பசி பட்டினி... இன்று உலக அளவில் தடுக்கப்படவேண்டும் என்ற நோக்கில் அதிகளவில் பேசப்படும் விடயமாக இந்த பசி, பட்டினி காணப்படுகின்றன. உலகின் ஒரு பகுதியில் தேவைக்கு அதிகமாக உணவு உற்பத்தி செய்யப்பட்டு வீண்விரயமாக்கப்படுகின்ற நிலையில் மறுபுறம் சில நாடுகளில் சிறுவர்கள் முதல் வயது வந்தவர்கள் வரை பட்டினியால் வாடும் பரிதாப உலக சூழலிலேயே நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
உலகத்தின் இயங்கும் முறைமையானது எப்போதும் விசித்திரமானதாகவே அமைந்துவிடுகின்றது. அதாவது உலகின் ஒரு மூலை பசியினால் வாடும்போது மற்றுமொரு மூலை உணவை வீண் விரயம் செய்கின்றது. அந்தவகையில் உலக உணவுத் தினமாக இன்று ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் உலகில் மக்கள் எதிர்கொள்ளும் இந்த சவால் குறித்து நாம் ஆராய்கின்றோம்.
பட்டினி என்ற சொல்லுக்கு பல வரைவிலக்கணக்கங்கள் உள்ளன. அதாவது வயிற்றுப் பசிக்குப் போதுமான உணவு ஒருவருக்கு கிடைக்காமை பட்டினி அல்லது பசி என்று பொதுவாக கூறப்படுகின்றது.
உலகில் 805 மில்லியன் பேருக்கு பசியை ஆற்றக்கூடிய உணவு கிடைப்பதில்லை என்று ஆய்வு கூறுகின்றது. அதாவது இந்த பூமியில் வாழும் 9 பேரில் ஒருவர் பசியை போக்கிக்கொள்ளும் வகையில் உணவைப் பெறாமல் இருக்கின்றார். பட்டினி சவாலை எதிர்கொள்ளும் அதிகமான மக்கள் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளிலேயே உள்ளனர். அபிவிருத்தி அடைந்த நாடுகளில் பட்டினி என்பது பாரியதொரு விவகாரமாக இல்லை. உலக சனத்தொகையில் 13.5 வீதமான மக்கள் போஷாக்கு குறைபாட்டினால் சிக்கி தவிக்கின்றனர்.
ஆசியா மற்றும் ஆபிரிக்க கண்டங்களில் உள்ள நாடுகளிலேயே இந்த பட்டினி நிலைமை அதிகளவில் காணப்படுகின்றது. தெற்காசியாவை பொறுத்தவரை தற்போது பட்டினி நிலைமை வீழ்ச்சியடைந்துவருகின்றது. எனினும் மேற்கு ஆசியாவில் இந்த நிலைமை இன்னும் காணப்படுகின்றது. ஆபிரிக்காவை பொறுத்த வரை உயர் மட்ட பட்டினி நிலைமை உள்ளது. இந்தக் கண்டத்தில் உள்ள சனத்தொகையில் நான்கு பேரில் ஒருவர் போஷாக்கின்மையினால் வாடுகின்றார்.
இதேவேளை உலகில் போஷாக்கின்மை காரணமாக 3.1 மில்லியன் சிறுவர்கள் வருடந்தோறும் உயிரிழக்கின்றனர் என்ற அதிர்ச்சித் தகவலையும் உலக உணவு நிகழ்ச்சித் திட்டம் வெளியிட்டுள்ளது. சிறுவர்கள் மரணங்களில் 45 வீதமானவை போஷாக்கின்மையினாலேயே என்ற விடயம் வெளியிடப்பட்டுள்ளது.
அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் 100 மில்லியன் மக்கள் வயதுக்கு ஏற்ற உடல் எடையை கொண்டிருக்கவில்லை. அதாவது ஆறு சிறுவர்களில் ஒருவர் இந்த நிலைமையை எதிர்நோக்குகின்றார். அபிவிருத்தி அடைந்த நாடுகளில் நான்கில் ஒரு சிறுவர் வளர்ச்சி குன்றியவராகவே காணப்படுகின்றார்.
அதாவது ஆண்களுக்கு போன்று பெண் விவசாயிகளுக்கும் வளங்கள் உரிய முறையில் வழங்கப்பட்டால் உலகில் பட்டினியால் வாடும் மக்களின் எண்ணிக்கையை 150 மில்லியன்களாக குறைக்க முடியும் என்பது உலக உணவுத்திட்டத்தின் கருத்தாகும்.
அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் 66 மில்லியன் ஆரம்ப பாடசாலை மாணவ வயதுடையவர்கள் பசியுடன் வகுப்புக்களுக்கு வருகின்றனர். ஆபிரிக்காவில் 23 மில்லியன் சிறுவர்கள் இவ்வாறு உள்ளனர். இந்நிலையில் இந்த 66 மில்லியன் பேரின் பசியை போக்குவதற்கு 3.2. பில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக உலக உணவுத்திட்டம் மதிப்பிட்டுள்ளது. உலகில் 10000 பேரில் இருவர் பட்டினி காரணமாக ஒவ்வொரு தினமும் உயிரிழப்பதாக ஒரு கணக்கெடுப்பு கூறுகின்றது.
உலகை பொறுத்தவரை சனத்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தி செய்யப்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. ஆனால் அவை பகிரப்படும் முறையிலேயே சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக உலகின் பட்டினி நிலையானது 1980 களில் குறைவடையும் நிலையில் இருந்தது. எனினும் கடந்த தசாப்தத்தில் பட்டினி வீதம் அதிகரித்துள்ளது. 1995 மற்றும் 1997 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு இடையிலும் கடந்த 2004 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளுக்கும் இடையிலும் பட்டினியால் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
உண்மையில் உலகில் வறுமை நிலை அதிகரிப்பதும் அவற்றை குறைப்பதற்கும் உரிய திட்டங்கள் இன்மையும் பட்டினிக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. அது மட்டுமன்றி உணவு உற்பத்தி குறைவடைகின்றமை மற்றும் உணவு பாதுகாப்பு இன்மை, உரிய முறையில் வளங்கள் முகாமைத்துவம் செய்யப்படாமை, உள்நாட்டு மோதல்கள், உள் நெருக்கடிகள், இயற்கை அனர்த்தங்கள், வரட்சி, காலநிலை மாற்றங்கள் உள்ளிட்ட விடயங்கள் இங்கு முக்கிய காரணிகளாக விளங்குகின்றன.
'' சோமாலியாவில் ஒரு மில்லியன் மக்கள் உடனடி மனிதாபிமான தேவையை பெறும் நிலையில் உள்ளனர். இவர்களில் 250000 பேர் சிறுவர்களாவர். அவர்களில் 50000 சிறுவர்கள் மரணத்தின் தறுவாயில் உள்ளனர். அவர்களுக்கு உடனடி உதவிகள் தேவைப்படுகின்றன'' என்று ஆபிரிக்காவுக்கான ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் பிலிப்பே லசாரினி அண்மையில் தெரிவித்துள்ளார். உலகின் பட்டினி நிலைமை சில பகுதிகளில் எவ்வாறு காணப்படுகின்றது என்பதற்கு இது சிறந்த உதாரணமாகும்.
உலக நிலைமைகள் இவ்வாறு இருக்கையில் இலங்கையின் நிலைமை குறித்து தற்போது பார்ப்போம். இலங்கையை பொறுத்தவரை கடந்த 2013 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி நாட்டின் வறுமை வீதமானது 6.7 ஆக அமைந்துள்ளது. கடந்த 20 வருடங்களை எடுத்துப்பார்க்கும்போது வறுமை நிலை குறைவடைந்து வருகின்றமையை நாம் அவதானிக்கின்றோம். குறிப்பாக கடந்த 2002 ஆம் ஆண்டில் 22.7 வீதமாக வறுமை வீதம் 2006 ஆம் ஆண்டில் 15.2 வீதமாகவும் 2009 ஆம் ஆண்டில் 8.9 வீதமாகவும் குறைவடைந்து வந்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டின் தரவுகளின் படி முல்லைத்தீவு மாவட்டமே அதிகளவில் வறுமைக்குரிய மாவட்டமாக உள்ளது. இந்த மாவட்டத்தில் 28.8 வீதம் வறுமை காணப்படுகின்றது. அடுத்ததாக மொனராகலை மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தில் 20.8 வீதமாக வறுமை வீதம் காணப்படுகின்றது.
இலங்கையில் மாவட்ட ரீதியான வறுமை நிலை
இந்நிலையில் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சமூக கற்கைகள் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் சந்திரபோஸ் விபரிக்கையில்,
இலங்கையை பொறுத்தவரை வறுமை அல்லது பட்டினி நிலைமை குறைவடைந்து வந்தாலும் இன்னும் சுமார் 6 வீதமான மக்கள் வறுமையுடனேயே வாழ்கின்றனர். அதாவது சர்வதேச தரத்துக்கு அமைய 130 ரூபாவுக்கு குறைவாக தினம் ஒன்றுக்கு உழைக்கின்றவர்கள் வறியவர்களாகவே கருதப்படுகின்றனர். அந்தவகையில் இலங்கையில் மாதம் 3500 ரூபாவுக்கு குறைவாக உழைக்கின்றவர்கள் 10 இலட்சம் பேர் உள்ளதாகவே அண்மைய கணிப்பீடுகள் கூறுகின்றன.
அதன்படி இந்த 6 வீத வறுமைக் கோட்டுக்குள் யார் வருகின்றனர் என்று பார்த்தால் தோட்டப் பகுதிகளில் வாழ்கின்ற மக்களை பிரதானமாக குறிப்பிடலாம். குறிப்பாக சிறு தோட்டங்களில் வேலை செய்கின்ற தோட்டத் தொழிலாளிகள் மற்றும் விவசாய மக்கள் என்ற பிரிவுகளுக்குள்ளேயே இந்த 6 வீத வறிய மக்கள் உள்ளடங்குகின்றனர். மற்றும் மாதம் ஒன்றுக்கு 3500 ரூபாவுக்கு மேல் உழைக்கின்றவர்கள் வறியவர்கள் அல்ல என்று கூறப்படுகின்றது. அவ்வாறாயின் தற்போதைய நிலைமையில் மாதம் ஐயாயிரம் ரூபா உழைக்கின்ற ஒருவரால் போஷாக்கான உணவைப் பெற முடியுமா என்பது கேள்விக்குறியாகும். குறிப்பாக பசிக்கு உணவை உட்கொள்வது என்பதனை விட போஷக்கான உணவைப் பெறவேண்டும் என்பதே முக்கியமாகும். போஷாக்கான உணவைப் பெறுகின்ற ஒருவருக்கே சிறந்த கிரகித்தல் திறன் வருகின்றது. இந்நிலையில் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் சிறுவர்கள் போஷாக்கான உணவைப் பெறுவதற்கான ஏற்பாடுகளை அந்தந்த நாடுகளின் அரசாங்கங்கள் முன்னெடுத்துள்ளன. அதேபோன்று இலங்கையில் சிறுவர்கள் நிறை உணவைப் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவேண்டியது அவசியமாகும். பாடசாலையில் சத்துணவு உள்ளிட்ட பல்வேறு உத்தரவாத வேலைத்திட்டங்கள் அவசியமாகும் என்று அவர் குறிப்பிடுகின்றார்.
உண்மையில் உலகில் வறுமை , பசி ,பட்டினி என்பது மிகப்பெரியதொரு சாபக்கேடாகும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. உலகில் வறுமையை குறைப்பதற்கான திட்டங்களில் மில்லேனியம் அபிவிருத்தி இலக்குத்திட்டத்தை நிறைவேற்றுவது முக்கியமானது என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகின்றது. எனவே வறுமை மற்றும் பட்டினியை குறைப்பதற்கும் பட்டினியில்லாத உலகத்தை கட்டியெழுப்புவதற்கும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட உலக அமைப்புக்களும் அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களும் முன்வரவேண்டும் என்பதே இன்றைய உலக உணவு தினத்தில் முன்வைக்கப்படக்கூடிய மிகச்சிறந்த வலியுறுத்தலாகும்.
(ரொபட் அன்டனி)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக