ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

நல்ல நேரம்… ராகு­காலம்… எம­கண்டம் பார்த்தும் ஜெ.வுக்கு எதி­ராக வந்த தீர்ப்பு

ஜெய­ல­லி­தா­விற்கு பாத­க­மான தீர்ப்­புதான் வரும் என்று ஏரா­ள­மான ஜோதி­டர்கள் அறி­வித்­தனர். ஒரு­சிலர் சாத­க­மான தீர்ப்பு வரும் என்று கூறினார். எனினும் ஜெய­ல­லி­தாவின் ஜோதிட நம்­பிக்கை பொய்த்­துப்­போ­னது என்­பதை இந்த தீர்ப்பு உணர்த்­தி­யுள்­ளது.

சிம்­ம­ரா­சிக்கு பாதகம்

தமி­ழக முதல்வர் ஜெய­ல­லி­தா­விற்கு சிம்ம ராசி, மிதுன லக்னம். அந்­த­வ­கை யில், ஜெய­ல­லி­தாவின் ஜாதகம் வலி­மை யும் வல்­ல­மையும் கொண்­ட­தாக இருக்­கி­றது. இன்­றைய கோச்­சார நில­வ­ரப்­படி ராசிக்­கு­ரிய குரு 6, 8, 12-ஆம் இடத்­துக்கு வரு­வது சிறப்பான அம்சம் கிடை­யாது. என்று ஜோதிட சிகா­மணி டி.வி.ராஜா­செந்­தில்­குமார் தெரி­வித்­தி­ருந்தார்.

பத­வி­யி­ழப்பு, அவ­மானம்

இதே­வேளை, சிம்ம ராசி, மக நட்­சத்­திரம் கொண்ட முதல்வர் ஜெய­ல­லி­தாவின் தசா புக்தி எப்­ப­டிப்­பட்­ட­தாக இருந்­தாலும் கோச்­சாரம் என்­பது சிம்ம ராசிக்கு எதிர் மறை­யா­கவே இருக்­கி­றது. சிம்ம ராசிக்கு 12-இல் குரு வந்­துள்ளார். இது மிகுந்த பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்தும். புரா­ணத்தில் ராவ­ணனின் ராசிக்கு குரு 12-இல் வந்த போது தான் ராவணன் பத­வி­களை இழக்க நேர்ந்­தது. முடி­து­றந்தான் ராவணன். அவ­மா­னப்­பட்டான் என்று "அதிர்ஷ்டம்' சி.சுப்­பி­ர­ம­ணியம் கூறி­யுள்ளார்.

சனியால் கெடுதல்

அதே­போ­லத்தான் 12-இல் உள்ள குரு, இந்த ராசிக்­கு­ரி­ய­வ­ருக்கும் கெடு­த­லை யும் அவ­மா­னத்­தையும் ஏற்­ப­டுத்­துவார். மேலும், சிம்ம ராசிக்கு கடந்த ஏழரை நாட்டு சனியில் எல்­லா­வி­த­மான யோகங் களையும் கொடுத்­து­விட்டார். அடுத்து வரும் சனிப்­பெ­யர்ச்சி, கொடுத்த யோகங்­க­ளுக்கு எதிர்­ம­றை­யா­கத்தான் கொடுப்பார். இந்த சனிப்­பெ­யர்ச்­சி­யா­னது 2014 டிசம்­பரில் நடக்­க­வி­ருக்­கி­றது. அப்­போது ராசிக்கு 4-இல் அமர்ந்து ஜென்ம நட்­சத்­தி­ரத்தை சனி பார்க்கும் காலத்தில் மாபெரும் கெடு­த­லையே செய்வார் என்றும் கூறி­யுள்ளார். சனியின் இந்த ஆக்­ரோஷம், சனிப் பெயர்ச்சி நடக்கும் டிசம்­ப­ருக்கு 3 மாதத்­திற்கு முன்­பா­கவும் காட்டும் அல்­லது சனிப் பெயர்ச்சி நடந்த பிறகும் காட்­டலாம். ஆகவே, சுருங்கச் சொன்னால் சிம்ம ராசிக்கு 4-இல் வரும் சனியும் 12-இல் உள்ள குருவும் பத­வியில் இருப்பவர்­களை நீடிக்க விட­மாட்டார்'' என்று கூறி­யுள்ளார் ஜோதிடர் சுப்­ர­ம­ணியம்.

கைவிட்ட ஜோதிட நம்­பிக்கை

சொத்­துக்­கு­விப்பு வழக்கு தீர்ப்பு திகதி அறி­விக்­கப்­பட்­டதில் இருந்தே கோவில்­களில் யாகங்களும், பூஜைகளும் நடை பெற்றன. நல்லநேரம், ராகுகாலம், எம கண்டம் பார்த்துதான் அவர் நீதிமன்றத் திற்கே கிளம்பினார். ஆனால் அந்த நம்பிக் கைகள் எதுவுமே ஜெயலலிதாவிற்கு கை கொடுக்கவில்லை.

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல