மனிதனை மனிதன் நோவினை செய்யும் செயற்பாடுகள் தலைவிரித்தாடும் இந்த உலகில் இறைவனின் சோதனைகளும் தண்டனை களும் மனிதனைப் பந்தாடிக்கொண்டிருக் கின்றன.
கொலை, கொள்ளை, விபசாரம், திரு ட்டு, வன்முறைகள், துஷ்பிரயோகங்கள், இலஞ்சம், ஊழல், மோசடி என பஞ்சமா பாதகச் செயல்கள் தினமும் உலகிலும் நம்நாட்டிலும் அதிகரித்துக்கொண்டு செல்வதை காணக் கூடிய நிலையில், இறைவ னின் சோதனையின் வெளிப்பாடாக ஏற்படும் பூகம்பம், பூமியதிர்ச்சி, சூறாவளி, வெள்ளம், மண்சரிவு என இயற்கை அன ர்த்தங்களும் மனிதனை சோதனைக்குள்ளா க்கிக் கொண்டிருக்கின்றன.
தற்போது நமது நாட்டில் 7ஆவது ஜனா திபதித் தேர்தலுக்கான சூறாவளிப் பிரசாரங்கள் மிக வேகமாக அலைவீசிக் கொண்டிருக்கும் நிலையில் அந்த அலைகளில் மக்கள் அள்ளுண்டு திரியும் சூழ்நிலையில் இயற்கையின் அசாதாரண நிலையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏறக்குறைய 5 இலட்சத்துக் கும் அதிகமான மக்கள் 14 மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த இயற்கையின் அனர்த்தம் தற்போது மக்களின் இயல்புவாழ்க்கையைப் பாதித்துள்ளபோது, உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சுனாமிப் பேரலை ஏற்பட்டு அதன் ஒரு தசாப்த நிறைவு நினைவலைகளை இன்று மக்கள் பெரும் சோகத்துடன் நினைவு கூருகின்றனர்.
இந்நாட்டின் ஏனைய மாகாணங்களை விட யுத்தத்தினாலும் சுனாமிப் பேரலையினாலும் அதிகம் பாதிக்கப்பட்டது வடக்கு, கிழக்கு மாகாணங்களாகும். இன்றும் மழை வெள்ளத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டு ள்ள மாவட்டமாக கிழக்கின் மட்டக்களப்பு மாவட்டம் கருதப்படுகிறது.
இயற்கையின் பாதிப்புக்களினால் பாதிக்கப்படும் மக்களுக்கான உதவிகளும் நிவார ணங்களும் உரிய முறையில் வழங்கப்படுவது அவசியமாகும். சுனாமி ஏற்பட்டு 10 வருடங்கள் கடந்தும் அதனால் பாதிக்கப்பட்ட மக்களில் பலர் இன்னும் அவர்களின் வாழ்வை சீரான முறையில் கட்டியெழுப்ப முடியாத நிலையில் உள்ளமை கவனத்திற் கொள்ளப்பட வேண்டியவையாகும். இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்க ளில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது இந்த சுனாமிதான். இன்று சுனாமிக்கு வயது 10 ஆகும்.
சுனாமியின் கோரம்
2004 டிசம்பர் 26ஆம் திகதி இந்நூற்றாண்டின் மறக்க முடியாத ஒரு நாள். சுனா மிப் பேரலை என பெயர் சூட்டப்பட்டு உலகத்தையே அதிரவைத்த நாள். ஆயிரம் ஆயிரம் கனவுகளோடு உயிர்கள் கடலில் சங்கமித்த நாள். அந்நாள் நம்மைக் கடந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், இன் னும் அதன் வடுக்கள் மாறவில்லை. அதன் வேதனை நினைவலைகள் தொடரலைகளாக மனங்களில் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறது வருடங்கள் 10 கடந்தும்.
அந்நாளின் பின்னர் இந்த மண்ணில் பிறந்தவர்கள் அந்த நாள் பற்றியும் சுனா மிப் பேரலை மனித வாழ்வில் ஏற்படுத்திய காயங்கள், அதன் வடுக்கள் பற்றியும் அறிந்து கொள்வதும் அவசியம்தான்.
அந்தவகையில், சுனாமி என்பது ஜப்பா னிய மொழியில் உள்ள வார்த்தை. 'சு' என் றால் துறைமுகம், 'னாமி' என்றால் பேரலை என்று பெயர். சுனாமி என்பது துறைமுகப் பேரலை. சில நிமிடங்கள் முதல் சில நாட் கள் வரை கூட அதுவும் பல்லாயிரக்கணக்கான இராட்சத அலைகளை உருவாக்கக்கூடியதுதான் இந்தச் சுனாமி.
பூகம்பத்தால் சுனாமி ஏற்படுகிறது. அதாவது பூகம்பம் என்பது நிலப்பகுதியில், கடல் பகுதியில், மலைப்பகுதியில் ஏற்ப டும். நிலப்பகுதியில் வந்தால் நிலத்தில் உள்ளவை அதிர்ந்து அழிகிறது. கடலில் வந்தால் கடலின் ஆழ்பகுதி பாதிக்கப்படுகிறது. மலையில் வந்தால் எரிமலையாக உருவெடுக்கிறது.
புவியியலை நோக்குகையில், பல இல ட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே பிளேட் தான் இருந்தது. அதன் மீதுதான் பூமி இருந்தது. ஆனால் கண்டங்களாக பிரிய, பிரிய அதன் தட்ப, வெப்ப, இயற்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ப பல்வேறு பிளேட்கள் உருவாகின. இந்தப் பிளேட்கள் மீதுதான் ஒவ்வொரு கண்டமும் இருக்கின்றது. நிலம், கடல் எல்லாவற்றையும் தாங்கி நிற்பது இந்த பிளேட்கள்தான். இதைத்தான் டெக்டானிக் பிளேட்கள் என்று புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
யுரேஷின் பிளேட், அவுஸ்திரேலியன் பிளேட் இரண்டும் இந்தோனேசியாவின் வடக்கே சுமாத்திரா தீவில் மோதின. அத னால் பூகம்பம் ஏற்பட்டது. அதன் அலைகள்தான் இந்துமா சமுத்திரத்தில் சுனாமிப் பேரலைகளை ஏற்படுத்தியது. இவ்வாறே 2004.12.26ஆம் திகதி சுனாமி ஏற்பட்டது.
2004 டிசம்பர் மாதம் 26 அன்று இந்தோனேசியாவின் சுமாத்திராவில் ஏற்பட்ட பூக ம்பத்தினால் உருவான சுனாமிப் பேரலை, இந்தோனேசியாவை மாத்திரமல்லாது இல ங்கை, இந்தியா, தாய்லாந்து, மாலைதீவு, பங்களாதேஷ் என ஏறக்குறைய 12 நாடுக ளின் கரையோரப் பகுதிகளை அழித்தது. சுமார் 1,74,000 உயிர்களை இந்தச் சுனாமி பேரலைகள் காவுகொண்டன.
சர்வதேச புள்ளிவிபரங்களின்படி சுனாமியினால் அதிகளவு உயிர்கள் காவுகொள்ளப்பட்ட நாடுகள் வரிசையில் இந்தோனேசியாவே முதலிடத்தில் உள்ளது. இந்தோனேசியாவில் 1,26,473 பேரையும், இந்தியாவில் 10,749 பேரையும் தாய்லாந் தில் 5,595 உயிர்களையும் சுனாமிப் பேரலைகள் காவுகொண்டன. இலங்கையில் சுனாமியினால் உயிரிழந்தவர்கள் மற்றும் காணாமல் போனோரின் மொத்த எண்ணி க்கை 36,594 ஆகும்.
இலங்கையின் வடக்கு, கிழக்கு தென், மேல், வடமேல் மாகாணங்களின் கரையோ ரப் பிரதேசங்கள் சுனாமியினால் பலமா கத் தாக்கப்பட்டன. யாழ்ப்பாணம், கிளிநொ ச்சி, முல்லைத்தீவு, அம்பாறை, மட்டக்கள ப்பு, திருகோணமலை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, கம்பஹா, புத்தளம், கொழும்பு, களுத்துறை ஆகிய மாவட்டங்க ளின் கரையோரப் பிரதேசங்கள் சுனாமிப் பேரலைகளினால் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டன.
புள்ளிவிபரங்களின்படி மாவட்ட மட்ட த்தில் உயிரிழந்தோர் மற்றும் காணாமல் போனோரின் மொத்த எண்ணிக்கையைப் பார்க்கின்றபோது தென் மாகாணத்தின் காலி மாவட்டத்தில் 1785 பேரும், அம்பாந் தோட்டை மாவட்டத்தில் 1102 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 1153 பேரும், வட மாகாணத்தின் யாழ். மாவட்டத்தில் 901 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 06 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2652 பேரும் பதிவாகியுள்ளனர்.
சுனாமி பேரலையினால் கிழக்கு மாகா ணம் பாரிய அழிவைச் சந்தித்தது. புள்ளி விபரத்திணைக்களத்தின் தரவுகளின்படி, கிழக்கு மாகாணத்தில் உயிரிழந்தோர், காணாமல்போனோர் எண்ணிக்கையானது அம்பாறை மாவட்டத்தில் 4,216 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1,756 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 761 பேருமாகும்
சுனாமியும் வட, கிழக்கும்
சுனாமியினால் பாதிக்கப்பட்ட மாகாண ங்களில் அதிகளவிலான இழப்பைச் எதிர் கொண்டவை வடக்கு, கிழக்கு மாகணங்களாகும். வடக்கின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களும் கிழக்கின் அம்பாறை, மட்டக்களப்பு, திரு கோணமலை மாவட்டங்களும் சுனாமியி னால் பாதிக்கப்பட்டன. இம்மாவட்டங்க ளில் அதிகளவு உயிர் மற்றும் சொத்தழி வை எதிர்கொண்ட மாவட்டம் என்றால் அது அம்பாறை மாவட்டமாகும்.
அதிலும் கல்முனைத் தேர்தல் தொகுதி யின் கரையோரத் தமிழ், முஸ்லிம் மக்களே அதிகளவு பாதிக்கப்பட்டனர். தொகை மதி ப்பீட்டுப் புள்ளிவிபரத்திணைக்களத்தின் புள்ளிவிபரங்களின் படி அம்பாறை மாவட்டத்தில் சுனாமிப்பேரலையினால் 21,201 வீடுகள் முற்றாகவும் பகுதியாகவும் சேதமடைந்தன. இதில் அதிகளவு பாதிக்கப்பட்ட வீடுகளைக் கொண்ட பிரதேசமும் கல்மு னைப் பிரதேசம்தான்.
இக்கல்முனைப் பிரதேசத்தின் முஸ்லிம் மற்றும் தமிழ் கிராமங்களில் சுனாமியி னால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வீடு கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. உதாரணத் திற்கு, சாய்ந்தமருது வொலிவேரியன் சுனாமி மீள்குடியேற்ற வீட்டுத்தொகுதி, கல்முனைக்குடி கிறீன்பீல்ட் சுனாமி மீள் குடியேற்ற வீட்டுத் தொகுதி மற்றும் பாண்டிருப்பு சுனாமி மீள்குடியேற்ற வீட்டுத் தொகுதி என்பவற்றைக் குறிப்பிடலாம்.
இந்த வீட்டுத்தொகுதிகள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டன. இருப்பினும் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமையினால் இம்மீள் குடியேற்றத்தில் வாழும் மக்கள் சொல்லொ ண்ணாத் துயரங்களை கடந்த 10 வருடங் களாக எதிர்நோக்குகின்றனர். இக்குடியேற்றத்திட்டங்களில் குடியிருக்கும் சிறார்களு க்கு நிரந்தர பாடசாலையோ, நூலகமோ, விளையாட்டு மைதானமோ முறையாக அமைக்கப்படவில்லை.
சாய்ந்தமருது வொலிவேரியன் வீட்டுத் திட்டத்தில் 200 குடும்பங்கள் வாழ்வதற்கான வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ள போதிலும், இவ்வீட்டுத்திட்டத்தில் அடி ப்படை வசதிகள் சரியாக வழங்கப்படவி ல்லை. கல்முனைக்குடியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கிறீன் பீல்ட் வீட்டுத்தொகுதி மக்கள் குடியிருப்பதற்குரிய வசதிகளுடன் கொண்டதாக அமைக்கப்படவில்லை என இம்மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இவ்வீட்டுத்தொகுதியிலுள்ள சில வீடுகளுக்கு இன்னும் அடிப்படை வசதிகள் பெற்றுக் கொடுக்கப்படவில்லை. அவற்றில் சில வீடுகள் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படாது அல்லது மக்கள் அதில் வசிக்காது இருட்டறைகளாகக் காட்சியளிப்பதாக அப்பிரதேச மக்கள் குறிப்பிடுவதைக் காணமுடிகிறது.
இவ்வாறே மருதமுனை, பாண்டிருப்பு மற்றும் காரைதீவு பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுனாமி வீட்டுத்தொகுதிகளின் நிலைமைகளும் உள்ளன. இவ்வாறான நிலைதான் வடக்கு மற்றும் கிழக்கில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத் தொகுதிகளின் நிலைமை காணப்படுகிறது. அதுமாத்திரமின்றி, வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசத்தின் சில பிரதேசங்களில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் நிரந்தர வீடுகள் இல்லாமல் தகரக்கொட்டில்களில் வாழ்வதையும் காணமுடிகிறது.
அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் சுனாமியினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்காக அக்கரைப்பற்று பிரதேசத்துக்குரிய நுரைச்சோலையில் சவூதி அரசாங்கத்தினால் 500 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன.
இருப்பினும் இவ்வீடுகளைப் பகிர்ந்தளிப்பதில் உள்ளூர் அரசியல் அதிகாரத்தர ப்பினரிடையே போட்டிகள் நிலவின. இப்போட்டிகளின் காரணமாக ஏற்பட்ட இழு பறி நிலையினையடுத்து, பேரினவாதம் பாதிக்கப்படாத மக்களுக்கும் வீடுகளை வழங்க வேண்டுமென்று கோஷங்களை எழும்பி அதில் வெற்றியும் கண்டது. இந்த வீட்டுத்தொகுதியை பகிர்ந்தளிப்பது தொடர்பில் நீதிமன்றம் வரை சென்ற பேரினவாதம் நீதிமன்றத் தீர்ப்பையும் பெற்றுக் கொண்டது.
இவ்வீட்டுத்தொகுதிகள் மூவின மக்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள போதி லும், சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இது வரை இவ்வீடுகள் பகிர்ந்தளிக்கப்படவில்லை. இதுபற்றி சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் பேசி பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளும் அதிகாரத்தரப்பினர் எவரினாலும் முறையாக மேற்கொள்ளப்படவில்லையென்றுதான் கூறவேண்டும். வீடுகளைப் பெற்றுத்தாருங்கள் என பாதிக்கப்பட்ட மக் கள் பல வருடங்களாக சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுக்கின்றபோதிலும் அவை கூட கைகூடவில்லை என வீடு களை எதிர்பார்த்திருப்போர் வேதனையு டன் கூறுகின்றனர்.
இயற்கை அனர்த்தங்கள் இன, மத, பிரதேச வேறுபாடுகள் பார்ப்பதில்லை. மாறாக சகல தரப்பினரையும் அவை பாதிக்கின்றன. இவ்வாறுதான் சுனாமிப் பேரலையும் சகல மக்களையும் பாதித்தது. அவற்றின் பாதிப்புக்கு வடக்கு. கிழக்கு கரையோரப் பிரதேசங்கள் பல ஆட்கொள்ளப்பட்டன. இருப்பினும், தெற்குப் பிரதேசத்தில் பாதி க்கபட்ட மக்களின் தேவைகளை, அவர்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம், முன்னுரிமை போல கிழக்கிலும் வடக்கிலும் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்கள் தொடர்பில் செலுத்தப்பட்ட அக்கறையில் குறைபாடு காணப்படுவதை ஏற்றுக்கொள்ளாமல் இருக்க முடியாது. இத ற்கு சிறந்த உதாரணமாக இருப்பது சுனாமி யினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சவூதி அரசாங்கத்தினால் கட்டப்பட்ட நுரைச்சோலை சுனாமி மீள்குடியேற்ற வீடுகள் இன் னும் அந்த மக்களுக்கு வழங்கப்படாமையாகும்.
உண்மையில் இந்த வீடுகள் சென்றடையவேண்டியது அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்தில் வாழ்ந்த சுனாமி யினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கேயாகும். ஆனால், கடலே இல்லாத, சுனாமியின் அழிவுகளை அனுபவித்திடாத அதன் ஒரு சதவீதப் பாதிப்பையேனும் எதிர்கொள்ளாதவர்களுக்கு இந்த வீடுகள் பகிர்ந்தளிக்கப் படுவது மனச்சாட்சியுள்ளவர்களால் ஏற்று க்கொள்ள முடியாதது. இதற்குக் காரணம் அரசியல் அதிகாரப் போட்டி என்றால் அது மிகையாகாது.
சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து ஒரு தசாப்த காலம் கடந்தும் இன்னும் ஆயிரமாயிரம் பேர் அது ஏற்படுத்திய வரலாற்று வடுக்களோடு வாழ்ந்துகொண்டிருப்பது வேத னையளிக்கக் கூடியது. சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்கள் அடைந்த பலாப லன்களை விட எவ்வித பாதிப்புக்களையும் எதிர்கொள்ளாதவர்களே அதிகளவில் நன் மையடைந்தார்கள் என்று சொல்லப்படுவ தில் யதார்த்தம் உள்ளது.
வசதியோடு வாழ்ந்தவர்கள் ஏழைகளாக் கப்பட்ட அதேவேளை, பணத்தை காணா தவர்கள் பலர் சுனாமியினால் பணக்காரர் களாக மாறினர். அதனால்தான் இந்தச் தங் கச் சுனாமி மீண்டும் ஒருமுறை வரமாட் டாதா என்று அங்கலாய்த்தவர்கள் அதிகம் பேர் என பலர் கூறியதைக் கேட்க முடிகி றது.
சுனாமி ஏற்பட்டு ஆண்டுகள் பத்து உருண்டோடிவிட்டன. ஒரு தசாப்தத்தை நிறைவு செய்துவிட்டது. இருப்பினும் சுனாமியின் பாதிப்புக்களைச் சுமந்து வாழ் பவர்கள் பலரின் வாழ்வு இன்னும் ஒளிமய மாகவில்லை. அவர்கள் இன்னுமே வேத னைகளைச் சுமந்து கொண்டே வாழ்கிறார் கள். இவர்களின் வாழ்வு ஒளிமய மாக வேண்டும். அவர்களின் ஏக்கங்கள் மறைந்து, 11ஆவது ஆண்டிலாவது துயர மில்லாத வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்க வேண்டும். சுனாமியின் நினை வலைகள் ஒவ்வொரு வருடமும் அவர்க ளின் இதயங்களில் சஞ்சரித்தாலும் சுனாமி யினால் அழிந்து போன அவர்களின் வாழ் வும் வாழ்வாதாரமும் கட்டியெழுப்பப்படு வதிலும் அவர்களுக்கான நிரந்தரமான வீடு கள் வழங்கப்படுவதிலும் இன்னும் வருட ங்கள் கடத்தப்படக் கூடாது என்பதே இக் கட்டுரையின் தாழ்மையான வேண்டுதலா கும்.
அதற்காக என்னென்ன நடவடிக்கைகள் யார் யார் செய்ய வேண்டுமோ, யார் யார் அதற்கான கடப்பாட்டில் உள்ளார்களோ அவர்கள் அவற்றை நிறைவேற்றி வைக்க வேண்டும். அதன் மூலம் சுனாமியினால் உண்மையாகப் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வு புதுப்பொலிவு பெறவேண்டும். அவையே காலத்தின் தேவையாகவும் மனி தாபிமானத்தை நேசிப்போரின் அவாவாக வும் இருக்கிறது.
– எம்.ஏ.ஸமட்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக