Authorities made Usaid Barbo, 14, reenact his surrender in a show aired on state television. (Photo courtesy: Iraqiya TV)
ஐ.எஸ். போராளிகளால் பள்ளிவாசலொன்றில் தற்கொலைக் குண்டுத்தாக்குதலை நடத்துவதற்கு அனுப்பப்பட்ட 14 வயது சிறுவன் ஒருவன், தற்கொலை மேலங்கி சகிதம் தப்பி வந்து பொலிஸாரிடம் சரணடைந்த சம்பவம் ஈராக்கில் இடம்பெற்றுள்ளது.சிரிய நகரான மன்ஜில்லை சேர்ந்த எதிர்காலத்தில் மருத்துவராக வர வேண்டும் என்ற கனவுகளுடன் இருந்த உஸெயித் பர்ஹோ என்ற மேற்படி சிறுவன், ஐ.எஸ். போராளிக் குழுவின் பிரசாரத்தால் கவரப்பட்டு அதில் இணைந்து கொண்டுள்ளான்.
இஸ்லாத்தின் மீதுள்ள பற்றால் இஸ்லாமிய தேசத்தை விஸ்தரிக்க போராடும் ஐ.எஸ். போராளி குழுவில் இணைந்து கொள்ள தீர்மானித்ததாக கூறிய உஸெயித் பர்ஹோ, தான் நாஸ்திகர்களுக்கு எதிராக போராடாவிட்டால் அவர்கள் தனது தாயை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி விடுவார் கள் என தனக்கு தெரிவிக்கப்பட்டதாக கூறி னான்.
ஐ.எஸ். போராளிகள் தமது குழுவில் இணைவதற்கு தம்மை தூண்ட துர்போதனை செய்ததாகவும் நாஸ்திகர்களை கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தை தம க்குள் விதைத்ததாகவும் அவன் தெரிவித் தான்.
ஐ.எஸ். போராளிகளின் பயிற்சி முகாமில் தனக்கு போர் பயிற்சி அளிக்கப்பட்ட பின் தனக்கு போராட அல்லது தற்கொலை குண்டுதாரியாக மாற இரு வாய்ப்புக்கள் வழங்கப்பட்டதாக தெரிவித்த பர்ஹோ, தான் போராளிகளிடமிருந்து தப்பிக்கும் வழிமுறையாக தற்கொலைக்குண்டுதாரியாக மாறுவதை தெரிவு செய்ததாக கூறினான்.
அதனை போராளி குழுவை விட்டு வெளியேறி பொலிஸாரிடம் சரணடைவதற்கு வாய்ப்பாக பயன்படுத்த தான் திட்டமிட்டதாக அவன் தெரிவித்தான்.
தான் போராளியாக போராட்டத்தில் ஈடுபடுகையில் சரணடைய முன் வந்தால் தனது நோக்கத்தை அறியாத பாதுகாப்பு படைவீரர்கள் தன்னைச் சுட்டுக் கொல்ல வாய்ப்புள்ளதால் தனது நோக்கத்தை பாதுகாப்பு படைவீரர்களுக்கு தெளிவுபடுத்த தற்கொலைக் குண்டு தாரியாக மாறுவதே சிறந்தது என தான் தீர்மானித்ததாக அவன் கூறினான்.
இதனையடுத்து ஈராக்கின் பக்தாத் நகரிலுள்ள பள்ளிவாசலுக்கு தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்த அழைத்து வரப்பட்டதாக பர்ஹோ தெரிவித்தான்.
இந்நிலையில் பக்தாத் நகரிலுள்ள பள்ளிவாசலிலிருந்த காவலர்களை நோக்கி வந்த பர்ஹோ, தான் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்த அனுப்பப்பட்ட போதும், அந்த தாக்குதலை நடத்த விரும்பவில்லை எனவும் தெரிவித்து தற்கொலை மேலங்கியின் ஒரு பகுதியை கழற்றி வீசியுள்ளான்.
இந்நிலையில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவனது உடலில் இலகுவில் அகற்ற முடியாது பொருத்தப்பட்டிருந்த அந்த மேலங்கியின் மற்றைய பகுதியை அகற்றியுள்ளனர்.
தற்போது அந்த சிறுவன் ஈராக்கிய புலனாய்வு பிரிவினரால் தடுத்து வைக்க ப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக கூறப் படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக