மைகள் பேரவை ஆணை பிறப்­பித்­ததும், முழு­அ­ளவில் விசா­ரிக்­கப்­பட வேண்டும் என்றும் இலங்கை அரசே கூறு­கி­றது.

ஆனால், அத்­த­கைய விசா­ர­ணை­களை அர­சாங்கம் தானும் செய்­ய­வில்லை, செய்யத் தயா­ரா­கவும் இல்லை, வெளி­நா­டு­களை செய்­யவும் அனு­ம­திக்கத் தயா­ராக இல்லை.

இந்த விட­யத்தில் வைக்கோல் பட்டை நாய்க்கு ஒப்­பீடு செய்­யத்­தக்க நிலை­யி­லேயே அர­சாங்கம் இருக்­கி­றது.

2002 தொடக்கம், 2009 வரை­யான சம்­ப­வங்கள் குறித்து விசா­ரிக்­கப்­பட்டால், அந்தக் கால­கட்­டத்தில் நடந்த சம்­ப­வங்­க­ளுக்­காக தற்­போ­தைய அர­சாங்­கமே பதில் கூறி­யாக வேண்டும்.

ஆனால், முழு­அ­ளவில் விசா­ரணை நடத்­தப்­பட்டால் எல்லாத் தரப்­பு­க­ளையும் மாட்டி விடலாம் என்று நினைக்­கி­றது.

அதா­வது ஐ.தே.க விடு­தலைப் புலிகள், இந்­தியா என்று பல தரப்­பு­க­ளையும் மாட்டி விட முனை­கி­றது.

ஐ.தே.க காலத்துப் படு­கொ­லைகள், சிங்­கள, முஸ்லிம் பொது­மக்கள் கொல்­லப்­பட்ட புலி­களின் தாக்­கு­தல்கள், இந்­தியப் படை­களின் காலத்து குற்­றங்கள் எல்­லா­வற்­றையும் விசா­ர­ணைக்கு இழுத்தால், இத்­த­கைய விசா­ர­ணைக்­கான சர்­வ­தேச ஆத­ரவு குறைந்து விடும் என்று அர­சாங்கம் நினைக்­கி­றது.

ஆனால், ஒட்­டு­மொத்தப் போரி­னதும், அது உரு­வான சூழ­லி­னதும் பற்­றிய முழு விசா­ரணை ஒன்று அவ­சி­ய­மா­னதே.

ஏனென்றால், அது மட்­டுமே தமி­ழர்­களின் ஆயுதப் போராட்டம் எத்­த­கைய வர­லாற்று நிர்ப்­பந்­தங்­க­ளினால் தோற்றம் பெற்­றது என்ற உண்­மையை வெளிப்­ப­டுத்தும்.

ஆயுதப் போராட்­டத்­துக்குள் தமி­ழர்­களைத் தள்­ளிய இனப்­ப­டு­கொ­லைகள் குறித்தும் நில­அ­ப­க­ரிப்­புகள், ஆக்­கி­ர­மிப்­புகள், இன,மொழி, மத ஒடுக்­கு­மு­றைகள் குறித்தும் உண்­மை­களை அதுவே வெளிச்சம் போட்டுக் காண்­பிக்கும்.

ஆனால், இப்­போ­தைய ஐ.நா. விசா­ர­ணைகள் அத்­த­கை­ய­தொன்­றாக இருக்காது.

அது மட்டுப்படுத்தப்பட்ட காலஎல்லையையே கொண்டது.

அதுமட்டுமன்றி, போருக்குப் பிந்திய மீறல்கள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

அவை பற்றியும், இந்த விசாரணை கவனத்தில் கொள்ளப் போவதில்லை.

எனவே, ஐ.நாவின் தற்போதைய விசாரணை முயற்சியானது, தமிழரின் மனவடுக்களை அகற்றும் முழுமையான முயற்சியாக இருக்காது.

ஆழமாகப் பதிந்து போயிருக்கும் கசப்புணர்வை இப்போதைய விசாரணை முயற்சியால் களைந்து விடுவதற்கு வாய்ப்பில்லை.

அத்தகைய களைதல் இன்றி நல்லிணக்கத்தை உருவாக்க முடியாது.

எவ்வாறாயினும் முழுஅளவிலான சர்வதேச விசாரணை ஒன்றுக்கு பல தடைகள் இருக்கின்ற நிலையில், இந்த விசாரணையையே நம்பியிருக்க வேண்டிய நிலை தான் உள்ளது.

ஒருவகையில், இதற்காக தமிழர்கள் ஆறுதல் கொள்ளலாம்.

அது என்னவென்றால், முள்ளிவாய்க்காலில் மறைக்கப்பட்ட உண்மைகள் எல்லாமே நிரந்தரமாகப் புதைக்கப்பட்டு விடப்போவதில்லை, அவை முழுமையாக இல்லாது போனாலும், ஒருபகுதியாவது வெளிச்சத்துக்கும் வரப்போகிறது என்பதே அது.

- கபில்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல