செவ்வாய், 8 ஏப்ரல், 2014

மேற்குலக நாடுகளுக்கு இலாபம் தராத மலாலா முதலீடு

அண்­மைக்­கா­லங்­க­ளாக பாகிஸ்­தா­னிய 16 வயது பெண்­ணான மலா­லாவை அவ­தா­னித்து வரு­ப­வர்கள், அவர் ஒரு திறமை மிக்­கவர் என்­ப­தையும் அவ­ருக்கு அள­வுக்கு அதி­க­மாக மேற்­கத்­திய ஊட­கங்­களில் முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­ப­டு­கின்­றது என்­ப­தையும் அவர் கொடுக்கும் பேட்­டி­களில் அவ­ரது வாதத்­தி­றமை நம்ப முடி­யா­ன­தாக இருக்­கின்­றது என்­ப­தையும் மறுக்க முடி­யாது.



திட்­ட­மிட்டு உரு­வாக்­கப்­பட்­டாரா?

நாளுக்கு நாள் மலா­லாவின் பேட்டி கொடுக்கும் திறமை வளர்ந்து கொண்டு போனதைப் பார்க்கும் போது அவர் நன்கு திட்­ட­மிட்டுப் பயிற்­று­விக்­கப்­பட்டார் என்­பது தெளி­வா­கின்­றது.

அவரை நன்கு பயிற்­று­விப்­பதும் அள­வுக்கு அதிக முக்­கி­யத்­துவம் கொடுப்­பதும் அவர் ஒரு பரப்­பு­ரைக்­காகப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றாரா என்ற ஐயத்தை எழுப்­பு­கி­றது.

மலாலா அடிக்­கடி வலி­யு­றுத்­து­வது பெண்­களின் கல்­வி­யையே. தலிபான், அல் -கைதா போன்ற இஸ்­லா­மியப் போராளிக் குழுக்­க­ளுக்கும் இஸ்­லா­மிய சகோ­த­ரத்­துவ அமைப்பு, மித­வாத அமைப்­புக்­க­ளுக்கும் பல­வீ­ன­மான மைய­மாக அவற்றின் பெண்­களின் கல்வி தொடர்­பான கொள்கை இருக்­கி­றது.

அந்தப் பல­வீ­ன­மான மையத்தில் தாக்க மலாலா பாவிக்­கப்­ப­டு­கின்­றாரா என்ற ஐயம் நியா­ய­மா­னதே. பாகிஸ்­தானின் ஆப்­கா­னிஸ்­தா­னு­ட­னான எல்லைப் பிர­தே­சத்தில் சுவட் பள்­ளத்­தாக்கில் பிறந்­தவர் மலாலா யூசுப்சாஜ்.

மலா­லா­விற்கு மட்டும் மனி­தா­பி­மா­னமா?

பாகிஸ்­தானின் வாரிஸ்தான் பகு­தியில் இரு இனக் குழு­மங்­க­ளுக்கு இடையில் ஏற்­பட்ட ஒரு நிலப் பிணக்கைத் தீர்த்து வைக்க ஒரு கூட்டம் நடந்து கொண்­டி­ருந்­தது. அது இஸ்­லா­மியத் தீவி­ர­வா­தி­களின் கூட்டம் எனக் கருதி அமெ­ரிக்க ஆளில்லா விமா­னங்கள் அவர்கள் மீது குண்­டு­களை வீசின. அப்­போது பல அப்­பா­விகள் கொல்­லப்­பட்­டனர்.

காயப்­பட்­டனர். இவர்­க­ளுக்கு மருத்­துவச் சிகிச்­சை­ய­ளிக்க எந்த ஒரு மேற்கு நாடும் முய­ல­வில்லை. ஆனால் மலா­லா­விற்கு மட்டும் சிறந்த சேவை செய்­தது பிரித்­தா­னியா

பி.பி.சி.யில் ஆரம்­பித்த மலாலா

மலா­லா­விற்கு கொடுக்­கப்­படும் முக்­கி­யத்தும் அவர் மீது சூடு விழுந்த பின்னர் ஆரம்­பித்­தது அல்ல. அவர் 11வய­தாக இருக்கும் போதே 2009-ம் ஆண்டு பி.பி.சி.யின் உருது மொழிப் பிரிவின் பதிவுப் பகு­தியில் (Blog) தலி­பான்­களின் கீழ் வாழ்க்கை என்­பது பற்றி எழுதி வந்தார். இதனால் பிர­ப­ல­ம­டைந்த மலாலா பற்­றிய ஆவ­ணப்­ப­டத்தை அமெ­ரிக்­காவின் பிர­பல ஊடகம் ஒன்று தயா­ரித்­தது.

இதனால் பி.பி.­சியில் எழு­தி­ய­வரை இனம் கண்டு கொண்ட தலி­பான்கள், மலா­லா­வையும் அவ­ரது இட­து­சாரிக் கொள்­கை­யு­டைய தந்­தை­யையும் தமது எதி­ரிகள் பட்­டி­யிலில் இணைத்துக் கொண்­டனர். பின்னர் 2012ஆ-ம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் மலாலா பேரூந்தில் பாட­சா­லையில் இருந்து வீடு திரும்பிக் கொண்­டி­ருக்­கையில் தலையில் சுடப்­பட்டார்.

பின்னர் அவர் பிரித்­தா­னிய பெர்­மின்ஹம் நகரில் உள்ள ராணி எலி­சபெத் மருத்­துவ மனைக்கு எடுத்துச் செல்­லப்­பட்டு காப்­பாற்­றப்­பட்டார். இதைத் தொடர்ந்து ஐக்­கிய நாடுகள் சபையின் உலகக் கல்­விக்­கான சிறப்புத் தூது­வ­ரான முன்னாள் பிரித்­தா­னியப் பிர­தமர் கோர்டன் பிரவுன் உலகில் எல்­லோ­ருக்கும் கல்வி என்ற பரப்­பு­ரையை ஆரம்­பித்தார்.

பிர­பல புள்­ளி­யானார் மலாலா.

மலாலா, அமெ­ரிக்க ரைம்ஸ் சஞ்­சி­கையின் உலகில் செல்­வா­ககுச் செலுத்தக் கூடிய 100 புள்­ளி­களுள் ஒரு­வ­ராக இணைக்­க­பட்டார். ஐக்­கிய நாடுகள் சபையில் உரை­யாற்­றினார். பல அமைப்­புக்கள் அவ­ருக்கு விரு­து­களும் பரி­சு­களும் வழங்­கின. மேற்கு நாடு­களின் எல்லா முன்­னணி ஊட­கங்­களும் அவரைப் பேட்டி கண்­டன. மலா­லாவின் ஓவி­யங்கள் பிர­பல ஓவி­யர்­களால் வரை­யப்­பட்­டன. நோபல் பரி­சுக்கு மலாலா பரிந்­துரை செய்­யப்­பட்டார். உலக வங்­கியில் உரை­யாற்­றினார்.

பிரித்­தா­னிய அர­சியின் அரண்­ம­னைக்குச் சென்று அர­சியைச் சந்­தித்தார். வெள்ளை மாளிகை சென்று பராக் ஒபா­மாவைச் சந்­தித்தார். அவர் பல மில்­லியன் பிரித்­தா­னியப் பவுண்­களைப் பெற்றுக் கொண்டு "நான்தான் மலாலா" என்ற புத்­த­கமும் எழு­தினார். இவ்­வ­ளவும் ஒரு 16 வய­துப்­பெண்ணால் ஓர் ஆண்­டு­க­ளுக்குள் சாதிக்க முடிந்­தது.

பாகிஸ்­தானில் நாளுக்கு நாள் மலாலா பிர­ப­ல­ம­டைந்து வரு­கின்றார். இந்­திய ஊடகம் ஒன்­றிற்குப் பேட்­டி­ய­ளித்த மலாலா, தான் பாகிஸ்­தானின் தலைமை அமைச்­ச­ராக வர விரும்­பு­வ­தா­கவும் தான் இந்­திய பாகிஸ்­தா­னிய உறவை மேம்­படுத்­துவதாகவும் சொன்னார். தலைமை அமைச்­ச­ராக தனது முக்­கிய பணி பெண்­க­ளுக்­கான கல்­வி­யா­கவே இருக்கும் என்­கிறார்.

ஆனாலும் மலா­லா­விற்கு மேற்கு நாடு­களின் அர­சு­களும் ஊட­கங்­களும் கொடுக்கும் முக்­கி­யத்­து­வத்தை பல பாகிஸ்­தா­னி­யர்­களும் மற்றும் உல­கெங்கும் வாழும் இஸ்­லா­மி­யர்­களும் ஐயத்­துடன் பார்க்­கின்­றனர். மலா­லாவை இஸ்­லா­மிய மதத்­திற்கு எதி­ரான பரப்­புரைக் கரு­வி­யாக்கி விட்­ட­னரா என்ற கேள்வி எழுந்­து­விட்­டது.

ஆனால் இஸ்­லா­மியத் தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ரான ஒரு பரப்­புரைக் கரு­வி­யாக அவர் பார்க்­கப்­ப­டு­கின்றார். தான் சுடப்­பட்­ட­வுடன் பல பெண்கள், நான்தான் மலாலா என்ற பதா­கை­யுடன் பாகிஸ்தான் தெருக்களில் நின்­றார்கள் ஆனால் நான்தான் தலிபான் என்ற பதா­கை­யுடன் யாரும் தெருவில் இறங்­க­வில்லை என்­கின்றார் மலாலா. ஒரு பாகிஸ்­தா­னிய ஊடகர் மலாலா உல­கி­லேயே மிகப்­பெ­ரிய மக்கள் தொடர்பு நிறு­வ­னத்தால் நிர்­வ­கிக்­கப்­ப­டு­கின்றார் என்கிறார்.

இன்­னொரு இந்­திய ஊடகர், மலா­லாவை தகாத வார்த்­தை­களால் விமர்­சித்து பாகிஸ்தான் போன்ற ஒர் ஊழல் நிறைந்த நாட்­டுக்கு ஊழலில் உரு­வான மலாலா தலைமை அமைச்­ச­ராக வரு­வ­தற்கு எல்லாத் தகு­தி­களும் உடை­யவர் என்றார்.

பாகிஸ்தான், பங்­க­ளா­தேசம், இந்­தியா போன்ற பல நாடு­களில் உள்ள படித்த இட­து­சாரிக் கொள்­கை­யு­டை­ய­வர்­களும் மலா­லாவை வெறுக்க ஆரம்­பித்து விட்­டனர். அவர்கள் மலா­லாவை ஏகா­தி­பத்­தி­ய­வா­தி­களின் பக­டைக்­கா­யாகப் பார்க்­கின்­றனர்.

மலா­லாவால் காது குத்­தப்­பட்ட பிரெஸ் டி.வி.

மலா­லாவை சி.ஐ.ஏ. பாவிக்­கின்­றது என்ற செய்தி பாகிஸ்­தானில் தீவி­ர­மாக அடி­பட்­டுக்­கொண்­டி­ருக்கும் போது, பாகிஸ்­தானின் பிர­பல ஆங்­கி­லப் ­பத்­தி­ரி­கையான் "டௌன்" மலாலா பற்­றிய ஒரு கதையை வெளி­யிட்­டது. அக்­க­தையின் படி: மலாலா ஹங்­கே­ரியில் ஒரு கிறிஸ்­தவ மடத்தில் பிறந்த கிறிஸ்­தவர்.

அவரை அவ­ரது தந்தை தத்து எடுத்தார். மலாலா சிறு வய­தாக இருக்கும் போது காது வலிக்­காக அவ­ருக்கு சிகிச்சை அளித்த மருத்­துவர், மலா­லாவின் காதுக் குடு­மியை(Ear wax) ஒரு குப்­பியில் எடுத்துப் பாது­காப்­பாக வைத்­தி­ருந்தார்.

அவ­ரது பொழுது போக்கு தன்­னிடம் சிகிச்­சைக்கு வரு­ப­வர்­களின் காதுக் குடு­மியைச் சேக­ரிப்­பது. மலா­லாவின் காதுக் குடு­மியில் செய்த டி.என்.ஏ. பரி­சோ­த­னையின் படி அவர் ஒரு கிழக்கு ஐரோப்­பியர் என்­பது உறு­தி­யாகி விட்­டது.

அவரைச் சுட்­டது தலிபான் அல்ல சி.ஐ.ஏ.யே. இப்­படிப் போனது அந்தக் கதை. இதை உண்மை என நம்­பிய ஈரானின் பிரெஸ் டி.வி. அதைப் பெரிய செய்­தி­யாக்­கியது. பின்னர் "டௌன்" பத்­தி­ரிகை தனது கதையை "யாவும் கற்­பனை" எனச் சொன்­னது. ஆனால் மலா­லா­விற்கு எதி­ரான பரப்­பு­ரையைத் திசை­தி­ருப்­பவே "டௌன்" பத்­தி­ரிகை இப்­படிச் செய்­தது எனவும் விவா­திக்­கலாம்.

பல­வீ­ன­ம­டை­யாத தலிபான்

2011-ஆம் ஆண்டு அமெ­ரிக்க ஊட­கங்கள் தலி­பான்கள் ஒரு காத்­தி­ர­மான தாக்­கு­தலை ஆப்­கா­னிஸ்­தானில் செய்ய இய­லாத அள­விற்குப் வலு­வி­ழந்து விட்­டனர் என விமர்­சித்­தன. ஆனால் 2014-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இரு­பெரும் தாக்­கு­தல்­களை தலி­பான்கள் ஆப்­கா­னிஸ்­தானில் செய்­தனர்.

அமெ­ரிக்கப் படைகள் ஆப்­கா­னிஸ்­தா­னி­லி­ருந்து வெளியேறும் வரை தலிபான்கள் காத்திருக்கின்றனர். அதன் பிறகுதான் அவர்கள் வலுபற்றி அறிய முடியும்.

வட அமெரிக்க நாடுகளும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் தலிபான்களின் செல்வாக்கைச் சரிக்க மலாலாவில் செய்த முதலீடு இலாபமளிக்கவில்லை என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வாய்ப்புண்டு.

அமெரிக்காவின் ஆளில்லாப் போர் விமானங்கள் அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்தியவற்றிற்கு எதிராக தனது கருத்தைத் தெரிவித்திருந்தார். ஆனால், அவரது பரப்புரை போதியதாக இல்லை. மலாலா அடுத்த பெனாஸிர் பூட்டோ எனவும் விமர்சிக்கப்படுகிறார். பெனாஸிரைப் போலவே மலாலாவின் வாழ்க்கைப் பயணம் ஆபத்து மிக்கதாகவும் சாதனை நிறைந்ததாகவும் அமையப்போகிறது.

-வேல் தர்மா-
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல