திங்கள், 26 மே, 2014

வடக்கில் தோன்றும் நம்பிக்கை எனும் மங்கிய ஒளிக்கீற்று (2)


வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள காணிப் பிரச்சினைகள்

ஐந்து வருடங்களுக்கு முன்பு யுத்தம் முடிந்துவிட்டாலும் காணிப் Sri-Lankan-ethnicபிரச்சினை குறிப்பாக இராணுவம் ஆக்கிரமித்துள்ளவை மற்றும் உள்ளக இடம் பெயர்ந்தவர்களது காணிகள் பற்றிய விடயம்தான் விவாதத்துக்குரிய முக்கிய தலைப்பாக இடம்பெற்று வருகிறது. மே, 2009ல் யுத்தம் நிறைவடைந்து விட்டாலும், 300,000 க்கும் அதிகமான உள்ளக இடம் பெயர்ந்தவர்களை மீளக் குடியேற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது. எனினும் அரசாங்கத்தின் புள்ளி விபரங்கள் பெரும்பாலான உள்ளக இடம் பெயர்ந்தவர்கள்; மீளக் குடியமர்த்தப்பட்டு விட்டார்கள் எனத் தெரிவிக்கிறது, மற்றும் ஒன்றில் அவர்களின் சொந்த நிலங்கள் திரும்ப வழங்கப்பட்டு விட்டது அல்லது அதில் வீடமைப்பு மேற்கொள்ளப் பட்டுள்ளது அல்லது வேறு இடத்தில் குடியமர்த்தப்பட்டு விட்டார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. ஆயினும் பலாலியில் உயர் பாதுகாப்பு வலயம் அமைப்பதற்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளின் உடமையாளர்களான குடும்பங்கள் வடக்கு முழுவதும் சிதறிக் கிடக்கும் 34 இடங்களில் அமைந்துள்ள தற்காலிகக் கிராமங்களில் வாழ்ந்து வருகிறார்கள். வட மாகாண பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் உதய பெரேரா சண்டே லீடரிடம் தெரிவிக்கையில், இதுவரை 1,223 குடும்பங்கள் சிதறிக் கிடக்கும் நலன்புரி நிலையங்களில் இன்னமும் வாழ்ந்து வருகிறார்கள். இந்த நலன்புரி நிலையங்கள் அமைந்துள்ள காணிகள் தனியார்களுக்கு சொந்தமானவை எனச் சொன்னார். இந்த 1,223 குடும்பங்களில் 415 குடும்பங்கள் மட்டுமே தங்கள் காணிகளுக்கு சொந்தக்காரர்களாக உள்ளனர்.

'எனினும் காணியை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் மற்றவர்களுக்கு நன்றாக திட்டமிடப் பட்டுள்ள நகரப்பகுதியில் மாற்றுக் காணிகளை வழங்கவும் அரசாங்கம் திர்மானித்துள்ளது. உயர் பாதுகாப்பு வலயத்தில் காணிகளை இழந்தவர்களுக்கு அந்த படைப்பிரிவின் ஒரு பகுதியில குடியிருக்க நிலம் வழஙகுவதென்றும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.' என அவர் விளக்கமளித்தார்.

மல்லாகம் கோணப்பலம் பகுதியில் அமைந்துள்ள மீள் குடியேற்றக் கிராமம் ஒன்றுக்கு விஜயம் செய்தபோது, இந்த முகாமில் வசிப்பவர்கள் வேலை வாய்ப்பு குறைவாக உள்ளதால் தாங்கள் பல இன்னல்களுக்கும் முகங்கொடுக்க வேண்டி உள்ளதாக சண்டே லீடரிடம் தெரிவித்தார்கள். பெரும்பான்மையான குடியிருப்பாளர்கள், ஒரு நாளைக்கு தங்கள் குடும்பத்தினருக்கு இரண்டு வேளை உணவு வழங்க முடிந்தாலே அது தங்களுக்கு கிடைத்துள்ள சலுகை எனக் கருதும் நிலையிலிருந்தார்கள். பெரும்பாலான சமயங்களில் தாங்கள் உயிர் வாழ்வதற்காக ஒரு நாளைக்கு ஒருவேளை உணவை மட்டுமே பெறுவதற்காக மிகவும் கஷ்டப்படுவதாக அங்கிருந்த குடியிருப்பாளர்கள் தெரிவித்தார்கள்.

அந்த கிராமத்தில் சிறிய பலசரக்கு கடையை நடத்திவரும் எம். குமாரி, தனது குடும்பம் காங்கேசன்துறையிலுள்ள மயிலிட்டியில் வாழ்ந்து வந்ததாகவும்,இப்போது அந்த இடம் இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்துக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டது என்றாள். 'எனக்கு நினைவிருக்கிறது நான் ஒரு குழந்தையாக இருந்தபொழுது எனது தகப்பன் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தார் மற்றும் அங்கு மண் உரமூட்டப்பட்டு பயிர்கள் செழித்து வளர்ந்திருக்கும், மீன்பிடித் தொழில்கூட ஒரு வெற்றிகரமான தொழிலாக அந்தப் பகுதியில் இடம் பெற்றிருந்தது. 16 ஜூன் 1990ல் கிட்டத்தட்ட பி.ப 4 மணியளவில் எல்.ரீ.ரீ.ஈ க்கும் பாதுகாப்பு படைகளுக்கும் இடையில் கடும் யுத்தம் நடந்ததால் நாங்கள் எங்கள் கிராமத்தை விட்டு வெளியேறும்படி கட்டாயப் படுத்தப் பட்டோம். அப்போது நான் 11 வயதான ஒரு சிறு பிள்ளையாக இருந்தேன்.

அதன்பின் நாங்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறி இங்கு குடியேறினோம்,ஆனால் இந்தக் காணி தனியார்களுக்குச் சொந்தமானது. இப்போது இந்த இடத்தை விட்டு வெளியேற எங்களுக்கு வெறும் மூன்றுமாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் எங்கே போவது? எங்கள் நிலங்கள் யாவும் இராணுவத்தால் எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டன, மற்றும் இன்று எங்களுக்கு சொந்தம் என்று சொல்ல ஓரிடமும் இல்லை. கடந்த 25 வருடங்களாக நாங்கள் இடம்பெயர்ந்து வாழுகிறோம், எங்கள் மனக்குறைகளை யாரும் செவிமடுப்பாரில்லை. எங்கள் சொந்த நிலங்களிலேயே நாங்கள் மறக்கப்பட்ட மனிதர்களாக உள்ளோம். நான் இப்போது திருமணம் செய்து 7 வயதான ஒரு மகளுக்குத் தாயாகவும் உள்ளேன்,நாங்கள் எந்த இடத்தை சேர்ந்தவர்கள் என்று அவள் கேட்கும் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை' என்று கூறி மேலும் மேலும் புலம்பினாள்.

ஜெயபாலன் என்பவர்,அந்தக் கிராமத்தை சேர்ந்த மற்றொரு குடியிருப்பாளர், அந்தக் கிராமத்தை நோக்கி அவாகள் ஓடி வந்தபோது அவர் 25 வயதான இளைஞராக இருந்தார். இப்போது தனது 48 வயதிலும் இன்னமும் வீடு என்று சொல்வதற்கான ஒரு இடத்தை தேடி அவர் ஆவலாகக் காத்திருக்கிறார். தேர்தல் காலங்களில் பல்வேறு அரசியல் கட்சியினராலும் பலவிதமான வாக்குறுதிகளும் வழங்கப்பட்டு வந்தாலும், இதுவரை அவர்களின் நிர்க்கதியான நிலமைக்காக யாரும் எதுவும் செய்யவில்லை என இந்த குடியிருப்பாளர்கள் கூறுகிறார்கள்.

எப்படியாயினும் பாதுகாப்பு படைத் தளபதி, இந்த மக்களை யாரும் மறந்துவிடவில்லை, மற்றும் அரசாங்கம் முழுதாக உருவாக்கப்பட்ட நகர நிர்மாணத்தை இந்த மக்களுக்காகந நிர்மாணித்து அவர்களை அங்கு மீள் குடியமர்த்த திட்டமிட்டுள்ளது. இடம் பெயர்ந்த ஒவ்வொரு குடும்பமும் அரசாங்கத்தால் மீள் குடியமர்த்தப்படும் எனத் தெரிவித்தார்.

மூதூர் - சம்பூர் பகுதியில் பிரதானமாக உள்ள மீள் குடியேற்றப் பிரச்சினைகள்.

இங்கு, 3,000 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உட்பட சுமார் 600 குடும்பங்கள் இன்னமும் உள்ளக இடம் பெயர்ந்தவாகளுக்கான முகாம்களில் உள்ளனர். மற்றும் அவர்கள் கிழக்கிலுள்ள கட்டைப்பறிச்சான், மடல்சேனை, கிளிவெட்டி மற்றும் பட்டித்திடல் போன்ற நான்கு வேறுபட்ட முகாம்களில் உள்ளார்கள். ரி.என்.ஏ பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனின் கூற்றுப்படி, மக்களால் அந்த பகுதிகளால் வசிக்க முடியாது, ஏனெனில் அவர்களது தற்காலிக வீடுகள் தகரங்களால் கட்டப்பட்டுள்ளன. :இவை தகரத்தால் வேயப்பட்ட நீண்ட கொட்டகைகள், பகல் வேளைகளில் அங்கு சூட்டை தாங்கிக் கொள்வது இயலாத காரியம், மற்றும் இதன் காரணமாக அநேக சிறுவர்கள் பொக்களிப்பான் நோயினால் பாதிப்படைந்துள்ளார்கள்;.

'மழை காலங்களி;ல் இந்தப் பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் துளைகள் வெடிப்புகள் வழியாக முகாம்களுக்குள் தண்ணீர் கசிகிறது. அரசாங்கம் இவர்களுக்கு வழங்கி வந்த உலர் உணவுப் பொருட்களைக்கூட கடந்த மூன்று வருடங்களாக நிறுத்தி விட்டதாகவும், மற்றும் வெளி வட்டாரங்கள் இவர்களுக்கு வழங்கும் உதவிகளையும் கூட வழங்கவிடாமல் தடுத்து நிறுத்துவதாகவும் இந்த மக்கள் கூறுகிறார்கள். இந்த முகாம்கள் அனைத்திலும் இராணுவ காவல் நிலையங்கள் உள்ளதால் முகாம்களுக்குள் நுழையும் எவரிடமும் இவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இந்த மக்களுக்கு எவரும் உதவி செய்வதை இராணுவத்தினர் தடுக்கிறார்கள். இந்த ஏழை மக்களுக்கு வேலையும் இல்லை உதவியும் இல்லை. அரசாங்கம் இந்த மக்களுக்கு சகல வசதிகளும் கிடைப்பதை தடுப்பது, இந்த இடத்தை விட்டு இந்த மக்கள் வெளியேறி வேறு இடங்களுக்கு செல்லவேண்டும் என்பதை கட்டாயப் படுத்துவதற்காகவே.' என்று அவர் கூறினார்.

பிரேமச்சந்திரன் சொல்வதின்படி சம்பூர் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியோருக்கு இடையில் சமீபத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டு உள்ளதாகவும், மற்றும் இந்த மக்களை மீளக் குடியேற்றுவதற்காக அரசாங்கம் 300 மில்லியன் ரூபாக்களை ஒதுக்கியுள்ளதாக செய்திகள் வெளிப்பட்டுள்ளன. 'ஆனால் எங்களுக்கு இந்தப் பணம் தேவையில்லை,எங்களுக்கு போவதற்கு இடமில்லை என்று இந்த மக்கள் சொல்கிறார்கள். அவர்கள் இங்கு பல தசாப்தங்களாக வாழ்ந்து வருகிறார்கள்,மற்றும் அவர்களின் நிலங்களுக்கு அவர்களிடம் உறுதிகள் உள்ளன, மற்றும் அவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பவே விரும்புகிறார்கள்' என்று அவர் மேsri-lanka-voteலும் சொன்னார்.

மருத்துவமனை வட்டாரங்களின் தகவல்களின்படி, மூதூர் மருத்துவமனையில் உள்ள சிறுவர்களும் மற்றும் நோயாளிகளும் இந்த முகாம்களில் உள்ள மக்களாகவே இருக்கிறார்கள். 'இது மிகவும் பரிதாபகரமான ஒரு நிலமை. கிட்டத்தட்ட 300 வரையான மக்கள் இந்த முகாம்களில் உள்ளனர். இது ஒரு உயர் பாதுகாப்பு வலயம் கிடையாது, அனால் அது பொருளாதார வலயமாக முத்திரையிடப் பட்டுள்ளது' என்கிறார் பிரேமச்சநதிரன். ரி.என்.ஏ யின்கூற்றுப்படி இந்த பொருளாதார பிரதேசத்தில் சில சக்தி வாய்ந்த உள்ளுர் கட்;சிகள் மற்றும் அவுஸ்திரேலியா என்பனவற்றுக்கு இடையில் ஒரு கூட்டு தொழில் ஒப்பந்தம் வரையறுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சில நூற்றுக் கணக்கான குடும்பங்கள் பாதிப்படையும்படி செய்யப்பட்டுள்ளன என்று அவர் சொன்னார்.

முஸ்லிம்கள்; பிரச்சினை

மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் பிரதானமாக கிழக்குப் பகுதியில் எழுந்துள்ள மற்றொரு பிரச்சினை முஸ்லிம்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவது ஆகும். பிரேமச்சந்திரன் சொல்வதின்படி மன்னாரில் உள்ள பிரச்சினை பிரதானமாக முஸ்லிம்களே. 'மீள்குடியேற்றப் பட்ட மக்களில் அநேகமானோர் முஸ்லிம்கள். ஆனால் ஏற்கனவே மீள்குடியேற்றப் பட்டவர்களில் 500க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு புத்தளத்தில் காணியும் நிரந்தரமான வீடுகளும் உள்ளன. அதே மக்களுக்கு மன்னாரில் காணி வேண்டுமாம், மற்றும் அவர்கள் இந்த காணிகளுக்காக விண்ணப்பித்தபோது, மீள் குடியேற்ற அமைச்சர் இந்த மக்களுக்கு மன்னாரில் காணி வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளார்.

இந்த மக்கள் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தின் அசல் குடியிருப்பாளர்கள் எனில் நிச்சயமாக சாதி மற்றும் மதங்களைப் பாராமல் அவர்களுக்கு காணிகள் வழங்கப்பட வேண்டும், ஆனால் நிரந்தரமான வீடுகள் உள்ள மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படக் கூடாது. உதாரணத்துக்கு குறிப்பிட்ட அளவு கிறீஸ்தவ தமிழர்கள் இந்தப் பிரதேசங்களில் இருக்கிறார்கள். ஆனால் முஸ்லிம்களை மீள்குடியேற்றுவதற்காக அவர்களது காணிகள் எடுக்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்டளவு பதற்றம் இந்தப் பிரதேசங்களில் ஏற்பட்டுள்ளது' என்று அவர் சொன்னார்
நிலக்கண்ணி வெடி அகற்றுதல்

2002 முதல் 30 ஏப்ரல் 2014 வரை 893,116.800 சதுர கி.மீ பரப்பளவு பிரதேசத்தில் இருந்த மொத்தம் 1,082,438 வெடிபொருள் சாதனங்கள், நிலக்கண்ணி வெடி அகற்றும் அமைப்புகளால் கண்டு பிடித்து அகற்றப்பட்டு;ள்ளன. 'லங்கா இராணுவ நிலக்கண்ணி வெடி அகற்றும் குழு, 621,858,339 சதுர கி.மீ பரப்பளவு பிரதேசத்தை சுத்தமாக்கியுள்ளது. 2002 முதல் 2014 ஏப்ரல்வரை ஹலோ நம்பிக்கை நிதியம் 24,881,665 சதுர கி.மீ ,டி.டி.ஜி- 24,095,324 சதுர கி.மீ ,எப்.எஸ்.டி - 35,735,880 சதுர கி.மீ , மாக் -24,310,541 சதுர கி.மீ , ஹொறைசன் - 93,501,892 சதுர கி.மீ , சர்வாற்ரா - 49,676,879 சதுர கி.மீ , எம்.எம்.ஐ.பி.ஈ - 1,295,792 சதுர கி.மீ , டாஸ் - 1,907,285 சதுர கி.மீ , என்.பி.ஏ - 15,760,704 சதுர கி.மீ ,மற்றும் ஜே.சி.சி.பி - 92,449 சதுர கி.மீ ஆகிய மொத்தப் பரப்பளவுகளை சுத்தமாக்கியுள்ளன.

இரட்டைக் குடியரிமை விவகாரம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள்.

வடக்கு முகம் கொடுக்கும் பிரதான பிரச்சினைகளில் ஒன்று வேலையில்லாமை ஆகும், மற்றும் உள் கட்டமைப்பு வசதிகளை அரசாங்கம் முன்னேற்றி வந்த போதிலும் வேலை வாய்ப்பு பற்றாக்குறை வடக்கிலிலுள்ள மக்களமீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

யுத்த காலத்தில் நாட்டைவிட்டு தப்பியோடி வெளிநாட்டில் குடியேறியுள்ள தமிழர்களை அரசாங்கம் நாட்டிற்கு திரும்ப வருவதற்கு அனுமதித்து அவர்கள் இரட்டை குடியுரிமை பெறும் வாய்ப்பை வழங்கும் என்றும்;, அவர்களுடைய பெருந்தொகை சேமிப்பை இந்த நாட்டில் முதலீடு செய்வதால் இந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு அநேக தொழில் வாய்ப்பை உருவாக்க முடியம் என்று பலரும் நம்புகிறார்கள்.

'லங்காவிலும் மற்றும் ஐக்கிய இராச்சியத்திலும் இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ள திலக் திலகராஜா போன்ற வாத்தகர்கள் பெருந்தொகையான பணத்தை இங்கு முதலீடு செய்து அநேக உள்ளுர் வாசிகளுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள். சண்டே லீடருடன் அவர் பேசும்போது, தான் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஸ்ரேலிங் பவுண்டுகளை இங்கு கொண்டு வந்து சொத்துக்களில் முதலீடு செய்துள்ளதாகவும், அதன் மூலம் அவர் உல்லாசப் பயணிகளைக் கவரும் வண்ணம், ஹோட்டல்கள் மற்றும் கடற்கரை ஓய்வு விடுதிகள் என்பனவற்றை வடக்கில் நிருமாணித்து வருவதாகவும் சொன்னார். ' இதுவரை இந்தப் பகுதியில் உருப்படியான எந்தவொரு ஹோட்டல் வசதியும் கிடையாது, மற்றும் அந்த காரணத்தால் மக்கள் இங்கு வருவதற்கு விரும்புவதில்லை. ஆனால் இப்போது பல ஹோட்டல்கள் கட்டப்பட்டு மக்கள் இந்தப் பகுதிக்கு வரத் தொடங்கியுள்ளார்கள். நாட்டின் வடபகுதியில் பல சிறந்த கடற்கரைகளும் மற்றும் பல வழிபாட்டுத் தலங்களும் அமைந்துள்ளன. ஆச்சரியப்படும்படி எவரும் இந்தப் பிரதேசத்தின் அழகை நன்கு பயன்படுத்தி சுற்றுலாத் தொழிலை விருத்தி செய்ய முயற்சிக்கவில்லை' என்று அவர் சொன்னார்.

திலகராஜ் சொல்வதின்படி இரட்டைக் குடியுரிமை திட்டத்தை இடை நிறுத்த்pயுள்ள அரசாங்கத்தின் முடிவு காரணமாக வடக்கில் அபிவிருத்தி ஒரு படி பின்னோக்கிச் சென்றுள்ளது. 'அரசாங்கம் அழகான வீதிகளையும மற்றும் உட் கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்குவதால் எந்தப் பயனும் இல்லை. இந்த வசதிகளின் முழுப் பயனையும் அனுபவிப்பதற்கு இந்த மக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். இந்த நாட்டுக்கு திரும்பிவந்து தாங்கள் கடுமையாக உழைத்து சேமித்த பணத்தை இங்கு முதலீடு செய்வதற்கு வெளிநாட்டில் வாழும் எத்தனையோ பேர்கள் தயாராக உள்ளார்கள்,இரட்டைக் குடியுரிமை வழங்கும் திட்டத்தை கைவிட அரசாங்கம் எடுத்துள்ள முடிவினால் அவர்களால் அப்படிச் செய்ய முடியவில்லை'.

ரி.என்.ஏ பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், அரசாங்கம் புலம்பெயர்ந்தவர்களின் உதவிகளை ஏற்றுக்கொண்டு அவர்கள் பணத்தினைப் பயன்படுத்தி வேலைகளையும் தொழில் வாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும் என்று சொல்கிறார். 'புலம்பெயர்ந்தவர்களிடமிருந்து கிடைக்கும் பணம் விசேடமாக யுத்த விதவைகளைச் சென்றடைந்து, அவர்கள் ஏழ்மையிலிருந்து விடுதலை பெற உதவுவதற்கு ஏற்றவகையில் சில சட்டரீதியான பொறிமுறைகளை அரசாங்கம் நடைமுறைப் படுத்த வேண்டும். ஆயினும் முதலமைச்சர் இது சம்பந்தமாக ஜனாதிபதியையும் மற்றும் அவரது செயலளரையும் சந்தித்து இந்தப் பிரச்சினையை எழுப்பியபோது அவர்கள் அதற்கு இசைவு தெரிவித்திருந்தாலும் இதுவரை எதுவும் நடக்கவில்லை'.

'அரசாங்கம் ஒவ்வொருவரையும் எல்.ரீ.ரீ.ஈ ஆதரவாளர்கள் என்றே பார்க்கிறது. முன்னர் 100,000 ரூபாவுக்கு இரட்டைக் குடியுரிமை பெறக்கூடியதாக இருந்தது, இப்பொழுது அவர்கள் கட்டணத்தை அதிகரிக்க எண்ணியிருக்கலாம். அரசாங்கம் எந்த வகையான திட்டத்தை கொண்டுவர விரும்புகிறது என்பது எனக்குத் தெரியாது. யுத்தத்தின்போது நாட்டை விட்டு வெளியேறியவர்கள் விசேடமாக வயதானவர்கள் ஐக்கிய இராச்சியம், கனடா, அமெரிக்கா மற்றும் இதர நாடுகளிலிருந்து தங்கள் தாய் நாட்டுக்கு வரவேண்டும் என விரும்புகிறார்கள். இத்தனை வருடங்களாக அவர்கள் சேகரித்த பெரும் பணத்தை அவர்கள் இங்கு கொண்டுவந்து முதலீடு செய்ய விரும்புகிறார்கள். எனவே அரசாங்கம் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அதன்மூலம் ஆதாயம் பெறவேண்டும், மற்றும் அவர்கள் இங்கு வந்து முதலீடு செய்வதற்கு ஏற்ற ஒரு திட்டத்தை உருவாக்கவேண்டும்,அது அதிக தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு எற்ற ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கும். அவர்களில் சிலர் பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள், மற்றும் இவர்களின் அறிவை இந்தப் பகுதியில் உள்ள இளைஞர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் ஒரு வாய்ப்பும் கிட்டும்' என்றார் அவர்.

பிரேமச்சந்திரன் மேலும் கூறுகையில், அமைச்சர் விமல் வீரவன்ச, அரசாங்கம் புலம்பெயர்ந்தவர்களை வடக்கில் முதலீடு செய்ய அனுமதித்து அவர்களுக்கு அதிகாரம் வழங்கினால் அவர்கள் அந்த பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதுடன் திரும்பவும் அவர்கள் தனிநாட்டை கோருவார்கள் என்று கூறியிருந்தார்.

' இதுதான் அரசாங்கத்தின் மனப்போக்காகவும் இருந்தால், அவர்கள் கடந்த காலத்தைத்தான் பிடித்துக் கொள்பவர்களாகவும் இருந்தால், பின்னர் நிச்சயமாக உண்மையான நல்லிணக்கம் ஒருபோதும் ஏற்படாது. நாங்கள் சொல்வது என்னவென்றால் - சுதந்திரமாக ஆட்சி நடத்த எங்களுக்கு அதிகாரம் தாருங்கள் அப்போது நாங்கள் இந்த பிரதேசத்தை அபிவிருத்தி செய்து சிங்களவர்களுக்கும் சேர்த்து வேலை வாய்ப்பகளை உருவாக்குவோம். புலம்பெயர்ந்தவர்களிடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன, அவர்கள் வடக்கையும் கிழக்கையும் மட்டுமல்ல தெற்கிலும் முதலீடு செய்யத் தயாராக உள்ளார்கள்'.

'தச்சுத் தொழிலாளிகள், கட்டிடத் தொழிலாளிகள் மற்றும் ஏனைய பிற துறைகளிலும் நிபுணத்துவம் பெற்ற தொழிலாளர்களுக்கு எங்களிடம் பற்றாக்குறை உள்ளது, எனவே சுதந்திரமாக ஆட்சி நடத்த எங்களை அனுமதித்தால் நாங்கள் இந்த துறைகளில் பயிற்சி பெற்ற சிங்களவர்களைக்கூட இங்கு வந்து வேலை செய்யக்கூடிய வாய்ப்பை உருவாக்குவோம். ஆனால் இந்தப் பிரதேசத்தின் மீதான கட்டுப்பாட்டை தாங்கள் இழந்து விடுவோம் மற்றும் இந்த பகுதி தெற்கைவிட மிகவும் அதிகமாக அபிவிருத்தி அடைந்துவிடும், என்கிற அச்சம் காரணமாக இந்த பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய எங்களை அனுமதிக்க அரசாங்கம் விரும்பவில்லை' என்று ரி.என்.ஏ பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார்.

அரசாங்க அறிக்கைகளின்படி கிட்டத்தட்ட 10,000க்கும் மேற்பட்ட எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் வடக்கில் உள்ளார்கள், மற்றும் அவர்கள் பிரதானமாக சாதாரண தரம் வரை மட்டுமே சித்தியடைந்தவர்களாக உள்ளதால் வேலை தேடுவது அவர்களுக்கு கடினமாக உள்ளது என அவர் சுட்டிக் காட்டினார். அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும், என்று அரசாங்கம் சொல்கிறது, ஆனால் அவர்களுக்கு சுயதொழில் வேலைகளை ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கான சரியான வழிதான் இல்லை என அவர் குற்றம் சாட்டினார். இவர்களுக்கு கடன் வழங்கும்படி வங்கிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன, ஆனால் அவர்களிடம் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லை, அதனால் புனர்வாழ்வு வழங்கப்பட்ட இந்த அங்கத்தவர்களுக்கு சில வாழ்வாதார திட்டங்களை ஆரம்பிப்பதற்கான அரசாங்கத்தின் உரிய ஆதரவு கிடைக்கவில்லை.

எனினும் அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர் கெஹலியா றம்புக்வெல, அரசாங்கம் பாதுகாப்புக் காரணங்களுக்காக இரட்;டைக் குடியுரிமை திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை, அதை நபருக்கு நபர் அடிப்படையில் மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது எனத்தெரிவித்தார். 'பாதுகாப்பு சம்பந்தமான பல அக்கறைகள் இன்னமும் உள்ளன அதையிட்டு நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எல்.ரீ.ரீ.ஈ புலம்பெயர்ந்தவர்கள் அங்கு செயற்பாட்டில் உள்ளார்கள்,அதனால் நாங்கள் கவனமாக இருக்க வேண்டும். யுத்தம் முடிந்துவிட்டாலும்கூட நாங்கள் இஷ்டத்துக்கு வாய்ப்புகளை எடுக்க முடியாது, மற்றும் நாங்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டியுள்ளது' என்று அமைச்சர் தெரிவித்தார்.

-யாழ்ப்பாணத்திலிருந்து -- கமெலியா நாதானியேல்

வடக்கில் தோன்றும் நம்பிக்கை எனும் மங்கிய ஒளிக்கீற்று (1)

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல