ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

ஐயாயிரம் ரூபாய்க்கு தாய்லாந்துப் பெண்கள்

நுழைவுக் கட்­டணம் 8,500 ரூபாய்

பத்­ம­சிறி என்­பவர் கடந்த 15 ஆம் திகதி கொள்­ளுப்­பிட்­டியில் அமைந்­துள்ள முன்­னணி தாய் மசாஜ் நிலை­ய­மொன்­றிற்குச் சென்றார். கொள்­ளுப்­பிட்­டியில் அமைந்­துள்ள ஹோட்­ட­லொன்றின் இரண்டாம் மாடி­யி­லேயே அந்த மசாஜ் நிலையம் அமைந்­தி­ருந்­தது.



உள்ளே சென்ற பத்­ம­சி­றியை வர­வேற்­ப­றையி­லி­ருந்த யுவதி புன்­சி­ரிப்­போடு வர­வேற்றார். அந்த சமயம் பத்­ம­சிறி அங்கு சென்­ற­தற்­கான கார­ணத்தை கூறி­யுள்ளார். உடனே வர­வேற்­ப­றை­யி­லி­ருந்த யுவதி "சேர் இப்போ எல்லாப் பெண்­க­ளையும் புக் பண்­ணி­யி­ருக்­காங்க. மாலை நான்கு மணிக்கு பிற­குதான் பெண்­ணொ­ரு­வரை பெற்­றுக்­கொள்­ள­மு­டியும். சேர் பெண்­ணொ­ரு­வரை புக் பண்­ணி­விட்டு தொலை­பேசி இலக்­கத்தை தந்­து­விட்டு செல்­லுங்கள். நாங்கள் உங்­க­ளுக்கு பின்னர் தகவல் தரு­கின்றோம்" இப்­ப­டி­யாக வர­வேற்­ப­றை­யி­லி­ருந்த இலங்கை யுவதி கூறி­யுள்ளார்.

உடனே பத்­ம­சிறி பெண்­ணொ­ரு­வரைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக புக் பண்­ணி­விட்டு தனது கைய­டக்கத் தொலை­பேசி இலக்­கத்­தையும் கொடுக்க வர­வேற்­ப­றை­யி­லி­ருந்த அந்த யுவதி அந்த இலக்­கத்தை பதிவு செய்­து ­கொண்டாள். எனவே பத்­ம­சிறி மசாஜ் நிலை­யத்­தி­லி­ருந்து தனது நண்­பர்­களை சந்­திக்கச் சென்றார்.

“என்ன நடந்­தது......?” நண்­பர்­களில் ஒருவர் பத்­ம­சி­றியைக் கேட்க "எல்லாப் பெண்­களும் புக் பண்­ணி­யாச்சாம். எபொய் மன்ட் போட்­டு­விட்டு தான் வந்தேன். மாலை நான்கு மணிக்குப் பிறகு தகவல் தரு­வ­தாகக் கூறி­னார்கள்" என்று பதி­ல­ளித்­துள்ளார்.

"சரி...அதுவும் நல்­ல­துதான்..நான்கு மணி­வரை இந்த பகு­தியில் சுற்றித் திரிவோம்” பத்­ம­சி­றியின் நண்பர் கூறி­யுள்ளார். ஆம் அதற்­கி­ணங்க அவர்கள் குறித்த ஹோட்­டலை அண்­மித்த பகு­தியில் சுற்­றித்­தி­ரிந்­துள்­ளனர். ஆனால் பத்­ம­சி­றியோ அந்த மசாஜ் நிலை­யத்­தி­லி­ருந்து எப்­போது தொலை­பேசி அழைப்பு வரு­மென பதற்­றத்­துடன் இருந்­துள்ளார்.

சரி­யாக மாலை நான்கு மணி­ய­ளவில் பத்­ம­சி­றியின் தொலை­பேசி ஒலி­யெ­ழுப்­பி­யது. பத்­ம­சிறி பச்சைப் பொத்­தானை நசுக்க மறு­மு­னை­யி­லி­ருந்து "ஹலோ சேர் உங்­க­ளு­டைய எபொய்மன்ட் சரி...இப்போ வாருங்கள் ” என்று பெண்­ணொ­ருவர் கூறி­யுள்ளார்.

குறித்த யுவதி தொலை­பே­சியில் கூறி­யதை பத்­ம­சிறி நண்­பர்­க­ளிடம் கூற 15 ஆயிரம் ரூபாய் பணத்தை பத்­ம­சி­றி­யிடம் கொடுத்த நண்­பர்கள் தனஞ்­சய என்ற ஒரு­வ­ரையும் பத்­ம­சி­றி­யுடன் அனுப்பி வைத்­துள்­ளார்கள். பத்­ம­சிறி அந்த நண்­ப­ருடன் தனது காரில் ஏறி அந்த மசாஜ் நிலை­யத்­திற்கு சென்­றுள்ளார்.

உள்ளே நுழைந்த பத்­ம­சிறி நுழைவு கட்­ட­ண­மாக 8,500 ரூபாயை செலுத்­தி­யுள்ளார். அதற்­காக பற்­றுச்­சீட்டு ஒன்றும் அவ­ருக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. அப்­போது அழ­கிய தாய்­லாந்து பெண்­ணொ­ருவர் பத்­ம­சி­றியின் தோளில் சாய்ந்­துள்ளாள். அந்த சமயம் பத்­ம­சி­றி­யுடன் சென்ற நண்பர் தனஞ்­சய மசாஜ் நிலை­யத்தை விட்டு வெளி­யே­றி­யுள்ளார்.

நுழைவுக் கட்­டணம் செலுத்­திய பத்­ம­சிறி அதன் பின்னர் தன்­ன­ருகே வந்து தோளில் சாந்த தாய்­லாந்து யுவ­திக்கு 5000 ரூபாய் பணத்­தினை கொடுத்­துள்ளார். அதன் பின்­னரே இரு­வரும் அறைக்குள் சென்­றுள்­ளனர். அறைக்குள் சென்று சுமார் ஒரு மணித்­தி­யா­லத்­திற்கு பின் வெளி­யி­லி­ருந்த நண்­ப­ருக்கு "எல்லாம் சரி உள்ளே வாருங்கள்” என பத்­ம­சி­றி­யி­ட­மி­ருந்து தொலை­பேசி அழைப்­பொன்று வந்­தது.

உடனே பெண் ­கான்ஸ்­ட­பிள்கள் அடங்­கலாக விசேட குழு­வொன்று குறித்த மசாஜ் நிலை­யத்­திற்குள் நுழைந்­தது. வர­வேற்­ப­றை­யி­லி­ருந்த இரு பெண்­க­ளையும் அவ்­வி­டத்­தி­லேயே நிறுத்தி வைத்த பொலிஸார் ஒவ்­வொரு அறை­யாக சோத­னை­யிடத் தொடங்­கி­யுள்­ளனர். அப்­போது பத்­ம­சிறி இருந்த அறையும் சோத­னை­யி­டு­வ­தற்­காக தட்­டப்­பட்­டது. கதவு திறக்­கவே பொலிஸார் உள்ளே சென்­றனர்.

அப்­போது அந்த அறைக்குள் நிர்­வா­ணக்­கோ­லத்தில் தாய்­லாந்து பெண்­ணொ­ருவர் இருந்­துள்ளார். அதனைக் கண்ட பொலிஸார் உடனே ஆடை­ய­ணிந்து கொண்டு வெளியில் வரு­மாறு கூறி­யுள்­ளனர். அச்­ச­மயம் பத்­ம­சி­றியும் அறைக்­குள்­ளி­ருந்து வெளியில் வந்­துள்ளார். அப்­போதே பத்­ம­சிறி பொலி­ஸாரால் அனுப்­பப்­பட்­டவர் என்­பதை அங்­கி­ருந்­த­வர்கள் அறிந்­துள்­ளனர்.

மசாஜ் நிலையம் என்ற போர்­வையில் விப­சார நிலையம் நடத்­தி­வந்த குற்­றச்­சாட்டின் பேரில் அந்த மசாஜ் நிலை­யத்தின் முகா­மை­யா­ள­ரையும் ஏழு தாய்­லாந்துப் பெண்­க­ளையும் வர­வேற்­ப­றையி­லி­ருந்த இலங்கைப் பெண்­ணொ­ரு­வ­ரையும் பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

அது­மாத்­தி­ர­மல்­லாமல் பத்­ம­சிறி வழங்­கிய நுழைவு கட்­ட­ண­மான 8500 ரூபாய் தாய்­லாந்து யுவ­திக்கு வழங்­கிய 5000 ரூபாய் மற்றும் அன்­றைய தினம் சேர்ந்­தி­ருந்த 2 இலட்­சத்து 18 ஆயிரம் ரூபாய் பணத்­துடன் 100 அமெ­ரிக்க டொலர்கள், ஆணு­றைகள் போன்­ற­வற்­றையும் பொலி ஸார் மீட்­டுள்­ளனர்.

இவற்­றுக்கு மேல­தி­க­மாக ஏழு கட­வுச்­சீட்­டுக்கள் மற்றும் அந்த மசாஜ் நிலை­யத்­துக்கு வந்து சென்­ற­வர்கள் பற்­றிய தக­வல்கள் மற்றும் தொலை­பேசி இலக்­கங்கள் பதிவு செய்­யப்­பட்­டி­ருந்த புத்­த­கங் கள் போன்­ற­வற்­றையும் பொலிஸார் மீட்­டுள்­ளனர்.

கைது செய்­யப்­பட்ட ஏழு தாய்­லாந்து பெண்­களில் அறுவர் சுற்­றுலா விசா மூலம் இலங்­கைக்கு வந்­த­வர்கள். ஒருவர் மாத்­தி­ரமே வதி­விட விசா பெற்­ற­வ­ராவார். சுற்­றுலா விசா மூலம் வரு­ப­வர்­க­ளுக்கு எந்­த­வொரு தொழி­லையும் இங்கு புரிய முடி­யாது என்­பது யாவரும் அறிந்­ததே.இவ்­வா­றான நிலையில் இவர்கள் விப­சா­ரத்தில் ஈடு­பட்­ட­தா­னது அதை­விட பெரி யத் தவ­றாகும்.

நாட்டின் பல பாகங்­க­ளிலும் இவ்­வாறு மசாஜ் நிலை­யங்கள் என்ற போர்­வையில் விப­சார விடு­திகள் இயங்கி வரு­கின்­றன. அவ்­வா­றான விடு­திகள் பல கடந்த காலங்­களில் பொலி­ஸாரால் சுற்றி வளைக்­கப்­பட்டு பலர் கைது செய்­யப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். அவ்­வாறே இந்த மசாஜ் நிலை­யமும் சுற்றி வளைக்­கப்­பட்­டது.

இந்த விப­சார விடு­தி­யா­னது சுமார் பத்து வரு­டங்­க­ளாக மசாஜ் நிலையம் என்ற போர்­வையில் மிகவும் சூட்­சு­ம­மாக இயங்கி வந்­துள்­ளது. கொள்­ளுப்­பிட்­டியில் அமைந்­துள்ள இந்த மசாஜ் நிலை­யத்­திற்கு பிர­ப­லங்கள் உள்­ளிட்ட பணம் படைத்த முக்­கி­யஸ்­தர்­களும் சென்­றுள்­ளமை அங்கு மீட்­கப்­பட்ட பதிவுப் புத்­த­கத்­தி­லி­ருந்தும் பெறப்­பட்ட தொலை­பேசி இலக்­கங்­க­ளி­லி­ருந்தும் தெரிய வந்­துள்­ள­தாக பொலிஸார் குறிப்­பி­டு­கின்­றனர்.

இந்த மசாஜ் நிலை­யத்தின் வர­வேற்­ப­றையில் இரு பெண்கள் இருப்பர். அவர்­களில் ஒருவர் இலங்­கையர். மற்­றை­யவர் தாய்­லாந்துப் பெண். இங்கு வரும் வாடிக்­கை­யா­ளர்­க­ளுடன் கதைத்து தக­வல்­களை இலங்கைப் பெண் பெற்­றுக்­கொள்ள மறு­பக்­கத்­தி­லி­ருக்கும் தாய்­லாந்து பெண் உள்ளே இருக்கும் தாய்­லாந்து பெண்­க­ளுடன் கதைத்து வாடிக்­கை­யா­ளர்­க­ளுடன் இணைப்பை ஏற்­ப­டுத்­துவார்.

இவர்­க­ளுக்கு மேல­தி­க­மாக முகா­மை­யாளர் ஒருவர் இருக்­கிறார். இவர் இந்த மசாஜ் நிலை­யத்­தற்கு வரும் வாடிக்­கை­யா­ளர்­க­ளி­னதும் மசாஜ் நிலை­யத்­தி­னதும் இர­க­சி­யங்­களை பேணு­ப­வ­ராக செயற்­பட்டு வந்­துள்ளார். அந்த மசாஜ் நிலை­யத்­துக்குள் சுற்­றிலும் பூச்­சா­டிகள் தொங்­க­வி­டப்­பட்­டுள்­ளன. அந்த பூச்­சா­டி­க­ளுக்குள் சிறிய பாது­காப்பு கெம­ராக்கள் பொருத்­தப்­பட்­டுள்­ளன. அவற்றின் மூலம் யார்-? யார்? உள்ளே வரு­கி­றார்கள் என்ற சகல விட­யங்­க­ளையும் இந்த முகா­மை­யாளர் அவ­தா­னிப்­பது வழக்கம்.

இந்த முகா­மை­யா­ள­ருக்கு மாத சம்­பளம் 50 ஆயிரம் ரூபா. அதேபோன்று தாய்­லாந்து பெண்­ணொ­ரு­வ­ருக்கு மாத சம்­பளம் ஒரு இலட்சம் ரூபா. அதற்கு மேல­தி­க­மாக தாய்­லாந்துப் பெண்­ணொ­ருவர் நாள் ஒன்­றுக்கு சுமார் 50 ஆயிரம் ரூபா வரை உழைப்­ப­தாகக் கூறப்­ப­டு­கி­றது.

மசாஜ் நிலை­யத்­துக்குள் நுழையும் ஒவ்­வொரு வாடிக்­கை­யா­ள­ரி­ட­மி­ருந்தும் நுழைவுக் கட்­ட­ண­மாக 8,500 ரூபா அற­வி­டப்­ப­டு­கி­றது. இந்த பணம் அந்த நிறு­வ­னத்­திற்கே செல்லும். அதற்­காக பற்­றுச்­சீட்டும் வழங்­கப்­படும். அதன் பின்னர் குறித்த வாடிக்­கை­யாளர் தனக்கு விருப்­ப­மான தாய்­லாந்துப் பெண்­களை தெரிவு செய்­யலாம்.

இவ்­வாறு தெரிவு செய்­யப்­படும் பெண்­க­ளுக்கு வாடிக்­கை­யா­ளர்கள் பணம் கொடுத்து அவர்­களை பாலியல் இச்­சைக்கு உட்­ப­டுத்­துவர். அந்தப் பெண்கள் கோரும் பணத்தை அவர்கள் கொடுத்து அவர்­க­ளுடன் அறைக்குச் செல்வர். அவ்­வாறு வாடிக்­கை­யா­ள­ரி­ட­மி­ருந்து பெறப்­படும் பண­மா­னது நிறு­வ­னத்­துக்கு வழங்­கப்­பட மாட்­டாது.

கைது செய்­யப்­பட்ட ஏழு தாய்­லாந்து பெண்­களில் அறுவர் ஆறு­மாத சுற்­றுலா விசாவின் மூலம் இலங்கை வந்­த­வர்­க­ளாவர். இவர்­க­ளிடம் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து இவர்கள் தாய்­லாந்­திலும் விப­சாரத் தொழிலை செய்து வந்­துள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது. இந்த மசாஜ் நிலை­ய­மா­னது சுமார் பத்து வரு­டங்­க­ளாக செயற்­பட்டு வந்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

வலாணை குற்­றத்­த­டுப்பு பிரிவு விசேட பொலிஸ் குழு­வொன்று இந்த மசாஜ் நிலை­யத்தை சுற்­றி­வ­ளைத்து குறித்த தாய்­லாந்துப் பெண்கள் ஏழு பேரைக் கைது செய்­துள்­ளனர்.

பொலிஸ் மா அதி­பரின் பணிப்­பு­ரைக்கு அமைய குறித்த மசாஜ் நிலை­யத்தை சோத­னை­யி­டு­வ­தற்­கான நீதி­மன்ற அனு­ம­தி­யினைப் பெற்றுக் கொண்டே இந்த சுற்­றி­வ­ளைப்பு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

இந்த சட்­ட­வி­ரோத செயற்­பா­டா­னது சில பொலிஸ் அதி­கா­ரி­களின் ஒத்­து­ழைப்­புடன் மேற்­கொள்­ளப்­பட்டு வந்­துள்­ள­தா­கவும் இங்கு பல முக்­கிய பிர­மு­கர்கள் பிர­ப­லங்கள் வந்து போயுள்­ள­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது. கைது செய்­யப்­பட்ட சக­ல­ரையும் அதே­போன்று தட­யப்­பொ­ருட்­க­ளையும் வலாணை குற்­றத்­த­டுப்பு பிரி­வினர் கொள்­ளுப்­பிட்டி பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்­துள்­ளனர். கொள்­ளுப்­பிட்டி பொலிஸார் மேல­திக விசா­ர­ணை­களின் பின்னர் அவர்­களை நீதி­மன்­றத்தில் ஆஜர்படுத்­தி­யுள்­ளனர். தற்­போது அவர்கள் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளார்கள். மசாஜ் நிலை­யங்கள் என்ற போர்­வையில் இவ்­வா­றான சட்­ட­வி­ரோத செயற்­பா­டுகள் நாட்டில் பல பாகங்­க­ளிலும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. இவற்றை கட்­டுப்­ப­டுத்திப் படுத்தி நாட்டை சமூகச் சீரழிவில் இருந்து பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது காலத்தின் கட் டாயமாகும்.

 எம்.நேச­ம­ணி

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல