பாகிஸ்தானுக்காக இந்தியாவை உளவு பார்க்கின்ற வேலையில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டு வருகின்றமை வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.
ஈழ தமிழரான அருண் செல்வராஜன் என். ஐ. ஏயால் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டமையை தொடர்ந்து இது வெளிப்பட்டு உள்ளது.
புலிகள் இயக்க உறுப்பினரான இவர் புலிகளுக்கு வேண்டிய உதவி, ஒத்தாசைகளை செய்து கொடுத்தமைக்காக இலங்கையில் தேடப்பட்டு வருகின்றார்.
இவர் ஐ. எஸ். ஐக்கு மிகப் பெரிய சொத்து ஆவார். உளவு வேலை பார்க்கின்றமையோடு மட்டும் அல்லாமல் உத்தேச தாக்குதல்களுக்கான திட்டமிடல்களுக்கும் உதவி உள்ளார்.
இந்தியாவை பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் கடந்த வருடத்தில் இருந்து கைது செய்யப்பட்ட மூன்றாவது இலங்கையர் செல்வராஜன் ஆவார்.
இவர் சென்னையில் கம்பனி ஒன்றை நடத்தி வந்திருக்கின்றார். கைது இடம்பெற்றபோது இவரிடம் இருந்து இரு கடவுச்சீட்டுக்கள் கைப்பற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக