ஒரு யு.எஸ்.பி. டேட்டா ப்ளாஷ் ட்ரைவ் வாங்கினேன். அதன் கொள்ளளவு 32 ஜி.பி. எனப் போட்டிருந்தது. அதன் அட்டையிலும் அவ்வாறே பிரிண்ட் செய்யப்பட்டிருந்தது. வீட்டில் அதனைக் கம்ப்யூட்டரில் இணைத்து, விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலம் பார்க்கையில், 32,027,770,880 என்று போட்டு, தொடர்ந்து 29.8 ஜி.பி. எனப் போட்டிருந்தது. இது ஏன்? இந்த இரண்டு அளவுகளுக்கும் இடையே வேறுபாடு உள்ளதே? உண்மையான அளவு என்ன?
யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ்கள், ஹார்ட் ட்ரைவ் மற்றும் பிற ஸ்டோரேஜ் மீடியாக்களைப் போலவே பைட்ஸ் (bytes) என்ற அளவில் கணக்கிடப் படுகின்றன. இதில் என்ன பிரச்னை என்றால், megabyte/gigabyte ஆகியவற்றிற்கான விளக்கமானது,
கம்ப்யூட்டரில் அளக்கப்படுவதற்கும், இந்த ஸ்டோரேஜ் மீடியாக்களைத் தயாரிப்பவர்களுக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒரு kilobyte என்பதனை கம்ப்யூட்டர் 1024 பைட்ஸ் எனச் சொல்லும். ஒரு மெகா பைட் என்பதனை 1024 கிலோ பைட்ஸ் எனச் சொல்லும். எனவே ஒரு மெகா பைட் என்பது (பத்து லட்சம் பைட்ஸ் ஆகும்). ஆனால், இது சரியாகச் சொல்வதென்றால், 10,48,576 பைட்ஸ் ஆகும். 32 கிகா பைட் பெற நீங்கள் 1024 (bytes) x 1024 (kilobytes) x 1024 (megabytes) x 32 (gigabytes) எனப் பெருக்கிப் பார்க்க வேண்டும். இது 34,35,97,38,268 பைட்ஸ் என்ற விடையைக் கொடுக்கும். இருப்பினும், கம்ப்யூட்டர் மற்றும் ஸ்டோரேஜ் மீடியா தயாரிப்பவர்கள், புத்திசாலித்தனமாக ஒரு வழியைப் பின்பற்றுகிறார்கள்.
அவர்கள் ஒரு கிகா பைட் என்பதனை ஒரு பில்லியன், அதாவது, 100 கோடி என்று கொள்கிறார்கள். நாம் ஏன், கம்ப்யூட்டரை வடிவமைக்கும்போது யாரோ போட்ட 1024 பைட்ஸ்= ஒரு கிலோ பைட் என்ற கணக்கினைப் பின்பற்ற வேண்டும் என நினைக்கிறார்கள். எனவே தான், 32 ஜி.பி. என்பது அவர்கள் கணக்கில் 32,000,000,000 பைட்ஸ் ஆகவும், கம்ப்யூட்டர் கணக்கில் சற்றே குறைவாகவும் உள்ளது. இதை நினைத்து குழப்பமடையாமல் அதனைப் பயன்படுத்துங்கள், ஸ்வர்ணமதி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக