செவ்வாய், 8 ஏப்ரல், 2014

இலங்கையைத் தண்டிக்குமா அமெரிக்கா

ஜெனீ­வாவில் இலங்­கைக்கு எதி­ரான தீர்­மா­னத்தை அமெ­ரிக்கா கொண்டு வந்து நிறை­வேற்­றிய சில நாட்­களில், கொழும்பில் அமெ­ரிக்க பாது­காப்புத் திணைக்­க­ளத்தின் ஏற்­பாட்டில் ஒரு பாது­காப்புக் கருத்­த­ரங்கு ஆரம்­பிக்­கப்­பட்­டது.



அமெ­ரிக்­காவின் பசுபிக் கட்­டளை பீடமும், இலங்கை பாது­காப்பு அமை ச்சின் கூட்­டுப்­படைத் தலை­மை­ய­கமும் இணைந்து ஒழுங்கு செய்த- Tempest Express – 24 என்ற இந்தப் பாது­காப்புக் கருத்­த­ரங்கு கடந்த 1ஆம் திகதி தொடக்கம் கல­தாரி விடு­தியில் நடந்து வரு­கி­றது.

வரும் 9ஆம் திகதி வரை தொடரும் இந்தப் பாது­காப்புக் கருத்­த­ரங்கில், இலங்கை மற்றும் அமெ­ரிக்க பாது­காப்பு அதி­கா­ரிகள் தான் அதி­க­ளவில் பங்­கேற்­றுள்­ளனர்.

இவை தவிர, சுமார் 15 நாடு­களின் பாது­காப்பு அதி­கா­ரி­களும் கண்­கா­ணிப்­பா­ளர்­க­ளாக இதில் பங்­கேற்­கின்­றனர். இதனை ஒன்றும் மிக முக்­கி­யத்­துவம் வாய்ந்த பாது­காப்புக் கருத்­த­ரங்கு என்று கூற முடி­யாது.

இயற்கை அனர்த்­தங்கள் மற்றும் மனி­தனால் ஏற்­ப­டுத்­தப்­படும் அனர்த்­தங்­களை எதிர்­கொள்­வது பற்­றிய ஒரு பயிற்சிப் பட்­ட­றைதான் இது.

ஆயுத தள­பா­டங்கள் பற்­றிய விளக்­கங்­க­ளுக்கோ, போர் உத்­திகள் பற்­றிய ஆலோ­ச­னை­க­ளுக்கோ இதில் இட­மில்லை.எல்­லாமே, அனர்த்த முகா­மைத்­துவ திட்­ட­மிடல் சார்ந்த பயிற்­சி­களும் விளக்­கங்­களும் தான்.

ஆனாலும், இலங்கைப் பாது­காப்பு அமைச்­சுடன் இணைந்து அமெ­ரிக்கா நடத்தும், இந்தக் கருத்­த­ரங்கை பலரும் வியப்­புடன் நோக்­கி­யது ஆச்­ச­ரி­ய­மா­னதே.

“இலங்­கை­யுடன் அமெ­ரிக்கா ஜெனீ­வாவில் மோதல் – கொழும்பில் கூடல்" என்று ஊட­கங்­களில் வெளி­யான செய்தி, பல­ரது கண்­க­ளையும் கவர்­வ­தற்­கான தலைப்­பாக அமைந்­தி­ருக்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை ஆனால், அத­னூ­டாகச் சொல்ல முனைந்த செய்­தியின் பரி­மாணம் யதார்த்­தத்­துக்கு முர­ணா­னது.

அதா­வது ஜெனீ­வாவில், இலங்­கைக்கு எதி­ரான தீர்­மா­னத்தைக் கொண்டு வந்த அமெ­ரிக்கா, இலங்­கை­யுடன் இணைந்து பயிற்சி நடத்­து­கி­றது என்­பதன் ஊடாக, அமெ­ரிக்கா இரட்டை வேடம் போடு­வ­தான கருத்தை உரு­வாக்க ஊட­கங்கள் பலவும் முயன்­றதைக் காண­மு­டி­கி­றது.

ஆனால், அமெ­ரிக்­காவை சரி­யாக விளங்கிக் கொள்­ளா­த­வர்­க­ளுக்கே அது ஆச்­ச­ரி­ய­மா­ன­தா­கவோ அதிர்ச்­சி­யா­ன­தா­கவோ இருந்­தி­ருக்கும்.

ஏனென்றால், இலங்­கை­யுடன் அமெ­ரிக்கா மோதல் போக்கை கடைப்­பி­டிக்­கி­றது என்­பதோ, அத்­த­கைய நிலைக்கு இட்டுச் செல்ல முனை­கி­றது என்­பதோ தவ­றான கருத்து. இலங்­கையை தன் பக்­கத்தில் இழுத்து வைத்துக் கொள்­வது என்­பது அமெ­ரிக்­கா­வி­னது தந்­தி­ரோ­பா­யமே தவிர, அதனை விட்டு ஒதுங்கி நிற்­பதோ, அதனை தனது நிழலில் இருந்து விரட்டி விடு­வதோ அமெ­ரிக்­கா­வி­னது இலக்கு அல்ல.

அமெ­ரிக்­கா­வி­னது இந்த இலக்­கினை சரத் பொன்­சே­காவின் ஜன­நா­யக கட்சி, ஐ.தே.க, முஸ்லிம் காங்­கிரஸ் போன்­றன தெளி­வாகப் புரிந்து கொண்­டுள்­ளன என்­பதை, ஜெனீவா தீர்­மானம் தொடர்­பாக அவை வெளிப்­ப­டுத்­தி­யுள்ள கருத்­து­களில் இருந்து புரிந்­து­கொள்ள முடி­கி­றது.

அதா­வது, ஜெனீவா தீர்­மானம் என்­பது இலங்கை என்ற நாட்­டுக்கு எதி­ரா­னது அல்ல என்றும், அது இலங்கை ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு மட்­டுமே எதி­ரா­னது என்றும் இந்தக் கட்­சிகள் தெரி­வித்­துள்­ளன.

இந்­தியப் பெருங்­க­டலில், கேந்­திர முக்­கி­யத்­துவம் மிக்க இடத்தில் அமைந்­துள்ள இலங்கைத் தீவை தனது விரோ­தி­யாக்கிக் கொள்­வ­தற்கு அமெ­ரிக்கா ஒரு­போதும் விரும்­பாது.

அந்த உண்­மையை, கொழும்பு அர­சியல் கட்­சிகள் மத்­தியில் அமெ­ரிக்கா நன்­றா­கவே தெளி­வு­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது என்­பதை, ஜெனீவா தீர்­மா­னத்­துக்கு எதிர்க்­கட்­சிகள் மத்­தியில் பெரும் எதிர்ப்புத் தோன்­றா­ததை வைத்தே உணர முடி­கி­றது.

இந்த விளக்­கத்தை ஏற்­ப­டுத்த அமெ­ரிக்கா கடு­மை­யாக பணி­யாற்­றி­யி­ருக்கும் என்­பதில் ஐய­மில்லை.

ஏனென்றால், சிங்­களத் தேசி­ய­வா­தத்தை தட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான ஒரு கரு­வி­யா­கவே இலங்கை அர­சாங்கம் ஜெனீவா தீர்­மா­னத்தை பயன்­ப­டுத்த முனைந்­தது.

இத்­த­கைய சூழ­லிலும், கொழும்பு அர­சியல் கட்­சிகள் மத்­தியில் அமெ­ரிக்கத் தீர்­மா­னத்தை சரி­யாக விளங்கிக் கொள்ளும் நிலை காணப்­பட்­டது.

இது அமெ­ரிக்­கா­வுக்கு சாத­க­மா­ன­தொரு விடயம்.

அமெ­ரிக்­காவைப் பொறுத்­த­வ­ரையில், இலங்­கை­யிடம் எதிர்­பார்ப்­பது நிலை­யான அமை­திக்கும், நல்­லி­ணக்­கத்­துக்­கு­மான சூழலை உரு­வாக்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களைத் தான். அந்த எதிர்­பார்ப்பை நிறை­வேற்­றத்­தக்க நிலையில் இந்த அர­சாங்கம் இல்­லாத கார­ணத்­தினால் தான், அதனை தன் வழிக்குக் கொண்டு வரு­வ­தற்கு பல்­வேறு வழி­க­ளையும் கையாள முற்­ப­டு­கி­றது.

அதில் ஒன்று தான் ஜெனீவா ஊடாக கொடுக்­கப்­படும் அழுத்தம்.

அமெ­ரிக்கா மற்றும் மேற்­கு­ல­கி­னது கரி­ச­னை­களைக் கருத்­தி­லெ­டுத்து, அவற்றின் எதிர்­பார்ப்பை நிறை­வேற்ற அர­சாங்கம் தயா­ராக இருக்­கு­மே­யானால், சீனா, பாகிஸ்தான், ரஷ்யா போன்ற நாடு­களை விடவும், இலங்­கைக்கு வலு­வான கவ­ச­மாக அமெ­ரிக்கா மாறி­விடும். ஆனால், அர­சாங்கம் வேறு வித­மாக சிந்­திக்­கி­றது.

மேற்­கு­ல­கி­னது எதிர்­பார்ப்­புக்­க­மைய நடந்து கொள்ள முனைந்தால், அது தனது கால­டிக்குக் கீழ் குழி தோண்­டு­வ­தற்கு சம­மாகி விடும் என்று அது கரு­து­கி­றது.

போர் நடந்த காலப்­ப­கு­தியில் இடம்­பெற்ற சம்­ப­வங்­க­ளுக்குப் பொறுப்புக் கூற­வைக்கும் சுதந்­தி­ர­மான விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­ப­தா­னது, ஆட்­சியில் உள்ள அர­சாங்­கத்தை படு­கு­ழிக்குள் தள்­ளி­விடும்.

எனவே தான், அமெ­ரிக்கா பக்கம் சாயாமல் சீனா-, ரஷ்­யாவின் நிழலில் நிற்க விரும்­பு­கி­றது இலங்கை அர­சாங்கம். அதற்­காக, இலங்­கையைத் தண்­டிக்கும் அள­வுக்கு அமெ­ரிக்கா முடி­வு­களை எடுக்­கவோ, நட­வ­டிக்­கை­களில் இறங்­கவோ இல்லை.

இப்­போது, ஜெனீ­வாவில் கொண்டு வரப்­பட்ட தீர்­மானம் கூட இலங்­கையைத் தண்­டிப்­ப­தற்­கா­னது அல்ல, இலங்­கைக்கு உத­வு­வ­தற்­கா­னதே என்று அமெ­ரிக்­காவும் மேற்கு நாடு­களும் திரும்பத் திரும்பக் கூறு­வதை அவ­தா­னிக்­கலாம்.

இலங்கை அர­சாங்கம் நிரா­க­ரிக்கும் ஒரு தீர்­மா­னத்தை நிறை­வேற்றிக் கொண்டே, அது இலங்­கைக்கே பய­ன­ளிக்கும் என்று மேற்கு நாடுகள் கூறு­வது சற்­றுக்­கு­ழப்­பத்தை ஏற்­ப­டுத்­தலாம். ஆனால், உண்மை அது தான்.

அதா­வது, இலங்­கைக்கு எதி­ரான எந்த நகர்­வையும் இந்த தீர்­மானம் வெளிப்­ப­டுத்­த­வில்லை.

ஆனால், இது இலங்கை அர­சாங்­கத்­துக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தக் கூடிய ஒன்று.

இலங்கை அரசு என்­பது வேறு. அதை நிர்­வ­கிக்கும் அர­சாங்கம் என்­பது வேறு.

இலங்கை அரசை நிர்­வ­கிக்கும் மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்­துக்கு இந்த தீர்­மா­னத்­தினால் பாதிப்பு ஏற்­ப­டலாம் என்ற போதிலும், அது இலங்கை அர­சுக்கு நன்­மை­யையே அளிக்கும் என்­பதே மேற்­கு­லக கருத்­தாக உள்­ளது. அதா­வது, நல்­லி­ணக்­கத்­தையும், பொறுப்­புக்­கூ­ற­லையும் இலங்கை அர­சாங்கம் நிறை­வேற்­றினால், அது இலங்­கையின் எதிர்­கா­லத்­துக்கு சாத­க­மாக அமையும் என்றே மேற்­கு­லகம் கரு­து­கி­றது,

ஆனால், அர­சாங்­கமோ அது தமக்குப் பாத­க­மாக அமையும் என்று அச்சம் கொள்­கி­றது.

இதனால் தான், அமெ­ரிக்­கா­வுடன் அது முட்டி மோது­கி­றது. ஆனாலும், அமெ­ரிக்­காவைப் பொறுத்­த­வ­ரையில் இலங்­கை­யு­ட­னான பாது­காப்பு உற­வு­களைத் துண்­டிக்கும் அள­வுக்குச் செல்ல முனை­ய­வில்லை.

அதனால் தான், எந்தச் சிக்­க­லு­மின்றி கொழும்பில் பாது­காப்புக் கருத்­த­ரங்கை நடத்தி வரு­கி­றது அமெ­ரிக்கா.

இது­மட்­டு­மன்றி, வேறும் பல பாது­காப்பு ஒத்­து­ழைப்புத் திட்­டங்­க­ளையும் அமெ­ரிக்கா நடை­மு­றைப்­ப­டுத்தி வரு­கி­றது.

பசுபிக் கட்­டளைப் பீடமே இந்த பாது­காப்பு ஒத்­து­ழைப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­கி­றது- கண்­கா­ணிக்­கி­றது.

எனினும், ஜெனீவா தீர்­மா­னத்­துக்கு முன்­ன­தாக வடக்கில் மூன்று பாட­சா­லை­களை முழு அளவில் வச­தி­களைக் கொண்­ட­தாக புன­ர­மைக்கும் திட்டம் ஒன்றை பசுபிக் கட்­ட­ளைப்­பீடம் முன்­வைத்­தி­ருந்த போதிலும் அதை அமைச்­ச­ரவை நிரா­க­ரித்­தி­ருந்­தது.

ஆனால் பின்னர், அர­சாங்கம் அந்த திட்­டத்தை மறு­ப­ரி­சீ­ல­னைக்கு எடுத்துக் கொள்ள முன்­வந்­ததும் குறிப்­பி­டத்­தக்­கது.

இப்­போதும் கூட, அமெ­ரிக்கா - இலங்கை பாதுகாப்பு உறவுகளுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையிலான எந்த சம்பவமும் நிகழ்ந்து விட்டதாகக் கூறிவிட முடியாது.

ஆனால், இந்த நிலைமை நிரந்தரமானது என்று உறுதிப்படுத்த முடியாது.

ஏனென்றால், ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கம் இடமளிக்க மறுத்தால்- அதாவது சர்வதேச விசாரணைக் குழுவை அனுமதிக்க மறுத்தால், இலங்கை மீதான பிடியை மேற்குலகம் இறுக்க வேண்டியிருக்கும்.அது இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பில் விரிசல்களைக் கொண்டு வரலாம்.

ஆனாலும், முடிந்­த­வ­ரைக்கும் அமெ­ரிக்கா அத்­த­கைய உற­வு­களைத் துண்­டிக்­காமல் வேறு வழி­க­ளி­லேயே இலங்­கையை வழிக்குக் கொண்டு வரு­வ­தற்கு முயற்சிக்கும். ஏனென்றால், இலங்கையின் கேந்திரத் தன்மையின் முக்கியத்துவத்தையும்,அதன் மீதான பிடியையும் அமெரிக்கா அவ்வளவு இலகுவாக விட்டுக் கொடுத்து விடாது.

ஹரிகரன்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல