இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசு உறுதுணையாக இருக்கும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் புதிய பிரதமராக நேற்று மாலை 6 மணிக்கு நரேந்திர மோடி பதவியேற்றதன்பின் சார்க் நாடுகளின் தலைவர்களது வாழ்த்துக்கள் பரிமாறப்பட்டன.
இதன் வரிசையில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
அங்கு அவர் வாழ்த்தி உரையாற்றுகையில், புதிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஊக்கம் அளிக்கும் தலைமைத்துவத்தை பாராட்டுகின்றேன்.
நரேந்திர மோடியின் அர்ப்பணிப்புக் காரணமாகவே அவருக்கு வெற்றியை இந்திய மக்கள் பரிசாக வழங்கியுள்ளனர் அந்த வெற்றி இந்திய அரசியலின் அபிலாசைகளை பூரணப்படுத்தும் என நான் நம்பிக்கை தெரிவிக்கிறேன்.
மாற்றம் ஒன்றை கருதியே இந் திய மக்கள் மாற்றம் ஒன்றை கருதியே இந்திய மக்கள் நரேந்திர மோடியை தெரிவு செய்துள்ளனர்.
இந்தநிலையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு தொடர்ந்தும் தீர்க்கமானதாக இருக்கும்.
இலங்கையின் தற்போது பயங்கரவாத சூழல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு சமாதானம் நிலவுகின்றது.
பயங்கரவாதத்தை இல்லா தொழிக்க இந்தியாவின் நடவடிக்கைகள் முக்கியமானவை.
மேலும் புதுடில்லியின் பயங்கவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்;கு கொழும்பு துணையாக இருக்கும் எனவும் ஜனாதிபதி மகிந்த தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடன் அவரின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளி விவகார அமைச்சர் ஜி.எல்.பீரீஸ், நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன, வெளிவிவகார செயலாளர் சேனுகா செனி விரத்ன, அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோருடன் யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜாவும் புதுடில்லி சென்றுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி மகி ந்த ராஜபக்ஷவின் இந்திய வருகையைக் கண்டித்து டில்லியில் கறுப்புக் கொடி ஏந்தி தமிழக கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உட்பட கட்சி தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்றுக் காலை 11 மணி அளவில் வைகோ தனது ஆர்;ப்பாட்டத்தை தொடங்கினார். இதில் ம.தி. மு.க தொண்டர்கள் தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த மாணவர்கள் பலர் கறுப்புக் கொடியுடன் கலந்து கொண்டனர்.
மேலும் மகிந்த வருகையைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் நேற்று சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே மாபெரும் கண்டன முற்று கைப் போராட்டம் நடைபெற்றது.
இதில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
அத்தோடு இந்திய அரசின் அலு வலகமான சாஸ்திரி பவன் நேற்று காலை 10 மணியளவில் பாலச் சந்திரன் மாணவர் இயக்கத்தினரால் முற்றுகையிடப்பட்டது.
இவ் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறை யினர் கைது செய்தனர்.
மோடி பதவி ஏற்பு விழாவிற்கு இலங்கை ஜனாதிபதி இந்தியாவிற்குள் வருவதை கண்டித்தும், பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவில் மகிந்த ராஜபக்ஷ பங்கேற்பதை கண்டித்தும் மாணவர் இளையோர் இயக்கம் சார்பிலும் சென்னை பாரிமுனை குறளகம் அருகில் ராஜபக்ஷவின் உருவப்பொம்மையை எரித்தும் சாலை மறியலில் ஈடுபட்டும் கறுப்புக்கொடி ஏந்தியும் மாணவர்கள் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக