பிரித்தானிய உணவகமொன்றின் குளிர்சாதனப்பெட்டியில் உணவுப்பொருட்களுடன் இறந்த சிங்கமொன்றின் உடல் வைக்கப்பட்டிருப்பது சுற்றுச் சூழல் சுகாதார அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையொன்றின் போது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
மேற்கு சஸக்ஸிலுள்ள சிசெஸ்டர் மாவட்ட சபையின் சுகாதார பாதுகாப்பு முகாமையாளரான அயன் பிறைட்மோர் தலைமையிலான குழுவினராலேயே இந்த அதிர்ச்சியூட்டும் செயற்பாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட உணவகத்தின் உரிமையாளர் தனது நாய்களுக்கு உணவளிப்பதற்காக அருகிலிருந்த மிருகக்காட்சிசாலையொன்றிலிருந்து இறந்த சிங்கத்தை அன்பளிப்பாக பெற்றிருந்தார்.
இந்நிலையில் அவர் அந்த சிங்கத்தின் உடலை நீண்ட நாட்களுக்கு கெடாமல் பாதுகாக்க, அதனை குளிர்சாதனப்பெட்டியில் உணவகத்துக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு பரிமாற்றுவதற்கான உணவுகளுடன் வைத்திருந்துள்ளார். இந்நிலையில் மேற்படி உணவகத்தை அதன் பாதுகாப்பு தொடர்பில் திருப்தி ஏற்படும் வரையில் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக