பாரம்பரியமுறையிலான விறகுத் தொழில் இற்றைவரைக்கும் தொடர்ந்தே செல்கிறது. விறகுத் தொழிலுக்கென ஒரு சமூகம் இருந்து கொண்டே வருகிறது. இவர்களின் பிரதான தொழில் விறகு வெட்டி விற்பனை செய்வதாகும். வருடம் முழுவதும் காடுகளில் தங்களது காலங்களை கழித்து விறகு அதே போன்று குடிசை வீடமைப்பதற்கான தடிகள். வேலிகள் அமைப்பதற்கான தடிகளையும் வெட்டி ஏனையவர்களுக்கு விற்பனை செய்வதாகும். கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரை அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் விறகு வெட்டி விற்பனை செய்வோர் குறிப்பிடத்தக்க அளவு இருந்துவருகின்றனர். விறகு வெட்டி விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் மிகக் குறைந்தளவிலான வருமானத்தைக் கொண்டு தங்களது வாழ்க்கையை நடாத்துவதற்கு மிகச் சிரமப்பட்டவர்களாக வாழ்ந்து வருகிறார்கள்.
விறகு வெட்டுவதென்பது இலகுவான காரியமல்ல. இரவு பகல் பாராது காடுகளில் உணவின்றி தங்களது ஜீவனோபாயத்திற்காக மிகச் சிரமப்பட்டு இத் தொழிலை மேற்கொண்டு வருகின்றார்கள். இத் தொழிலில் ஈடுபடும் குடும்பங்களின் நிலை மிக தாழ்ந்த மட்டத்தில் இருப்பதனை நாங்கள் அறிவோம். நாளாந்த உணவுத் தேவைக்கே போதுமானதாக இல்லாத போது ஏனைய பௌதீக வளங்களை எவ்வாறு நிவர்த்தி செய்து கொள்வது. அவை சாத்தியமான ஒன்றாக எப்போதும் இருந்திருக்க வில்லை. இவர்களின் குடும்பத்தை நடு நிலையான ஒரு நிைலமைக்கு கொண்டுவருவதற்கு இதுவரை ஒரு திட்டமும் மேற்கொள்ளப்படவில்லை. அவ்வாறான ஒரு திட்டம் முன்னெடுக்கப்படுமானால் இந்தக் குடும்பங்களில் வாழும் எதிர்கால சந்ததியினராவது அவர்களின் ஜீவனோபாயத்தை மாற்று வழி முறைகளின் மூலம் மேற்கொள்வதற்கு ஒரு பாரிய உதவியாக இருக்கும்.
சாதாரணமாக தங்களிடம் உள்ள பழைய துவிச்சக்கர வண்டியை கொண்டு காடுகளில் வெட்டப்படும் விறகுகளையும், தடிகளையும் தூரப் பிரதேசங்களுக்கு கொண்டு சென்று தேவையானவர்களுக்கு விற்பனை செய்துவருகின்றனர். தாங்கள் செலவிடும் நேரம், மனித வலு என்பனவற்றிற்குரிய பணம் விற்பனையின் மூலம் கிடைப்பதில்லை என விறகு வெட்டி விற்கும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆரம்ப காலம் முதல் விறகு வெட்டி விற்கும் தொழிலுக்கும், தொழிலாளர்களுக்கும் நல்ல கிராக்கியும், வருமானமும் இருந்தது. அவ்வாறு இருந்த போதிலும் இன்று நவீன வளர்ச்சி கண்ட யுகத்தில் விறகின் தேவை வெகுவாக குறைந்துள்ளது.
இன்று பெரும்பாலானோர் மின்சாரத்தின் மூலமும், வாயு அடுப்புகள் மூலமும் தங்களது அனைத்து காரியங்களையும் நிறைவேற்றிவருகிறார்கள். இருந்த போதிலும் நூற்றுக்கு 5 தொடக்கம் 10 வீதம் வரைதான் விறகின் பாவனையும், தடிகளின் பாவனையும் இப்போது இருந்துவருகிறது. இதனால் தாங்கள் மேற்படி தொழிலை நம்பி வாழ முடியாத ஒரு சூழ் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். ஏனென்றால ் விறகின் தேவை நாளுக்கு நாள் குறைந்தே செல்கிறது. இப்படியானதொரு காலகட்டத்தில் விறகுத் தொழிலாளர்களின் வாழ்க்கையும், அவர்களது ஜீவனோபாயமும் கேள்விக்குறியாகியுள்ளது.
தற்போது விறகுத் தொழிலின் மூலம் ஒரு நாளைக்கு 500 ரூபா முதல் 1000 ரூபாவிற்கு இடையில் பெறுகின்றனர். இவை மாதம் முழுவதுமாக கிடைப்பதில்லை. மாதத்தில் ஒரு நாளும் கிடைக்கலாம், இருநாளும் கிடைக்கலாம் அல்லது முழுமையாக கிடைக்காமலும் போகலாம். நிலையான ஒரு வருமானம் இவர்களது தொழிலின் மூலம் உறுதிப்படுத்தப்படவில்லை. அவ்வாறான நிலையே காணப்படுகிறது.
இதனால் இவர்களின் வாழ்வாதாரத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு என்ன செய்ய முடியும்? இவர்களின் சந்ததியினருக்கு எவ்வகையான வழிகாட்டல்களை மேற்கொள்ள முடியும்? என சிந்திக்க வேண்டியது எமது அனைவரினதும் கடமை. இவ்வாறான குடும்பங்களை ஒன்றிணைத்து விறகு தொழிலை விட்டு எவ்வகையான தொழிலை இவர்கள் மத்தியில் புகுத்தலாம், மிக இலகுவான முறையில் வருமானத்தை பெறுவதற்கு சிறந்த தொழில் என்ன? என்பதனை ஆராய்ந்து இவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும். அரச அல்லது அரசசார்பற்ற நிறுவனங்களின் மூலமான திட்டங்களோ அல்லது பயிற்சிகளோ அல்லது மானிய உதவிகளோதான் இவர்களுக்கு பொருத்தமான ஒன்றாகும். வேறு இலகுவான சிறு தொழில் முயற்சிகளின் மூலம்தான் இவை ஓரளவு சாத்தியப்படக்கூடிய நிலை காணப்படுகிறது. மந்தமான அல்லது வருமானம் கிடைக்காத நிைலமைகளில் அவர்களின் பிள்ளைகள் கல்வி கற்க செல்வதில்லை, அதேபோன்று குடும்பத் துணைகளும் விறகுத் தொழிலுக்கே செல்லும் நிலை யும் காணப்படுகிறது.
இக் குடும்பங்களின் வளர்ந்துவரும் பிள்ளைகளுக்கு கல்வி அறிவும், வழிகாட்டலும் மிக மிக அவசியமாகும். அதே போன்று குறைந்த வருமானம் கிடைக்கும் விறகுத் தொழிலை மாற்றி நிரந்தரமாக, குடும்பங்களின் ஜீவனோபாயத்தை ஓட்டிச் செல்லக்கூடிய சிறு தொழில் முயற்சி ஒன்றை ஆரம்பிக்க துறை சார்ந்தவர்கள் உதவி புரிய வேண்டும் என்பது எமதும், விறகுத் தொழிலை செய்பவர்களினதும் எதிர்பார்ப்பாகும்.
–எம்.எல்.சரிப்டீன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக