image source: google
கடவுள் மோசஸ் மூலம் இஸ்ரேலியர்களுக்கு கொடுத்த பூமி என்பது கட்டுக்கதை!
தான் ஆட்சிசெய்த நாடுகளுக்கு சுதந்திரம் கொடுத்து அந்த நாடுகளை அந்த நாட்டு மக்களே ஆளும்படி செய்த பிரித்தானியா பலஸ்தீனத்தின் ஆட்சிப் பொறுப்பை ஐ.நாவிடம் கையளித்தது. பலஸ்தீனத்தில் ஓர் இஸ்லாமிய அரசு உருவாகாமல் தடுக்கும் நோக்குடனேயே இப்படிச் செய்யப்பட்டது.
இஸ்ரேலியர்களின் ஹிப்ரூ மொழி உலகிலேயே தொன்மை வாய்ந்த மொழிகளுள் ஒன்றாகும். இஸ்ரேலியர்களைப் பொறுத்தவரை அவர்கள் ஆண்ட பரம்பரை என்பதும் தாம் மீளவும் ஆள வேண்டும் என்பதும் அவர்களது தலையாய கொள்கைகளாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து கடைப்பிடித்து வருகின்றனர். தாம் பலஸ்தீனப் பிரதேசத்தில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருவதாக இஸ்ரேலியர்கள் நம்புகின்றனர். இஸ்ரேலில் தோண்டும் இடங்களில் எல்லாம் கிடைக்கும் நாணயங்கள், மட்பாண்டங் கள், புராதன நகரங்கள் எல்லாம் இந்த மண் எங்கள் சொந்த மண் எனப் பறைசாற்றுகின்றன என்கின்றனர் இஸ்ரேலியர்கள்.
கி.மு. 1272 மோசஸ் எகிப்தில் அடிமைகளாக இருந்த இஸ்ரேலியர்களை மீட்டார். அவர் இஸ்ரேலியர்களை அழைத்துக் கொண்டு ஜோர்தானிய நதியைக் கடந்து அதன் மேற்குப் புறமாகவும் ஜோர்தான் நதிக்கும் மத்திய தரைக்கடலுக்கும் இடை யில் உள்ள நிலப்பரப்பை இஸ்ரேலியர்க ளின் நாடாக்கினார். இஸ்ரேலியர்கள் கடவுளின் பிள்ளைகள் என்றும் இஸ்ரேல் கடவுளால் இஸ்ரேலியர்களுக்குக் கொடுக்கப்பட்ட புனித பூமி எனவும் இஸ்ரேலியர்கள் கூறுகின்றார்கள். கி.மு 1079ஆம் ஆண்டில் இருந்த தமது மன்னர்களின் பட்டியல் இஸ்ரேலியர்களிடம் உண்டு. அப்போது சௌல் என்னும் மன்னர் பரம்பரையினர் ஆட்சி செய்தனர். இஸ்ரேலிய மன்னர்களில் வீரம் மிக்கவராகக் கருதப்படுபவர் கி.மு 1079ஆம் ஆண்டில் இருந்து 1007ஆம் ஆண்டுவரை ஆண்ட டேவிட் என்னும் மன்னராகும். இளவயதில் இருந்து ஆட்சி செய்த மன்னர் டேவிட் ஜெருசலம் நகரை இஸ்ரேலியர்களின் தலைநகராக்கி னார். ஜெருசலம் நகரில் உள்ள சியோன் மலையில் டேவிட் மன்னர் ஒரு கோட்டையை அமைத்தார். இதனால் ஜெருசலம் நகரும் சியோன் மலையும் இஸ்ரேலியர்களின் புனித நிலையங்களாகின.
இஸ்ரேலியர்களின் வீழ்ச்சி
இஸ்ரேலியர்களின் அரசு கிறிஸ்துவிற்கு முன்னர் 796ஆம் ஆண்டில் இரண்டாகப் பிளவு பட்டது. அதன் வடபகுதியை கி.மு 55ஆம் ஆண்டு அசீரியப் பேரரசு கைப்பற்றியது. கி.மு 422ஆம் ஆண்டு பபிலோனியர்கள் இஸ்ரேலைக் கைப்பற்றி அவர்களின் புனித ஆலயத்தை அழித்தனர்.
இஸ்ரேலியர்கள் பலர் அவர்களது மண்ணில் இருந்து விரட்டப்பட்டனர். கி.மு 352இல் மீண்டும் இஸ்ரேலியர்கள் தமது நாட்டிற்கு வந்து மீண்டும் தமது ஆலயத்தைக் கட்டி எழுப்பினர். ஆனால் நாற்பது ஆண்டுகளின் பின்னர் கிரேக்கர் இஸ்ரேலைக் கைப்பற்றினர். பின்னர் கி.மு 63ஆம் ஆண்டு ரோமப் பேரரசு இஸ்ரேலை ஆக்கிரமித்தது.
மீண்டும் இஸ்ரேலியர்களின் புனித ஆலயம் இடிக்கப்பட்டது. கி.பி 638ஆம் ஆண்டு இஸ்லாமியர்கள் கலிபா உமரின் தலைமையில் இஸ்ரேலைக் கைப்பற்றி னர். 1299ஆம் ஆண்டு உதுமானியப் பேரரசு இஸ்ரேலைக் கைப்பற்றியது.
உதுமானியப் பேரரசினால் ஆளப்பட் டுக் கொண்டிருக்கும் போது இஸ்ரேலியர் கள் தமக்கு என ஓர் அரசு உருவாக்க வேண்டும் எனத் தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கினார்கள். இச்சிந்தனை சியோனி சம் என்னும் பெயர் பெற்றது. ஆனால் இஸ்லாமிய மதம் தோன்றிய நாளில் இருந்து உதுமானியப் பேரரசின் ஆட்சி நடந்து கொண்டிருக்கும் வரை இஸ்ரேலியர்களும் அரபுக்களும் ஒற்றுமையாகவே வாழ்ந்து வந்தனர். ஒருவர் வீட்டின் விறாந்தையில் மற்றவர் அமர்ந்து இருந்து ஒன்றாக உரையாடிக் கொண்டிருப்பது எங்கும் காணக் கூடிய ஒன்றாகவே இருந்தது. இஸ்லாமியர்கள் ஜெருசலத்தைக் கைப்பற்ற முன்னர் அதை ஆண்டவர்கள் அங்கிருந்த இஸ்ரேலியர்களின் ஆலயத்தை இடித்து அங்கு குப்பைகளைக் கொட்டும்படி அரச ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் அதை துப்புரவாக்கி தமது வணக்கஸ்தலத்தை அமைத்தனர். அதில் கிறிஸ்தவர்களைத் தாக்கி வாசகங்கள் எழுதப்பட்டன.
பிரித்து ஆண்ட பிரித்தானியா
உதுமானியப் பேரரசின் கீழ் ஜோர்தான் நதிக்கும் மத்திய தரைக்கடலுக்கும் இடை ப்பட்ட நிலப்பரப்பில் வாழ்ந்த இஸ்ரேலியர்கள் அங்கு தமக்கு என ஒரு இஸ்ரேலிய அரசு உருவாக்க வேண்டும் என எண்ணியிருக்கையில் அங்கு பெரும்பான்மையாக வாழ்ந்த இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றும் அரபுக்கள் தமக்கென ஒரு பலஸ்தீனிய அரசு உருவாக்க வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்தனர். முதலாம் உதுமானியப் பேரரசிடம் இருந்து அரபு நாடுகளை கைப்பற்ற முயன்ற பிரித்தானியா இரு தரப்பினருக்கும் அரசு அமைக்க உதவுவதாகச் சொல்லி உதுமானியப் பேரரசுக்கு எதிரான போரில் தம்முடன் அரபுக்களையும் இஸ்ரேலியர்களையும் இணைய வைத்தது. இதன் பின்னர்தான் அரபு இஸ்ரேல் மோதல் ஆரம்பமானது.
அனுதாபத்தை புவிசார் அரசியலாக்கிய மேற்கு நாடுகள்
இரண்டாம் உலகப் போரின் போது நாஜிப்படைகளால் இஸ்ரேலியர்கள் பெரு மளவில் கொல்லப்பட்ட போது உலகெங் கும் அவர்கள் மீது உருவான அனுதாப த்தை தமக்குச் சாதகமாக மேற்கு நாடு கள் பயன்படுத்தின. கத்தோலிக்கர்களின் புனித நிலையமான பெத்தலகேம் அரபு இஸ்லா மியர்களின் பெரும்பான்மையினராக வாழும் இடமாக மாறியது.
இதை மாற்றியமைக்க இஸ்ரேலியர்களை அங்கு குடியேற்றி அவர்களுக்கு என ஒரு நாடு உருவாக்க மேற்கு நாடுகள் திட்டமிட்டன. பெத்தலகேம் இஸ்ரேலியர்களின் புனித நகரான ஜெருசலத்தின் ஒரு பகுதியாகும். தமது புனித நிலையமான பெத்தலேகயத்து இஸ்ரேலியர்க ளைத் தமது நண்பர்களாக்கி அவர்களுக்கு ஒரு நாட்டை உருவாக்குவதன் மூலம் தக்கவைத்துக் கொள்ள மேற்கு நாடுகள் திட்டமிட்டன. கடவுள் மோசஸ் மூலம் இஸ்ரேலியர்களுக்குக் கொடுத்த பூமி என்பதும் இஸ்ரேலியர்கள் கடவுளின் குழந்தைகள் என்பதும் இதற்காக இட்டுக் கட்டப்பட்ட கதைகளே. தற்போது பலஸ்தீனம் எனப்படும் மோசஸ் இஸ்ரேலியர் களுக்கு கொடுத்த நாட்டில் இருந்து இஸ்ரேலியர்கள் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்களால் விரட்டப்பட்டதாலும் அரபுக் களின் மக்கள் தொகைப்பெருக்கம் அதிக மாக இருந்ததாலும் பலஸ்தீனத்தின் பெரும்பான்மையினராகவும் அதிக நிலப்பரப்பைக் கொண்டவர்களாக இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றும் அரபுக்களான பலஸ்தீனியர்களே இருந்தனர். இருந்தும் மேற்கு நாடுகள் அங்கு யூதர்களுக்கு என ஒரு இஸ்ரேலிய அரசை உருவாக்கினர்.
இஸ்ரேலின் உருவாக்கம்
தான் ஆட்சி செய்த நாடுகளுக்கு சுதந்திரம் கொடுத்து அந்தந்த நாடுகளை அந்த நாட்டு மக்களே ஆளும்படி செய்த பிரித் தானியா பலஸ்தீனத்தின் ஆட்சிப் பொறுப்பை ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளித்தது. பலஸ்தீனத்தில் ஒரு இஸ்லாமிய அரசு உருவாகாமல் தடுக்கும் நோக்கத்துடன் இப்படிச் செய்யப்பட்டது. புனித பெத்தலேகம் இஸ்லாமிய அரசிடம் அகப்படக்கூடாது என்பதே எண்ணம். பலஸ்தீனத்திற்கான சிறப்பு ஆணைக்குழுவின் (UNSCOP) பரிந்துரையின் படி ஐ.நா. தீர்மானம் 181இன் மூலம் பலஸ்தீ னம் இரு நாடுகளாகப் பிரிப்பதாக முடிவு செய்யப்பட்டது. அதன் படி யூதர்கள் இஸ்ரேலை தனி நாடாகப் பிரகடனப்படுத் தினர். அப்போது பலஸ்த்தீனத்தின் 85 விழுக்காடு நிலம் அரபு பலஸ்தீனியர்களிடமும் 7 விழுக்காடு நிலம் யூதர்களிட மும் இருந்தது.
அரபுக்களின் ஆத்திரம்
இஸ்ரேல் என்ற நாடு தமக்கு மத்தியில் உருவானதை அடுத்து அரபு நாட்டு ஆட்சியாளர்கள் இஸ்ரேலைக் கைப்பற்ற முற்பட்டனர். 1948 மே மாதம் 15ஆம் திகதி அரபு லீக் உறுப்பு நாடுகளான சிரியா, ஈராக், எகிப்து, ஜோர்தான் ஆகியவையும் புனிதப் போர்ப்படையும் அரபு விடுதலைப் படையும் புதிய இஸ்ரேல் நாட்டுக்கு எதிராகப் படையெடுத்தன. இந்தப் போரின் போது பெத்தலகேம் நகரை ஒரு பகுதியாகக் கொண்ட ஜெருசலத்தை ஜோர்தான் தன்னுடன் இணைத்துக் கொண்டது. 1964ஆம் ஆண்டு பலஸ்தீனத்தில் வாழும் அரபு மக்களுக்கு ஒரு தனி அரசு உருவாக்கப் படவேண்டும் என்ற நோக்கத்துடன் பலஸ்தீன விடுதலை இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. அது இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் எதிராகப் பலதாக்குதல்களை மேற்கொண்டதால் அதை ஒரு பயங்கரவாத இயக்கம் என இஸ்ரேலும் மேற்கு நாடுகளும் பிரகடனப்படுத்தின.
உலக வரைபடத்தில் இஸ்ரேல் என்று ஒரு நாடு இருக்கக் கூடாது என 1960களில் அரபு நாட்டு ஆட்சியாளர்கள் சூளுரைத்துக் கொண்டிருந்தனர். இதற்காக அவர்கள் பெருமளவு படைக்கலன்களை சோவியத் ஒன்றியத்திடம் வாங்கிக் குவித்தன. அரபு நாடுகள் தன் மீது படை எடுக்கப் போகின்றன என உணர்ந்த இஸ்ரேல் தான் முந்திக் கொண்டு தாக்குதலை ஆரம்பித்தது.
1967ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் திகதி இஸ்ரேல் எகிப்தின் மீது அதிரடியான தாக்குதல்களை மேற்கொண்டது. பல எகிப்திய போர் விமானங்கள் அழிக்கப்பட்டன. எகிப்துடன் இணைந்து ஈராக், சிரியா, ஜோர்தான் ஆகிய நாடுகளும் போரிட்டன.
இப் போரின் போது சினாய், காஸா ஆகிய பிரதேசங்களை எகிப்திடமிருந்தும் கிழக்கு ஜெருசலம் மேற்குக் கரை ஆகியவற்றை ஜோர்தானிடமிருந்தும் கோலான் குன்றுகளை சிரியாவிடமிருந்தும் இஸ்ரேல் பிடுங்கிக் கொண்டது. 1973ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இஸ்ரேலியர்கள் தமது பண்டிகை ஒன்றைக் கொண்டாடிக் கொண்டிருக்கையில் எகிப்தும் சிரியாவும் தமது இழந்த நிலங்களை மீட்க இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தின. முதலில் சில நிலப்பரப்புக்களை அவர்கள் கைப்பற்றினாலும் பின்னர் இஸ்ரேலின் பதில் தாக்குதலின் போது முன்பு இருந்ததை விட அதிக பிரதேசங்களை இஸ்ரேலிடம் அவர்கள் இழந்தனர். பின்னர் ஏற்பட்ட சமாதான முயற்சிகளில் இஸ்ரேல் தான் கைப்பற்றிய சில பிரதேசங்களை எகிப்திற்கும் சிரியாவிற்கும் விட்டுக் கொடுத்தது.
ஒற்றைக் கண்ணனின் இரட்டைப்பார்வை
1967ஆம் ஆண்டு இஸ்ரேலின் போர் வெற்றிக்குக் காரணமாக இருந்தவர் ஒரு கண்ணைப் போரில் இழந்த தளபதி மோஸே தயான். 1967 போரில் அரபுக்கள் தோல்வியடைந்த பின்னர் பலஸ்தீன அரபுக்கள் மேற்குக் கரையில் இருந்தும் வெளியேறத் தொடங்கினர்.
ஆனால் மோஸே தயான் அவர்களைத் தடுத்து அங்கேயே இருக்கும்படி செய்தார். அவர்களுக்கு வேண்டிய கல்வி மற்றும் இருப்பிட வசதிகளைச் செய்து கொடுத்தார்.
இது அவர் செய்த பெரும் பிழை எனச் சில இஸ்ரேலியர்கள் வாதிடுகின்றனர். அவர்களை அப்போது மேற்குக் கரையில் இருந்தும் காஸாவில் இருந்தும் முழுமையாக விரட்டியிருக்க வேண்டும் என்கின்றனர் அவர்கள். ஆனால் முழுமையாக விரட்டப்பட்டால் அது இன்னும் பெரிய ஆபத்தாக மாறியிருக்கும் என்பது மோஸே தயானின் கணிப்பாக இருந்திருக்கலாம்.
ஓரரசுத் தீர்வா? ஈரரசுத் தீர்வா?
1967ஆம் ஆண்டுப் போரில் இருந்தே ஐக்கிய அமெரிக்கா பலஸ்தீனத்தில் இஸ்ரேலியர்களுக்கு ஓர் அரசும் பலஸ்தீனியர்களுக்கு என்று ஓர் அரசும் இருக்க வேண்டும் என உதட்டளவில் சொல்லி வருகின்றது. முதலில் இஸ்ரேல் என்று ஒரு நாடு இருக்கக் கூடாது எனச் சூளுரைத்த அரபு நாட்டு ஆட்சியாளர்கள் ஈரரசுத் தீர்வை ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்கின்றார்கள். இஸ்ரேலும் ஈரரசுத் தீர்வை ஏற்றுக் கொள்வதாகச் சொல்கின்றது.
எல்லோரும் ஈரரசு என்ற ஒரே பதத்தைப் பாவித்தாலும் அவர்களின் எண்ணங்கள் மலைக்கும் மடுவிற்கும் இடையில் உள்ள வித்தியாசமாகும். 2000ஆம் ஆண்டு இஸ் ரேல் பல ஈரரசு முன்மொழிவுகளை முன்வைத்தது. பெரும்பகுதி மேற்குக்கரையை யும் முழு காஸா நிலப்பரப்பையும் விட்டுக் கொடுப்பதாகவும் கிழக்கு ஜெருசலத்தை பலஸ்தீனியர்களின் கட்டுப்பாட் டில் விடுவதாகவும் இஸ்ரேல் முன் மொழிந்தது. மேலும் பலஸ்தீன ஏதிலிகளுக்கு முப்பது பில்லியன் டொலர்கள் பெறுமதியான தீர்வை ஒத்துக் கொள்வதாகவும் இஸ்ரேல் தெரிவித்திருந்தது.
பலஸ்தீன விடுதலை இயக்கத்தினர் இதை ஏற்க மறுத்தனர். பலஸ்த்தீனத்தில் ஈரரசுகளைக் கொண்ட ஒரு தீர்வு வேண் டும் என்ற முன் மொழிவு அரபு சமாதான முனைப்பு என்னும் பெயரில் 2002ஆம் ஆண்டு பெய்ரூட் நகரில் கூடிய அரபு லீக் நாடுகளால் முன்வைக்கப்பட்டது. இதில் இஸ்ரேல் 1967ஆம் ஆண்டு கைப்பற்றிய எல்லா நிலப்பரப்புக்களில் இருந்தும் வெளியேற வேண்டும் என்பது முக்கியமானதாகும். அதை இஸ்ரேல் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தற்போதைய தலைவர் அப்பாஸ் ஈரரசுக் கொள்கையை ஏற்றுக் கொண்டார். பலஸ்தீனியர்களுக்கு என ஓர் அரசு உருவானால் அது தனக்கு பேராபத்தாக முடியுமென இஸ்ரேல் உறுதியாக நம்புகிறது.
உதட்டளவில் ஈரரசுகள் கொண்ட ஒரு தீர்வை இஸ்ரேல் விரும்புவதாகச் சொன்னாலும் அது அதை விரும்பவில்லை. பலஸ்தீனத்தில் இஸ்ரேலியர்களுக்கு ஒரு அங்குல நிலம் கூட ஆட்சி செய்ய அனும திக்க மாட்டோம் என ஹமாஸ் அமைப்பி னர் சொல்லிக் கொண்டிருக்கும் வரை ஈரர சுத் தீர்வு சாத்தியமற்றதாகும். இதனால் ஹமாஸ் அமைப்பின் தொடர்ச்சியான இருப்பு இஸ்ரேலுக்குத் தேவையான ஒன்றாகும்.
ஆனால் ஆனால் ஹமாஸ் அமைப்பு வலுப்பெறாமல் இருக்க அதன் மீது அடிக் கடி இஸ்ரேல் தாக்கியபடி இருக்கிறது.
– வேல் தர்மா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக