ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

ஐ.எஸ்.ஐ.எஸ்.மீதான தாக்­கு­தல்­களும் அரபு நாடு­களும்

ஈராக்கில் மட்டும் ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்­பினர் மீது தாக்­குதல் நடாத்­தினால் போதாது சிரி­யா­விலும் அவர்கள் மீது தாக்­குதல் நடாத்த வேண்­டு­மென ஐக்­கிய அமெ­ரிக்கா உறு­தி­யாக நம்­பி­யது. ஆனால், சிரிய அதிபர் பஷார் அல் அஸாத் பத­வியில் இருப்­பதை விரும்­பாத சவூதி அரே­பியா, கட்டார், ஐக்­கிய அமீ­ரகம் போன்ற நாடுகள் அஸாத்­திற்கு எதி­ராகப் போராடும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் மீது தாக்­குதல் நடத்தத் தயக்கம் காட்­டின. ஐக்­கிய அமெ­ரிக்கா ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­பினர் மீது தாக்­குதல் நடத்தப் பல நாடு­க­ளையும் இணைத்த ஒரு பரந்த கூட்­டணி அமைக்கத் தீவிர முயற்சி எடுத்­தது. இதில் ஈரா­னையும் இணைத்துக் கொள்ள பெரு முயற்சி எடுக்­கப்­பட்­டது. ஆனால் ஈரான் மறுத்துவிட்­டது.



முதலில் இணைந்த பிரான்ஸ்

ஈராக்­கிலும் சிரி­யா­விலும் செயற்­படும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­பி­ன­ருக்கு எதி­ராக பிரான்ஸும் விமானக் குண்டுத் தாக்­கு­தல்­களை 2014ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் 19ஆம் திக­தியில் இருந்து ஆரம்­பித்­தது. ஏற்­க­னவே ஐக்­கிய அமெ­ரிக்கா ஆகஸ்ட் மாதம் எட்டாம் திக­தியில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் இலக்­குகள் மீது கடு­மை­யான விமானக் குண்­டுத்­தாக்­கு­தல்­களை நடத்தி வரு­கின்­றது. பிரேஞ்சு விமா­னங்கள் ஈராக்கின் ஜுமார் நகரில் உள்ள ஐ,எஸ்.ஐ.எஸ். நிலைகள் மீது தாக்­கு­தல்கள் நடத்தி அதன் உறுப்­பி­னர்­களைக் கொன்­றன. சைப்­பி­ரஸில் உள்ள பிரித்­தா­னியப் படைத்­த­ளத்­தி­லி­ருந்து அதன் விமா­னங்கள் ஈராக்கில் வேவு பார்க்கும் பறப்பில் முதலில் ஈடு­பட்­டன. பின்னர் பிரித்­தா­னிய விமா­னப்­ப­டைகள் நேரடித் தாக்­கு­தலில் ஈடு­பட பிரித்­தா­னியப் பாரா­ளு­மன்­றத்தின் அனு­ம­திக்குக் காத்­தி­ருக்க வேண்டி இருந்­தது. டச்சு விமானப் படை­யி­னரும் பின்னர் அமெ­ரிக்­கா­வுடன் இணைந்து கொண்­டனர்.

பிரான்ஸைத் தொடர்ந்­தன அரபு நாடுகள்

பிரான்ஸைத் தொடர்ந்து சவூதி அரே­பியா, ஜோர்தான், ஐக்­கிய அமீ­ரகம், காட் டார், பஹ்ரெய்ன், ஈராக் ஆகிய நாடுகள் சிரி­யா­விலும் ஈராக்­கிலும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­பி­ன­ருக்கு எதி­ராக விமானத் தாக்­கு­தலை செப்­டெம்பர் மாதம் 23ஆம் திகதி ஆரம்­பித்­தன. அமெ­ரிக்­காவைப் பொறுத்­த­வரை இந்த நாடு­களை இணைய வைத்­தது பெரும் வெற்­றி­யாகும். ஓர் இஸ்­லா­மிய அமைப்­பிற்கு எதி­ராகப் போர் புரி­வது சவூதி அரே­பியா, ஜோர்தான், ஐக்­கிய அமீ­ரகம், காட்டார், பஹ்ரெய்ன், ஈராக் ஆகிய நாடு­க­ளுக்கு என்ன பாதிப்பை ஏற்­ப­டுத்தப் போகின்­றது என்­பதைப் பொறுத்­தி­ருந்­துதான் பார்க்க வேண்டும்.

குர்திஷ் பெஷ்­மேர்கா படை­யினர்

லிபி­யாவில் உள்ளூர்ப் போரா­ளிகள் அதி பர் மும்மர் கடாஃ­பியின் படை­யி­ன­ருக்கு எதி­ராக தாக்­குதல் நடத்த நேட்டோப் படை­யினர் விமானக் குண்டு வீச்சுத் தாக்­கு­தல்­களை நடத்­தினர். இதில் கடாஃ­பியின் படை­யினர் அழிக்­கப்­பட்டுத் தோற்­க­டிக்­கப்­பட்­டனர். இதே போல் தரையில் ஐ.எஸ்.ஐ.எஸ். பெஷ்­மேர்கா படை­யினர் தாக்­குதல் நடத்த விமானத் தாக்­கு­தலை அமெ­ரிக்­காவும் அதன் நட்பு நாடுகள் நடத்தி ஐ.எஸ்.ஐ.எஸ். போரா­ளி­களைத் தோற்­க­டிப்­பதே அமெ­ரிக்க வெள்ளை மாளி­கையின் திட்டம். ஆனால் அமெ­ரிக்­காவின் பாது­காப்புத் துறை­யான பென்­டகன், அமெ­ரிக்­கப்­ப­டைகள் ஒரு தரை­வழிப் படை­யெ­டுப்பின் மூலமே ஐ.எஸ்.ஐ.எஸ். படையை அழிக்க முடியும் எனக் கரு­து­கின்­றது. ஆனால் பராக் ஒபாமா அமெ­ரிக்­கப் ­ப­டை­யி­னரின் கால­டிகள் ஈராக்கில் பதிக்க முடி­யாது என்ற நிலைப்­பாட்டில் இருக்­கின்றார்.

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தோற்றம்

2003ஆம் ஆண்டு சதாம் ஹுசெய்ன் பேர­ழிவு விளை­விக்கும் படைக்­க­லன்­களை வைத்­தி­ருக்­கின்றார் எனப் பொய் சொல்லி ஈராக்கை அமெ­ரிக்­கப் ­ப­டைகள் ஆக்­கி­ர­மித்­தன. அப்­போது ஈராக்­கிற்­கான அல் கைய்தா என ஒரு அமைப்பு ஈராக்கில் ஜோர்­தா­னி­ய­ரான அபூ முசாப் அல் ஸர்­காவி (Abu Musab al-Zarqawi) இனால் உரு­வாக்­கப்­பட்டு அது அமெ­ரிக்­கப் ­ப­டை­க­ளுக்கு எதி­ராகப் போரா­டி­யது. பின்னர் 2004ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் அது அல் கைதாவின் ஒரு கிளை அமைப்­பாக மாற்­றப்­பட்­டது. ஸுன்னி முஸ்லிம் அமைப்­பான ஈராக்­கிற்­கான அல் கைதா அமெ­ரிக்­கா­வுடன் ஒத்­து­ழைப்­ப­வர்­க­ளையும் ஷியா முஸ்­லிம்­க­ளையும் கொன்று குவித்­தது. இந்த அமைப்பால் ஈராக்கில் ஸுன்னி முஸ்­லிம்­க­ளுக்கும் ஷியா முஸ்­லிம்­க­ளுக்கும் இடை­யி­லான மோதல் உரு­வாகி அதில் பல அப்­பா­விகள் கொல்­ல­பப்ட்­டனர். பின்னர் இந்த அமைப்பு தனது தாக்­கு­தல்­களை ஜோர்தான், இஸ்ரேல் ஆகிய நாடு­க­ளுக்கும் விரிவுபடுத்­தி­யது. ஈராக்­கிற்­கான அல் கைதா பின்னர் தனது பெயரை ஐ.எஸ்.ஐ.எஸ். என மாற்றிக் கொண்­டது.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் வளர்ச்சி

சிரி­யாவில் அரபு வசந்தம் ஆரம்­பித்த பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்­பினர் சிரிய அதிபர் பஷார் அல் அஸாத்­திற்கு எதி­ராகப் போராடத் தொடங்­கினர். இதனால் அஸாத்­திற்கு எதி­ரான மத்­திய கிழக்கு ஸுன்னி ஆட்­சி­யா­ளர்­க­ளி­ட­மி­ருந்து ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு பெரும் நிதி­யையும் படைக்­க­லன்­க­ளையும் பெற்­றது. பின்னர் சிரிய அதிபர் அஸாத்­திற்கு எதி­ராகப் போராடும் இன்னும் ஒரு அல் கைதாவின் கிளை அமைப்­பான ஜப்ரத் அல் நஸ்­ரா­விற்கு எதி­ராக தாக்­கு­தலைத் தொடுத்­தது. இது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு மீது பல ஐயங்­களை ஏற்­ப­டுத்­தி­யது. இதன் தலைவர் அபூ­பக்கர் அல் பக்­தாதி ஒரு யூதர் என்றும் அவர் இஸ்ரேல் மற்றும் ஐக்­கிய அமெ­ரிக்­காவின் உள­வாளி என்றும் செய்­திகள் வந்­தன. சிரி­யாவில் பெரு நிலப்­ப­ரப்பைக் கைப்­பற்­றிய அபூ­பக்கர் அல் பக்­தாதி தலை­மை­யி­லான ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு, 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஈராக்கில் மிகக் கடு­மை­யான தாக்­கு­தலைத் தொடுத்­தது. 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத ஆரம்­பத்தில் ஈராக்­கிலும் சிரி­யா­விலும் பத்­துக்கு மேற்­பட்ட நக­ரங்­க­ளைக்­கொண்ட பெரு நிலப்­ப­ர­பபைத் தமது கட்­டுப்­பாட்டின் கீழ் கொண்­டு­வந்­த­ரனர். ஈராக்­கிலும் சிரி­யா­விலும் உள்ள பெரு நிலப்­ப­ரப்பில் ஓர் இஸ்­லா­மிய அரசை அமைப்­பதை தமது இலக்­காகக் கொண்­டுள்­ளனர். முதலில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் பத்­தா­யிரம் பேர் வரை இருக்­கலாம் என அமெ­ரிக்கா மதிப்­பிட்­டி­ருந்­தது. தற்­போது இரு­ப­தி­னா­யிரம் முதல் முப்­பத்­தோ­ரா­யிரம் வரை இருக்­கலாம் என அமெ­ரிக்கா சொல்­கின்­றது. இஸ்­லா­மிய அரசு உரு­வாக்­கு­வ­தாக ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு பிர­க­டனம் செய்த பின்பு அதில் இணை­வதில் பல இளை­ஞர்கள் அக்­கறை காட்டி வரு­கின்­றனர். ஐம்­ப­திற்கு மேற்­பட்ட நாடு­களிலிருந்து இளை­ஞர்கள் இதில் இணைந்­துள்­ளனர். இஸ்­லா­மிய அரசு என ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­பினர் தம் பெய­ரையும் மாற்றிக் கொண்­டனர். இதனால் இப்­போது அவர்கள் ஐ.எஸ். என அழைக்­கப்­ப­டு­கின்­றனர். மேற்கு நாடுகள் ஐ.எஸ்.ஐ.எஸ் .தீவி­ர­வா­தி­க­ளை­யிட்டு அதிகம் கரி­சனை காட்­டு­வ­தற்கு முக்­கிய கார­ண­மாக இருப்­பது மேற்கு நாட்டுக் குடி­யு­ரிமை பெற்­ற­வர்கள் அதில் இணைந்­தி­ருப்­ப­துதான். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் தம்­மிடம் அகப்­பட்­ட­வர்­களை கொலை செய்யும் காணொ­ளியில் உரை­யாற்­று­ப­வர்கள் பிரித்­தா­னிய ஆங்­கி­லமும் வட அமெ­ரிக்க ஆங்­கி­லமும் கதைப்­பது அவர்­களை அதிர்ச்­சி­ய­டைய வைத்­துள்­ளது. இவர்­களால் இல­கு­வாக அமெ­ரிக்­கா­விற்கோ அல்­லது பிரித்­தா­னி­யா­விற்கோ சென்று தாக்­கு­தல்­களை நடத்த முடியும். இதனால் மத்­திய கிழக்கில் இருந்து தமது நாட்­டுக்கு வரும் பய­ணி­க­ளை­யிட்டு இவர்கள் மிகவும் கவ­ன­மாக இருக்­கி­றார்கள்.

கொரசன் அமைப்பு

அமெ­ரிக்­கா­விற்குத் தலை­யிடி கொடுக்கும் ஒரு போராளி அமைப்பின் பெயர் இப்­போது பிர­ப­ல­மாக அடி­ப­டு­கின்­றது. கொரசன் என்­பது அதன் பெய­ராகும். அதன் தலைவர் குவைத் நாட்டைச் சேர்ந்த 33 வய­தான முஹ்சின் அல் ஃபத்லி. இவர் அல் கைதாவின் முன்­னிலைத் தள­ப­தி­யாக இருந்­தவர். இவ­ருக்கு மிக இர­க­சி­ய­மாக வைக்­கப்­பட்­டி­ருந்த 9/11 இரட்டைக் கோபுரத் தாக்­குதல் பற்றி முன் கூட்­டியே தெரிந்த சிலரில் இவரும் ஒருவர். வட ஆப்­கா­னிஸ்­தா­னிலும் ரஷ்­யாவின் செச்­னி­யா­விலும் திறன்மிக்க போரா­ளி­யாகச் செயற்­பட்­ட­தனால் அல் கைதாவில் பிர­ப­ல­மா­னவர் இவர். விமான எதிர்ப்புத் துறையில் இவர் நிபு­ணத்­துவம் பெற்­றவர் எனச் சொல்­லப்­ப­டு­கின்­றது. 2012ஆம் ஆண்­டு­வரை ஈரா­னி­லி­ருந்து செயற்­பட்ட முஹ்சின் அல் ஃபத்லி, சிரி­யாவில் உள்­நாட்டுப் போர் ஆரம்­பித்­த­வுடன் அங்கு சென்­ற­வ­ராவார். இவர் முதலில் அல் கைதாவின் கிளை அமைப்­புக்­களில் ஒன்­றான ஜபத் அல் நஸ்­ரா­வுடன் இணைந்து செயற்­பட்டார். பின்னர் அதி­லி­ருந்து வில கிச் சென்றார். இவ­ரது மெய்ப்­பா­து­கா­வலர் சிரியப் படை­க­ளிடம் அகப்­பட்ட பின்னர் இவ­ரைப்­பற்­றிய தக­வல்கள் வெளி­வந்­தன. முஹ்சின் அல் ஃபத்­லியின் தலை­மையில் கொரசன் அமைப்பு சிரி­யாவின் பெரு நக­ரங்­களில் ஒன்­றான அலேப்­பேயில் செயற் ­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது. அமெ­ரிக்­கா வும் சவூதி அரே­பியா, ஜோர்தான், ஐக்­கிய அமீ­ரகம், காட்டார், பஹ்ரெய்ன், ஈராக் ஆகிய நாடு­களும் கொரசன் அமைப்­புக்கும் எதி­ராகத் தாக்­கு­தல்கள் மேற்கொள்கின்­றன.

சிரி­யாவின் குழுக்­களும் குடை அமைப்­புக்­களும்

சிரிய அதிபர் பஷார் அல் அஸாத்­திற்கு எதி­ராகப் பல ஒன்­றுடன் ஒன்று முரண்­பட்ட குழுக்கள் இருக்­கின்­றன சில குழுக்கள் ஒன்­றி­ணைந்து குடை அமைப்­புக்­க­ளையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. இரு­பத்தி எட்­டிற்கு மேற்­பட்ட ஸுன்னி முஸ்லிம் போராளிக் குழுக்­களும் எட்­டிற்கு மேற்­பட்ட குர்திஷ் மக்­களின் போராளிக் குழுக்­களும் இருக்­கின்­றன. சில குழுக்கள் லிபி­யாவில் செய்­தது போல் அமெ­ரிக்கா வந்து சிரிய அதி­பரின் படை­க­ளுக்கு எதி­ராகத் தாக்­குதல் நடத்தி தமக்கு விடு­தலை பெற்றுத் தரும் என நம்­பி­யி­ருந்­தன. ஆனால் அமெ­ரிக்­காவும் சவூதி அரே­பியா, ஜோர்தான், ஐக்­கிய அமீ­ரகம், காட்டார், பஹ்ரெய்ன், ஈராக் ஆகிய நாடு­களும் வந்து சிரிய அரச படை­க­ளுக்கு எதி­ராகத் தாக்­குதல் நடத்­தாமல் தம்­முடன் இணைந்து போரா­டி­ய­வர்­க­ளுக்கு எதி­ராகத் தாக்­குதல் நடத்­து­வது சிரி­யாவில் பலரை ஏமாற்றப் படுத்­தி­யுள்­ளது.

சிரி­யாவும் சிரி­யா­விற்குள் நடக்கும் தாக்­கு­தல்­களும்

சிரி­யா­விற்குள் வேறு நாட்டுப் படைகள் புகுந்து அங்­குள்ள போராளிக் குழுக்­க­ளுக்கு எதி­ராகத் தாக்­குதல் நடத்­து­வ­தாயின் அது சிரி­யாவுன் அனு­ம­தி­யு­டனும் ஒருங்­கி­ணைப்­பு­ட­னனும் மட்­டுமே நடக்க வேண்டும் என்­றது சிரிய அரசு. அப்­படிச் செய்­யா­விடில் அது சிரி­யா­மீ­தான ஒரு தாக்­கு­த­லா­கவே கரு­தப்­படும் என்­றடு சிரிய அரசு. இதை ரஷ்­யாவும் ஆமோ­தித்­தி­ருந்­தது. சிரி­யா­விற்குள் நடத்­தப்­படும் தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து அல் அஸாத்­திற்கு எதி­ராகப் போரா­டிய முக்­கிய குழுக்­களில் ஒன்­றான ஜபத் அல் நஸ்ரா என்னும் அல் கைதாவின் இணை அமைப்பு தன் படை நட­வ­டிக்­கை­களை நிறுத்­தி­ய­துடன், தமக்­கி­டை­யி­லான இலத்­தி­ர­னியல் தொடர்­பா­டல்­க­ளையும் நிறுத்திக் கொண்­டது. அசாத்­திற்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்­பிற்கும் எதி­ராகத் தீவி­ர­மாகப் போரா­டிய அஹ்ரர் அல் ஷாம் என்னும் குழுவும் அமெ­ரிக்­காவின் தாக்­குதல் தம்­மீதும் நடத்தப் படலாம் எனக் கருதி கள­மு­னை­களில் இருந்து வெளி­யேறி வரு­கின்­றது. இப்­படி அஸாத்­திற்கு எதி­ராகப் போராடும் குழுக்கள் விலகிச் செல்­வதால் அஸாத் வலுவடையலாம்.

ஐ.எஸ்.ஐ.எஸின் பின்னர்

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினருக்கு எதிரான தாக்குதல் தீவிரமடைந்தால் அவர்கள் துருக்கிக்குத் தப்பிச் சென்று பின்னர் ஈரான், ஆப்கானிஸ்தான், நைஜீரியா, சோமா லியா, ஈரான் போன்ற நாடுகளிற்குத் தப் பிச் செல்லலாம். பின்னர் அவர்களால் மீளத் திரள முடியும். ஆனால் சிரியாவில் அஸாத்தின் ஆட்சியை அகற்றுவது எப் படி? ஈராக்கில் ஓர் உறுதியான நல்லாட் சியை ஏற்படுத்துவது எப்படி? ஆகிய கேள் விகளுக்கான விடை காண்பது சிரமம். தமது படை நடவடிக்கைள் ஓராண்டுடன் முடியாமல் தொடரலாம் என அமெரி க்கா அறிவித்து விட்டது. ஈராக்கில் ஒரு நன்கு பயிற்சிபெற்ற அரச படையும் சிரி யாவில் அரசிற்கு எதிராகப் போராடும் குழுக்களுக்கு நன்கு பயிற்சியும் அவசி யம். இரு பயிற்சிகளையும் அமெரிக்கா வழங்கும்போது, அங்கு இஸ்லாமிய மதத் தீவிரவாதிகளும் ஊடுருவிப் பயிற்சி பெற லாம். அது மீண்டும் முதலாம் அத்தியாயம் என்றாகிவிடும்.

வேல் தர்மா
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல