வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

அமிர்தலிங்கம் கொலையின் பின்னர், புலிகள் மேற்கொண்ட நடவடிக்கை: உண்மையின் பின்னணியென்ன? (பகுதி-2)

அமிர்தலிங்கம் படுகொலைக்குப் பிறகு அந்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்துக் கொள்ள எல்.ரீ.ரீ.ஈ முயற்சி மேற்கொண்டது. (2) - டி.பி.எஸ்.ஜெயராஜ்

குழப்பமடையச் செய்யும் தந்திரங்கள்

பிரேமதாஸ ஆட்சியும் கூட குழப்பமடையச் செய்யும் தந்திரங்களை தொடர்ந்தன. 1989ல் அமைச்சர் ரஞ்சன் விஜேரட்ன ஒரு பத்திரிகையாளர்கள் மாநாட்டை நடத்தினார். அதில் அப்போதைய காவல்துறை கண்காணிப்பாளர் நாயகம்(ஐ.ஜி.பி) ஏணஸ்ட் பெரேராவும் பங்கு பற்றியிருந்தார்.



அதில் ஐ.ஜி.பி ஊடகங்களுக்கு அறிவித்தது, வில்லியம் மரியதாஸன் காவல்துறையினரிடம் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலத்தின்படி ஒரு இயக்கம் என்கிற வகையில் எல்.ரீ.ரீ.ஈக்கு இந்தக் கொலைகளில் பங்கில்லை எனவும் முந்தைய புலித் தொடர்புகளை கொண்டிருந்த கொலையாளிகள் தங்கள் விருப்பத்தின் படி இதைச் செய்துள்ளார்கள் என தெரிவித்துள்ளார் என்று.

இதன்விளைவாக மரியதாஸன் பாணந்துறை உயர் நீதிமன்றில் தண்டிக்கப்பட்டார். காவல்துறையினர் அவரது குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை நீதிமன்றில் சமர்ப்பித்தனர், அது பயங்கரவாத தடைச் சட்டப் பிரிவின் கீழ் பெறப்பட்டிருந்தது. அந்த குற்ற ஒப்பதல் வாக்குமூலத்தை சாட்சியாக ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அவருக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

மரியதாஸன் அதற்கு எதிராக மேன்முறையீடு செய்தார் மற்றும் 1995ல் மேன்முறையீட்டு நீதிமன்றம் அந்த குற்ற ஒப்புதல் வாக்குமூலம் ஏற்றுக் கொள்ள முடியாதது எனக்கூறி அவரை விடுதலை செய்தது. அந்த ஒப்புதல் வாக்குமூலம் மரியதாஸனிடமிருந்து உள்நோக்குடன் பெறப்பட்டதே தவிர உண்மையில் அவரால் கொடுக்கப்பட்டதல்ல என்று நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டது.

இதற்கிடையில் அமிர்தலிங்கம் கொலைப் பழியில் இருந்து எல்.ரீ.ரீ.ஈயினை விடுவிப்பதற்காக தனது முயற்சிகளை அரசாங்கம் தொடர்ந்து கொண்டிருந்தது. முன்னாள் சண்டே ரைம்ஸ் ஆசிரியரும் மற்றும் இந்தியன் எக்ஸ்பிரசுக்கான கொழும்பு நிருபருமாக இருந்த றீற்றா செபஸ்டியன், ரஞ்சன் விஜேரட்னவினால் ஒக்ரோபர் 1989ல் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் ஒரு திடுக்கிடும் தகவலை வெளிக்கொணர்ந்தார்.

மட்டக்களப்பில் உள்ள புலிகள் முகாம் ஒன்றில் இறந்த புலி அங்கத்தினர்களின் படங்களை காட்சிக்கு வைத்திருக்கும் இடத்தில் தான் விசு,அலோசியஸ் மற்றும் சிவகுமார் ஆகியோரின் படங்களைக் கண்டதாக அவர் தெரிவித்தார். இதன் கருத்து அந்தக் கொலைகளுக்கு எல்.ரீ.ரீ.ஈதான் பொறுப்பு என்றுதானே ஆகிறது என்று றீற்றா, ரஞ்சன் விஜேரட்னவிடம் கேட்டார்.

றீற்றா செபஸ்தியன் சொன்னதின்படி, அதைக்கேட்டதும் தனது சுங்கானை உறிஞ்சிய ரஞ்சன் விஜேரட்ன குறும்பாக சிரித்தபடி தான் அதை எல்.ரீ.ரீ.ஈயின் யோகியுடன் கேட்டு உறுதி செய்வதாகப் பதிலளித்தாராம். அதை அவர் ஒருபோதும் செய்யவில்லை! அந்தப் பழியை எல்.ரீ.ரீ.ஈமீதிருந்து துடைத்தெறிய தன்னால் முடிந்தளவு அரசாங்கம் பாடுபட்டாலும்கூட நிகழ்வுகள் அதை முறியடிக்க ஆரம்பித்ததின் விளைவாக எல்.ரீ.ரீ.ஈ உத்தியோகபூர்வமாக அந்தக் கொலைப் பழியை ஏற்றுக் கொள்ள வேண்டியதாகி விட்டது. இது அரசாங்கத்தை ஒரு விரும்பத்தகாத சூழ்நிலைக்குத் தள்ளிவிட்டது. அதன்பின் நடந்ததுதான் இது:

இராசையா அரவிந்தரம்

எல்.ரீ.ரீ.ஈ மரணங்களுக்கு உரிமை கோராமல் இருப்பதும், விசு வெளியேற்றப் பட்டுவிட்டார் என மறுதலிப்பு செய்ததும், அவரது குடும்ப அங்கத்தவர்கள் சிலருக்கு கவலையையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. விசுவின் இயற்பெயர் இராசையா அரவிந்தரம் (எனது முந்தைய கட்டுரைகளில் நான் தவறுதலாக அரவிந்தராஜா என எழுதிவிட்டேன்) இவர் எல்.ரீ.ரீ.ஈ துணைத் தலைவர் மாத்தையா என்கிற கோபாலசாமி மகேந்திரராஜாவுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார்.

தனது மரணத்தின்போது மாத்தையாவால் உருவாக்கப்பட்ட உளவுப் பிரிவான பிற்றா – 2 க்கு உண்மையில் தலைமையேற்றிருந்தார். மாத்தையாவின் கட்டளைப்படி அமிர்தலிங்கத்தின் கொலை விசுவின் கீழ் பீற்றா – 2 ல் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. மாத்தையாவும் விசுவும் மிகவும் நெருக்கமாக இருந்தபடியால் விசுவின் அநேக குடும்பஅங்கத்தவர்களும் புலிகளின் துணைத் தலைவருக்கு மிகவும் அறிமுகமானவர்களாக இருந்தார்கள்.

விசு என்கிற அரவிந்தரம் யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியின் வதிரியில் உள்ள உயர் நடுத்தரக் குடும்பத்திலிருந்து வந்தவர். அவரது தந்தை ஒரு பதிவு செய்யப்பட்ட மருத்துவ பயிற்சியாளர். விசுவின் மூத்த சகோதரி ஒரு மருத்துவரை மணம் செய்து இப்போது வட அமெரிக்காவில் வசிக்கிறார். ஒரு மூத்த சகோதரர் புத்தளத்தில் வங்கி முகாமையாளராக உள்ளார்.

விசுவுக்கு முகுந்த் மற்றும் முரளி என்கிற இரண்டு இளைய சகோதரர்களும் உள்ளனர். இதில் முன்னவர் ஜேர்மனியிலும் பின்னவர் பிரித்தானியாவிலும் வசிக்கிறார்கள். விசு நெல்லியடி மத்திய கல்லூரியில் படித்தவர். 1977 தேர்தல்களில் அவர் ரி.யு.எல்.எப் இன்; ஒரு தீவிர ஆதரவாளராக இருந்தார் மற்றும் முன்னர் தமிழ் இளையோரின் பிரியத்துக்கு உரியவராக இருந்த முன்னாள் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினரான யோகேஸ்வரனின் நெற்றியில் தனது இரத்தத்தால் திலகமிட்டவராவார்.

1987 ஜூலை 5ல் விசு படித்த பாடசாலையான நெல்லியடி மத்திய கல்லூரியில் அமைக்கப் பட்டிருந்த இராணுவ முகாமின்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் தொடர்புடையவர்களில் விசுவும் ஒருவர். இந்த தாக்குதலின் போதுதான் எல்.ரீ.ரீ.ஈ யின் கப்டன் மில்லர் என்கிற வல்லிபுரம் வசந்தன் வெடி பொருட்கள் ஏற்றப்பட்ட ஒரு பார ஊர்தியை இராணுவ முகாமுக்குள் செலுத்தி தன்னையும் வெடிக்க வைத்தார், அதன்படி புலிகளின் முதல் கரும்புலி அல்லது தற்கொலை குண்டுதாரி எனப் பெயர் பெற்றார். அதன்பின்தான் ஜூலை 5ம் நாளை எல்.ரீ.ரீ.ஈ கரும்புலி தினமாக அனுட்டிக்க ஆரம்பித்தது.

ஜூலை 5, நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டபோது அந்த சுற்றாடலில் உள்ள வீடொன்றின் மேல் மாடியில் விசு நிலை கொண்டிருந்தார். மில்லர் பார ஊhதியை இலகுவாக செலுத்திக் கொண்டு உட்செல்லுவதற்கு வசதியாக, ராக்கற் உந்துதலில் செயற்படும் எறிகுண்டுகளை (ஆர்.பி.ஜி) நெல்லியடி மத்திய கல்லூரி வெளிக்கதவுகளின் மேல் செலுத்தி அவற்றை வெடிக்க வைக்கும் பணியை மேற்கொள்ளும் ஒரு குழுவுக்க பொறுப்பாக விசு நியமிக்கப்பட்டிருந்தார். இது திட்டமிட்டபடி விசுவின் குழுவினால் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் துரதிருஷ்டவசமாக ஆர்.பி.ஜி யினை இயக்கிக் கொண்டிருந்த ஒரு பெண் போராளியின் பின்னால் நின்றிருந்த விசுவை அதன் பின் வெடிப்பு தாக்கியது. இதன் விளைவாக அவரது கண் ஒன்று காயமடைந்தது. விசு அதற்காக தமிழ்நாட்டுக்கு சென்று மதுரையில் உள்ள பிரபலமான அரவிந்தன் கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதைத் தவிர கண்ணின் பார்வையை இழந்த விசு அதன்பின் நிறமுள்ள வில்லை பொருத்திய கண்ணாடியை அணியும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

இப்போது விசு அமிர்தலிங்கம் கொலையில் தொடர்பு கொண்டிருந்தார் என்றும் விசு எல்.ரீ.ரீ.ஈ யினால் வெளியேற்றப்பட்ட ஒரு துரோகி என்றும் செய்திகள் பரவியதைக் கெட்ட அவரது சகோதரர்களான முகுந்த் மற்றும் முரளி ஆகியோர் எல்.ரீ.ரீ.ஈ யின் உயர்மட்டத் தலைமை மீது அதீத வெறுப்பு அடைந்தார்கள்.

அவர்கள் இருவருக்கும் தங்கள் சகோதரர் ஒரு விசுவாசமான புலி என்பதும் மற்றும் அவர் அமிர்தலிங்கத்தை கொலை செய்தது புலிகளின் இட்ட கட்டளைப்படியே என்பதும் நன்கு தெரியும். எனவே அந்த சகோதரர்கள் அதற்கான ஒரு விளக்கத்தை கேட்டு எல்.ரீ.ரீ.ஈ துணைத் தலைவர் மாத்தையாவுக்கு கடிதம் எழுதினார்கள். வெளிப்படையாக அந்தக் கடிதம் கோபத்தின் சிதறலாக வெளிவந்த கடும் வார்த்தைகளால் எழுதப்பட்டிருந்தது.

மகேந்திரராஜா என்கிற மாத்தையா

அந்தக் கடிதம் மகேந்திரராஜா என்கிற மாத்தையாவின் மனதை இளகச் Mathayaசெய்தது. எல்.ரீ.ரீ.ஈ யினால் உத்தியோகபூர்வமாக ஒரு அறிக்கையை வெளியிட முடியவில்லை, ஆனால் தமிழ் மொழியிலான செய்தி அறிக்கைகளில் 1990 களின் ஆரம்பத்தில், எல்.ரீ.ரீ.ஈ கூட்டங்களில் புலித் தலைவர்கள் அமிர்தலிங்கம் கொலையை ஒப்புக் கொள்ள ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டன. மாத்தையா தானே பொது மேடைகளில் எல்.ரீ.ரீ.ஈ தான் அமிர்தலிங்கத்தை கொன்றது என்றும் ரி.யு.எல்.எப் தலைவர்கள் துரோகிகள் என்றும் பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.

இவைகள் நடந்து கொண்டிருக்கும் போது 1989 நவம்பர் 27ல் எல்.ரீ.ரீ.ஈ முதன்முறையாக வன்னியில் உள்ள இரகசிய இடம் ஒன்றில் மாவீரர் நாளை அனுட்டித்தது. அந்தக் கூட்டத்தில் 400 முதல் 500 வரையான அங்கத்தவர்கள் பங்கெடுத்ததுடன் எல்.ரீ.ரீ.ஈ யின் பெருந் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அதில் உரையாற்றினார். இந்த உரை அன்ரன் பாலசிங்கத்தினால் எழுதித் தயாரித்த உரையாக இருக்கவில்லை. தலைவரின் பேச்சினை மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்த இளம் புலிகளை கவரும் விதமாக பிரபாகரன் தனது இதயத்தின் ஆழத்திலிருந்து பேசினார்.

அவரது பேச்சின் இடையே பிரபாகரன் “நாங்கள்தான் அமிர்தலிங்கத்தை கொன்றோம்” என்று சொன்னார். அதைப்பற்றி மேலும் விபரிக்கையில் தமிழ் ஈழ விடயத்துக்கு ஒரு காலத்தில் துணையாக நின்ற அமிர்தலிங்கம் பின்னர் அதற்கு துரோகமிழைத்து விட்டார், என்று அவர் சொன்னார். தமிழ் ஈழத்தை காட்டிக் கொடுப்பன் ஒரு துரோகி அவன் கொல்லப்பட வேண்டும் எனப் பிரபாகரன் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில் “நாளைக்கு பிரபாகரன் தமிழ் ஈழ இலட்சியத்துக்கு துரோகம் செய்தால் நீங்கள் என்னைச் சுட்டுக் கொல்லுங்கள்” என்றார். பிரபாகரனின் இந்த பேச்சு அடங்கிய காணொளி வெளிநாடுகளில் பரந்த அளவில் விநியோகிக்கப் பட்டது.

லங்கா கார்டியன்

இதற்கிடையில் அரசாங்கம் – எல்.ரீ.ரீ.ஈ இடையேயான பேச்சு வார்த்தைகள் கொழும்பில் தொடாந்து நடைபெற்றதுடன் ஒரு கட்டத்தில் துணைத் தலைவர் மாத்தையாவும் கூட கொழும்பில் வைத்து இந்தப் பணியில் இணைந்து அரசாங்கத்துடன் பேச்சுக்களில் ஈடுபட்டார். அவர் கொழும்பில் வைத்து லங்கா கார்டியன் பத்திரிகையின் ஆசிரியர் மேர்வின் டீ சில்வாவினால் நேர்காணல் செய்யப்பட்டார். அந்த நேர்காணல் லங்கா கார்டியனில் 1990 மார்ச் 15ல் பிரசுரமாகியது.

இந்த நேர்காணலில் “பல கட்சி முறைக்கு ஆதரவாக நீங்கள் நிற்கிறீர்கள் என்றால் உங்கள் ஆட்கள் ஏன் அமிர்தலிங்கத்தையும் மற்றும் ஏனைய ரி.யு.எல்.எப் தலைவர்களையும் கொன்றார்கள்? என்கிற ஒரு கேள்வி மேர்வின் டீ சில்வாவினால், மாத்தையாவின் முன் வைக்கப்பட்டது.

அதற்கு மாத்தையா இவ்வாறு பதிலளித்தார் – “அவர்கள் எல்.ரீ.ரீ.ஈ யின் கருத்துக்கு மாறான கருத்துக்களை கொண்டிருக்காவிட்டால், அவர்கள் கொல்லப் பட்டிருக்க மாட்டார்கள், ஆனால் அது எதனால் நடந்ததென்றால்; அவர்கள் இந்தியாவின் முகவர்களாகச் செயற்பட்டதினால், சுருங்கச் சொன்னால் அவர்கள் துரோகிகளாகவும் மற்றும் கூட்டுச் சதிகாரர்களாகவும் இருந்தார்கள். இந்தப் பின்னணியில் ஒரு தேசிய போராட்டத்தில் எல்.ரீ.ரீ.ஈ, ……… விடயத்துக்கு துரோகமிழைப்பவர்களை கொலையும் செய்யும், யுத்தம் எல்லா இடத்திலும் நடக்கிறது, எங்கும் துரோகிகள் இருப்பார்கள்.”

மாத்தையாவின் லங்கா காடியன் நேர்காணலின் குறிப்பை ஆயுதமாகக் கொண்டு கொழும்பிலுள்ள ஊடகவியலாளர்கள் அமைச்சரவை அமைச்சர் ரஞ்சன் விஜேரட்னவிடம் 1990 மார்ச் 22ல் நடைபெற்ற ஒரு ஊடகசந்திப்பில் வைத்து கேள்விக் கணைகளைத் தொடுத்தார்கள். தடுமாறிப்போன ரஞ்சன் ஊடகவியலாளர்களுடன் ஒத்துழைக்க தன்னால் இயன்றவரை முயன்றார். இதில் தன்னால் கருத்துச் சொல்ல முடியாது, ஏனென்றால் தான் சாட்சியங்களின்படியே நடந்ததாக அவர் பதிலளித்தார்.

மாத்தையாவின் ஒப்புதலுக்கு மாறாக அமைச்சர் ரஞ்சன் விஜேரட்ன எல்.ரீ.ரீ.ஈ அந்தக் கொலைக்குப் பொறுப்பல்ல என்கிற மரியதாசனின் கற்பனையான ஒப்புதல் வாக்குமூலத்தையே தொடர்ந்து அனுசரித்தார். அவர் முன்பு வாக்களித்ததைப் போல இந்தக் கொலைக்கு எல்.ரீ.ரீ.ஈ உடந்தையாக இருந்ததா என யோகிடம் அவர் கேட்டாரா என்று வினாவியபோது, அமைச்சர் அந்த வாக்குறுதியை வழங்கிய பின்னர் தான் யோகியை சந்திக்கவில்லை எனப் பதிலளித்தார்.

அமைச்சர் பங்கேற்ற அனைத்துக் கட்சி மாநாட்டுக்கு யோகியும் வந்திருந்தாரே எனச் சுட்டிக்காட்டிய போது, தான் யோகியிடம் அவரைச் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்ததாகவும் ஆனால் புலித் தலைவர் அவருடன் பேசுவதற்கு முன்பே அங்கிருந்து சென்றுவிட்டதாகவும் ரஞ்சன் கடுமையுடன் பதிலளித்தார்.

எனினும் நிருபர்கள் அந்த அழுத்தத்தை தொடர்ந்து கடைப்பிடித்தபடி 1990 ஏப்ரல் 5ல் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் அதே வரியில் கேள்விகளைத் தொடுத்தனர். அதற்கு பதிலளித்த ரஞ்சன் விஜேரட்ன “ நான் பத்திரிகை அறிக்கைகளின்படி நடப்பதில்லை. நான் சாட்சியத்தின் படியே நடக்கிறேன். கண்களால் காண்பதைவிட சாட்சியங்கள் அதிகம் காண்பிக்கும்” எனத் திருப்பியடித்தார்.

மேலதிக கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், லங்கா கார்டியனுடனான நேர்காணலில் மாத்தையா அந்தக் கொலைகளை எல்.ரீ.ரீ.ஈ செய்ததை ஒப்புக் கொண்டிருந்தால் பின்னர் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு எல்.ரீ.ரீ.ஈயின் துணைத் தலைவரை அதைப்பற்றி விசாரிக்கும்படி கேட்டுக் கொள்வார் எனத் தெரிவித்தார்.

புலிகளின் துணைத் தலைவர் பெருமையுடன் அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டபோதும் அமைச்சர் தொடர்ந்தும் மரியதாஸனின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம், எல்.ரீ.ரீ.ஈ யின் தொடர்பின்மையயை தெளிவுபடுத்துகிறது என திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கொண்டே இருந்தார்.

ரஞ்சன் விஜேரட்ன

ஒன்றில் யோகியுடன் இந்த விடயம் பற்றி விவாதிப்பது, அல்லது மாத்தையாவிடம் விசாரிப்பதற்காக புலனாய்வு பிரிவினரை ஏற்பாடு செய்வது என ரஞ்சன் விஜேரட்ன வழங்கிய வாக்குறுதிகள் ஒருபோதும் நடைமுறைப் படுத்தப்படவில்லை.

இந்த விடயம் பற்றி ஊடகவியலாளர்கள் முன்னாள் பண்ணையாளரான அமைச்சரை தொடர்ந்து நச்சரித்த போதிலும், அரசாங்கத்துடனான பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் எல்.ரீ.ரீ.ஈ தான் அமிர்தலிங்கத்தை கொலை செய்தது என்பதை அரசாங்கம் ஒருபோதும் ஏற்காது என்பது புரிந்து கொள்ளத்தக்க உள்ளடக்கமாக இருந்தது.

1990 மார்ச் முடிவடைவதற்குள் இந்திய இராணுவம் எங்கள் கரைகளைக் கடந்ததும் விரைவிலேயே சூழ்நிலை உருமாற்றம் பெற்றது. ஜூன் 1990 ல் ஸ்ரீலங்கா ஆயுதப் படையினருக்கும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈக்கும் இடையில் யுத்தம் வெடித்தது. நாடு இப்போது புலிகள்மீது, தீ மூச்சு விட்டு கந்தகத் துகள்களை வாரியிறைத்து போராட தயாராக உள்ள ஒரு புதிய ரஞ்சன் விஜேரட்னவைப் பார்த்தது. “அடுத்த தடவை ஹில்ரன் அல்லது கலதாரி உபசரிப்புகள் ஒன்றும் கிடையாது. எல்.ரீ.ரீ.ஈக்கு சரஸ்வதி கபே சாப்பாடு மட்டும்தான்” என அவர் சிலேடையாகக் குறிப்பிட்டார்.

அமிர்தலிங்கம் கொலைக்கான பொறுப்பிலிருந்து எல்.ரீ.ரீ.ஈ யினை விடுவிக்க உண்மையை இருட்டடிப்பு செய்ய துணிவான முயற்சிகளை மேற்கொண்ட அந்த மனிதரே 1991 மார்ச் 2 ல் ஒரு கார் குண்டு மூலமாக எல்.ரீ.ரீ.ஈயினால் கொல்லப்பட்டார்.

அமிர்தலிங்கம் கொலைக்குப் பின்னர் ஏற்படக்கூடிய சாத்தியமான பின் விளைவுகளைப் பற்றி எல்.ரீ.ரீ.ஈ மிகவும் அவதானம் கொண்டிருந்தது. அதனால்தான் வவுனியா பாண்டிக்குளத்தில் அமைதியான பேச்சுக்களை நடத்த வரும்படி அமிர்தலிங்கம் மற்றும் சிவசிதம்பரம் ஆகியோருக்கு யோகேஸ்வரன் மூலமாக அழைப்பு விடுத்து விரிவான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்.

ரி.யு.எல்.எப் உயர்மட்டம் இந்தப் பொறியில் அகப்பட்டு வவுனியா சென்றிருப்பார்;களானால் அவர்கள் வெறுமே இந்தப் பூமியில் இருந்து காணாமற் போயிருப்பார்கள். “அமிர்தலிங்கத்தக்கு என்ன நடந்தது?” என்பது ஒரு சிக்கலான கேள்வியாக இருப்பதுடன் இந்த சதியினை புனைந்தவர்கள் மற்றவர்கள் பேரில் பழியினைப்போட்டு தங்கள் முயற்சியில் வெற்றி அடைந்திருப்பார்கள்.

எல்.ரீ.ரீ.ஈ யினைக்கூட சந்தேகப்பட நேர்ந்தாலும்கூட புலிகளை தொடர்பு படுத்த வலுவான ஆதாரங்கள் இருக்கப் போவதில்லை. எப்படியோ ரி.யு.எல்.எப் தலைவர்கள் வடக்குக்கு போக மறுத்தபடியால் இது நடக்காமல் போயிற்று. அதனால்தான் புலிகள் அவர்களை கொழும்பில் வைத்து கொல்ல வேண்டியதாகிவிட்டது.

நிசங்க திப்பொட்டுமுனுவ

அமிர்தலிங்கத்தையும் மற்றும் யோகேஸ்வரனையும் கொலை செய்த அந்த மூன்று கொலையாளிகளும் உயிருடன் தப்பியிருந்தால் அந்தக் கொலைப் பழியிலிருந்து எல்.ரீ.ரீ.ஈ விடுபட்டிருக்கும். அதன் பின்னர் பிரேமதாஸ அரசாங்கம் புலிகளின் தொடர்பை மறைப்பதற்கான ஒவ்வொரு ஆதாரத்தையும் பலவீனமாக்கியிருக்கும். அந்தப் பழி ஜனதா விமுக்தி பெரமுனவின் மீதோ அல்லது புதுதில்லியுடன் இணைந்திருக்கும் ஒரு தமிழ் குழுவின் மீதோ விழுந்திருக்கும்.

அந்த கொலைகளில் புலிகளைச் சிக்க வைக்கச் சதி செய்ததின் மூலம் அரசாங்கத்துதக்கும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ க்கும் இடையில் நடக்கும் பேச்சுவார்த்தைகளை சீர் குலைக்க முயற்சிக்கப் பட்டதாக திறமையாக ஒரு வழக்கு சோடிக்கப் பட்டிருக்கும். கற்பனை செய்தபடி இந்தக் காட்சியை சித்தரிக்க முடியவில்லை ஏனென்றால் அந்த மூன்று புலிகளும் சுட்டுக் கொல்லப்பட்டு விசுவின் உண்மையான அடையாளம் வெளிக்கொணரப்பட்டது. இந்தக் காட்சியின் நாயகன் நிசங்க திப்பொட்டுமுனுவதான், அவரைப்பற்றி நான் எனது முந்தைய கட்டுரையில் எழுதியுள்ளேன். இது தொடர்பாக சில விபரங்களை அமிர்தலிங்கத்தின் படுகொலை பற்றிய எனது முந்தைய கட்டுரையில் கவனக்குறைவாக எழுதாமல் விட்டுவிட்டேன்.

புலிகளின் மூவரணியை நிஸங்க சுட்டுக் கொன்றது கணிசமான அளவுக்கு சரியானது. அனால் நான் எழுதாமல் தவறவிட்டது மற்ற இரண்டு காவல்துறை அதிகாரிகளைப் பற்றியது, நிஸங்க கடுமையான மரணம் உண்டாக்கும் காயங்களை ஏற்படுத்திய போதிலும், மற்ற இரண்டு காவலர்களும் கூட கொலையாளிகளைச் சுட்டுக் காயப்படுத்தினார்கள்.. உதவிப் பரிசோதகர் கந்தசாமி அலோசியசை சுட்டுக் காயப்படுத்தினார் காவலர் லக்ஸ்மன் விசு என்கிற அரவிந்தரத்தையும் மற்றும் அறிவு என்கிற சிவகுமாரையும் சுட்டுக் காயப்படுத்தினார்.

இந்த இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களும் தமிழர்கள் என்பதால் அவர்கள் சுட்ட விபரங்கள் அப்போது பத்திரிகைகளில் வெளிவராமல் தவிர்க்கப்பட்டது. எல்.ரீ.ரீ.ஈ யின் பழிவாங்கும் செயல்களிலிருந்து அவர்களது குடும்பத்தினர்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே. லக்ஸ்மன் இப்போது வட அமெரிக்காவில் வசிக்கிறார்.

மற்றைய தெளிவு படுத்தல், நிசங்க திப்பொட்டுமுனுவ எப்படி தன்னிடம் ஒரு இரண்டாவது துப்பாக்கியை வைத்திருந்தார் என்பதைப் பற்றியது. இந்த இரண்டாவது தப்பாக்கியை தன்வசம் வைத்திருந்தபடியால்தான் நிஸங்கவால் புலிகளை விசேடமாக விசுவை வீழ்த்த முடிந்தது, விசு சுட்டு வீழ்த்தப்பட்டபொழுது அவரது கைகளுக்குள் ஒரு கையெறிகுண்டு இறுகப் பிடித்தபடி இருந்தது. அமிர்தலிங்கத்தின் வீட்டில் பாதுகாப்பு கடமையில் இருந்த மற்றொரு பாதுகாப்பு உத்தியோகத்தர் அன்று விடுமுறை எடுத்திருந்தார்.

சில்வா என்கிற பெயரை உடைய அந்த மனிதர் தனது துப்பாக்கியை நிஸங்க வசம் ஒப்படைத்திருந்தார். இதுதான் துப்பாக்கி சூடு அரம்பித்த வேளையில் நிஸங்கவின் கையில் இரண்டு துப்பக்கிகள் வந்ததற்கான காரணம். நிஸங்க மற்றும் சில்வா ஆகிய இருவரும் மகாவலி பாதுகாப்பு பிரிவைச் சோந்தவர்கள் அவர்கள் நம்பிக்கை பொறுப்பு மிக்கவர்கள் என்பதனால்தான் அமிர்தலிங்கத்தின் பாதுகாப்புக்காக காமினி திசாநாயக்கா அவர்களை தனிப்பட்ட முறையில் ஏற்பாடு செய்திருந்தார்.

முருகேசு சிவசிதம்பரம்

பல வருடங்களுக்கு முன்பே கொலை நடந்தபோது ரி.யு.எல்.எப் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் அமிர்தலிங்கத்தின் கொலை பற்றிய உண்மை வெளிப்பட்டிருக்கும். அதைக் கண்ணால் பார்த்த ஒரே சாட்சியான முருகேசு சிவசிதம்பரம் வெளிப்படையாக எதுவும் கூறாமல் அந்த விடயத்தில் பேரமைதியை பேணி வந்தார். அப்போது நிலவிய சூழ்நிலையில் அது புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. எனினும், என்ன நடந்தது என்பதில் தெரிவு செய்யப்பட்ட சிலவற்றை சிவசிதம்பரம் தனிப்பட்ட முறையில் என்னிடம் தெரிவித்திருந்தார்.

சிவா ஐயா என அறியப்படும் அவர், ஒரு தொலைபேசி உரையாடலில் துல்லியமாக என்ன நடந்தது என்பதை என்னிடம் தெரிவித்தார். அது விவரங்களை தெளிவான சித்திரங்களுடன் விளக்கிய ஒரு உரையாடல். அவரது நினைவாற்றலைப் பற்றி நான் குறிப்பிட்டபோது,” அன்றைய தினம் நடந்ததை என்னால் எப்பொழுதாவது மறக்கமுடியுமா தம்பி” என சிவசிதம்பரம் என்னிடம் கேட்டார். இது அந்தச் சம்பவம் நடந்த பல வருடங்களின் பின் இடம்பெற்றது.

எனினும் அப்போது அவர் சொன்னவற்றை வெளிப்படுத்தாமல் இருக்கவேண்டும் என சிவா என்னிடம் ஒரு உறுதிமொழியையும் பெற விரும்பினார். மேலும் நான் திருமதி. மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் மற்றும் திருமதி. சரோஜினி யோகேஸ்வரன் ஆகியோரிடத்தும் அந்தச் சம்பவம் பற்றிய அவர்களது நினைவுகளையும் கேட்டுத் தெரிந்து கொண்டேன். இப்போது அந்தச் சம்பவம் நடந்து 25 வருடங்களின் பின்னர் அந்தக் கொலைகளைப் பற்றியும் அதன் பின்னர் நடந்தவற்றைப் பற்றியும் தெளிவான இரண்டு பத்திகளை டெய்லி மிரருக்கு வெற்றிகரமாக என்னால் எழுத முடிந்துள்ளது.

மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல