வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

புலிகளின் அழிவுக்கு காரணம் பெண் தெய்வம் கண்ணகியா?...

த‌மிழ்ப்பெண் க‌ண்ண‌கியைக் க‌ட‌வுளாக‌ வ‌ழிபடும் முறை த‌மிழ்நாட்டில் வ‌ழ‌க்கொழிந்து போனாலும் அது ஈழத்த‌மிழ‌ர்க‌ளிட‌மும், முன்னாள் சேர‌நாட்டுத் த‌மிழ‌ர்க‌ளாகிய‌ ம‌லையாளிக‌ளிட‌மும், சில‌ சிங்க‌ள‌வ‌ர்க‌ளிட‌மும் இன்றும் காணப்ப‌டுகிற‌து. த‌ம‌து முன்னோர்க‌ள் த‌மிழ‌ர்க‌ள் என்ப‌தை ஒப்புக்கொள்ள‌ ம‌றுக்கும் சிங்க‌ள‌வ‌ர்க‌ள் கூட‌ த‌ம‌து தமிழ் முன்னோர்க‌ள் வ‌ழிப‌ட்ட‌ க‌ண்ண‌கியை 'பத்தினி தெய்யோ' இன்றும் வ‌ண‌ங்குவ‌தைக் காண‌லாம்.


த‌மிழ்நாட்டில் த‌ன‌து ம‌க்க‌ள்(த‌மிழ‌ர்க‌ள்) த‌ன‌க்கிழைத்த‌ கொடுமையை அதாவ‌து தன்னுடைய‌ க‌ண‌வ‌னை அநீதியாக‌க் கொன்று த‌ன்னை அனாத‌ர‌வாக்கிய‌தால் கோப‌முற்ற‌ சில‌ப்ப‌திகார‌ நாய‌கி க‌ண்ண‌கி ம‌துரையை எரித்துக் கோப‌த்தைத் தீர்த்த‌வுட‌ன், மேலும் த‌மிழ்நாட்டில் வாழ‌ விரும்பாம‌ல், அதாவ‌து த‌ன‌து பிற‌ந்த‌ வீட்டுக்கு வித‌வையாக‌ப் போக‌ விரும்பாம‌ல், ஈழ‌த்திலுள்ள‌ த‌ன‌து ம‌க்க‌ளுட‌ன் வாழ‌த் தீர்மானித்து இல‌ங்கைக்கு குடிபெயர்ந்த‌தாக‌வும் அவ‌ள் இல‌ங்கையில் ப‌ல‌ இட‌ங்க‌ளில் த‌ங்கிய‌ பின்ன‌ர் க‌டைசியாக‌ ப‌த்தாவ‌து இட‌த்தில் இளைப்பாறுவ‌த‌ற்கு த‌ங்கிய‌ இட‌ம் தான் ந‌ந்திக்க‌ட‌ல் அருகில் இருக்கும் ஊராகிய‌ இன்று வ‌ற்றாப்ப‌ளை என‌ அழைக்க‌ப்ப‌டும் ப‌த்தாம் ப‌ளை என‌வும் கூற‌ப்ப‌டுகிற‌து. இன்று கூட‌ த‌ன‌து சொந்த‌ ஊரில் அனாத‌ர‌வாக்க‌ப்ப‌ட்டு, அல்ல‌து புற‌க்க‌ணிக்க‌ப்ப‌ட்டு அப‌லைக‌ளாக்க‌ப் ப‌ட்ட‌ பெண்கள் த‌ம‌து உற‌வின‌ர்க‌ள் அல்ல‌து ப‌ங்காளிக‌ள் வசிக்கும் இன்னொரு ஊரில் போய்த்த‌ங்குவ‌து ந‌டைமுறையில் காண‌ப்ப‌டும் வ‌ழ‌க்க‌மாகும்.

க‌ண்ண‌கி - ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் காவ‌ல் தெய்வ‌ம்!......

கிழ‌வி உருவ‌த்தில் வ‌ற்றாப்ப‌ளையில் க‌ண்ண‌கி

வ‌ட‌க்கு - கிழ‌க்கு த‌மிழ‌ர்க‌ளிடையே பேச்சு வ‌ழ‌க்கு, சாதிப்பிரிவுக‌ள், த‌மிழ் உச்ச‌ரிப்பு என்ப‌வ‌ற்றில் சில‌ வேறுபாடுக‌ள் இருந்தாலும் வ‌ட‌க்கிலும் கிழ‌க்கிலுமுள்ள‌ பெரும்பான்மையான த‌மிழ‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் பொதுவான‌தொன்று எதுவென்றால் அது க‌ண்ண‌கி வ‌ழிபாடு தான். வ‌ட‌க்கிலும், கிழ‌க்கிலும் க‌ண்ண‌கிய‌ம்ம‌னுக்குக் கோயில்க‌ள் இல்லாத‌ இட‌மில்லையென்றே கூற‌லாம். சோழ‌நாட்டில் பிற‌ந்து த‌ன‌து க‌ண‌வ‌னுட‌ன் பாண்டிய‌ நாட்டுக்கு பிழைப்புக்காக‌ச் சென்று அங்கிருந்து சேர‌நாடு சென்ற க‌ண்ண‌கி க‌டைசியில் ஈழ‌நாட்டில் சென்று தான் த‌ங்கினாள். தமிழ்மண் அனைத்தையும் தொட்ட ஒரு கதை எதுவென்றால் அது கண்ணகியின் கதையாகத் தானிருக்க முடியும். உண்மையில் த‌மிழ‌ர்க‌ளனைவ‌ருக்கும் பொதுவான‌ தெய்வம் க‌ண்ண‌கி தான். த‌மிழ‌ர்க‌ளை வ‌ட‌நாட்ட‌ர‌ச‌ர்க‌ள் கனக விசயர்கள் ப‌ழித்தார்க‌ள் என்ப‌த‌ற்காக‌ அவ‌ர்க‌ள் மீது ப‌டையெடுத்த‌ சேர‌ன் செங்குட்டுவ‌ன், அவ‌ர்க‌ளின் தலையில் சும‌ந்து வ‌ந்த க‌ல்லைக் கொண்டு சிலையெடுத்த‌தும்- வீர‌ம், க‌ற்பு, நாடுகாத்த‌ல் போன்ற‌வ‌ற்றுக்காக‌ உயிர்த்தியாக‌ம் செய்த‌வ‌ர்க‌ளைத் தெய்வ‌மாக வணங்கும் தமிழர்களின் வ‌ழ‌க்க‌ப்ப‌டி, தெய்வ‌த்துள் வைக்க‌ப்ப‌ட்ட த‌மிழ்ப்பெண் க‌ண்ண‌கிக்குத் தான். கண்ணகியைத் தமிழர்கள் மட்டுமன்றி சிங்களவர்களும் இலங்கையின் காவல் தெய்வங்களிலொன்றாக வணங்குகிறார்கள்.

கண்ணகியும், கிறித்தவர்களும், தமிழ்பேசும் முஸ்லீம்களும்

க‌ண்ண‌கி வ‌ழிபாடு இந்தும‌த‌த்தின் ஒரு அங்க‌மாக‌ அல்லாது ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் ப‌ண்பாட்டின், க‌லாச்சார‌த்தின் அங்க‌மாகத் தான் இருந்து வ‌ந்த‌து. கிராம‌தேவ‌தையாக‌ ஈழ‌த்திலிருந்த‌ கண்ண‌கி கோயில்க‌ளையெல்லாம் அம்ம‌ன் கோயில்க‌ளாக‌, வைதீக‌ம‌ய‌ப்ப‌டுத்திய‌வ‌ர் சிறுதேவ‌தை வ‌ண‌க்க‌த்தை எதிர்த்த‌ சைவ‌த்தின் வ‌ஹாபிஸ்ட் ஆறுமுகநாவ‌ல‌ர். 1850 வ‌ரை புக‌ழ்பெற்ற‌ ம‌டுமாதா கோயில் க‌ண்ண‌கிய‌ம்ம‌ன் கோயிலாக‌த் தான் இருந்த‌து ஆனால் அந்த‌க் கோயிலைச்சேர்ந்த‌ த‌மிழ‌ர்க‌ள் க‌த்தோலிக்க‌ர்க‌ளாக‌ மாறிய‌தும், அந்த‌க் கோயிலும் 1856 இல் மாதா கோயிலாக‌ மாற்ற‌ம‌டைந்த‌து என‌வும் கூறுவ‌ர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 1990 இற்கு முன்பு பல கிராமங்களில் கண்ணகை அம்மன் கோவில்களில் வழுந்து எனப்படும் அடுப்பில் பொங்கல் பானை ஏற்றுப‌வ‌ர் ஒரு முஸ்லிமாக‌வே இருப்பார். அதாவ‌து க‌ண்ண‌கி அம்ம‌ன் கோயிலின் முக்கிய‌ ச‌ட‌ங்கில் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை கொடுக்க‌ப்பட்டு வ‌ந்த‌து. இவ்வாறே முஸ்லிம்களின் முதல் கந்தூரி பெறுபவர் ஒரு தமிழராகவே இருப்பார். அப்படியான ஒரு கலாசார உறவு த‌மிழ் பேசும் ம‌க்க‌ள் மத்தியில் அண்மைக்கால‌ம் வ‌ரை நிலவி வந்தது.

புலிக‌ளும் வ‌ற்றாப்ப‌ளை க‌ண்ண‌கி அம்ம‌னும்

நினைத்துப்பார்க்க‌வே முடியாத‌ பல போர்க்க‌ள‌ வெற்றிக‌ளைக் க‌ண்ட‌ ஈழத்த‌மிழ‌ர்க‌ளின் விடுத‌லைப்போராட்ட‌ம் க‌டைசியில் ந‌ந்திக்க‌ட‌லில் த‌மிழ‌ர்க‌ளின் உயிர்ப்ப‌லியில் முடிந்த‌து ஏன் என்ற‌ கேள்விக்குப் ப‌தில் தேடும் ப‌ல‌ரும், பற்ப‌ல‌ கார‌ண‌ங்க‌ளைக் கூறுகின்ற‌ன‌ர். த‌ம‌து இய‌ல்புக்கேற்ற‌வாறு, த‌ம‌க்குப் புரிந்த‌ வ‌கையில் வெவ்வேறு கார‌ண‌ங்க‌ளைக் கூறி தம‌து ஆற்றாமையைத் தீர்த்துக் கொள்கின்ற‌ன‌ர்.
ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்கிடையே ஒற்றுமை இல்லாத‌தை கார‌ணமாக‌ச் சில‌ரும், ச‌கோத‌ர‌யுத்த‌மும், எங்க‌ளுடைய‌ ப‌ங்குக்கு அதிக‌மாக‌வே எம்மிடையே இருக்கும் துரோகிக‌ளும், ப‌ச்சோந்திக‌ளும் கார‌ண‌ம் என‌ ம‌ற்ற‌வ‌ர்களும், விடுத‌லைப்புலிக‌ளிடம் உல‌க‌நாடுக‌ளின் வெளிவிவ‌கார‌க் கொள்கைக‌ளைப் ப‌ற்றிய‌ அறிவு குறைவாக இருந்தது தான் கார‌ண‌ம் என‌ சில‌ அரசிய‌ல் வ‌ல்லுன‌ர்க‌ளும், இந்தியா ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் முதுகில் குத்திய‌து தான் இத்த‌னை அழிவுக்கும் கார‌ண‌ம் என‌ ஏனையோரும் கூறுவ‌தை நாம் ப‌ல‌ரும் கேட்டிருக்கிறோம். ஆனால் அண்மையில் வ‌ன்னியிலிருந்து வ‌ந்திருந்த‌ பெரிய‌வ‌ர் ஒருவர் புலிகளும், இவ்வளவு த‌மிழ‌ர்க‌ளும் ந‌ந்திக்க‌ட‌ற் க‌ரையில் க‌ண்ண‌கி அம்ம‌னின் கோயிலின் முன்னால் அழிந்த‌த‌ற்குக் கார‌ண‌ம் க‌ண்ண‌கி அம்ம‌னின் கோப‌ம் தான் என்றார். ஏன் அப்ப‌டிச் சொல்கிறீர்க‌ள் என்றத‌ற்கு அவ‌ர் கூறிய‌ விள‌க்க‌ம் தான் இது.

விடுத‌லைப்புலிக‌ள் வ‌ன்னியில் நிலைகொண்டு சிங்க‌ள‌ இராணுவ‌த்துட‌ன் போரைத் தொட‌ங்கிய‌ ஆர‌ம்பகால‌த்தில் ஒவ்வொரு முக்கிய‌ தாக்குத‌லைத் தொட‌ங்கு முன்ன‌ரும் வ‌ன்னியிலுள்ள‌ வற்றாப்ப‌ளை க‌ண்ண‌கி அம்ம‌ன் கோயிலில் சிற‌ப்புப்பூசையை முடித்த‌ பின்ன‌ர் அல்ல‌து குறைந்த‌ ப‌ட்ச‌ம் அம்ம‌ன் கோயிலில் அர்ச்ச‌னை செய்து அம்ம‌னின் ஆசியைப் பெற்ற‌ பின்ன‌ர் தான் போருக்குச் சென்றார்க‌ளாம். அம்ம‌னின் ஆசியுட‌ன் ம‌ண்ணை மீட்க‌ச் சென்று போரிட்ட‌ ஒவ்வொரு போரிலும் விடுத‌லைப்புலிக‌ள் வெற்றி வாகை சூடினார்க‌ளாம். அத‌ன் பின்ன‌ர் எத்த‌னையோ முறை விடுத‌லைப் புலிக‌ள் வ‌ற்றாப்ப‌ளை க‌ண்ண‌கை அம்ம‌னுக்கு பொங்க‌லும் ந‌ட‌த்தியுமுள்ள‌ன‌ர். அதை விட‌ அக்கால‌த்தில் விடுத‌லைப்புலிக‌ளின் ப‌டையிலிருந்த‌ மட்ட‌க்க‌ள‌ப்பு த‌மிழ் இளைஞர்க‌ள் இய‌ற்கையாக‌வே க‌ண்ண‌கை அம்ம‌னில் ந‌ம்பிக்கையுள்ள‌வ‌ர்க‌ள் ஆத‌லால் வ‌ற்றாப்ப‌ளை கண்ண‌கியை வ‌ழிபட்ட‌ பின்ன‌ரே போருக்குச் சென்ற‌ன‌ராம்.

ஆனால் நாள‌டைவில் விடுத‌லைப்புலிக‌ளின் புக‌ழ் உல‌கள‌வில் பேச‌த்தொட‌ங்க‌ப்ப‌ட்ட‌தும், அவ‌ர்க‌ளைப் ப‌ற்றிய‌ ப‌ல‌ அர‌சிய‌ல் க‌ட்டுரைக‌ள் வெளிவ‌ரத்தொட‌ங்கிய‌தும், வெளிநாட்டு ஐரோப்பிய‌ப்ப‌த்திரிகையாள‌ர்க‌ளின் வ‌ருகையாலும், விடுத‌லைப்புலிகளின் ப‌டையில் கிறித்த‌வ‌ வீர‌ர்க‌ளும் பெரும‌ள‌வில் இருக்கும்போது, இந்தும‌த‌ம் சார்ந்த‌ ச‌ட‌ங்குக‌ளையும், ச‌ம்பிர‌தாய‌ங்க‌ளையும் விட்டுத‌ற‌ வேண்டிய‌ நிர்ப்ப‌ந்த‌ம் புலிக‌ளின் மேல்ம‌ட்ட‌த் த‌லைமைக்கு ஏற்ப‌ட்டதாம். எல்லோரும் சேர்ந்து இந்துத்துவா ப‌ட்ட‌த்தைப் புலிக‌ளின் த‌லையில் க‌ட்டி விடுவார்க‌ளோ என்ற‌ ப‌ய‌த்திலும், ஈழ‌ விடுத‌லைப் போராட்ட‌த்துக்கு த‌ம‌துயிரைப் ப‌ண‌ய‌ம் வைத்து உழைத்த‌ சில‌ கிறித்த‌வ‌ப்பாதிரிமாரின் ஆலோச‌னைக‌ளின் பேரிலும் விடுத‌லைப்புலிக‌ள் வ‌ற்றாப்ப‌ளை க‌ண்ண‌கி அம்ம‌னுக்குப் பொங்கி அவ‌ளின் ஆசியுட‌னும் அனும‌தியுட‌னும் போருக்குச் செல்வ‌தை நிறுத்திக் கொண்டார்க‌ளாம். ஆனால் ஈழ‌த்தமிழ‌ர்க‌ள் ம‌த்தியில் சைவ‌-கிறித்த‌வ‌ ந‌ல்லிண‌க்க‌ம் இருப்ப‌தால் புலிக‌ள் வ‌ற்றாப்பளை அம்ம‌ன் கோயிலுக்குச் சென்ற‌தை கிறித்த‌வ‌ விடுத‌லைப்புலிவீர‌ர்க‌ள் யாருமே எதிர்க்க‌வில்லையாம். வ‌ன்னியின் காவ‌ல் தெய்வ‌ம் வ‌ற்றாப்ப‌ளை க‌ண்ண‌கிய‌ம்ம‌னை உதாசீன‌ம் செய்த பின்ன‌ர் தானாம் காட்டிக் கொடுப்புக‌ளும், பிரிவினைக‌ளும் போரில் தோல்விக‌ளும் ஏற்ப‌ட‌த் தொட‌ங்கின‌...... வன்னியின் காவ‌ல்தெய்வ‌த்தை உதாசீன‌ப்ப‌டுத்தி விட்டு போருக்குச் சென்ற‌தை வ‌ற்றாப்ப‌ளை க‌ண்ண‌கி அம்ம‌ன் பொறுத்துக் கொள்ள ‌வில்லையாம்.

அதே வேளையில் ம‌கிந்த‌ ராஜப‌க்ச‌வும் அவ‌ர‌து ப‌டையின‌ரும் த‌வ‌றாது இல‌ங்கையின் காவ‌ல்தெய்வ‌ம் க‌ண்ண‌கியின் கோயில்க‌ளுக்கு அடிக்க‌டி செல்ல‌த் தொட‌ங்கின‌ர். அது ம‌ட்டும‌ன்றி க‌ண்ண‌கிய‌ம்ம‌ன் பொங்க‌லையும் பூசைக‌ளையும் அல‌ரிமாளிகையிலேயே ப‌ல‌முறை ந‌ட‌த்தினாராம் இல‌ங்கை ஜ‌னாதிப‌தி ராஜ‌ப‌க்ச‌.

இவரது கருத்தில் எந்த‌ள‌வுக்கு உண்மையிருக்கிற‌து என்ப‌து என‌க்குத் தெரியாது. ஏனென்றால் நான் இல‌ங்கையில் வாழ்ந்த‌ கால‌ம் குறைவு. அதனால் வன்னியில் புலிகள் எப்படியான வழிபாடுகளைக் கைக்கொண்டார்கள் என்பதும் எனக்குத் தெரியாது. ஆனால் பிரபாகரன் அவர்கள் பாரம்பரிய. யாழ்ப்பாணத்துச் சைவக்குடும்பத்திலிருந்து வந்தவர். அவரது முன்னோர்கள் பல கோயில்களையும் தமது ஊரில் கட்டியவர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததொன்று.

(நந்திக்கடலில் புலிகளின் வீழ்ச்சி நிகழ்ந்தமைக்கு
கண்ணகி காரணமா?... என்ற பதிவு ஒன்று எமக்கு
அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.)

(யாழ் நாதம்)
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல