செவ்வாய், 4 நவம்பர், 2014

தமிழக போராட்டங்களால் பலன் இல்லை; பிரச்னை தான்: யாழ்ப்பாண பல்கலை மாணவர்கள் பளீச் பேட்டி

சென்னை : 'தமிழக தலைவர்களின் கண்டனங்களும், தீர்மானங்களும், இலங்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இலங்கை அரசை கண்டித்து, தமிழகத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்படும் போது, தங்களுக்கான உரிமைகள் கிடைப்பது தள்ளிப் போவதாகவே, அங்குள்ள தமிழர்கள் கருதுகின்றனர்' என, தமிழகம் வந்துள்ள இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.



தமிழ் இதழியல் கருத்தரங்குசென்னை பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையுடன், இலங்கை, யாழ்ப்பாண பல்கலையின் ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையம் இணைந்து, கடந்த 20ம் தேதி துவங்கி, வரும் 31ம் தேதி வரையிலான, 12 நாள், தமிழ் இதழியல் கருத்தரங்கை நடத்துகின்றன. அதில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து, 25 மாணவர்கள், ஒரு இயக்குனர் பங்கேற்றுள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலை மாணவர்கள், 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டி:

இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள தமிழகம் வருவதாக திட்டமிட்ட போது எப்படி உணர்ந்தீர்கள்?

கயிலைநாதன் கார்த்திக்: தமிழ் இதழியல் பற்றி, அதன் ஆணிவேரான தமிழகத்தில் கள ஆய்வு செய்வதற்கான வாய்ப்பு கிடைத்ததால், அதற்கான ஏற்பாடுகளை செய்யும் போது மனதுக்குள், தமிழகத்தை பற்றிய இனிய கற்பனைகள் விரிந்தன.

இலங்கையில், தற்போது தமிழ் மாணவர்களுக்கு கல்வி மறுக்கப்படும் சூழலோ, இருட்டடிக்கப்படும் சூழலோ உள்ளதா?

செபஸ்தியம்பிள்ளை காளிஸ்தான்: எங்கள், யாழ்ப்பாண பல்கலையை பொறுத்தவரை, அது போன்ற எந்த சூழலும் இல்லை. சில இடங்களில் இருக்கலாம்.அதை பற்றிய புள்ளி விவரங்கள் கிடைக்காத போது, தெளிவாக சொல்ல முடியாது.

வேலைவாய்ப்புகளில் அப்படிப்பட்ட சூழல் இருப்பதாக, பலர் தெரிவித்து உள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலையில் சிங்கள மாணவர்கள் படிக்கின்றனரா, அவர்களுக்கும் உங்களுக்குமான உறவு எப்படி உள்ளது?

கிருத்திகா: போருக்கு பின் வந்த காலங்களில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில், சிங்கள மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. அவர்கள், எங்களையோ, நாங்கள் அவர்களையோ வெறுக்கும் சூழல் ஏதும் இல்லை.படிப்பு இயல்பாகவே இருக்கிறது. அவர்களும், எங்களுக்கு தோழர்களாகவே இருக்கின்றனர்.

இலங்கையில், தற்போது தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனரா, அவர்களுக்கான உரிமைகள் கிடைக்கிறதா?

சிவரேஸ்வரன் சுமணன்: நாங்கள் இருக்கும் பகுதி யாழ்ப்பாணம். அங்கு, ஓரளவு பாதுகாப்பு கிடைத்திருக்கிறது. மற்ற இடங்களின் நிலை பற்றி எங்களுக்கு தெரியாது.பொதுவாகவே, எல்லா கால கட்டத்திலும் கல்வி, மருத்துவ சேவைகள் மறுக்கப்பட்டதாக எனக்குதெரியவில்லை. முகாம்களில் இருந்து மீள் குடியமர்த்தப்படுவதில் நிறைய இழுபறியும், பல அரசியல் குறுக்கீடுகளும், ஊழல்களும் நிகழ்ந்திருப்பதாக தெரிகிறது. அதில், பல இடங்களில் பெயரளவுக்கே நடத்திருப்பதாகவும் சொல்லலாம்.

தமிழக அரசியல்வாதிகளின் கண்டனங்களுக்கும் தீர்மானங்களுக்கும், இலங்கை அரசிடம் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அப்போது, அங்குள்ள தமிழர்களின் நிலைப்பாடு என்ன?

கயிலைநாதன்: தமிழக தலைவர்களின் கண்டனங்களுக்கும், தீர்மானங்களுக்கும், இலங்கையில் எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்தியதாக எங்களுக்கு தெரியவில்லை. இலங்கை அரசை கண்டித்து, எப்போதெல்லாம் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறதோ, அப்போதெல்லாம் தங்களுக்கான உரிமைகள் கிடைப்பது தள்ளிப்போவதாகவே, அங்குள்ள தமிழர்கள் கருதுகின்றனர்.தமிழக தலைவர்கள் இணைந்து, ஒருமித்த குரலில் எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றாததால், இந்திய அரசின் அணுகுமுறையில் பெரிய மாற்றங்கள் நிகழ்வதில்லை. எனவே, தீர்மானங்கள், இலங்கை தமிழர்கள் மேல் உள்ள பற்றை காட்டுவதாக அமைகின்றனவே தவிர, உதவுவதாக இல்லை.அறிக்கைகளை விட்டு விட்டு, ஆக்கங்கள் தொடர்ந்தால், தமிழக தலைவர்கள் மீது நம்பிக்கை அதிகரிக்கும்.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுவது பற்றி?

கிருத்திகா: தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது பற்றி, தமிழக ஊடகங்களின் வழியாகத் தான் நாங்கள் அறிந்து கொள்கிறோம்.ஆனாலும், இலங்கை தமிழ் மீனவர்களின் எல்லையில், தமிழக மீனவர்கள், தடை செய்யப்பட்ட மடிவலைகளுடன் வந்து மீன்பிடிப்பதால், இலங்கை தமிழர்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அங்கு கூறுகின்றனர். எப்படி இருந்தாலும், மீனவர்கள் தாக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.

தமிழகத்திற்கு வந்ததில் இருந்து நீங்கள் சந்தித்த இடர்பாடுகள் என்னென்ன?

இயக்குனர் தேவானந்த்: சென்னை விமான நிலையத்தில், நாங்கள் விசாரிக்கப்பட்டோம். எங்கள் மாணவர்கள், இங்குள்ள உளவுத் துறையினரால், துருவித்துருவி விசாரிக்கப்படுவதாக உணர்கிறோம். அதற்கு, ஆதாரம் இல்லை.சென்னை பல்கலையில் தான், நான் உயர்கல்வி முடித்தேன். தமிழகம் போன்ற பரந்துபட்ட மாநிலத்தில், தமிழ் மாணவர்களுடன் இணைந்து யாழ் மாணவர்கள் கருத்தரங்கில் பங்கேற்கும் போது, பண்பாடு, கலை, கலாசாரம், வாழ்வியல், மொழி உள்ளிட்ட கூறுகளை கவனிக்கும் திறன் ஏற்படுகிறது.இங்குள்ள மாணவர்கள், பேராசிரியர்களின் ஒத்துழைப்பு நன்றாக உள்ளது.மேலும், இது போன்ற பல கருத்தரங்குகளை இரு நாடுகளும் நடத்துவதால், மாணவர்களுக்கு இயல்பான புரிந்துணர்வும், உறவும் ஏற்பட வாய்ப்பு ஏற்படும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர்'

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல