இன்டர்நெட் எக்ஸ்புளோரர் உள்ள பிழையான குறியீடு வழியாகப் பரவி வரும் மால்வேர் மற்றும் வைரஸ் குறித்து, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசுகள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது மைக்ரோசாப்ட் அதற்கான பேட்ச் பைலை, தன் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.
உங்களுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டம் தானாக அப்டேட் செய்திடும் வகையில் இயக்கப்பட்டிருந்தால், இந்நேரம் உங்களுடைய கம்ப்யூட்டரில் இந்த பேட்ச் பைல் தானாக இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும்.
இதில் என்ன சிறப்பு என்றால், தான் சப்போர்ட் தர முடியாது எனக் கைவிடப்பட்ட எக்ஸ்பி சிஸ்டத்திற்கும் சேர்த்து, மைக்ரோசாப்ட் பேட்ச் பைலை வெளியிட்டுள்ளது.
சென்ற வியாழக் கிழமை மே 1 அன்று இந்த பேட்ச் பைல் வெளியிடப்பட்டது. எக்ஸ்பிக்கும் சேர்த்து இந்த பேட்ச் பைல் வெளியிடப்பட்டாலும், விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 சிஸ்டம் பயன்படுத்துபவர்கள், கட்டாயமாக இன்டர்நெட் எக்ஸ் புளோரர் பதிப்பு 11க்கு மாறிக் கொள்ள வேண்டும் என இந்த பேட்ச் பைல் வெளியீட்டின் போது தன் இணைய தளத்தில் மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக